அதிகாலையில் கண் விழிப்பவர்கள்
அதிகாலையில் கண் விழிப்பவர்கள் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும், ஸ்லிம்மாகவும் இருப்பார்கள் என்று சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. ரோகாம்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் மேற்கொண்ட ஆய்வில், அதிகாலையில் எழுபவர்கள் தங்களுக்கான வேலையை சுறுசுறுப்பாக செய்வதோடு தங்கள் குழந்தைகளையும் பள்ளிக்கு விரைவாக அனுப்பி வைப்பார்கள் என்று கூறியுள்ளனர்.
இரவு நேரங்களில் விடிய விடிய வேலை பார்ப்பவர்களும் ஆட்டம் போடுபவர்களும் மன அழுத்தத்தினாலும், உடல் பருமனுடனும் இருப்பார்கள் என்று கூறுகிறது அந்த ஆய்வு முடிவு. 1,068க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் அவர்களின் உறங்கும் பழக்கம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.. வார இறுதி கொண்டாட்டம் வார இறுதி நாட்களில் மகிழ்ச்சியுடன் இரவில் அதிக நேரம் பொழுதை கழிக்கும் பழக்கம் உள்ளவர்கள் மறுநாள் காலை 10க்கு அல்லது 12 மணிக்கு இன்னும் சிலபேர் பகல் 2 மணிக்கே கண் விழிக்கின்றனர்.
அன்று முழுவதும் அவர்களிடம் ப்ரஷ்னெஸ் இருக்காது. எதையோ இழந்த மாதிரியும், நோயாளிகள் போன்றும் சுறு சுறுப்பின்றி அந்த முழு நாள் முழுதும் இருப்பார்கள். இதெல்லாம் இரவுகளில் சரியாக தூங்காததினால் ஏற்படக்கூடியவை. இவற்றை வார விடுமுறை நாட்களில் இரவு முழுதும் கண்விழித்து ஆட்டம்போடும் எல்லோராலும் உணரமுடியும். இதற்கு தோதாக இப்பொழுது அரபு நாடுகளில் பெரும்பாலும் வெள்ளி, சனி என்று வாரத்திற்கு இரண்டு நாட்கள் விடுமுறை நடைமுறைப்படுத்தி இருக்கின்றார்கள். இந்த இரண்டு நாட்கள் போடும் ஆட்டத்தின் கலைப்பு நீங்குவதற்குள் அடுத்த வீக் எண்டை எட்டிவிடுகின்றோம். வாரத்தில் இரண்டு நாட்கள் லீவு விட ஆரம்பத்த்திலிருந்து நாட்கள் வெகு சீக்கிரமாக நகர்கின்றன. இப்படி ஆட்டம் பாட்டத்துடன். நாட்கள் நகர்வதினால் மவுத் நம்மை நெருங்குவதை நாம் உணரவில்லை.
அதிகாலையில் சீக்கிரம் கண் விழிப்பவர்கள், தாமதமாக கண்விழிப்பவர்களை விட ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் இலேசான உடல்வாகு கொண்டவர்களாகவும் இருப்பதாகவும் இது தொடர்பான ஆய்வு மேற்கொண்ட டாக்டர் ஜார்ஜ் ஹப்பர் டெலிகிராப் ஆங்கில நாளிதழில் தெரிவித்துள்ளார். அதிகாலையில் கண் விழிப்பது சுறுசுறுப்பானது மட்டுமல்ல ஆரோக்கியமானதும் கூட என்று தெரிவிக்கின்றது இந்த ஆய்வு முடிவு.
1438 வருடங்களுக்கு முன்னாடியே நமக்கு அருளப்பட்ட இறைவேத்தில் எல்லாத் தொழுகையையும் (சுபுஹுத்தொழுகை உள்பட சேர்த்து) சொல்லும் வசனம்
ஈமான் கொண்டவர்கள் நிச்சயம் வெற்றி பெற்றுவிட்டனர். அவர்கள் எத்த்கையோர் என்றால், தங்கள் தொழுகையில் உள்ளச்சத்தோடு இருப்பார்கள். மேலும் அவர்கள் தம் தொழுகைகளை (குறித்த காலத்தில் முறையோடு) பேனுவார்கள் . அல்குர்ஆன் 23:,2,9
சுபுஹுத்தொழுகை பற்றி அண்ணலாரின் பொன்மொழிகள்
“எவர் சுபுஹுத் தொழுகையை நிறைவேற்றுகின்றாரோ அவர் அல்லாஹ்வினது பாதுகாப்பிற்குள் வந்து விடுகிறார்” என் நபிகள் (ஸல்) அவ்ர்கள் கூறினார்கள்
ஆதாரம்: புஹாரி
பல ஊர்களில் “தூக்கத்தைவிட தொழுகை மேலானது தொழ வாருங்கள்” என்று ஃபஜர் பாங்கு சொல்லும்போது அரபியல் அஸ்ஸலாத்து கைரும்மின நவ்ம் என்று இரண்டு முறை குரல் கொடுக்கின்றனர். தொழ ஆரம்பிக்கும் சுமார் 10 நிமிடத்திற்கு முன் “தூக்கதை விட தொழுகை மேலானது தொழ வாருங்கள்” என்று தமிழில் சொல்லி அழைக்கவும் செய்கின்றனர் அப்படி இருந்தும் பெரும்பாலான மக்கள் தூக்கத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை சுபுஹு தொழுகைக்கு கொடுப்பதில்லை.
25 வருடங்களுக்கு முன்பு சுபுஹுத் தொழுகைக்கு இளைஞர்களை பெரும்பாலும் காணமுடியாது இளைஞர்களிடம் தவ்ஹீதின் எழுச்சி வந்த பின்பு சுபுஹுத் தொழுகைக்கும் மற்ற தொழுகைக்கும் இளம் வயதினரை பள்ளிவாசல்களில் கனிசமாக காண முடிகின்றது. சுபுஹுத் தொழுகை சம்பந்தமாக மக்களிடையே குறிப்பாக இளஞர்களிடையே இன்னும் விழிப்புணர்வு ஏற்பட்டு இருந்தாலும் சில சமயங்களில் அவர்களிடம் இருக்கும் பொடுபோக்கைப் பற்றி வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் எடுத்து சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும்.
12 ஆம் நூற்றாண்டுக்கு முன் வாழ்ந்த ஒளவையார் “வைகல் தோறும் தெய்வனம் தொழு” என்பதும் “ஆலயம் தொழுவது சாலமும் நன்று” என்பதும் இஸ்லாமிய சமுதாயத்தில் பள்ளிவாசலில் சென்று தொழுவதற்கு கொடுக்கும் முக்கியத்துவத்திற்கும் மற்றும் காலைத் தொழுகையான பஜர் தொழுகை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதற்கும் பொருந்துவதைக் காண மகிழ்வாக இருக்கும்.
காலையில் எப்படியாவது வைகறை (பஜர்) தொழுகைக்கு எழுந்தாக வேண்டும். தொழுகையை அதன் குறிப்பிட்ட நேரத்தில் அதற்குரிய சுன்னத் தொழுகையோடு தொழுது வந்தால் உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்திருக்கலாம். தூய்மையான் அதிகாலை காற்று உடல் நலத்திற்கு மிகவும் நல்லது விடியல் காலையில் பஜர் தொழுகைக்கு போகும்போது சுத்தமான ஆக்ஸிஜன் காற்றை சுவாசிப்போமே அப்போது வரும் உற்சாகம் அது மிகவும் உயர்வானது.
பால் காரர்களும் பேப்பர் காரர்களும் சுத்தமான ஆக்ஸிஜனை சுவாசிப்பதால்தான் அவர்களால் வேகமாக செயல்பட முடிகின்றது. சுபுஹு தொழுத நாட்களையும் சுபுஹு தொழாத நாட்களையும் ஒப்பிட்டுப் பார்த்தாலே உண்மைகள் உங்களுக்கு விளங்கும். அதிரைநிருபரில் வளம் வரும் நண்பர்கள் சுத்தமான ஆக்ஸிஜனை சுவாசிப்பாகள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது
இன்ஷா அல்லாஹ் அடுத்த 6 வது தொடரில் கண்களின் முக்கிய பாகங்கள் அதன் அமைப்பு பற்றியும் பார்வை பாதிப்பை பற்றியும் பார்போம்
தொடரும்...
அதிரை மன்சூர்



