Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in
Showing posts with label காணொளி. Show all posts
Showing posts with label காணொளி. Show all posts

ஒரு பிள்ளையின் ஏக்கம் ! - காணொளி 1

அதிரைநிருபர் பதிப்பகம் | August 17, 2016 | , , ,

இஸ்லாமிய பெற்றோர்கள் அனைவரின் ஏக்கமும் பிரார்த்தனைகளும் தங்களது குழந்தைகள் சாலிஹானவர்களாகவும் நல்லதையே நாடக்கூடியவர்களாகவும் அதையே செய்யக் கூடியவர்களாகவும் இருக்கத்தான் விரும்புவர்.

அவ்வகையில் ஏங்கும் பெற்றோர் எத்தனை பேர் தாங்களும் சாலிஹானவர்களாக, மார்க்கம் எடுத்துரைத்த கடமைகளை பொறுப்புடனும் அல்லாஹ்வின் திருப் பொருத்தத்தை நாடி செய்கிறார்களா என நமக்குள்ளே கேட்டு கொள்ளும் அளவுக்கு ஆங்காங்க ஒரு சில நிகழ்வுகளையும் பார்க்கத்தான் செய்கிறோம்.

மாஷா அல்லாஹ், இந்த காணொளியின் நாயகி தனது பெற்றோருக்காக அவர்களின் நலனுக்காக மறுமையின் நிலையை எண்ணி ஏங்கும் இந்த குழந்தையைப் போன்றவர்களை பெற்றெடுத்தவர்கள் பேறுபெற்றவர்களே !


அதிரைநிருபர் பதிப்பகம்

ஆசிரியர் தின மற்றும் இலக்கிய மன்றம் துவக்க விழா - சிறப்பு பேச்சாளரின் உரை - காணொளி! 1

அதிரைநிருபர் பதிப்பகம் | October 07, 2015 | , , ,

அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் செப்டம்பர் 6-ம் தேதி சிறப்பாக நடைபெற்ற ஆசிரியர் தினம் மற்றும் இலக்கிய மன்ற துவக்க விழா நிகழ்வின் காணொளித் தொகுப்புகளின் தொடரின் நிறைவாக சிறப்பு விருந்தினர் நற்றமிழ் நாவரசி நா. சத்தம்மைப்பிரியா, M.Sc.,(பேராசிரியை, காவேரி மகளிர் கல்லூரி, உறையூர், திருச்சி) அவர்களின் உரை.


அதிரைநிருபர் பதிப்பகம்

ஆசிரியர் தினம் - 2015 - காணொளி 3

அதிரைநிருபர் பதிப்பகம் | September 20, 2015 | , , ,

அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் செப்டம்பர் 6-ம் தேதி சிறப்பாக நடைபெற்ற ஆசிரியர் தினம் மற்றும் இலக்கிய மன்ற துவக்க விழா நிகழ்வின் காணொளித் தொகுப்புகள்.

முகவுரையும் வரவேற்புரையும் !


தலைமையுரை


வாழ்த்துரை




அதிரைநிருபர்

மலை மேல் மழை... [காணொளி...] 2

அதிரைநிருபர் பதிப்பகம் | October 17, 2014 | , , , ,


ஊர் ஞாபகம் அதிகம் வரவைக்கும் காலம்தான் அழகிய மழைக்காலம்...

ஊரில் (நல்ல) மழையாமே !?

மலைமேல் விழும் மழையே...! ஓடோடிவா...!

எங்களூரில் பள்ளங்கள் தோண்டி வைத்திருக்கின்றனர் குளங்கள் நிறைவதற்கு, தடுக்கி விழ அல்ல உன்னை தடுத்து அங்கே விழவைத்து நாங்கள் எழத்தான்.

நாங்கள்தான் சாலையை கடக்க கரடுமுரடான பாதைகளை தவிர்ப்பதில் மும்முரமாக இருப்போம், ஆனால்... மழையே உனக்கென்ன எங்கிருந்தாலும் பள்ளம் தேடித்தானே பாய்ந்து செல்வாய் அதனை சமநிலைப்படுத்துவதற்கு...!

இனி...,! இந்த காணொளியை இரண்டு காதுகளில் ஹெட்ஃபோன் வைத்துக் கொண்டு பாருங்கள் எந்தச் சூழலில் நீங்கள் இருந்தாலும் மழையருகில் இருந்து கொண்டு அதில் நனைந்த உணர்வு ஏற்படும்.


அபூஇப்ராஹிம்

ஆசிரியர் தினம் 2014 - காணொளி அணிவகுப்பு ! 3

அதிரைநிருபர் பதிப்பகம் | September 26, 2014 | , , ,

அதிரைநிருபர் சார்பாக இந்த வருடம் 2014 செப்டம்பர் மாதம் 7ம் தேதி அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தினம் மற்றும் இலக்கிய மன்ற தொடக்க விழா நிகழ்வுகள் மிகச் சிறப்பாக நடைபெற்றதை அறிவீர்கள். பள்ளிக்கூட கல்வியறிவை புகட்டிய மற்றும் தொடர்ந்து புகட்டிக் கொண்டிருக்கும் ஆசிரியர் பெருமக்களை சிறப்பித்த அன்றைய அனைத்து நிகழ்வுகளின் காணொளி அணிவகுப்பு இங்கு பதிக்கப்பட்டுள்ளது.

அதிரைநிருபர் பதிப்பகம்
தலைமை ஆசிரியர் அவர்களின் தலைமையுரை

அதிரைநிருபரின் மூத்த பங்களிப்பாளர் இப்ராஹீம் அன்சாரி அவர்களின் வாழ்த்துரை

அதிரையின் நாவலர் எஸ்.எம்.நூர் முகமது அவர்களின் வாழ்த்துரை

கா.மு.மே.(ஆ) பள்ளி பயன்பாட்டிற்கான தண்ணீர் கிடைக்க ஆழ்துளைக் கினறு அமைக்கும் வேலைக்கான கொடை வழங்கும் நிகழ்வு...

ஆசிரியர் பெருமக்களை கவுரவிக்கும் நிகழ்வு

காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் தஞ்சை கல்வி மாவட்ட அளவில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்ற மாணவர்கள் அனைவருக்கும் பள்ளி நிர்வாகத்தால் பரிசளித்து சிறப்பிக்கப்பட்ட நிகழ்வு.

நன்றி : media magic crew

கருத்து முரண்பாடுகள் ! 1

அதிரைநிருபர் பதிப்பகம் | August 05, 2014 | , , , ,

தமிழ் இஸ்லாமிய சமுதாயத்தின் இன்றைய நிலையை எவ்வாறு எடுத்துச் சொல்வது என்று தவிக்கும் சூழலில் இயக்க போதையில் இருக்கும் யாருக்கேனும் தகுதி இருக்கிறதென்றால் அவர்களுக்கும் எந்த அருகதையும் இல்லை. காரணம், அவரவர்கள் தங்களுக்கென்று ஒரு வட்டம் போட்டுக் கொண்டு அதில் கடை விரித்து கருத்து வியாபாரம் செய்து வருவதுதான். ஒன்றுவிட்ட சகோதரர்களை பிரித்தெடுப்பதிலும், ஒன்றாக இருந்த ஊரை துண்டாட (கொடி) துண்டு போட்டதிலும் இயக்கங்களின் பங்கு அளப்பரியது.

இந்த ரமளான் மாதம் துபாய் நகரில் மதுக்கூர் தவ்ஹீத் தர்ம அறக்கட்டளை மர்கஸில் நடந்த தொடர் சொற்பொழிவில் இலங்கையைச் சார்ந்த மெளலவி நாசர் அவர்களின் உரை அதிகமாக சிந்திக்க வைக்கிறது !


அதிரைநிருபர் பதிப்பகம்

கல்வியின் அவசியம் - மெளலவி அப்துல் பாசித் புஹாரி [நேர்காணல் காணொளி] 4

அதிரைநிருபர் பதிப்பகம் | May 14, 2014 | , ,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

நமது சமுதாயத்தின் கல்வி பற்றிய விழிப்புணர்வும் அதன் அவசியம் பற்றியும், எவ்வாறு குழந்தைகளின் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றொரு அழகான உரையாடலை சகோதரர் மெளலவி அப்துல் பாசித் புஹாரி அவர்களுடன் நடத்தினோம்.

அல்ஹம்துலில்லாஹ் !

தனது கல்விச் சூழல் எவ்வாறு மெருகூட்டப்பட்டது, அதோடு இன்றைய நமது சமூகம் எவ்வாறு அதற்கான சூழலை உருவாக்க வேண்டும் என்ற விளக்கங்களுடன் எடுத்துரைத்து இருக்கிறார்கள். தமிழகத்தில் வளர்ந்து வரும் மார்க்க பிரச்சாரகர் என்ற கட்டுக்குள் மட்டுமல்ல, நடப்புச் சூழலின் அனைத்து பிரச்சினைகளையும் அலசி ஆராயும் சிறந்த, பண்பட்டவரான அப்துல் பாசித் புஹாரி அவர்களுடனான இந்த நேர்காணல் நிச்சயம் நம் அனைவருக்கும் பயனளிக்கும் இன்ஷா அல்லாஹ் !


அதிரைநிருபர் பதிப்பகம்

CMN சலீம் - சிறப்பு காணொளிப் பேட்டி ! 8

அதிரைநிருபர் பதிப்பகம் | May 03, 2014 | , , , , ,


தமிழக முஸ்லிம் மக்களின் பொருளாதார நிலையை மேன்படுத்தவும் சட்டம், கல்வி, அரசியல், மத்திய மாநில அரசு நிர்வாகங்களின் மற்றும் IAS,IPS போன்ற துறைகளில் முஸ்லிம் மக்களின் நிலையை மேன்படுத்தி சமுதாய மக்களை மார்க்க கல்வி மற்றும் உலக கல்வி இரண்டிலும் அறிவில் சிறந்தவர்களாக உருவாக்க தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் தமிழக முழுவதும் விழிப்புணர்வு பொதுக்கூட்டங்களை நடத்தி வருவது தாங்கள் அறிந்ததே !

முஸ்லிம் சமுதாயத்தில் பெண்களின் கல்வி நிலையை மேன்படுத்தி மார்க்கம் காட்டும் வழிமுறையை பின்பற்றி பெண் கல்வியாளர்களை உருவாக்கும் நோக்கத்தில் அம்மாபட்டினத்தில் அன்னை கதீஜா பெண்கள் கல்லூரி உருவாக்க சமுதாயநலனில்  அக்கறைக்கொண்ட சமுதாய சிந்தனையாளர்களின் பங்களிப்பில் 8 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு அரசு ஆணை பெற்று 100 மாணவிகளைக்கொண்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது அல்ஹம்துலில்லாஹ்.

அன்னை கதீஜா (மகளிர்) கல்லூரி 200 பங்குகள் சேர்க்க தீர்மானிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது, 165 பங்களிப்பாளர்களின் மூலம் திரட்டப்பட்ட நிதியில் கல்லூரியின் கட்டிட பணி, அனுமதி மற்றும் நிர்வாக ரீதியிலான பணிகள் முடிவடைந்து அன்னை கதீஜா கல்லூரி செயல்பட்டு வருவதும் மேலும் மீதமுள்ள பங்குகளின் சேர்க்கையை முடிக்கவேண்டிய நிர்பந்தத்திலும் உள்ளது, மீதமுள்ள 35 பங்குகள் நிறைவடைய அன்புள்ளமும் கொடையுள்ளமும் கொண்ட சகோதரர்களின் உதவியை நாடுகிறது.

இதன் ஒரு பகுதியாக கடந்த ஏப்ரல் மாதம்  சகோதரர் CMN சலீம் அமீரகம் (UAE) வருகை தந்தார்கள், அவர்களின் தொடர் சொற்பொழிவுகள் மற்றும் சந்திப்புகளுக்கு இடையே நமது அதிரைநிருபர் தளத்திற்கென சிற்ப்பு பேட்டி கண்டோம், அதன் காணொளித் தொகுப்பை இங்கே பகிர்வதில் மகிழ்கிறோம்.

மேலும் அன்னை கதீஜா (மகளிர்) கல்லூரிக்கான உதவிகள் பற்றிய விரிவான தகவலுக்கு கீழ்கானும் தொடர்பு கொள்ள வேண்டி அதன் பொறுப்பாளர்களால் கேட்டுக் கொள்ளப்பட்டது.

தமிழகம் - CMN சலீம் -0091-9840182251
அமீரகம் - இம்ரான் கரீம் - 00971-559739408



அடுத்த தலைமுறையை படித்த தலைமுறையாக்கிட  - ஒருகிணைந்து சமுதாய சேவை செய்வோம் - சமூகத்தை உயர்த்துவோம் !

அதிரைநிருபர் பதிப்பகம்

சிம்பிள் மேட்டருதான், சீக்கிரட்டான விஷயமுங்க ! 6

அதிரைநிருபர் பதிப்பகம் | November 15, 2013 | , , , , , , ,

இளமையை வெளிநாட்டில் தொலைக்கிறாங்க என்று ஒரு வகையில் போட்ட கோஷம் கொஞ்சம் கொஞ்சமாக உருமாறி அதே இளமையை ஃபேஸ்புக்கில் தொலைக்காதிங்கன்னு சத்தம் வெளிவருவதற்கு முன்னரே பெரிசுங்களும் இளமைய அங்கேதான் தேடுகிறோம்னு துண்டு போட்டு உட்கார்ந்து இருக்கும் இந்தக் காலத்திலும் இது எப்படி இருக்கு !?

எல்லாம் தெரியும் என்று கணினி முன்னால் உட்கார்ந்து இருப்பவர்களுக்கு சின்னச் சின்ன விஷயங்களில் பேந்தப் பேந்த முழிப்பதை நாம் நிறைய கண்டிருக்கிறோம் !

கடுகுதான் காரம் ஜாஸ்தின்னு சொல்ல வைக்கும் இந்த காணொளி "இது எப்படியிருக்கு" தொடர் வழங்கும் சகோதரர் ஷஃபி அவர்களின் மற்றொரு காணொளி விளக்கப் பாடம் !

சிம்பிள் மேட்டருதான், சீக்கிரட்டான விஷயமுங்க !


காணொளி ஆக்கம் மற்றும் பரிந்துரை : ஷஃபி அஹமது
அதிரைநிருபர் பதிப்பகம்

ஆசிரியர் தினம் நிகழ்வு காணொளி ஆரம்பம் முதல் நிறைவு வரை... 51

அதிரைநிருபர் பதிப்பகம் | September 09, 2013 | , ,

அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சிறப்புடன் நடைபெற்ற இவ்வாண்டுக்கான ஆசிரியர் தின நிகழ்வுகளின் முழு காணொளியை இங்கே பதிக்கப்பட்டுள்ளது.

நிகழ்வு ஆரம்பம் முதல் நிறைவுவரை மிகச் சிறப்பாக இந்த காணொளியை பதிவு செய்த மீடியா மேஜிக் நிறுவனர் சகோதரர் நிஜாம் அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள் !



அதிரைநிருபர் பதிப்பகம்

ஆசிரியர் தினம் - காணொளி ! - 1 62

அதிரைநிருபர் பதிப்பகம் | September 07, 2013 | , , ,

கடந்த கல்வியாண்டின் பத்தாம் வகுப்பில் முதல் மாணவன் அப்துல் சுக்கூர் ஆசிரியர் தின நிகழ்வை துவக்கி வைத்ததிலும் முதல் மாணவன் அழகுற இறைமறை வசனங்களை ஓதி இனிதே துவங்கியது அல்ஹம்துலில்லாஹ்!

அன்று ! கணிதம் கடினம் என்ற கல்மணம் கொண்ட மாணவனையும் கரைத்தெடுக்கும் பாங்கும், இருபால் மாணாக்களுக்கும் இனிமை போற்றும் ஆசான், காதிர் முகைதீன் மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் தலைமையாசிரியர் S.K.M.ஹாஜா முகைதீன் அவர்களின் வாழ்த்துரையோடு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான அறிவுரையும் !

இன்று ! இணையத்தில் எட்டுதிசைக்கும் எட்டும் எழுத்தை எல்லோரும் பயனுரும் வகையில் ஆய்வுகளுடன் அதிரை மற்றும் பிற ஊர்களின் வலைத்தளங்களில் தனது எழுத்துக்களால் தட்டி எழுப்பும் சிந்தனையாளர் அதிரைநிருபரின் மூத்த பங்களிப்பாளர், எங்களால் இ.அ.காக்கா என்று அன்போடு அழைக்கப்படும் அ.இபுராஹீம் அன்சாரி அவர்களின் வாழ்த்துரையும் !

காணொளிப் பகுதி - 1


சிறப்பு பேச்சாளார் பட்டிமன்ற புகழ் அண்ணா சிங்காரவேலு அவர்களின் உரை மற்றும் ஆசிரியர்களை கவுரவித்து வழங்கிய பரிசளிப்பு நிகழ்வின் காணொளி விரைவில் தொடரும் இன்ஷா அல்லாஹ் !

அதிரைநிருபர் பதிப்பகம்

சுட்டெரிக்கும் பாலையில்…. காணொளி ! 13

அதிரைநிருபர் பதிப்பகம் | December 07, 2012 | , , ,


அதிரைநிருபரில் தொடர்ந்து வெளிவரும் சிறுவர்களுக்கான காணொளி அணிவகுப்பில், அதிரைச் சிறார்களின்  தனித் திறமைகளை வெளிக் கொணர்வதில் மகிழ்வடைகிறோம்.

சிறார்களின் திறமைகள் தொலைக்காட்சியிலும், சீரழிக்கும் சினிமாக்களிலும் சிதறடிக்கப்படுவதை கண்கூடாக நாம் பார்த்து வருகிறோம், அவ்வகையில் இல்லாமல் நம்முடைய சிறார்கள் தங்களுக்கென்று இருக்கும் திறமைகளை நல்ல முறையில் பயன்படுத்தி, நல்ல கருத்துக்களையும், ஒழுக்க நெறிகளையும் போதிக்கும் வகையில் வெளிக்காட்டினால் அவர்களின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும்.

ஏற்கனவே அதிரைநிருபரில் தனது இனிமையான குரலால் வாசகர்களின் உள்ளம் தொட்ட மாஸ்டர் A.முஸ்தகீமுடைய மற்றுமொரு பாடல் காணொளி உங்களனைவரின் பார்வைக்காக இதோ !



காணொளி பகிர்வு : லெ.மு.செ.அபுபக்கர்
அதிரைநிருபர் குழு

Drop Box :: பயன்பாட்டிற்கான விளக்கம் - காணொளி 9

அதிரைநிருபர் பதிப்பகம் | November 08, 2012 | , , ,


தொழில்நுட்பத்தினால் திரளும் புதுப் புது வரவுகளை அனுபவிப்பது தூறல் போடும் மழைக்காலத்தில் நனைவதில் கிடைக்கும் சுகத்தை அனுபவதிப்பது போன்ற சிலிர்ப்பு பரபரப்பு இருக்கும். புதியன அறியும் ஆவல் தொடரும். அவ்வகையில் இணைய தேடலில் ஈடுபடாத இணையப் பயனாளிகள் என்று ஒருவரும் இருக்கப்போவதில்லை என்பதை சொல்லித்தான் தெரிய வேண்டுமா ?

சுய ஆர்வத்தால் தான் அறிந்த இணைய வசதி கொண்ட நுப்டத்தை அனைத்து சகோதரர்களும் அறிந்திட சகோதரர் ஷஃபி அஹ்மது அவர்கள் ஏற்கனவே அதிரை வலைத்தளங்களில் இது எப்படியிருக்கு காணொளி விளக்கத்தையும் அதன் பயன்பாடுகளையும் அறியத் தந்திருக்கிறார். அந்த வரிசையில் தொடராக அடுத்ததொரு காணொளி பதிவினை அதிரைநிருபரில் பகிர்ந்தளித்திட முன் வந்திருக்கிறார்.

இந்த பதிவின் டிராப் பாக்ஸ் (Drop Box) என்று எங்கும், எதிலும், எப்போதும் தேவையான முக்கிய கோப்புகளை சேமிக்க, மீட்டெடுக்க, பகிர்ந்தளிக்க என்ற பயன்பாட்டிற்கு உதவும் நுட்பத்தின் வசதியைப் பற்றி தெளிவாகவும் புரியும் படியும் விளக்கியிருக்கிறார்.


அதிரைநிருபர் குழு

ஹராம் ஹலால் பேணி ! - காணொளி பாட்டு ! 18

அதிரைநிருபர் பதிப்பகம் | October 03, 2012 | , , , , , , ,

ஹலால் – ஆகுமாக்கப் பட்டது, ஹராம் – விலக்கப் பட்டது ! இதனைத் தெரியாத இஸ்லாமிய சகோதரர்கள் அரிதிலும் அரிதே !

மார்க்கப் பிரச்சாரம், புத்தகங்கள், செயல் முறை விளக்கங்கள் என்று ஊடகங்களின் வாயிலாக அனுமதிக்கப் பட்டதையும், அனுமதிக்கப் படாததையும் எடுத்துச் சொல்லப்பட்டு வருவது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

இந்தச் சின்னஞ்சிறு பாலகன் தன்னால் இயன்ற முயற்சியாக பாடியிருக்கும் பாடலின் கருத்தோட்டம் கேட்பவர்களை உலுக்கியெடுக்கும் கேள்விகள், சிந்திக்க வைக்க பாய்ச்சும் அம்புகளாக வீரிட்டு எழுகிறது.

கேட்டுத்தான் பாருங்களேன் !

காணொளிப் பாடலை பாடியது : A.முஸ்தகீம் த/பெ. லெ.மு.செ.அபூபக்கர்.


அதிரைநிருபர் குழு


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு