ஒரு ஊரில்…!
முதலில் வேகமாக ஓடிய முயல் பாதி தூரம் கடந்ததும் மமதை கொண்டு அங்கிருந்த ஒரு மரத்தடியில் ஓய்வெடுக்க எண்ணி அங்கே சிறு உறக்கம் கொண்டதும் மெதுவாக வந்த ஆமை முயலைக் கடந்து வெற்றியைத் தொட்டதும் வெற்றி வெற்றி என்று ஆமை கத்தியது. அதை கேட்ட முயல் இந்த வெற்றியை ஒப்புக்கொள்ள மறுத்தது.
ஒரு முயலும், ஆமையும் இருந்ததாம் இருவருக்கும் ஓட்டபந்தயம் நடத்த முடிவானது. அதன்படி முயலும் - ஆமையும் ஓடத் தயாரானது.
முதலில் வேகமாக ஓடிய முயல் பாதி தூரம் கடந்ததும் மமதை கொண்டு அங்கிருந்த ஒரு மரத்தடியில் ஓய்வெடுக்க எண்ணி அங்கே சிறு உறக்கம் கொண்டதும் மெதுவாக வந்த ஆமை முயலைக் கடந்து வெற்றியைத் தொட்டதும் வெற்றி வெற்றி என்று ஆமை கத்தியது. அதை கேட்ட முயல் இந்த வெற்றியை ஒப்புக்கொள்ள மறுத்தது.
சரி மறுபடியும் போட்டியை துவங்கலாம் என முடிவாகி தொடர்ந்து முயலும் ஆமையும் மீண்டும் ஓடத் துவங்கியது. இந்த முறை முயல் உஷாராக போட்டியில் முந்தி வந்து வெற்றியடைந்தது. அதற்கு அடுத்து கடைசியில் வந்த ஆமை “சரி நாம் இருவரும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றிருக்கிறோம். ஆகவே, இருவரும் சமம்தான்” என்று ஆமை சொன்னது.
இதை ஒப்புக்கொள்ளாத முயல் மூன்றாவதாக போட்டிக்கு அழைத்தது. ஆமைக்கும் எப்படியாவது முயலை ஜெயித்து விடவேண்டும், என்று ஒரு விவேகமான முடிவை எடுத்தது ஆமை.
சரி இந்த முறை போட்டியின் தன்மையை நான் முடிவு செய்வேன் என்ற ஆமை சொல்ல தலைக்கனம் பிடித்த முயல் தன்மீது அதீத நம்பிக்கையினால் (over confident) ஆமையின் முடிவிற்கு ஒப்புக்கொண்டது.
ஆமை சொன்னது “இந்த போட்டியை தண்ணீரில் வைத்துக் கொள்ளலாம்” என்றதும் அதன் முடிவு எப்படி இருக்கும் என்பது முயலுக்கும் தெரிந்து விட்டது நிச்சயமாக ஆமை தான் வெற்றி பெறும். மறுபடியும் முயல் ஒப்புக்கொள்ளவில்லை. மற்றுமொரு போட்டிக்கு முயல் அழைக்க அதில் மூன்றாவது நபர் ஒருவரிடம் போட்டியின் தன்மை எப்படியிருக்க வேண்டும் என்பது பற்றி விளக்கம் கேட்கப்பட்டது.
அவர் நல்லதொரு முடிவை சொன்னார் அதாவது, பாதி தூரம் தரையிலும் பாதி தூரம் தண்ணீரிலும் போட்டி நடக்க வேண்டும். முயலுக்கும் ஆமைக்கும் தலையைச் சுற்றியது பின்னர் இருவரும் பல்வேறு கட்டங்களாக கலந்து பேசி ஒரு முடிவுக்கு வந்தார்கள். அதில் தரையில் செல்லும்போது முயலின் முதுகில் ஆமையும், தண்ணீரில் செல்லும்போது ஆமையின் முதுகில் முயலும் அமர்ந்து கொண்டு போட்டியில் கலந்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்து ஒற்றுமையாய் போட்டிக்கான இலக்கை அடைந்தார்கள்.
இவ்வாறு ஒரு தாய் வயிற்றில் பிறந்தாலும் சகோதரர்கள் வெவ்வேறு குணநலன்களுடன் இருக்கலாம். ஆமை, முயல் போல எவ்வளவுதான் வேகமாக முயல் ஓடினாலும் ஆமையின் விவேகத்திற்கு முயல் தோற்று விட்டதல்லவா? அதுபோல அண்ணன் தம்பி குணாதிசயங்களில் வேறுபட்டாலும் " அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்; நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள் " எனும் அல்லாஹ்வின் திருவாக்கினை நாமெல்லாம் பின்பற்றுவோமாக!
குடும்பத்தில், தெருவில், ஊரில் வேறுபாடுகள் இல்லாமல் வெற்றி / தோல்வி இரண்டினையும் சமமாக பாவித்து சுபிச்சமாக இருப்போம். இன்ஷா அல்லாஹ்…
மு.செ.மு.சபீர் அஹமது

