(நினைவலைகள்)
உன்னை எனக்கு
பேசுவதாக
பேச்சு!
உன்
புகைப்படம் கேட்டேன்
பூக்களின்
அஞ்சலட்டை அனுப்பி
கொஞ்சிக்கொள் என்றனர்!
உன்னைப் பற்றிக் கேட்டேன்
என்
அன்னையைப் பற்றிச் சொன்னர்!
குடும்பப் பின்னனி வினவ
குட்டிச் சுவன மென விடை!
என்னைத் தெரியுமா
என்னுடன் விருப்பமா - எனக்
கேட்கச் சொன்னேன்.
என்னை விரும்புபவரை
எனக்கும் பிடிக்கும்
பிடித்தவர் கரம்
பிடிக்கப் பிடிக்கும் - எனச்
சொன்னதாய் கேட்டேன்!
ஒற்றை அறையில்
ரெட்டை படுக்கைகள்
மூன்று இட்டிருக்க
நாலாவது படுக்கையில்
ஐந்தாவது ஆளாய்
என்னையும் சேர்த்து
ஆறு பேருக்கான
அமீரக வசிப்பில்
ஏழாவது ஆளாய்
நான்
அந்நியப்பட்டுப் போனேன்
எட்டாவதாக இணைந்த
உன் நினைவுகளோடு
ஒன்பது பத்து நாட்களாய்
ஒதுங்கிப் போனேன்!
நாவல்களிலும்
நவீனங்களிலும்
நான் விரும்பிய குணமும்...
சுவரொட்டிகளிலும்
சஞ்சிகைகளிலும்
நான் ரசித்த முகமுமாய்...
உன்னோடான
உளவியல் பரிச்சயம்
கூடிப்போனது!
முன்பின் அறியாதவர்க்கும்
முகமன் சொன்னேன்
முன்பென்றும் இல்லாதளவு
முகம் மலர்ந்திருந்தேன்!
பாலைவன பரிதவிப்பில்
காலையும் மாலையும்
கனவுகளில் கழிய...
வேலை விடுப்பில்
உனக்கு
மாலையிட்ட மாலையையும்
கைபிடித்த வேளையயும்
மறக்கமுடியுமா?
உள்ளூரில்
உன்னோடான வாழ்க்கை
உயிரை புதிப்பித்தது
உள்ளத்தை உயிர்ப்பித்தது!
பகிர்தலில்
பலம் கூடியது!
இரவு உறங்குவதற்கு...
உணவு உயிர்வாழ...
போன்ற
பொதுக் கோட்பாடுகள்
பொய்த்துப் போயின!
செலவு
இருப்பை இரட்டிப்பாக்கியது!
மொழியை மெளனமாக்கி
விழியே உரையாடியது!
நாம் பேசிய வார்த்தைகளைவிட
பேசப்படாதவையே வாழ்வியலானது!
இன்னும் கொஞ்சம்
இயற்கை வேண்டி
குறிஞ்சி தொட்டோம்...
இன்னும் கொஞ்சம்
வாய்க்கால் வரப்பிற்காக
முல்லை கண்டோம்...
இன்னும் கொஞ்சம்
நடக்க விரும்பி
நெய்தல் சென்றோம்...
இன்னும் கொஞ்சம்
களிக்க நினைத்து
மருதம் போனோம்...
இன்னும் கொஞ்சம்
செல்வம் தேடியே
பாலை வந்தேன்!
இங்கோ...
தேடிய இடமெல்லாம்
தென்றலாய் நீ -
நடக்க விளைந்தால்
சாலையாய் நீள்கிறாய்
கடக்க முனைந்தால்
நாட்களாய் நகர்கிறாய்!
ஒன்றும் ஒன்றும்
மூன்றாய் போவது
வழக்குக் கணக்கில்
பிழையானாலும்
வாழ்க்கைக் கணக்கில்
சரியே!
அந்த விடை...
உன்
மடி தவழும் நாள்
என்னுடன்
நிகழ வேண்டும்!
உன்னை எனக்கு
பேசுவதாக
பேச்சு!
உன்
புகைப்படம் கேட்டேன்
பூக்களின்
அஞ்சலட்டை அனுப்பி
கொஞ்சிக்கொள் என்றனர்!
உன்னைப் பற்றிக் கேட்டேன்
என்
அன்னையைப் பற்றிச் சொன்னர்!
குடும்பப் பின்னனி வினவ
குட்டிச் சுவன மென விடை!
என்னைத் தெரியுமா
என்னுடன் விருப்பமா - எனக்
கேட்கச் சொன்னேன்.
என்னை விரும்புபவரை
எனக்கும் பிடிக்கும்
பிடித்தவர் கரம்
பிடிக்கப் பிடிக்கும் - எனச்
சொன்னதாய் கேட்டேன்!
ஒற்றை அறையில்
ரெட்டை படுக்கைகள்
மூன்று இட்டிருக்க
நாலாவது படுக்கையில்
ஐந்தாவது ஆளாய்
என்னையும் சேர்த்து
ஆறு பேருக்கான
அமீரக வசிப்பில்
ஏழாவது ஆளாய்
நான்
அந்நியப்பட்டுப் போனேன்
எட்டாவதாக இணைந்த
உன் நினைவுகளோடு
ஒன்பது பத்து நாட்களாய்
ஒதுங்கிப் போனேன்!
நாவல்களிலும்
நவீனங்களிலும்
நான் விரும்பிய குணமும்...
சுவரொட்டிகளிலும்
சஞ்சிகைகளிலும்
நான் ரசித்த முகமுமாய்...
உன்னோடான
உளவியல் பரிச்சயம்
கூடிப்போனது!
முன்பின் அறியாதவர்க்கும்
முகமன் சொன்னேன்
முன்பென்றும் இல்லாதளவு
முகம் மலர்ந்திருந்தேன்!
பாலைவன பரிதவிப்பில்
காலையும் மாலையும்
கனவுகளில் கழிய...
வேலை விடுப்பில்
உனக்கு
மாலையிட்ட மாலையையும்
கைபிடித்த வேளையயும்
மறக்கமுடியுமா?
உள்ளூரில்
உன்னோடான வாழ்க்கை
உயிரை புதிப்பித்தது
உள்ளத்தை உயிர்ப்பித்தது!
பகிர்தலில்
பலம் கூடியது!
இரவு உறங்குவதற்கு...
உணவு உயிர்வாழ...
போன்ற
பொதுக் கோட்பாடுகள்
பொய்த்துப் போயின!
செலவு
இருப்பை இரட்டிப்பாக்கியது!
மொழியை மெளனமாக்கி
விழியே உரையாடியது!
நாம் பேசிய வார்த்தைகளைவிட
பேசப்படாதவையே வாழ்வியலானது!
இன்னும் கொஞ்சம்
இயற்கை வேண்டி
குறிஞ்சி தொட்டோம்...
இன்னும் கொஞ்சம்
வாய்க்கால் வரப்பிற்காக
முல்லை கண்டோம்...
இன்னும் கொஞ்சம்
நடக்க விரும்பி
நெய்தல் சென்றோம்...
இன்னும் கொஞ்சம்
களிக்க நினைத்து
மருதம் போனோம்...
இன்னும் கொஞ்சம்
செல்வம் தேடியே
பாலை வந்தேன்!
இங்கோ...
தேடிய இடமெல்லாம்
தென்றலாய் நீ -
நடக்க விளைந்தால்
சாலையாய் நீள்கிறாய்
கடக்க முனைந்தால்
நாட்களாய் நகர்கிறாய்!
ஒன்றும் ஒன்றும்
மூன்றாய் போவது
வழக்குக் கணக்கில்
பிழையானாலும்
வாழ்க்கைக் கணக்கில்
சரியே!
அந்த விடை...
உன்
மடி தவழும் நாள்
என்னுடன்
நிகழ வேண்டும்!
-- சபீர்
-- Sabeer.abuShahruk



