கடந்த வருடக் கடைசியில் உலகம் அழிந்து விடும் என்று கடன்
வாங்கியவர்களுக்கும், கல்யாணம் செய்ய
திட்டமிட்டு தள்ளிப் போட்டவர்களுக்கும், வீட்டில் செருப்படி வாங்கிக் கொண்டு வெளியில் வெள்ளையும்
சொல்லையுமா திரிந்து 'இன்னும் எத்தனை
நாளைக்கு' என்று கெத்தாக
திரிந்த வெட்டிகளுக்கும். நகையை மற்றவர்களிடம் இரவல் வாங்கும்போதே 'கொடுக்க
தேவையிருக்காது" என்று கலர் கலரான கனவில் மிதந்தவர்களுக்கும் இது சமர்ப்பணம்.
டிசம்பர் 21 , 2012 க்கு முன் , பின் என்று
முட்டாள்தனங்களை வகைப்படுத்த முடியும். எனக்கு வரும் குப்பை இ-மெயில்களில் மாயன்
காலண்டரை ஏதோ நான் வாங்க மறந்து விட்டது மாதிரியும், இ-மெயில்
இம்சைக்காரர்கள் [அதான் ஒரே ஸ்பாம் இமெயிலில் மட்டும் தொடர்பு கொள்ளும் அல்லது
கொல்லும் நண்பர்கள்] தொடர்ந்து அனுப்பிக் கொண்டெ இருந்தார்கள்.?. இமெயில் இலவசம்
என்பதால் தான். ஒரு இமெயிலுக்கு ஒரு ரூபாய் என்று வைத்தால் குறைந்தது இந்த ஸ்பாம்
இமெயில் குறையும் ஒரு சமயம் இந்த மாயன் காலண்டர் பிள்ளைகள் படம் , இயற்கை காட்சிகள்,
நடிகர்கள் படம்
போட்டு பிரின்ட் செய்திருந்தார்கள் இவர்கள் எனக்காக காசு கொடுத்து வாங்கி கூட
அனுப்பியிருந்தாலும் ஆச்சர்யமில்லை.முதலில் இந்த மாயன் யார் என்று தெரிந்து கொள்வோம். இவர் யாரோ நம் ஊர் பக்கத்தில் வேலியடைக்கும், மற்றும் குளம் தூர்வாரும் ஒட்ட ஜனங்களை சார்ந்த மனிதர் அல்ல. மற்றபடி ஆஸ்ட்ரோபிசிக்ஸ் படித்த விஞ்ஞானியும் அல்ல. பிறகு ஏன் இப்படி இந்த உலகத்தில் இப்படி ஒரு விளம்பரம்??. குரங்குக்கு சிரங்கு வந்தால் என்ன செய்யும்... அதே சொரியல்தான் இதுவும்.
மாயன் என்பதை விட 'மாயா' என்பதே சரி , இது ஒரு சிந்து சமவெளி நாகரீகம் மாதிரி இவர்களின் [கொலம்பியாவின் மூத்த குடி] எழுதிய காலண்டர் , எண்கள், மொழி எல்லாவற்றையும் குறிக்கும்.இதை ஏன் நான் வேலை மெனக்கெட்டு எழுதுகிறேன் என்றால் நீங்கள் 'ச்சாய்சில்' விடுகிற கேள்வியல்ல.
மாயன் காலண்டர் எல்லாம் வெளியிடும் அளவுக்கு சென்னையில்,ஆன்டர்சன் தெருவிலோ, மலையபெருமாலள் தெருவிலோ பிரின்டிங் கம்பெனி ஏதும் நடத்தவில்லை. அதே சமயம் இப்படி 2012 ல் அவருடைய காலண்டரை எடுத்துக்கொண்டு இப்படி "நவீன" மடையர்கள் கும்மியடிப்பார்கள் என்றும் எதிர்பார்த்தும் காலண்டர் எழுதவில்லை.
இதுவெல்லாம் தெரிந்தும் நம் கம்ப்யூட்டர் படித்த மக்கள் ஏதோ வருகின்ற மாயா காலண்டர் உலகம் அழியப்போகிற சமாச்சாரத்தை ஃபார்வேர்டு செய்யாவிட்டால் மாயனிடம் எப்படி பதில் சொல்வது என்பதுபோல் எல்லோருக்கும் மெனக்கட்டு அனுப்பிக் கொண்டிருந்தனர்.
இப்படி மூட நம்பிக்கையை அவர்கள் உலகத்தில் பதிந்தார்களா
என்பது வேறு விசயம். ஆனால் இவர்கள் சொன்ன காலண்டர் என்பது எப்படியிருந்தது என்றால்
ஏதோ படம் போட்டு , நல்ல நேரம் கெட்ட நேரம் எழுதி, எந்த ஊர் கோயில்
திருவிழா எல்லாம் பிரின்டில் இருந்ததா என்றால் அதுவெல்லாம் இல்லை.தமிழ்படங்களில் பழசை சிந்திக்கும்போது வட்டம் வட்டமாக வருமே அது மாதிரி வந்த கோட்டில் கடைசியில் ஒரு தேதியை கணக்கிட்டு அதுதான் உலக அழிவுக்காலம் என்று சொன்னால்... “கேப்பை – கேனயன்” போன்ற நல்ல தமிழ் எல்லாம் எப்படி மனதுக்குள் தோன்றவில்லை. இருந்தாலும் இந்த மாயன் அல்லது மாயன்கள் இப்போது இல்லை என்று சொன்னாலும் , என்னை பொருத்தவரை இன்னும் இருக்கிறார்கள். மூட நம்பிக்கையை முழுதாக ஒழிக்காமல் கடைபிடிப்பவர்கள் எல்லாம் மாயன்கள் தான்.
நிறைய பேர் இப்போது ஒரு வேலையும் செய்யாமல் டைரக்டா கல்லா
கட்டுவது எப்படி என்பதில் கவனம் செலுத்துகிறார்கள், அதனால் எந்த
அளவுக்கு மூட நம்பிக்கை வளர்கிறது என்றால் மெளலூது ஓதிய ஆடியோ கேசட்டை
கல்லாவில் போட்டு வைத்திருந்த முதலாளிகளை
பார்த்திருக்கிறேன். வலது கால் / வலது கை பழக்கம் மட்டுமே
ராசியானது. பொன் கிடைக்காவிட்டாலும் புதன் கிடைத்தது என்று பிதற்றும் மக்கள். வீடு
கட்ட கல்லும் மண்ணும் வாங்குவதில் கவனம் செலுத்துவதை விட நிலைக்கதவு வைக்கும்போது
சந்தனத்தை “ஏத்தினாப்லெ தடவுங்க அப்பதான் ஏத்தம்” என்று சொல்லும் பெரியவர்கள்.
கோழி ரத்தம் , ஆட்டு ரத்தம்
ஊற்றி செங்கல் வைக்கும் பழக்கம். [ஆனால் இப்படி செய்பவர்கள் 30 வருடமாக வேலை
பார்க்கும் வளைகுடா கம்பெனிகள், அபார்ட்மென்ட்டுகள் இப்படி எல்லாம் கட்டாமலும் ஸ்ட்ராங்காகதானே இருக்கிறது என்று ஊருக்கு
வந்தவுடன் தனது அறிவுக்கு எட்டாமல்
எகத்தாளம் செய்வதுதான் புரியவில்லை.
வீட்டு வாசலின் நிலைக்கதவில் குதிரை யூஸ் & த்ரோ செய்த லாடம் அடிப்பது.
வீட்டு வாசலின் நிலைக்கதவில் குதிரை யூஸ் & த்ரோ செய்த லாடம் அடிப்பது.
ரசத்திலும் , சர்பத்திலும் போட வேண்டிய எலுமிச்சையை பந்தலில் கட்டுவது.
இவை எல்லாம் நவீன மாயன்களின் சடங்குகள்.
அந்த மெளலானா கொடுத்த கயிறு , இந்த மெளலான கொடுத்த கயிறு என்று ஒரு ஆட்டுக்குட்டியை கட்டிப்போடும் அளவுக்கு கயிறு கட்டி அலையும் ஆட்களும் மெளலானாவுக்கு பிரச்சினையிருக்கனுமே ஏன் அவர் கயிறு கட்டவில்லை என்று யோசிப்பதில்லை.
இப்போதைய புதிய ட்ரண்ட் வருமானம் இல்லையா “கட்டு ஒரு கப்ருஸ்தான்”. காசு
பார்க்க இதை விட நல்ல சூழ்நிலை இல்லை என்று ஈமானையும் அந்த குழியிலேயே வைத்து
புதைத்து விட்டார்கள்.
ஏன் இந்த அவல நிலை. உழைக்க மறுத்ததுதான் காரணம்... இப்போது சொல்லுங்கள் மாயன் இன்னும் சாகவில்லைதானே.
ஏன் இந்த அவல நிலை. உழைக்க மறுத்ததுதான் காரணம்... இப்போது சொல்லுங்கள் மாயன் இன்னும் சாகவில்லைதானே.
நாம் மற்றவர்களை லாரிக்கு கீழே எலுமிச்சை கட்ரான்யா, பூனை குறுக்கே போனால் தண்ணீர் குடித்து விட்டு போனால் நல்லது என்று பூனைக்கு கொடுக்காமல் தண்ணீர் குடிக்கிறான் என்று கிண்டல் அடிக்கிறோம்.
நம்முடைய நிலை என்ன... மாயனை விட கேவலமானது. அவிங்களாவது காலண்டர் எழுதிதான் கவுத்தானுங்க. நாம் ஒவ்வொரு நாளும் தேதி எழுதி கவுக்கிறோம். இந்த லட்சனத்தில் 1434 வருடமாக நாம் நல்ல வழியை பின்பற்றி நடக்கிறோம் என்ற உண்மை வேறு.
தர்காக்களில் தரும் நார்சா, பூசிய சந்தனத்தை
பொட்டளம் கட்டி காசு பார்க்கும் கூட்டம் எல்லாருமே மாயனின் சந்ததியினர்தான்.
வெளிநாடுகளில் கஷ்டப்பட்டு சம்பாதித்து வருபவனுக்கு அவன்
சம்பாதித்த காசை எப்படி 'தெய்வக்குத்தம்" இல்லாமல் செலவழிப்பது
என்று ஒரு குரூப் அட்வைஸ் அளப்பரை கொடுப்பார்கள். சம்பாதிக்க தெரிந்தவனுக்கு செலவு
செய்ய தெரியாமல் இப்படி நேந்து விட்ட கோழி மாதிரி முழித்தால்... அவனை என்ன சொல்வது.
மனித இனம் தோன்றியதிலிருந்து அவன் அவன் தன் பங்குக்கு
ஏதாவது ஒரு மூட நம்பிக்கையை வளர்த்து கொண்டோ அல்லது உலகில் பதிந்து விட்டுதான்
சென்றிருக்கிறான். இந்தியா நவீன விஞ்ஞானத்தில் வளர்ந்து விட்டது என்று வீராப்பு
பேசினாலும் இன்னும் மனிதர்கள் மண்டையில் தேங்காய் உடைப்பதும், பிள்ளைகளைப் போட்டு
அதன் மீது ஏறி ஓட்டம் எடுத்து அருள் பாலிப்பதும். பிள்ளை இல்லை என்பதற்காக மினியேட்சர் தொட்டி கட்டி தொங்க விடுவதும்.
மாட்டு மூத்திரத்தை பாட்டில் போட்டு 'புனித
கோமியம்" என்று கல்லா கட்டுவதும் [மாடு ராயல்ட்டி எல்லாம் கேட்காது].
இதற்கு மதம் எல்லாம் தேவையில்லை. இப்படி எழுதியதால் இது
ஏதோ இஸ்லாமியர்களிடம் இப்படி எல்லாம் இல்லை என்று சொல்லவில்லை [அப்பாடா...
இதுவரை விஸ்வரூபம் படம் வெளிவர
இஸ்லாமியர்களை திட்டி தீர்த்த கமென்ட்டர்கள் சந்தோசம் அடைந்தால் சரி]. இது போன்ற
மூட நம்பிக்கைகள் எல்லாரிடமும் இருக்கிறது.
அதனால்தான் சொல்கிறேன்.... மாயன் இன்னும் சாகவில்லை. திடீர் என புதிதாக தோன்றப்போகும் அள்ளக்கை அது 2012 இல்லேப்பா... 2022 என்று, மாயன் காலண்டர் பிரின்டிங் மிஸ்டேக்... புரூஃப் பாக்காமெ வெளியிட்டது என்று சொன்னாலும் சொல்லலாம்.
அதனால்தான் சொல்கிறேன்.... மாயன் இன்னும் சாகவில்லை. திடீர் என புதிதாக தோன்றப்போகும் அள்ளக்கை அது 2012 இல்லேப்பா... 2022 என்று, மாயன் காலண்டர் பிரின்டிங் மிஸ்டேக்... புரூஃப் பாக்காமெ வெளியிட்டது என்று சொன்னாலும் சொல்லலாம்.
ZAKIR HUSSAIN



