நடை தளரக் கூடாதெனத்
தடி கொணர்வர்
முதுமை கால மனிதர்!
வராதென நினைத்த பிணி
வந்துவிட்ட போதினிலே
குடையாய் பயன் பட்ட அது
தடியாய் தடம் மாறும் அப்போது!
இப்படியும் யோசி... மானிடா!
விரும்பாததொன்றை பெறுவதும்
விரும்பியது கிடைக்காமாலிருப்பதும்
வழக்கமான வாடிக்கை!
வாராதது கண்டு வாடாது
வறுமை என வெறுக்காது
தடைகளால் பின் வாங்காது
தொடர். வெற்றியுண்டு!
போட்டது தானே முளைக்கும்
பேராசைப்பட்டது பொய்க்கும்
கிடைத்ததைத் கொண்டு திருப்திபடு
கிடைக்காத ஒன்றெதெற்கு நல்லார்க்கு?
முற்கால காதலுக்கு கடிதம் மட்டும்
இக்கால காதலோ கடும் கொட்டம்
அகம் காண உனக்கு
நிசக்கண்ணே போதும்!
வாய்த்ததை நிறைவாக்கி
வாழ்வில் வசந்தம் அடை!
இப்படியும் யோசி...மனிதா!
உள்ளாரிடம்
இல்லாக் குணம்
இருக்கிறதே உன்னிடம்!
தென் னை போல் உள்ளத்தால் உயர்
கிழக் கன் மீன் போல் கொழுப்பின்றி உண்
வட மாய் மாறி ஊட்டிடும் நார்த்தங்காய்க் குணம்
மேற் கோளிட ஏற்ற மார்க்கம் இஸ்லாம்!
பல முயற்சியில்
கிடைக்கும் வெற்றிக்கு
குறுக்கு வழியில் மட்டும்
முயல்வது முறையல்ல!
இம்மையின் இச்சையொன்றை மட்டும் வைத்து
இல்லாத எதையும் இட்டு கட்டுவது
இன்றில்லாவிட்டாலும் நிச்சயம் நாளை
இவ்வுலக முடிவின் பின் இறைவனின் தண்டனையுண்டு...
இப்படியும் யோசி.... மனிதா!
உண்மை உரைத்து
வாய்மை வெல்லும்
மறுமை நினை-அதன்
மகிழ்வே தனி!
நீரின் எல்லை வரைதான் குளத்தின் கரை
உயிரின் முடிவு வரைதான் வாழ்க்கை
உன்னை படைத்தவனை என்றும் நினை
அவனே உனக்கு என்றும் துணை.
உயிர் உள்ளவரை தான் மனிதன்
அது எடுபட்டால் மையித்
அது நிகழ்ந்துவிட்டால்
உயிர் உன்னிடமல்ல...உடல் மண்ணிடம்!
இப்படியும் யோசி... மனிதா:
உள்ளவரை உதவு
இல்லாதவரை அணை
இவர்கள் உள்ளவரை வாழும்
இவ்வையகம்!!!
M.H.ஜஹபர் சாதிக்


