Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in
Showing posts with label தொலைக்காட்சி. Show all posts
Showing posts with label தொலைக்காட்சி. Show all posts

நேருக்கு நேர் - அல்ஜஸீர தொலைக்காட்சி காணொளி ! 2

அதிரைநிருபர் பதிப்பகம் | December 28, 2015 | , ,


தினந்தோறும் நாம் ஏராளமான தொலைக்காட்சி, முகநூல் விவாதக்களங்கள், நேருக்கு நேர், விவாதமேடை இன்னும் எத்தனை எத்தனையோ !

ஆனால், இங்கே பதிக்கப்பட்டிருக்கும் அல்-ஜஸீரா தொலைக்காட்சியின் நேருக்கு நேர் காணொளி களத்தில் பேசுபொருளை ஒவ்வொருவரும் அவசியம் பார்க்க வேண்டும்...

இயன்றால் கருத்துகளை பதிக்கவும் தவறாதீர்கள் !


அதிரைநிருபர் பதிப்பகம் 

ஊடக போதை - தொடர்கிறது... 4 10

அதிரைநிருபர் பதிப்பகம் | January 05, 2012 | , , , , , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்..
version 4

முந்தைய ஊடக போதை பதிவில் இந்திய ஒருமைப்பாட்டுக்கு வேட்டு வைக்கும் கேடுகெட்ட தமிழக ஊடகங்களை விமர்சனம் செய்து நடுநிலையான தமிழ் மற்றும் கேரளத்து மக்களின் எண்ணங்களைப் பகிர்ந்துக்கொண்டோம். 

இந்தப் பதிவில் அறிவை மங்க வைக்கும் இன்றைய ஊடகங்களின் போக்கை  சிறிதேனும் அலசுவோம். இது முஸ்லீம் சமுதாயத்தை ஆழமாக பாதித்துள்ளது என்பதற்கு அன்றாட நிகழ்வுகளாக கண்முன்னால், நம் காதுகளால் உணர்த்தப்படும் சமூதாய சீர் கேடுகளே சாட்சி.

விஞ்ஞான வளர்ச்சியின் பலனாய் முத்தாய்ப்பாக கிடைத்த தொழில்நுட்பத்தைக் கொண்டு அறிவை வளர்க்கும் மற்றும் நன்மையான வழியில் செலவழிக்க எவ்வளவோ வழிகள் இருந்தும் 99% அறிவை மட்டுப்படுத்தும், மக்கிட வைக்கும் சீர்கேட்டுக்கான வழிகளையே நம்மக்கள் வேண்டி விரும்பி அதனூடே மூழ்கிக் கிடக்கிறார்கள். படைத்த இறைவனை அனேகமாக எந்நேரமும் நினைவு கூற தவறும் தருணங்களை உருவாக்குவதில் இன்றைய காலச்சூழல் நிலவுகின்றது. அதற்கு அதி முக்கிய காரணியாக ஒவ்வொரு நாளும் நாம் கண்டுகளிக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளே காரணம் ! அல்லாஹ் காப்பாற்றுவானாக….

என்னப்பா இது இவர்களுக்கு வேறு வேலையே இல்லையா.. எத்தனை பதிவுகளில்தான் இதை பற்றியே எழுவார்கள்? என்றெல்லாம் அலுத்துக்கொள்ள வேண்டாம், ஏற்கனவே பல தளங்களில், அச்சுக் காகிதங்களில் படித்திருந்தும் அந்த எச்சரிக்கைகள் எரிச்சலூட்டுவதாக இருந்தாலும் தயை கூர்ந்து இங்கே எடுத்து வைத்திருக்கும் விடயங்களை நிதானமாக படியுங்கள். நாம் எங்கெல்லாம் தொடராக நம்மால் அறிந்தோ அறியாமலோ தவறு செய்கிறோம் என்பதை உணர இது ஒரு வாய்ப்பாக அமையலாம்.

மனித வாழ்வியலின் எதார்தத்தை மறைத்து சாமானியனின் சக்திக்கு அப்பாற்பட்டவைகளை கற்பனை கதாபாத்திரங்களாக உருவாக்கி அவைகளை காட்சிப்படுத்தி தொலைக்காட்சிகளின் வாயிலாக வீட்டு வரவேற்பறைக்கும், நிம்மதியாக உறங்க ஒதுக்கியிருக்கும் தனியறைக்கும் கொண்டுவந்து நம்மவர்களின் அறிவை மழுங்ககடிக்கும் வேலையை சிறுக சிறுக செய்து வருகிறது சினிமா மற்றும் தொடர் நாடகங்கள், மனித வாழ்வியலுக்கு ஒவ்வாதவைகளை இந்த கேடுகெட்ட ஊடகங்கள். சினிமாவை கலையாக காண்பதே தவறு அது கலையே அல்ல. பல கேடுகெட்ட ஆபாசங்களுடன்,  மனித வாழ்வுக்கு முரணான தடுக்கபட்ட இசைகளுடனும் குழப்பங்களுடனும் சேர்ந்த சில கலவை குப்பையே எந்தக் கால சினிமாவும் இந்த கேடுகெட்ட தொலைக்காட்சி தொடர் நாடகங்களும். 

ஒழுக்கக் கேட்டின் ஒய்யாரமாக இருக்கும் சினிமாதுறையில் ஈடுபடுபவர்களை முன்னிருத்தியே தொலைக்காட்சி நிகழ்சிகள் அனைத்தும் விழித்தது முதல் உறங்க மறுக்கும் இரவின் கடைசி நேரம் வரை பெரும்பாலான நிகழ்ச்சிகள் ஒளிப்பரபப்படுகிறது. எதார்த்தமான வாழ்வுக்கு பொருந்தாத கற்பனைகளுக்கு உருவம் கொடுத்தவர்களை தங்களுக்கு பிடித்தவர்களாக எண்ணி, தங்களின் அன்றாட வணக்க வழிபாடுகளுக்கு வேட்டு வைத்துக் கொண்டு நம் சமுதாய மக்களில் பெரும்பாலோர் தங்களின் அறிவை மழுங்கச் செய்யும் தொலைக்காட்சி போன்ற ஊடகங்களில் பொன்னான நேரத்தை வீணடித்து வருகிறார்கள். குறிப்பாக விடுமுறை காலங்களில் தங்களது அறிவை வளர்க்கும் தருணத்தையும், அல்லது குடும்ப உறவுகளோடு மனம் விட்டு பேசும் வாய்ப்பையெல்லாம் “தானே” புயல் வேகத்தில் தூக்கி எறிந்துவிடுவது இந்த கேடுகெட்ட சினிமாகாரர்களை முன்னிருத்தும் ஊடகங்களே அன்றி வேறில்லை.

சினிமா என்றொரு காரணியை மூலதனமாக வைத்தே ஏராளமான தொலைக்காட்சிகளும் வானொலி நிலையங்களும் இயங்கிவருகிறது. குறிப்பிட்டுச் சொல்வதனால் 24 மணிநேர இசை தொலைக்காட்சிகளின் ஆதிக்கம் இளைய சமுதாயத்தின் பசுமையான அறிவு வளர்ச்சியினை பொசுக்கிவிடுகிறது என்பதை இங்கு எடுத்து வைத்தால் சிந்திப்பவர்கள் நிச்சயம் ஏற்றுக் கொள்வார்கள். இசையொன்று காதுகளில் விழுந்தால் மட்டும்தான் மனத்துக்கு அமைதியும் உற்சாகமும் என்று சொல்லுபவர்களின் வாதம் போலியானது. கர்ப்பினிப் பெண்டிர் இசையை கேட்பதால் வயிற்றில் இருக்கும் குழந்தை ஆரோக்கியமாக வளர்கிறது என்று சிசுவை வைத்து வியாபார விளம்பரம் செய்வது. இசைதான் புத்துணர்வு கொடுக்கிறது மனிதனின் அறிவை வளர்க்கிறது என்று எந்த ஆதாரங்களை முன்னிருத்தி இவர்கள் சொல்கிறார்கள் என்று நமக்கு புலப்படவில்லை.அதனை நிருபிக்கத்தான் முடியுமா இவர்களால்.

“அறிவை மழுங்கடிக்கச் செய்யும் இசைக்கருவிகளை உடைத்தெரியவே நான் வந்துள்ளேன்” என்று சொன்ன நபிகளாரின் வார்த்தைக்கு மதிப்பளிக்கிறோமா இல்லையா என்பதை இசைக்கு கொஞ்சமாகவோ கூடுதலாகவோ அடிமையாகியுள்ள மனசாட்சியுள்ள நற்சிந்தனைகளுக்கு காது கொடுக்கும் ஒவ்வொரு முஸ்லீமும் சிந்திக்க வேண்டும்.

இன்றைய காலச்சூழ்நிலையில் சினிமா அடிவருடிகளாகவும் இசையின் இச்சைக்கு அடிமையாகியுள்ள நாம், மனித சமுதாயத்திற்கே அருட்கொடையாக வந்த நபிகளின் சொல்லை மதிக்கிறோமா என்பதை சிந்திக்க வேண்டும்.

இஸ்லாத்தில் இசை கேட்பது தடுக்கப்பட்டிருக்கின்றது என்பதற்குரிய ஆதாரத்தை பின் வரும் இறைவசனமும் அதற்கான விளக்கமும், மற்றும் தொடர்ந்து வரும் நபிமொழியை நிதானமாக வாசித்து பருங்கள்..

(இவர்கள் தவிர) மனிதர்களில் சிலர் இருக்கின்றார்கள் – அவர்கள் அறிவில்லாமல் வீணான பேச்சுக்களை விலைக்கு வாங்கி, (அவற்றால் மக்களை) அல்லாஹ்வின் பாதையிலிருந்து வழி கெடுக்கவும், அல்லாஹ்வின் பாதையைப் பரிகாசமாக்கிக் கொள்ளவும் (முயல்கிறார்கள்) இத்தகையோருக்கு இழிவுதரும் வேதனையுண்டு. 31:6

இந்த திருவசனத்தில் வந்திருக்கும், வீணான பேச்சுக்கள் என்பதற்கு, அது இசைக்கருவிகள்தான் என அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது (ரலி) அவர்கள் விளக்கம் கூறுகின்றார்கள்.

என்னுடைய உம்மத்தில் சில கூட்டத்தினர் தோன்றுவார்கள், அவர்கள் விபச்சாரத்தையும், பாட்டையும், மதுவையும் இசைக்கருவிகளையும் ஹலால் (ஆகுமானதாக) ஆக்குவார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)

மேல் கூறப்பட்ட ஆதாரத்தின் அடிப்படையில், இசை கேட்பது இஸ்லாத்தில் தடுக்கப்பட்டது என்பது தெளிவாகின்றது. 

நம் உயிரினும் மேலான நபிகளார் தடுத்த ஒருவகை போலிகளின் கலவையை முன்னிருத்திய சினிமாவையும் அதன் பாடல்களையும் ஊக்குவிக்கும் ஊடகங்களை ஒவ்வொரு கலிமா சொன்ன முஸ்லீம்களும் வெறுக்க வேண்டும். ஊடகங்களின் வாயிலாக அறிவை வளர்க்கும் நல்லவைகள் எவ்வளவோ நிறைந்து கிடக்கிறது அவைகளை தேடி பிடித்து குர்ஆன் நபிவழியுடன் ஒப்பிட்டு நம் இவ்வுலக அறிவை வளர்த்துக்கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.

இந்தப் பதிவின் கருப்பொருளை பின் வரும் ஹதீஸ்களை முன்னிருத்தி நிறைவு செய்தால் பொருத்தமாக இருக்கும். 

புகாரி: (இலக்கம் 100.) 'நிச்சயமாக அல்லாஹ் கல்வியை(த் தன்னுடைய) அடியார்களிடமிருந்து ஒரேயடியாகப் பறித்து விட மாட்டான். ஆயினும் அறிஞர்களைக் கைப்பற்றுவதன் மூலமே அவன் கல்வியைக் கைப்பற்றுவான். கடைசியாக ஓர் அறிஞர் கூட மீதமில்லாமல் ஆக்கிவிட்டதும் மக்கள் அறிவீனர்களைத் தம் தலைவர்களாக்கிக் கொள்வார்கள். அவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டு அறிவின்றியே மார்க்கத் தீர்ப்பும் வழங்குவார்கள். (இதன் மூலம்) தாமும் வழி கெட்டு(ப் பிறரையும்) வழி கெடுப்பார்கள்' இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னி ஆஸ்(ரலி) அறிவித்தார்.

புகாரி: (இலக்கம் 80.) 'கல்வி மக்களிடமிருந்து மறைந்து விடுவதும் அறியாமை நிலைத்து விடுவதும் மது அருந்தப் படுவதும் வெளிப்படையாய் விபசாரம் நடப்பதும் மறுமை நாளின் அடையாளங்களில் சிலவாகும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அனஸ்(ரலி) அறிவித்தார்.

மார்க்க கல்வி அறிஞர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்துக்கொண்டே செல்கிறது. மேல் சொன்ன நபிமொழிகளின் முன்னறிவுப்புகள் அன்றாட நிகழ்வுகளாக நடைபெறுவதை காண முடிகிறது.

அறிவின் தேடலே கல்வி, தமிழகத்தில் மார்க்க பிரச்சாரங்கள் செய்யும் பிரச்சாரகர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். இன்றைய காலச்சூழலில் மார்க்க கல்வியை தேடும் ஆர்வம் நம் சமுதாயத்தவர்களிடம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. இதற்கு பொதுவான காரணம் இன்றைய கேடுகெட்ட சினிமாவின் ஆதிக்கத்தால் ஆளப்படும் தொலைகாட்சிகளும், இணையதளங்கள் போன்ற ஊடங்களின் தாக்கம், போதை. அறிவுக்கு புலப்படாத கற்பனைகளை சித்தரிக்கும் காட்சியமைப்புகளை முன்னிருத்தி ஒளிபரப்படும் நிகழ்ச்சிகளால் கேடுகள்தான் நிலைத்திருக்கிறதே தவிர அறிவு வளர்ச்சி என்பது 100% கேள்வி குறியே !

தினமும் தூக்கம், வீட்டு வேலை, அலுவலக வேலை, குறைந்தபட்சம் ஐந்து நேர தொழுகைகள் தவிர்த்து மற்ற நேரங்களை அறிவை பாழாக்கும் இஸ்லாம் தடுத்த இசை இச்சையின் விபச்சார காட்சிப்படுத்தல்களாலும் சினிமாவினாலும், அதன் தாக்கம் ஏற்படுத்தும் விளைவுகளால் உருவான கேடுகெட்ட மெகா (மட்டமான) தொடர்களின் குடும்பங்களால் எத்திவைக்கப்படும் குடும்பத்தில் குழப்பங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் தொலைகாட்சி சேனல்கள் போன்ற ஊடகங்களின் போதையிலிருந்து விடுபட்டு. மார்க்க அறிவையும் நன்மை பயக்கும் உலக அறிவையும் வளர்த்து இம்மையிலும் மறுமையிலும் வெற்றிபெற்ற சாலிஹான கூட்டத்தில் அல்லாஹ் நம் எல்லோரையும் சேர்த்தருள எல்லோரும் துஆ செய்வோமாக.

சிந்திக்க(வும்) : ஒரு நாள் “தென்றல்” என்ற தொடரை பார்க்காதவர்களுக்கு, நடந்த 20 நிமிட காட்சிகளை அப்படியே ஒரு காட்சி தவறாமல் சொல்லிக்காட்டி மகிழ்கிறோம் நாம், ஏன் நம் பிள்ளைகளிடம் “தென்றல்” காட்சிகளை பற்றி தாராளமாக உரையாடுகிறோம் நாம். 

ஒரு நாளைக்கு ஒரு குர்ஆன் வசனம் பொருள் உணர்ந்து மனனம் செய்ய ஏன் முயற்சி செய்யக்கூடாது? நம் பிள்ளைகளையும் ஊக்கப்படுத்தக்கூடாது? கவலை தரும் விடையமில்லையா?

இந்த மார்க்கத்தை அதன் தூய வடிவில் எல்லா சமுதாயத்திற்கும் எத்திவைத்து பாதுகாக்கும் பொறுப்பு ஒவ்வொரு முஸ்லீமுக்கும் உண்டு.

ஊடக போதைக்கு(ம்) அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் மருத்துவம் தொடரும்…  

இன்ஷா அல்லாஹ் !

- அதிரைநிருபர் குழு

மிகைப்படுத்தும் செய்திச் சேனல்கள் - விவாதக் களம் 22

அதிரைநிருபர் பதிப்பகம் | November 24, 2011 | , , , , , ,


நேற்று காலை சன்-செய்திச் சேனலில் தொடர்ந்து ஒரு செய்தியை மீண்டும் மீண்டும் வீடியோ கிளிப்புடன் காட்சிப்படுத்தி வாசிக்கப்பட்டது - அதுதான் "அதிரையைச் சேர்ந்த சகோதரரின் கைது" செய்தி அந்தச் செய்தியின் காட்சிக்குள்ளே அதன் செய்தியாளர் ஒருவரின் வக்கிரம் மிகைப்படுத்தப்பட்ட செய்தியை ஏதோ புதிய பரபரப்பை ஏற்படுத்துவதுபோல் பிரம்மையை உருவாக்கிக் கொண்டு மக்களுக்கு பீதியை கிளப்ப எத்தனித்திருப்பதை வன்மையாக கண்டிக்கப்பட வேண்டிய செயலாகும்.

அவதூறுக்கு பேர்போன மீடியாவின் பிம்பமாக மாறிவரும் இன்றைய தொலைக்காட்சி செய்திச் சேனல்கள் இம் மாதிரியான ஒருதலைபட்ச வக்கிரப் போக்கு தொடர்வது நம் சமுதாய நலனுக்கு நல்லதல்ல.

சமீபத்தில் ஒரு குறிப்பிட்ட நீதிபதியின் புகைப்படத்தினை 15 வினாடிகள் தவறாக காட்டிவிட்டதாக மன்னிப்பும் கேட்டது ஒரு ஆங்கில செய்திச் சேனல், அதற்கு நீதிமன்றமும் அபராதம் நூறு கோடி விதித்தது...

விந்தை என்னவென்றால் கேட்பதற்கு யாருமில்லை என்றும் சாமானியன் ஒருவரின் கைது நடவடிக்கையை பரபரப்புக்காக எதையும் செய்யலாம் என்ற வன்மம் கொண்ட இந்த கேடுகெட்ட மீடியாக்கள் அனைத்தையும் புறக்கனிக்கப்பட வேண்டும். அவர்கள் செய்திடும் இவ்வகையான தரம் தாழ்ந்த தவறினை உணர்த்தி ஊடக தர்மத்தினை நிலைத்திடச் செய்வோம். மனிதநேயம் போற்றுவோம், இந்திய ஒருமைப்பாட்டை மதிப்போம், வாருங்கள் விவாதிக்கலாம்.

தனிமனித சாடல் இன்றி நேர்மையாகவும் நிதானத்துடனும் விவாதிப்போம், நமது கண்டனத்தை இங்கே பதிந்திடுவோம்.

- அதிரைநிருபர் குழு

இஸ்லாமிய நிகழ்ச்சிகள் இணையத்தில்... ! 6

அதிரைநிருபர் | August 13, 2011 | , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்…..


அன்பான சகோதர சகோதரிகளே
நுட்ப வளர்ச்சியால் கிடைத்திருக்கும் இணையத்தை (internet) இந்த புனித ரமளான் மாதத்தில் மிகவும் பயனுல்ல வகையில் பயன்படுத்திக்கொள்ள நல்லதை மட்டுமே எடுத்துச் சொல்லும் பயனுல்ல இணைய இஸ்லாமிய தொலைக்காட்சிகள் / காணொளிகள், மற்றும் ரமளான் சிறப்பு சொற்பொழிவுகளின் நேரலைகளுக்கான சுட்டிகளை இங்கே பதிந்திருக்கிறோம்.

உலகலாவிய இஸ்லாமிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (இணையத்தில்):
· MAKKAH LIVE மக்கா நேரலை (24x7 திருக்குர்ஆன்) : http://adiraitv.blogspot.com/2011/07/makka-live-new-link.html

· MADINA LIVE மதீனா நேரலை (24x7 ஹதீஸ்): http://adiraitv.blogspot.com/2011/07/madina-live.html

· ISLAM TV LIVE இஸ்லாம் டிவி (24x7ஆங்கிலம்): http://adiraitv.blogspot.com/2010/10/islam-tv.html

· HUDA TV LIVE ஹுதா டிவி (24x7 ஆங்கிலம்): http://adiraitv.blogspot.com/2010/11/huda-tv.html

· PEACE TV LIVE பீஸ் டிவி (24x7 ஆங்கிலம்): http://adiraitv.blogspot.com/2010/11/peace-tv-live_20.html

இணையத்தில் நேரலை நிகழ்ச்சி:
  • ரமளான் தொடர் சொற்பொழிவுகளின் நேரலை (தமிழ்):
  • ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து துபாய் நேரம் இரவு 10:00மணி முதல் 11:00மணி வரைமவ்லவி முஹம்மது நாசர் அவர்களின் தொடர் மார்க்க சொற்பொழிவினை http://adirainirubar.blogspot.com/ http://aimuaeadirai.blogspot.com http://adiraibbc.blogspot.com வலைத்தளங்களிலும் நேரலையாக கண்டும் கேட்டும் பயன்பெறலாம்.
  •  அதிரை தக்வா பள்ளியிலிருந்து இந்திய நேரம் இரவு 10:00மணி முதல் 11:00 மணி வரைஹைதர் அலி ஆலிம் அவர்களின் பயான்  http://adiraibbc.blogspot.com வலைத்தளத்திலும் ஒலி-அலை நேரடி ஒலிபரப்பாக மார்க்க சொற்பொழிவுகளை கேட்டு பயன்பெறலாம்.
இஸ்லாமிய இணைய வானொலி:

  • Zazil FM (திருக்குர்ஆன் சுன்னா அடிப்படியிலான முதல் தமிழ் இணைய வானொலியின், மார்க்க சொற்பொழிவுகள், கேள்வி பதில்கள், சிறந்த  அறிவுரைகள் என்று இந்திய நேரம் மாலை 04:00மணி முதல் இரவு 12:00 மணி வரையிலும் அதனைத் தொடர்ந்து 24x7 நேரமும் திருக்குர்ஆன் தர்ஜுமா, நபிகளாரின் வாழ்க்கை வரலாறு ஒலி அலையாக  நம் அதிரைநிருபர் http://adirainirubar.blogspot.com மற்றும் அதிரைமணம் வலைத்தளத்திலும்  ஜாஜில் பன்பலை அலைவரிசையின் நிகழ்ச்சிகள் அனைத்தையும் கேட்டு பயன்பெறலாம்.
அல்லாஹ்வின் தூய மார்க்கத்தை அறிந்து நம் வாழ்வில் பாவமான செயல்களிலிருந்து நம்மை தூரமாக்கி, நன்மைகளின் பக்கம் நாம் நெருக்கமாக்கி கொண்டு அன்றாட வாழ்க்கையை நேர்வழிப்படுத்த எல்லாம் வல்ல அல்லாஹ் நேர்வழிகாட்டுவானாக.
அன்புடன்,
அதிரைநிருபர் குழு.


முள்மகுடம் - புதுசுரபி‏ 8

அதிரைநிருபர் | July 30, 2011 | , , , ,

அன்று திங்கள் மாலை.....

அண்ணாசாலையில் உள்ள நூலகத்தின் அரங்கில், வட்டியின் கொடுமையினை விளக்கி அதற்கான தீர்வையும் விளக்கும் குறும்பட வெளியீட்டு விழா நடைபெற்றது.

சிறப்பான ஏற்பாடுகளுடன் சீரிய கருத்துக்களைக் கூற பிரமுகர்கள் மேடையில் வீற்றிருக்க விழா தொடங்கியது.

ஒவ்வொருவராகப் பேசும் போது, இக்குறும்படத்தைப் பார்க்க அவகாசம் கிடைக்கவில்லை எனவும், ஓரளவு பார்த்ததாக சிலரும், கடைசி நேர அழைப்பினால் பார்க்க இயலவில்லை என வேறு சிலரும் தப்பித்தாலும் -தலைப்பை ஒட்டி மிகச் சிறப்பாகவே உரையாற்றினார்கள்.

அடுத்ததாக அழைக்கப்பட்ட பிரமுகர், பிரபல பெண் கவிஞர் -அவரும் இக்குறும்படத்தைப் பார்க்க இயலவில்லை எனக் கூறியதோடு, “எங்கள் வீட்டில் தொலைக்காட்சி பெட்டியையே மூட்டை கட்டி வைத்துவிட்டோம், அதனால் பார்க்க முடியவில்லை” என்று சொன்ன மாத்திரத்தில் என்னுள் பல கேள்விகள் மின்னல் வேகத்தில். ‘ஒரு பிரபலத்தின் வீட்டில் அதுவும் அரசின் முக்கிய  பதவியில் உள்ளவரின் வீட்டில் தொலைக்காட்சி இல்லையா?’ என வினாக்கள் விரிந்துகொண்டே போனதற்கு தடை போட்டன அவரின் அடுத்த வார்த்தைகள். “என் பிள்ளைகள் பள்ளி இறுதி ஆண்டுத்தேர்வை எதிர்நோக்கியுள்ளதால், தொலைக்காட்சிக்கு மூடுவிழா” என்று சொல்லி உரையினைத் தொடர்ந்தார் அந்தப் பொறுபுள்ள தாய்.

ஒவ்வொரு ஆண்டும் பள்ளி இறுதி ஆண்டுத்தேர்வு முடிவு வரும் நாட்களில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களின் பேட்டி செய்தித்தாள்களில் வெளிவருவது வழக்கம். அப்பொழுது சொல்லிவைத்ததுபோல எல்லா மாணவர்களும் அல்லது அவர்களின் பெற்றோர்களும் தொலைக்காட்சியின் தொல்லையினை உணர்ந்து முற்றிலும் தவிர்த்ததாகத் தவறாது கூறுவார்கள்.

இவர்களெல்லாம்,

இளைதாக முள்மரம் கொல்க; களையுநர்
கைகொல்லும் காழ்த்த விடத்து.

எனும் குறள் புரிந்து இருப்பார்களோ?! அதன் விஷ(ய)மறிந்து.

சில ஆண்டுகளுக்கு முன் நம் நாட்டில் உள்ள ஒரு பிரபல தனியார் தொலைக்காட்சியின் வர்த்தகப் பிரிவு தலைவராக இருந்தவர் ஒரு பெண் அதிகாரி. அவர் ஒருமுறை கூறினார், “நான் ஒரு தாயாகவும் அதே வேளையில் ஊடகத்திலும் பணிபுரிகிறேன். ஒரு தாயாக நான் சிறந்த நிகழ்ச்சிகளை அதாவது வன்முறைகள் இல்லாத, குழந்தைகளின் சிந்தனையைத் தூண்டக்கூடிய வகையிலான, தகவல்கள் நிறைந்தவற்றை மட்டுமே விரும்புகிறேன். ஆனால் ஒரு வர்த்தக அதிகாரியாக, அவற்றையெல்லாம் விட தொலைக்காட்சியின் அதாவது நிறுவனத்தின் வருமானத்தை மட்டுமே கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது” என்றார் வெறுப்புடன் பொறுப்பாக (!?)

’விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார்’ என்பதுபோல நிச்சயமாக இவர்களைப் போன்று சமூகத்தில் உயர்ந்தவர்கள், பொறுப்புகளில் உள்ளவர்கள், தம் குழந்தைகளின் மீதும் அவர்களின் கல்வியின் மீதும் அக்கறை கொண்டவர்களாக, நிகழ்ச்சிகளைத் தரம் பிரித்துத் தங்கள் குழந்தைகளுக்கு வழிகாட்டுபவர்களாக, தேவைப்படின் முற்றிலும் தவிர்க்கும் அளவிற்கு மனதளவிலும் தயார்படுத்தியும் விடுகிறார்கள்.

வாய்ப்புக் கேடாக, இன்று ஊடகங்களில் தயாரிக்கப்படும் நிகழ்ச்சிகள் பெரும்பாலும் பெண்களையும், குழந்தைகளையும், நடுத்தரவயதுடையோரையும் குறிவைத்து குறிப்பாக நடுத்தர, அதற்கு கீழே உள்ள குடும்ப மக்களை பலி கொள்ளக்கூடியதாகவே இருக்கிறது.

அதிகமான நேரத்தினை அதுபோன்ற நிகழ்ச்சிகளைப் பார்க்கும் குழந்தைகள் நிஜவாழ்விற்கும் திரைவாழ்விற்கும் இடையிலான வேறுபாட்டினை பகுத்து, பிரித்து வித்தியாசம் அறிய இயலாத மனநிலையைப் பெறுகின்றனர் என்கின்றனர் குழந்தை உளவியலாளர்கள். அதே மனநிலையில் வளரும் குழந்தைகள் வளர்ந்த பின்பு கூட பெரிதாய் ஏதும் புரிந்து கொள்வதில்லை.

உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமெனில் அண்மையில் செய்தித்தாள்களில் வெளிவந்த செய்தியொன்றைப் படித்திருப்போம். ‘சாப்பாட்டிற்கே வழியில்லாத ஏழை வீட்டுச் சிறுவன் (இலவச தொலைக்காட்சியில்) சாகச நிகழ்ச்சியைப் பார்த்து அது போல செய்ய முயன்று தீக்கிரையானான்” என்றும் “கணவன் தொலக்காட்சித் தொடரைப் பார்க்க விடாததால் மனைவி விவாகரத்து கோரினார்”, “நகைச்சுவை நடிகரின் வசனம் தூண்டியதால் பாட்டியை கொலை செய்த வாலிபர்” எனப் பட்டியல் நீண்டு கொண்டே போகும்.

இத்தகையக் கொடுமையான, தீமை வழிந்தோடும் நிகழ்ச்சிகளுக்கு அடிமையாகிப் போன நாம் அவற்றிலிருந்து வெளிவந்து நம்மை நாமே மீட்டெடுக்க வேண்டிய தருணத்தில் உள்ளோம்.

“மானக்கேடான, வெறுக்கத்தக்க அக்கிரமான செயல்களை விட்டும் விலகி இருக்குமாறு இறைவன் தன்மறையிலே கட்டளையிடுகிறான் ( திருக்குர்ஆன் 16:90)

இறைவன் எவற்றிலிருந்தெல்லாம் விலகி இருக்கச் சொல்கிறானோ, அத்தகைய செயல்களை எல்லாம் முழுமையாக கொண்டதாகவே இருக்கிறது இன்று நம் வீட்டின் நடுவே அமர்ந்து விருந்து படைக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்.

பரிகாசமும், பண்பற்ற பேச்சும், விரசமும் ஏன் கொலை போன்ற கொடும்பாவச் செயல்களைச் செய்யத்தூண்டும் காட்சிகளை அமைத்து நகைச்சுவை(!) எனப் பெயரிட்டு அவற்றை விருதுகளாலும், பாராட்டுகளாலும் அரசே ஊக்குவிக்கும் அவலத்தைப் பார்க்கிறோம்.

இறைவன் திருமறையில், “இறைநம்பிக்கையாளர்களே, எந்த ஆண்களும், பெண்களும் மற்றெந்த ஆண்களையும் பெண்களையும் பரிகாசம் செய்ய வேண்டாம். ஒருவேளை அவர்கள் இவர்களை விடச் சிறந்தவர்களாயிருக்கலாம். நீங்கள் ஒருவரையொருவர் குத்திப் பேசாதீர்கள். ஒருவருக்கொருவர் மோசமான பட்டப்பெயர்களைச் சூட்டி அழைக்காதீர்கள். இறைநம்பிக்கை கொண்டதன் பின்னர் மோசமான பெயர்களைச் சூட்டுவது மிகவும் கெட்ட வழியாகும். எவர்கள் இந்தப் பழக்கத்தினை கைவிடவில்லையோ அவர்கள்தாம் கொடுமைக்காரர்கள்” (திருக்குர்ஆன் 49:11) என்று எச்சரிக்கும் அதேவேளையில் இறைத்தூதர், “மக்களைச் சிரிக்க வைப்பதற்காக பொய் சொல்பவனுக்கு கெடுதான், அவனுக்கு கேடுதான், அவனுக்கு கேடுதான்” என்றும் எச்சரிக்கின்றார்கள்.

மேலும் இறைத்தூதர் அவர்கள், ஓர் இறைநம்பிக்கையாளன் எத்தகைய குணங்களை பெற்றிருக்க கூடாது எனபதை மிகத் துல்லியமாக விவரித்திருக்கின்றார்கள்.


இறைநம்பிக்கையாளன், குத்திப் பேசுபவனாகவும், அடிக்கடி சாபமிடுபவனாகவும் இருப்பதில்லை. மானங்கெட்ட செயல்புரிபவனாகவும், தீய வார்த்தைகளைப் பேசுபவனாகவும் இருப்பதில்லை.” - திர்மிதி

இவை அனைத்தும் இன்று பாவமில்லாத செயல்போல பிஞ்சுகளின் மனதிலும் பழக்கமாகிவிட்டது.

தெளிவான வழிகாட்டுதல்கள் இருந்தும், வழிபிறழ்ந்து போகலாமோ? பிள்ளைகளுக்கு முன்மாதிரியாய் திகழவேண்டிய நாமே அவர்களின் தலையில் முள் மகுடம் சூட்டலாமோ??

முற்றிலும் கீழ்படிந்தவர்களாய் மாறி, நம் இளைய செல்வங்களுக்கு முன்மாதிரியாய் இருந்து, அவர்களின் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களை உயர்த்தி - நமக்காக பிரார்த்திக்கக் கூடியவர்களாய் உருவாக்குவோம்!!!!!



-- ரஃபீக்



உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு