அதிரை மட்டுமின்றி அக்கம்பக்க, சுற்றுவட்டார ஊரிலுள்ள மக்களும் பயனடையும்படியான கல்வி நிலையங்களை MKN மதரஸா டிரஸ்ட் பெயரால் 'கொடைவள்ளல்' காதர் முகைதீன் அப்பா அவர்கள் அர்ப்பணித்துச் சென்றார்கள்.
Pre-KG முதல் முனைவர் பட்டம்வரை படிக்கும் வாய்ப்புகள் உள்ளூரிலிருந்தும், மாவட்ட/மாநில அளவில் சாதனை படைத்த அதிரை மாணாக்கர்கள் ஓரிருவரே.
பலதலைமுறைகளாக நம்மை ஏங்க வைத்துக்கொண்டிருக்கும் இந்த நியாயமான எதிர்பார்ப்பை அடையும் நோக்கில், 2014-15 ஆம் கல்வி ஆண்டுகளுக்குள் மாவட்ட/மாநில அளவில் பொதுத்தேர்வுகளில் சாதனை படைக்கும் அதிரை கல்வி நிலையங்களில் பயின்ற மாணாக்கர்களுக்கு 'அதிரை எக்ஸ்பிரஸ் கல்வி விருதுகள்' என்ற பெயரால் கடந்த வருடம் முதல் ஊக்கப்பரிசுகள் வழங்கி வருகிறோம்.
இந்த நோக்கத்தைச் செயல்படுத்த நமதூர் கல்வி ஆர்வர்களும், ஊர்நலன் விரும்பும் தன்னார்வலர்களும் மனமுவந்து வழங்கிய தொகையை 2011-12 ஆம் கல்வியாண்டுகளில் சாதனை படைத்த மாணாக்கர்களுக்கு அதிரை எக்ஸ்பிரஸ் சார்பில் வழங்கினோம்
இத்தகைய விருதுகள் மூலம் நமதூரில் பயிலும் மாணாக்கர்களும்,பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் மற்றும் உள்ளூர் கல்வி நிலையங்களை ஊக்குவிக்கவும், கல்வியில்சிறந்த சாதனையாளர்களை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அதிரை கல்வி நிலையங்களில் கல்வி பயின்று முதல் மூன்று இடங்களைப்பெறும் மாணாக்கர்களுக்கு ADIRAIXPRESS SCHOLAR AWARD 2012-13 என்ற பெயரில் இந்த கல்வியாண்டில் SSLC, +2 பொதுத்தேர்வுகளில் அதிகபட்ச மதிப்பெண்கள்பெற்று முதல் மூன்று இடங்களைப்பெறும் மாணாக்கர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
நமதூர் மக்களின் கல்வி வளர்ச்சியில் ஆர்வமுள்ள வாசகர்கள், தொழிலதிபர்கள் மற்றும் தன்னார்வலர்கள் முன்வரும் பட்சத்தில் விருது தொகை சென்ற ஆண்டைவிட அதிகமாகவும், முதல் மூன்று இடங்கள் மட்டுமின்றி சிறப்பு ஊக்கப் பரிசுகளும் வழங்கலாம்.விருதுகளுக்கு நன்கொடை (ஸ்பான்சர்ஷிப்) வழங்க விரும்புபவர்கள் adiraixpress@gmail.com என்ற முகவரியை தொடர்பு கொள்ளவும்.
இப்படிக்கு
அதிரை எக்ஸ்பிரஸ் குழு