Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in
Showing posts with label ஜஹபர் சாதிக். Show all posts
Showing posts with label ஜஹபர் சாதிக். Show all posts

பனி வீழ்ந்தெழுந்த மலர்வனம் ! - பேசும் படம் 44

அதிரைநிருபர் பதிப்பகம் | July 26, 2012 | , , , ,


லண்டன் ! பெரும்பாலோரின் கனவுக்குள் வந்து செல்லும் நகரம், ஒலிம்பிக் போட்டிகளுக்காக தயாராகி வரும் நகரம் என்ற கூடுதல் தகவலை சொல்லித்தான் தெரிய வேண்டுமா !?

இதற்கு முன்னர் பனிப்பொழிவில் என்மொழி என்று அழகிய பேசும் படங்களை நம் அதிரைநிருபரில் பதிந்தோம், அதனைத் தொடர்ந்து பனி வீழ்ந்த பொழுதுகள் கழிந்ததும் மலர் எழுந்து மனதிற்கு குதூகலம் தரும் இந்த மலர்வனம். 

கண்களால் கைது செய்தால் என்னோடு இருந்திடுமே ஆதலால், கையடக்க கேமராவின் துணை கொண்டு அடைத்துக் கொண்டேன் என் மனத் திரையிலும் இந்த பதிவில் பளிச்சிடும் படங்களாக.

இதோ உங்களின் பார்வை பட்டு மலர்களும் மயங்கட்டும் !
































M.H.ஜஹபர் சாதிக்

அந்தி(ரை) மாலை! 39

அதிரைநிருபர் பதிப்பகம் | May 06, 2011 | ,

வாக்கிங் போக வண்டிப்பேட்டை
காத்து வாங்க காலேஜ்
செழிப்பான செக்கடி மேடு
ரயிலில்லா ரயிலடி

சிட்டுக்குருவிகள் போடும் சத்தம்
சில்லெனெ வரும் மஃரிப் காத்தும்
சொல்லாமல் வரும் மொவ்த் செய்திகள்
இல்லாமல் இடை வந்த மாலைக் கல்யாணம்

மகிழ்ச்சியாய் மாமியா வீடு செல்லும் பெண்கள்
மலர்ச்சியாய் மணத்தோடு கூவி வரும் மல்லிகைகள்
மரியாதையே இல்லாமல் விற்க வரும் 'வாடா'க்கள்
மனதை நெருடும் அந்தி மாலை கதிரவனின் வண்ணங்கள்

எட்டிப்பார்க்கும் புது நிலா
சுட்டிக்குழந்தைக்கு புதுவிழா
எனர்ஜி கொடுக்கும் கதிரவன்
ஏற்றுக்கொள்ளும் சந்திரன்

பள்ளிவிட்டு வரும் சிறுசுகள்
துள்ளிவிளையாடும் ஜாலியாய்
பல்லி இடும் சத்தம்
பகல் முடிவுக்கு சங்கு

பகலை காவல் காத்த கதிரவன்
பகலுக்குப்பின் ஷிஃப்ட் சந்திரன்
பனையிலைகள் உரசும் சத்தம்
இணையிலாத காற்றின் கபடம்

பகலில் உண்டு படுத்த அசதி
அசரில் வரும் கொட்டாவி
அதையும் மீறி விழித்து வல்லோனை தொழுதிட
வருமே அழகிய அதிரை மாலை, அழகிய வேளை!

- ஜஹபர் சாதிக்


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு