அதிரை மக்களின் உயர்கல்வி, அரசு வேலைவாய்ப்பு என்ற நீண்டதொரு திட்டத்தை மையமாக கொண்டு அதிரைநிருபர் வலைத்தளம் இரண்டு வருடங்களுக்கு முன்னர் கல்வி விழிப்புணர்வு மாநாடு நடத்தியது அடுத்தடுத்த வருடங்களில் சகோதர அமைப்புகள் அதனை முன்னெடுத்துச் சென்றனர்.
நமது கனவு நனவாகும் தருணம் கைகூடி இருக்கிறது இந்தச் சிறப்பினை தந்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் (அல்ஹம்துலில்லாஹ்) !
சென்னை மவுன்ட்ரோட்டில் அமைந்திருக்கும் மக்கா மஸ்ஜித் நிர்வாகத்தால் நடத்தப்படும் அழகிய கடன் அறக்கட்டளை எனும் தன்னார்வத் தொண்டு நிறுவனம் நமது சமுதாய மக்களுக்கென்று அரசு உயர் பதவிகளுக்கான பயிற்சியை 2012ம் வருடம் முதலே அளித்து வருவதை நாம் நன்கறிவோம்.
சென்னை புரசைவாக்கத்தில் வசிக்கும் பொறியியல் பட்டதாரியான அதிரை சகோதரர் J.முஹம்மது மீராஷாஹிப் (தகப்பனார் பெயர் : M.ஜமால் முஹம்மது) அழகிய கடன் ஐ.ஏ.எஸ் அகடமியில் பயிற்சி பெற்ற இவர் UPSC மற்றும் TNPSC Group-1 தேர்வுகளில் தேர்ச்சி பெற்று இருக்கிறார். அடுத்த வருடம் 2014 நமதூர் சகோதரர் I.A.S.ஆக இருக்கிறார் இன்ஷா அல்லாஹ் !
The Hindu ஆங்கில நாளிதழ் செய்தி : http://www.thehindu.com/todays-paper/mosque-helps-students-crack-ias-exam/article5143672.ece
NDTV ஆங்கில செய்தி தொலைகாட்சி காணொளி : http://www.ndtv.com/video/player/news/a-mosque-in-chennai-which-helps-muslim-men-fulfill-the-ias-dream/291261
வாழ்த்தி வரவேற்போம் ! மேலும் வெற்றிகள் தொடரவும், நம் சமுதாய நலனுக்கு எல்லா வகையிலும் பயனளிக்கும் சேவைகள் செய்ய எல்லாம் வல்ல அல்லாஹ் அருள்புரிவானாக !
அதிரைநிருபர் பதிப்பகம்
பரிந்துரை : குதுபுதீன் அஹ்மது ஜலீல் (குதுப்)

