இலக்கினை நோக்கியே எழுவாய்,
இதய வயலினை உழுவாய்,
நல்வழி என்றுமே வழுவாய்,
நன்னெறி கைப்பிடி வலுவாய்.
சிறுதுயர் வந்ததும் சிதையாய்,
முயலொடு ஆமையின் கதையாய்
முயன்றிடில் வெற்றி உனதாய்
அமைந்திடும் அதைநீ மறவாய்!
சிறைக்குள் இருப்பதா சிந்தை?
சிறகுகள் இழந்திடல் விந்தை!!,
வரைக்குள் அடைந்திடும் எண்ணம்-இருப்பின்
வாழ்க்கை அதனினும் சின்னம்.
எல்லை வகுத்திடல் சரியே!!
எதற்கது என்பதில் தெளிவு
இல்லாது போவது தகுமோ?
நல்லன செய்யுதற் கன்று!
உள்ளுவ தெல்லாம் உயர்வாய்
உள்ளுதல் இருப்பின் உயர்வாய்.
வள்ளுவம் சொன்னது இதையே,
வாழ்க்கையின் தத்துவம் உணர்வாய்.
முகிலினில் நிறையும் நீரும்
மழையாய் வெளி யேறும்.
புதைபடும் போலவே தோன்றும்
விதைகளும் விருட்ச மாகும்.
தடைகளை உடைத்திடப் பழக்கு,
தைரியம் உன்கை விளக்கு,
இடைவரும் இன்னலை விலக்கு,
விடிந்திடும் ஒருநாள் கிழக்கு!
உள்ளம் என்பது ஆழி
உலகில் அதற்கேது வேலி?
அலைகள் வருதல் இயற்கை,
அதன்மேல் விரிப்போம் இறக்கை..
அதிரை என்.ஷஃபாத்
இதய வயலினை உழுவாய்,
நல்வழி என்றுமே வழுவாய்,
நன்னெறி கைப்பிடி வலுவாய்.
சிறுதுயர் வந்ததும் சிதையாய்,
முயலொடு ஆமையின் கதையாய்
முயன்றிடில் வெற்றி உனதாய்
அமைந்திடும் அதைநீ மறவாய்!
சிறைக்குள் இருப்பதா சிந்தை?
சிறகுகள் இழந்திடல் விந்தை!!,
வரைக்குள் அடைந்திடும் எண்ணம்-இருப்பின்
வாழ்க்கை அதனினும் சின்னம்.
எல்லை வகுத்திடல் சரியே!!
எதற்கது என்பதில் தெளிவு
இல்லாது போவது தகுமோ?
நல்லன செய்யுதற் கன்று!
உள்ளுவ தெல்லாம் உயர்வாய்
உள்ளுதல் இருப்பின் உயர்வாய்.
வள்ளுவம் சொன்னது இதையே,
வாழ்க்கையின் தத்துவம் உணர்வாய்.
முகிலினில் நிறையும் நீரும்
மழையாய் வெளி யேறும்.
புதைபடும் போலவே தோன்றும்
விதைகளும் விருட்ச மாகும்.
தடைகளை உடைத்திடப் பழக்கு,
தைரியம் உன்கை விளக்கு,
இடைவரும் இன்னலை விலக்கு,
விடிந்திடும் ஒருநாள் கிழக்கு!
உள்ளம் என்பது ஆழி
உலகில் அதற்கேது வேலி?
அலைகள் வருதல் இயற்கை,
அதன்மேல் விரிப்போம் இறக்கை..
அதிரை என்.ஷஃபாத்