Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in
Showing posts with label பாலஸ்தீனம். Show all posts
Showing posts with label பாலஸ்தீனம். Show all posts

வரலாறுகள்! வழக்குகள்! வல்லரசுகள்! வடிக்கப்படும் இரத்தம்!

பாலஸ்தீனம்...

44

அதிரைநிருபர் பதிப்பகம் | February 07, 2015 | , , ,

தொடர் பகுதி - இருபத்தி ஆறு

“சாயல்குடி என்கிற கிராமத்திலே யாருக்கும் அடங்காத சீமைக்காளை ஒன்றை ஒரு கன்னிப் பெண் வளர்த்து வருகிறாள் . அவள் பெயர் வெள்ளையம்மாள் ! “ என்ற ஒரு வசனம் சிறு வயதில் தெருவெங்கும் ஒலிக்கக் கேட்டிருப்போம்.

இப்படி , இஸ்ரேல் என்ற யாருக்கும் அடங்காத சீமைக்காளையை வளர்த்து வரும் அந்த வெள்ளையம்மாள், இராமநாதபுரத்து சாயல் குடியில் இல்லை. அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் . இந்த வெள்ளை மாளிகை வளர்க்கும் இந்த மிருகம் ஒரு காளை அல்ல ; ஒரு காவல் நாய் . எண்ணெய் வளம் கொழித்திருக்கும் அரபு நாடுகளுக்கு மத்தியில், அவற்றைக் கண்காணித்து அவ்வப்போது குரல் கொடுத்துக் குரைத்து தனது அமெரிக்க எஜமானுக்கு எச்சரிக்கைக் குரல் கொடுக்க ஏவப்பட்ட காவல் நாய்தான் இஸ்ரேல். 

ஆயுதங்கள் என்றும் ஆதரவு என்றும் இந்தக் காவல் நாய்க்குப் போடப்படும் எலும்புத் துண்டுகளை கவ்விப் பிடிக்கும் இந்தக் காவல்நாய் மனிதாபிமானங்களை மண்ணில் போட்டு புதைத்துவிட்டு மனிதர்களை வேட்டையாடி வருகிறது. குழந்தைகள் கொல்லப்படுகின்றன; வயோதிகர்கள் வன்முறைக்கு பலியாகிறார்கள்; மக்கள் மந்தைகளாக நடத்தப் படுகிறார்கள். வானில் பறக்கும் கழுகு போல் விமானங்கள் நடு இரவில், உறங்கிக் கொண்டிருக்கும் மக்கள் மீது கூட உன்மத்தம் பிடித்து குண்டுகளைப் பொழிகின்றன. நாட்டின் பகுதிகளில் நடமாடும் உரிமையும், கடற்கரைப் பிரதேசங்களில் கப்பலேறும் உரிமையும், விவசாய நிலங்களில் விளைவிக்கும் உரிமையும், மொத்தத்தில் மூச்சுவிடக் கூட முன் அனுமதி பெற்று வாழவேண்டிய நிலைமைக்கு பாலஸ்தீனத்தின் பாரம்பரிய மக்கள் தள்ளப்பட்டு பாவிகளின் கரங்களில் சிக்கி படாத பாடு பட்டு வருகிறார்கள். இவ்வளவையும் வேடிக்கை பார்க்கும் அமெரிக்கா, உலகுக்கு மனித உரிமைகள் பற்றி போதனை நடத்தி வருகிறது.

எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் என்று புலம்ப அல்ல கதறிக் கண்ணீர் விடும் பாலஸ்தீன மக்களின் நிலையைக் காணும் மக்களின் மனங்களில் இயல்பாக எழும் கேள்வி ஒன்று உண்டு. பாலஸ்தீனத்து மக்களோ பிறப்பால், மார்க்கத்தால், இனத்தால் அரபுகள். அவர்களும் படும் பாட்டைப் பார்த்துக் கொண்டிருக்கும் அரபு நாடுகளோ அந்த அல்லலுறும் மக்களைச் சுற்றி அரசமைத்து ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஒரு மினி லக்ஸ் சோப் அளவில் இருக்கும் இஸ்ரேலை சுற்றிலும் இருக்கும் இந்த அரபு நாடுகளால் அதட்டி வைக்க இயலாதா? என்பதே அந்தக் கேள்வி. 

இயலாது என்பதல்ல; இயலும் என்று ஈடுபடக் கூட இல்லை என்பதே வேதனையான உண்மை. காரணமென்னவென்றால், அரபியர்களின் சகோதரத்துவம் என்பது ஆன்மிகம் மட்டுமே சார்ந்தது ; அது அரசியல் சார்ந்ததல்ல என்பதற்கு பல உலக வரலாற்று உதாரணங்களை நாம் காட்ட இயலும். ஹஜ் போன்ற கடமைப் பயணங்களில் ஆன்மீக ரீதியில் அகில உலக முஸ்லிம்களையும் சமத்துவத்துடன் சகோதரர்களாக அரவணைக்கும் அரபுதேசங்கள் , முஸ்லிம்கள் அதிகமாக வாழும் நாடுகள் அரசியல் ரீதியாக ஒரு சிறு ஆட்டம் கண்டாலும் அந்த ஆட்டத்தைப் போக்க ஒரு துரும்பைக் கூடத் தூக்கிப் போடுவதில்லை.


தான் ஆடா விட்டாலும் தன் தசை ஆடும் என்பதெல்லாம் அரபியர்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு அறிமுகமில்லாத உள்ளுணர்வுகள் ஆகும். தங்களின் அரசியல் அமைப்புக்கு உட்பட்ட மக்களின் நலனில் காட்டும் அக்கறையை அடுத்த நாட்டு முஸ்லிம்களின் மீது காட்டி அரவணைப்பது அவர்களுக்கு அரப்புத் தூளைக் கண்ணில் கொட்டும் அளவுக்கு அருவருக்கும் விஷயம்தான். தங்களின் எண்ணெய் வளத்துக்கு எந்த வல்லரசாலும் எவ்வித ஆபத்தும் வந்துவிடக் கூடாது என்பதுதான் அவற்றின் தலையாயக் கவலை. அதை விட்டுவிட்டு சகோதரர்கள் என்று பாவம் புண்ணியம் பார்க்கத் தொடங்கினால் சதாம் ஹுசேனுக்குக் கிடைத்த தூக்குக் கயிறுதான் அவர்களுக்கும் பரிசாகத் தரப்படுமென்பதை அவர்கள் நன்றாக உணர்ந்தே வைத்து இருக்கிறார்கள் என்பதே உண்மையிலும் ஒப்புக் கொள்ள வேண்டிய ஊனமில்லாத உண்மை.

அதனால்தான் இன்று பொருளாதார வலிமை வாய்ந்த அரபு நாடுகளின் மத்தியில் போக்கிடம் இன்றி பாலஸ்தீனர்களும் உண்ண உணவின்றி சோமாலியர்களும் எத்தியோப்பியர்களும். வேலைவாய்ப்பின்றி இதர ஆப்ரிக்க முஸ்லிம்களும் அல்லல் படுகின்றனர். ஆனால் அரபு நாடுகளோ ஆங்கிலப் புத்தாண்டுக்கு வான வேடிக்கைகள் விட்டு அதில் கின்னஸ் ரிகார்டு படைத்துக் கொண்டிருக்கிறார்கள். பாலஸ்தீனத்தில் மட்டுமல்ல ஆப்கானிஸ்தானில் கூட ஏகாதிபத்திய வல்லரசு நாடுகளால் அன்றாடம் அவதியுறும் முஸ்லிம் மக்களைக் கண்டும் காணாமல் அந்த மக்களை அவதிக்குள்ளாக்கும் வல்லரசுகளுடன் கை குலுக்கி கை கோர்த்து அரசியல் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

ஓமான் நாட்டு மண்ணிலும் பெருமானார் ( ஸல்) அவர்கள் நடமாடிய சவூதி அரேபியாவின் மண்ணிலும் யூதர்களைப் பாலூட்டி வளர்க்கின்ற அமெரிக்க இராணுவம் தங்களது முகாம்களை அமைத்துக் கொள்ள இராஜதந்திரம் என்ற பெயர் சூட்டி இடம் கொடுத்து உதவி இருக்கின்றன.

வட்டி, சூது, மது ஆகிய இஸ்லாத்தால் தடுக்கப்பட்ட பாவச் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றி வளர்க்காத அரபு தேசங்கள் எங்கே இருக்கின்றன? தேடித் பாருங்கள். தெரிந்தவர்கள் சொல்லுங்கள். விபச்சாரம் போன்ற தீயச் செயல்களும் குதிரைப் பந்தயம் போன்ற சூதாட்டங்களும் நடத்தும் நாடுகள் தங்களை இஸ்லாமிய நாடுகள் என்று கூறிக் கொண்டு இஸ்லாத்துக்கு விரோதமான செயல்களில் ஈடுபட்டு வருவதற்குப் பெயர் சுற்றுலா வளர்ச்சி. 

ஆனால் சொந்த சகோதரர்கள் சாவதைக் கண்டு , ஹராம், முஷ்கீல், அல்லாஹ் கரீம் என்கிற ஆறுதல் வார்த்தைகளை மட்டும் உதட்டளவில் உதிர்க்கும் அரபுகளே அநேகம். இதோ ஒரு கவிமாமணியின் கோபம் இப்படி வெளிப்படுகிறது. 

மானபங்கப்படும் 
மனிதநேயத்திற்கு 
உத்தரீயம் கொடுக்கவும் 
அமெரிக்க சகுனியிடம் 
உத்தரவு கேட்கும் 
கவுரவர் சபை 
பஞ்ச பாண்டவர்களாய் 
வளைகுடா நாடுகள் !

ஆப்கன் விதைஎடுத்து 
அமெரிக்கா பயிரிடும் 
கொடிமுந்திரித் தோட்டக் 
குலைகளில்
முஸ்லிம் குழந்தைகளின் 
முழிக்கும் விழிகள் !

அலிப்
எழுத்துப்போல சேராது 
தனித்திருக்கும் 
அரபு நாடுகளே ...

ஒன்றாய் நீங்கள் 
ஒன்றுக்கிருந்தால் 
மூத்திரத்தில் மூழ்கிப்போகும் 
யூத - அமெரிக்கக் 
கள்ள உறவில் தோன்றிய 
கர்ப்பக் கழிவு !

மேலும்... மற்றொரு கவிதையில்..

காற்றும் கந்தலாக்கும் 
கந்தக எச்சில்கள் 
காருவது அமெரிக்கா
உமிழ்வது இஸ்ரேல் !

அந்தப்புரக் காவலுக்கு 
அரசர்கள் வைத்த 
அலிகளைப்போல்
ஐ.நா .

(எனது மரியாதைக்குரிய பேராசிரியர் தி. மு. அ. காதர்)

இந்தத் தொடரின் ஆரம்ப அத்தியாயத்தின் முதல் வரிகளை இங்கு மீண்டும் குறிப்பிட விரும்புகிறேன். 

உலக மனித இனத்தின் வரலாறு என்பதை ஒரு ஆலமரமாகக் கொண்டால் அந்த ஆலமரத்தின் ஆணிவேர் ஆழப்பதிந்திருப்பது இன்று அன்றாடம் அழுகுரல் கேட்டுக் கொண்டிருக்கும் பாலஸ்தீனத்தில்தான். இன்று பாலஸ்தீனத்தின் மண் செந்நிறம் கொண்ட இரத்த சகதியாக மாறிப் போகக்காரணம் ஏதோ நேற்றுத் தொடங்கிய பகை முடிக்க பாண்டி பஜாரில் எடுக்கப்பட்ட பழிவாங்கும் நடவடிக்கை அல்ல. இது ஒரு ஜென்மப் பகை! இரத்தத்தின் அணுக்களில் ஊறி திளைத்துப் பின் தினவெடுக்கும் கரங்கள் கைகளில் எடுத்த ஆயுதப் பகை! இந்தப் பகையின் வரலாறு ஐந்தாயிரம் ஆண்டுகளுக்குச் சொந்தமானது. இன்றைக்கு பாலஸ்தீனத்தின் காஸா பகுதி மக்கள் கதறி அழுவதன் அடிப்படைக் காரணம், காலம் காலமாக களம் கண்டு வரும் இரு புறத்து மக்கட்பிரிவின் பிறப்புப் பகை! பிறக்கும் குழந்தைகள் உதைத்து விளையாடுவது இயற்கையின் படைப்பு. ஆனால் இஸ்ரேலிலோ பிறந்த குழந்தை கூட ஒருநாள் ஆனதும் உதைக்கத் தேடுவது பாலஸ்தீனியர்களை. உண்மைக் காரணங்கள் யாவை? 

மேற்கண்ட வரிகளின் அடிப்படையில்தான் பல அரசியல் கலந்த வரலாற்று அம்சங்கள் கடந்த இருபத்தி ஐந்து வாரங்களாக முதல் பாகமாக அலசப்பட்டன. 

எவ்வளவுதான் அரசியல் காரணங்கள் கூறப்பட்டாலும் என்றும் நிலைத்து நிற்பவை எல்லாம் வல்ல இறைவனின் வார்த்தைகளும் அவனது அனைத்துத் திருத்தூதர்களின் வார்த்தைகளும்தான் என்கிற கருத்தை நிலை நிறுத்தி இந்தத் தொடரை இப்போது நிறைவு செய்வோம். 

இறைவனின் வாக்குகளின் அடிப்படையிலும் பெருமானார் (ஸல் ) அவர்களின் மொழிகளின் அடிப்படையிலும் நாம் நிலை நிறுத்த விரும்ம்பும் கருத்து யாதெனில் , இன்று இஸ்ரேல் அமைக்கப்பட்டிருப்பதும் யூதர்கள் பலம் வாய்ந்த சக்தியாக உருவெடுத்து இருப்பதும் ஒரு தற்காலிகமாக மலர்ந்துள்ள மலர்தான் என்பதே . இஸ்ரேல், இன்று அமெரிக்க செடியில் மலர்ந்துள்ள மணம் வீசும் பூவாகத் தோன்றலாம். ஆனால் இது உலக அழிவுக்கு முன்னரே உதிரும் பூ என்பதுதான் இறைவனின் திட்டமும் சட்டமும்.

ஆது மகன் ஸதாது குலவலிமை பெருவாழ்வு அழியாமல் நிலை நின்றதோ?

அஷ்ட திசையும் வளைத்த சமூது கூட்டத்தின் அநியாயம் நிலைநின்றதோ?

மூது கடல் நம்ரூதெனும் கொடியவனின் முடியரசு நிலைநின்றதோ?

மூஸா நபிக்கெதிரியான பிர்- அவ்ன் தளம் முடியாமல் நிலை நின்றதோ?

வாது கொடும் சூது புகழ் பாதகன் அபுஜஹல் வஞ்சகம் நிலைநின்றதோ?

வள்ளல் ஹுசேனாரின் சிரம் வாளால் அறுத்த பழி வாங்காமல் நிலை நின்றதோ?

நூஹுக்குப் பின் நாம் எத்தனையோ வகுப்பாரை (அவர்களின் அநியாயத்தின் காரணமாக) அழித்திருக்கிறோம். தன் அடியார்களின் பாவங்களை அறிந்துகொள்வதற்கு உங்கள் இறைவனே போதுமானவன். (மற்றெவரின் உதவியும் அவனுக்குத் தேவை இல்லை). அவன் அனைத்தையும் நன்கு அறிந்தவனும் உற்று நோக்கியவனுமாக இருக்கிறான் . ( அல் குர்-ஆன் 17 : 16- 17 ). 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“முஸ்லிம்களாகிய நீங்கள் யூதர்களுடன் போர் புரிந்து அவர்களைக் கொல்வீர்கள். எந்த அளவுக்கென்றால், (கல்லின் பின்னால் ஒரு யூதன் ஒளிந்துகொள்வான்.) அப்போது அந்தக் கல், "முஸ்லிமே! இதோ ஒரு யூதன். நீ வந்து, அவனைக் கொன்றுவிடு" என்று கூறும். - நூல்.முஸ்லிம். 5598.

நபி (ஸல்) அவர்கள் செய்த இந்த முன்னறிவிப்பு நிகழப்போகும் காலம் நெருங்கிவிட்டது என்பதற்கு அடையாளம் தான் இந்த பாலஸ்தீன ஆக்கிரமிப்பு.

பாலஸ்தீனத் தொடரில் இதுவரை அரசியல் வரலாற்று செய்திகள் . இனி, ஆன்மீக வரலாற்றுச் செய்திகள் மற்றும் ஆய்வுகள்; அல்லாஹ் மற்றும் அவனது அருள் தூதரின் மொழிகளில் எதிர்கால பாலஸ்தீன் மற்றும் கிருத்தவ- யூதர்கள் மற்றும் அவர்களுடைய கூஜாதூக்கிகளின் நிலை. எங்கே போகும் இந்தப் பாதை? என்ற கேள்வியுடன் . 
முதல் பாகம் நிறைவுற்றது !
இரண்டாம் பாகம் - இன்ஷா அல்லாஹ் தொடரும்... !

இபுராஹீம் அன்சாரி

வரலாறுகள்! வழக்குகள்! வல்லரசுகள்! வடிக்கப்படும் இரத்தம்!

பாலஸ்தீனம்...

23

அதிரைநிருபர் பதிப்பகம் | January 31, 2015 | , , ,

தொடர் பகுதி - இருபத்தி ஐந்து

இஸ்ரேல் உருவாக்கப்பட்டதும் இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பிரிக்கப்பட்டு தனிநாடாக உருவாக்கப்பட்டதும் கிட்டத்தட்ட ஒரே சமயத்தில் நடைபெற்ற உலக வரலாற்று நிகழ்வுகள். இரண்டு செயல்களுக்கும் சூத்திரதாரி பிரிட்டன்தான். ஒரு பிரச்னையைத் தீர்க்க வேண்டுமென்றால் ஒரு புதிய பிரச்னையை பூதத்தின் அளவுக்கு உருவாக்கி வைத்துவிட்டுத் தீர்ப்பது என்பது பிரிட்டனின் அரசியல் மூளையின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தில் காணப்படும் குறுகிய புத்தியின் வெளிப்பாடு என்பதும் உலகறிந்த உண்மை . 

ஆனால் அடிப்படையில் இந்த இரண்டு வரலாற்று நிகழ்வுகளுக்கும் வேறுபாடுகள் உள்ளன. 

இந்தியா தனது சொந்த நாட்டை, அடக்கி ஆண்டு கொண்டிருந்த ஆங்கில ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற்றது. அதற்கு இந்தியா கொடுத்த விலை – நாட்டுப் பிரிவினை. நாடுகள் இரண்டாகப் பிரிக்கப்பட்டாலும் இந்தியாமற்றும் பாகிஸ்தானில் வாழ்ந்த மக்கள் காலம் காலமாக அந்தப் பகுதிகளில் வாழ்ந்து வந்தவர்கள்தான். ஒன்று பட்டு வாழ்வது ஒத்துவராது என்று அந்தந்தப் பகுதி மக்கள் கருதிய காரணத்தால் இந்தியா, பிரிவினை என்கிற கசப்பு மருந்தை உண்ண ஒப்புக் கொண்டது. 

ஆனால்,  

எங்கெங்கிருந்தோ மூட்டை முடிச்சுகளுடன் வந்து குவிந்த யூதர்களுக்கு ஏற்கனவே இருந்த பாலஸ்தீனத்தைப் பங்கு போட்டுப் பிரித்துக் கொடுத்தது பிரிட்டன். இந்தியா பாகிஸ்தான் பிரிவினையை பங்காளிகளுக்கிடையே ஏற்பட்ட பாகப்பிரிவினை என்று நாம் ஒப்பிட்டால் பாலஸ்தீனம் பிரிக்கப்பட்டு இஸ்ரேல் உருவாக்கப்பட்டதை , வாங்காத கடனுக்காக ஒரு வீட்டை , ஆமைபோலப் புகுந்த ஐ. நா., அமீனாவாகி ஜப்தி செய்தததற்கு ஒப்பிடலாம். ஒன்று பிரிக்கப்பட்டது மற்றது திணிக்கப்பட்டது. 

இல்லாத நாட்டை உருவாக்கும் இழி செயலை நியாயப்படுத்த ஏற்கனவே ஐரோப்பா முதலிய நாடுகளில் சுக வாழ்வு வாழ்ந்து சுகித்துக் கொண்டிருந்த யூதர்களை எல்லாம் இஸ்ரேல் நாட்டுக்கு பயணச்சீட்டுப் போட்டுக் கொடுத்து வரவழைத்து கூட்டத்தைத் திரட்டினார்கள். 

பாலஸ்தீனம் எவ்வாறு பிரிக்கப்பட்டது? 

ஐ . நா அறிவித்த திட்டப்படி பாலஸ்தீனம் இரண்டாகப் பிரிக்கப்படும். ஒரு பகுதி இனி இஸ்ரேல் என்று அழைக்கப்படும். மற்றொரு பகுதி பாலஸ்தீன் என்ற நிகழும் பெயரிலேயே நின்று நிலவும். இரு பகுதிகளிலும் அரபு இனத்தவர்களும் யூதர்களும் வசிப்பார்கள். 

ஜெருசலம் என்கிற அந்த புனிதப் பகுதியில் அதிகமதிகம் அராபிய கிருத்தவர்கள் வசித்து வந்தாலும் இப்போது அமையப்பெற்ற அரசியலமைப்பில் அராபிய கிருத்துவர்களுக்கென்று இன்னொரு இடம் அல்லது நாடு தனியாக ஒதுக்கப்படாததாலும் முஸ்லிம்களுக்கும் யூதர்களுக்கும் ஜெருசலம் ஒரு புனிதமான இடம் என்பதாலும் ஜெருசலமும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளும் ஐ நா சபையின் கண்காணிப்பிலும் பாதுகாப்பிலும் இருக்கும்.

ஆக, பாலஸ்தீன் என்கிற புனித பூமியை என்கிற ஆப்பத்தை ஐ. நா குரங்குகள், வல்லரசு வல்லூறுகளின் துணையோடு மூன்று நிலைகளாகப் பங்கு வைத்தன. இதனால்தான் இன்றைய வழக்குகளும் வடிக்கப்படும் இரத்தமும் .

இந்தப் பிரிவினைத் திட்டம் வெளியான அன்றிரவே பாலஸ்தீன அரபுகள் கைகளில் கிடைத்த ஆயுதங்களை எல்லாம் தூக்க ஆரம்பித்துவிட்டார்கள். இந்த ஆயுதங்கள் துப்பாக்கிகள்தான் என்று இல்லை. தங்களின் தோட்டங்களில் கிடந்த ஆலிவ் மரத்தின் கிளைகளைக் கூட கரங்களில் தூக்கிக் கொண்டு தெருவுக்கு வந்துவிட்டார்கள் என்று ஒரு குறிப்புக் கூறுகிறது. தங்கள் தேசத்தின் மண்ணை அள்ளித் தலைகளில் போட்டுக் கொண்டு கதறினார்கள். நெஞ்சில் அடித்துக் கொண்டு அலறினார்கள். அரபியர்களின் இந்தக் கதறலும் கண்ணீரும் காலம் கடந்தவை என்பதை இந்தத் தொடரைப் படித்துவரும் நண்பர்கள் புரிந்து கொள்ளலாம். 

அரபுகளைப் பொறுத்தவரை விதைக்கின்ற காலத்தில் வீணே ஊர் சுற்றிவிட்டு அறுவடைக் காலத்தில் அரிவாளை எடுத்துக் கொண்டு வயல்வெளிக்குப் போனவனின் கதியில்தான் நின்றார்கள். தலைக்கு மேல் வெள்ளம் போய்விட்டது இனி ஜான் என்ன முழம் என்ன?

எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே! அவர் சிந்தையில் ஆயிரம் சிறப்புகள் சேர்ந்து சிறந்ததும் இந்நாடே! ஹஜரத் உமர் ( ரலி ) அவர்களின் காலத்தில் அல்லாஹ்வின் போர்வாள் என்று அழைக்கப்பட்ட காலித் பின் வலீத் (ரலி) மற்றும் அபூஉபைதா (ரலி ) ஆகியோரின் வீரத்தின் வித்தாக வென்றெடுக்கப்பட்டதும் இந்நாடே! சன்மார்க்கப் பிரியர் சலாஹுதீன் அய்யூபி ( ரஹ் ) அவர்களால் மீட்டெடுக்கப்பட்டதும் இந்நாடே! 

ஊணுடம்பு மக்காத உயர்ந்த நபிமார்களின் உடல்கள் உறங்குவதும் இந்நாட்டிலே! தேன் சுனை நீர்வளமும் திசைதோறும் மலைவளமும் கால்படும் இடமெல்லாம் இடறிவிடும் திராட்சைக் கொடிவளமும் கண்டவர்கள் யாவரும் மயங்கும் காட்சிகளும் கொண்டதும் இந்நாடே! இந்த நாட்டை எம்மைக் கேட்காமலேயே எம்மிடமிருந்து பறித்துப் பங்கு வைத்த பாவிகளை கண்டதும் வெட்டக் காலம்கடந்து திரண்டனர் அரபிகள்.  

அரபுநாடுகளின் கூட்டமைப்பு ஒன்று கூடி கஹ்வா குடித்துவிட்டு ஒரு கண்டனத் தீர்மானத்தை இயற்றியது. ஐ. நா சபையோ யார் வீட்டுத் தோட்டத்துக்கோ யாரெல்லாரையெல்லாம்     சொந்தக்காரனாக்கிவிட்டு தனது பொதுச் சபையில் ஒப்புக்காக ஒரு தீர்மானத்தை முன்வைத்தது. தீர்மானத்தை முப்பத்து மூன்று நாடுகள் ஆதரித்து ஜால்ரா அடித்தன. தீர்மானத்தை எதிர்த்து அரபுநாடுகளும் , இந்தியா, துருக்கி, கியூபா உட்பட்ட சில நாடுகள் மட்டுமே  எதிர்த்தன. புதிதாக உருவாகி இருந்த பாகிஸ்தானும் தீர்மானத்தை எதிர்த்தது. தீர்மானம் நிறைவேறியது. 

தீர்மானத்தை ஆதரித்த நாடுகளின் பட்டியலையும் தீர்மானத்தை எதிர்த்த நாடுகளின் பட்டியலையும் பார்த்தால் எண்ணிக்கையில் மட்டுமல்ல வலிமையிலும் வளத்திலும் தங்களை வளர்த்துக் கொண்ட நாடுகள் இஸ்ரேலின் பிறப்பை ஆதரித்து தோரணம் கட்டி கேக் வெட்டிக் கொண்டாடின என்பதைக் காண முடியும். . அன்றைய நாட்களில் தங்களின் சொந்த நாடுகளில் அடித்த அரசியல் புயலையே தாக்குப் பிடிக்க இயலாத நோஞ்சான் நாடுகளே இஸ்ரேலை அங்கீகரிக்க மறுத்தன. உதாரணமாக, இரண்டாம் உலகப் போருக்குப் பின் பிரிட்டனைப் பின் தள்ளி வல்லரசுகளாக உருவெடுத்த அமெரிக்காவும் சோவியத் யூனியனும் இஸ்ரேலை ஆசீர்வதித்தன. அதே போல வலிமை வாய்ந்த பிரான்ஸ், நியூசிலாந்து , ஸ்வீடன், போலந்து, நெதர்லாந்து போன்ற நாடுகளும் ஆதரித்த நாடுகளில் அடங்கும். 

அன்றைய நாட்களில் அவித்துத் தின்ன நிலக்கடலை கூட கிடைக்காத அரபு நாடுகளும் , ஆப்கானிஸ்தான் போன்ற பட்டியலில் மட்டுமே பெயர் உள்ள நாடுகளும் , நாட்டுப் பிரிவினையால் வகுப்புக் கலவரங்கள் மற்றும் சமஸ்தான இணைப்புப் பிரச்னைகளில் மூழ்கிக் கிடந்த இந்தியா , பாகிஸ்தான் போன்ற நாடுகள் மட்டுமே இஸ்ரேலை எதிர்த்தன. ஆகவே வலிமைவாய்ந்த அணிகளின் ஆதரவுடன் இஸ்ரேல் தோள் தட்டியது; பாலஸ்தீனம் துவண்டு போனது. 

பாலஸ்தீனத்தின் எல்லைகளில் இருந்த ஜோர்டான், எகிப்து, சிரியா, லெபனான் முதலிய நாடுகளில் இருந்து பெயரளவுக்கு சில வீரர்கள் உதவிக்கு வந்தார்கள் . ஈராக் முதலிய நாடுகளில் இருந்தும் சிலநூறு வீரர்கள் வந்தார்கள் என்று குறிப்பிடப்படுகிறது. இவர்கள் அனைவருடனும் இணைந்து இஸ்ரேல் பிறந்த அன்றே பாலஸ்தீனத்தில் யூதர்களுக்கென்று அறிவிக்கப்பட்ட பகுதிகளில் பெரிய கலவரத்தில் ஈடுபட்டார்கள். மீண்டும் யூதர்களின் பிணங்கள் குவிய ஆரம்பித்தன. 

இப்படிக் கலவரத்தில் ஈடுபட்டு யூதர்களைத் தாக்கினால் அவர்கள் பயந்து கொண்டு நாட்டைக் காலி செய்துவிட்டு ஓடிவிடுவார்கள் என்று அரபுகளும் பாலஸ்தீனத்து மக்களும் நினைத்து வன்முறை ஆட்டம் ஆடினார்கள். இந்தக் கலவரத்தில், கொல்லப்பட்ட யூத இனத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் அழவில்லை; நாடு கைவிட்டுப் போகிறதே என்கிற நினைப்பில் கொன்றவர்களும் அழுதார்கள் என்பதுதான் வினோதம்.  கொல்லப்பட்டவர்களுடைய கதறலின் சத்தத்தையும் மீறி, கொல்லத் துணிந்தவர்களுடைய கதறலின் சத்தம்தான் மத்திய தரைக் கடலின் அலைகளிளும் அதைச்சார்ந்த மலைகளிலும் எதிரொலித்தது. 

ஆனால் தங்களின் மீது விழுந்த ஆரம்ப அடிகளை யூதர்கள் தாங்கிக் கொண்டார்கள். அவர்களுக்குத் தெரியும். இன்னும் சில நாட்களில் தங்களுக்கென்று ஒரு அரசியல் அமைப்பு, தனிக் காவல் நிலையம், தனி இராணுவம், தனி நிர்வாகம் என்று ஒரு அமைப்பு ஏற்படத்தான் போகிறது. வல்லரசுகளின் துணை நமக்கு இருக்கிறது. அப்போது வட்டியும் முதலுமாகத் திருப்பி அடிக்கலாமென்ற எண்ணத்தில் தங்களின் நாடு பிறந்த அன்றே தங்களின் மீது விழுந்த பிணங்களை எண்ணிப் பார்த்து ஏற்றுக் கொண்டார்கள். பிறகு யூதர்கள் திருப்பி அடிக்கத் தொடங்கினார்கள். 

இஸ்ரேல் பிறந்த அன்றே தொடங்கிய இந்த சண்டை ஒரு வருடம் நீடித்தது. இறுதியில்   ஐ. நா. தலையீட்டால் ஒரு போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. இதை உண்மையாக சொல்வதென்றால் ஐ. நா. தலையிட்டதால் என்று சொல்லக் கூடாது; சகோதர அரபு நாடுகள் தலையிடாததால் என்றுதான் சொல்ல வேண்டும். பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக களத்தில் இறங்கிய அண்டை நாடுகள் ‘செத்த மாட்டில் உன்னி’ இறங்குவதுபோல் பாலஸ்தீன மக்களுக்கான ஆதரவை மனப்பூர்வமாக காட்டாமல் ஒதுங்க ஆரம்பித்தன. 

சவூதி அரேபியா போன்ற சகோதர நாடுகள் அப்போதுதான் தங்களிடம் எண்ணெய் வளம் இருப்பதை நுகர்ந்து கொண்டிருந்தன. இந்த நேரத்தில் இஸ்ரேலுக்கு ஆதரவாக இருக்கும் வல்லரசுகளை எதிர்த்து நின்றால் அவைகள் தங்களின் அடிமடியில் கையை வைத்துவிட்டால் என்ன செய்வது என்று கண்டனத் தீர்மானம் போடுவதுடன் கடமை முடிந்தது என்று ஒதுங்கி நின்றன. ஆகவே கிட்டத்தட்ட பாலஸ்தீன மக்கள் அரசியல் ரீதியாகவும் மார்க்க ரீதியாகவும் அனாதைகளாக நின்றனர். இஸ்ரேல் இதை நமுட்டுச் சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தது. ஒன்றை கவனத்தில் கொள்ள வேண்டும். முஸ்லிம்களின் ஒற்றுமை என்பது மார்க்க ரீதியானது மட்டுமே; அந்த ஒற்றுமை அரசியல் ரீதியானதாக என்றுமே இருந்ததில்லை. 

அதனால்தான் ஐ. நா அறிவித்த போர் நிறுத்த ஒப்பந்தம் கூட பாலஸ்தீன நாட்டை அந்த மக்களிடமிருந்து இன்னும் கூறு போட்டு , அவர்களுக்கு ஆதரவாக போரில் இறங்கிய அரபு நாடுகளுக்கும் பங்கு போட்டுக் கொடுத்தன. அவைகளும் ஹி ஹி என்று இளித்துக் கொண்டு பெற்றுக் கொண்டன. 

எப்படி என்றால் !

பாலஸ்தீனத்தின் மேற்குக்கரை ( West Bank ) என்று அழைக்கப்படும் ஜோர்டான் நதியின் மேற்கு பகுதியை ஜோர்டான் நாட்டுக்கும் கிழக்கில் மத்திய தரைக் கடலை ஒட்டி இருக்கும் காஸா ( Gaza Strip ) என்கிற பகுதியை எகிப்துக்கும் தாரைவார்த்துக் கொடுத்தது ஐ. நா. 

கையறு நிலையில் கதறிய பாலஸ்தீனத்து மக்கள், தங்களின் பூமி இப்படி இஸ்ரேல், ஜோர்டான், எகிப்து ஆகிய நாடுகளால் பங்கு போடப்பட்டு சின்னாபின்னமாக்கபட்டதைப் பார்த்து கண்ணீர் வடிப்பதைத் தவிர வேறு வழி இல்லாமல் நின்றார்கள். எதிரிகள் பறித்துக் கொண்டது பாதி என்றால் கூட இருந்தவன் பறித்துக் கொண்டது மீதி என்ற நிலை ஆகிவிட்டது. 

ஆனாலும் அவர்களின் முன்னாள் ஒரே ஒரு வழிதான் இருந்தது. அதுவே அகதிகளாக தங்களின் பூமியை விட்டு வெளியேறுவது. அப்படித்தான் அரபுலகின் அனைத்து நாடுகளுக்கும் பாலஸ்தீனர்கள் சோகமுகங்களை சுமந்தவண்ணமும் எஞ்சிய துணிகளை அணிந்து மானத்தை மறைத்த வண்ணமும் அகதிகளாகப் போனார்கள். அவர்கள் அதிகம் சென்றது அடுத்த வாசலில்  இருந்த லெபனானுக்குத்தான். 

மீண்டும் 1967-ம் ஆண்டு எகிப்தும் ஜோர்டானும் சிரியாவும் இஸ்ரேலுடன் இன்னொரு போரை நடத்தின. போரின் முடிவு இந்த நாடுகள் படுதோல்வி அடைந்தன என்பது மட்டுமல்ல முன்பு ஐ. நா. பாலஸ்தீனத்திலிருந்து பிரித்துத் தந்த மேற்குக் கரை ஜோர்டானிடமிருந்தும் காஸாப்பகுதி எகிப்து இடமிருந்தும் போரின்மூலம் பிடுங்கப்பட்டு அவை இஸ்ரேலுடன் இணைக்கப்பட்டன. இவ்வாறு மேற்குக் கரையும் காஸாத்துண்டும் இஸ்ரேல் உடைய கைகளுக்கு வந்தன. இவற்றில் சில பகுதிகள்தான் இன்று பாலஸ்தீனம் என்று அழைக்கப்படுகிறது. பரிதாபத்துக்குரிய பாலஸ்தீனர்கள் அங்கு தினம் தினம் செத்து செத்துப் பிழைத்துக் கொண்டு இருக்கிறார்கள். 

1948-ல் இஸ்ரேலில் 10 லட்சம் யூதர்கள்தான் இருந்தார்கள். இன்று 60 லட்சத்துக்கும் மேல். உலகெங்கிலும் இருந்து யூதர்கள் அங்கு வந்து சேர்ந்துவிட்டனர். இஸ்ரேலில் அவர்கள் வசித்தாலும் வசிக்காவிட்டாலும் அவர்களின் முகவரி அதுதான் என்று ஆகிவிட்டது. 

இதுதான் ஒரு முகவரி இல்லாத இனம் முகவரியைத் தேடிக் கொண்டதும் ஒரு அகவரியும் முகவரியும் பெற்று ஆண்டுகொண்டிருந்த சமுதாயம் அனைத்தையும் இழந்த கதையும். இதுதான் ஒரு பூமாலை குரங்குகளின் கைகளில் சிக்கிச் சீரழிந்த கதை. இதுதான் ஒரு புனித பூமி நிராகரிப்போர்களால் இன்று பூட்டப்பட்டுக் கிடக்கும் கதை. 

ஒடுக்கப்பட்டவர்கள் அதோடு ஒதுங்கிப் போகாமல் போராடத் தலைப்பட்ட வரலாறும்- போராட்டங்களும் – இன்றுவரை அவர்கள் படும் அவதிகளும் இரத்தத்தைத் தொட்டு எழுத வேண்டிய வரிகள். இத்தொடரின் இரண்டாம் பகுதியாக விரைவில் காணலாம். இன்ஷா அல்லாஹ். 

அதற்கு முன் பாலஸ்தீனம் பற்றி அகில உலகின் நிலைப்பாடு , ஐ. நா சபையின் நிலைப்பாடு பற்றி மட்டும் அலசும் உலக அரசியல் அரங்குகள் இவ்வுலகைப் படைத்த அல்லாஹ்வின் நிலைப்பாட்டைப் பற்றியும் அறிந்து கொள்ள வேண்டாமா? இந்தக் கூட்டத்தின் ஆட்டம் முடியப் போகும் எச்சரிக்கைகளை ஆராய்ந்து அறியவேண்டாமா? 

இன்ஷா அல்லாஹ் அவற்றைக் குறிப்பிட்டு எழுதி அடுத்த வாரம் இந்தத் தொடரை நிறைவு செய்யலாம்.

இபுராஹிம் அன்சாரி

வரலாறுகள்! வழக்குகள்! வல்லரசுகள்! வடிக்கப்படும் இரத்தம்!

பாலஸ்தீனம்...

16

அதிரைநிருபர் பதிப்பகம் | January 24, 2015 | , , ,

தொடர் பகுதி - இருபத்து நான்கு


மாதரார் தங்கள் மகளென்று பார்த்திருக்க - மாப்பிள்ளை முன் வந்து மணவறையில் காத்திருக்க - காதலாள் மெல்லக் கால் பார்த்து நடந்து வர – கன்னி இளம் கையில் கட்டி வைத்த மாலை தர - காளைத் திருக்கரத்தில் கனகமணிச் சரம் ஜொலிக்க- ஆனந்தம் பாடு என்று ஆன்றோர் குரல் ஒலிக்க – கொட்டியது மேளம்! குவிந்தது கோடி மலர்! கட்டினான் மாங்கல்யம் ! என்று கவியரசு கண்ணதாசன் ஒரு திருமணத்தை வர்ணித்துக் காட்டுவார்.

அதே போல அரபுகள் ஆவென்று வாய்பிளக்க- உலக நல்லோர்கள் ஓவென்று ஓலமிட- பாதகச் செயல்களை, படைத்தவன் பொறுமையாய்ப் பார்த்திருக்க- பாலஸ்தீனத்தின் மண்ணின் துகள்களோடு ‘செம்புலப் பெயல் நீர்போல அன்புடன்’ கலந்து நின்ற அரபுகள் அகதிகளாய் மூட்டை கட்ட- ‘கிடப்பதெல்லாம் கிடக்கட்டும் கிழவியைத் தூக்கி மனையில் வை’ என்று ஐக்கிய நாடுகள் சபை இஸ்ரேலை தனிநாடாக அறிவித்து உலகுக்கு அறிமுகம் செய்துவைத்தது.

ஹிட்லரின் கொலை முகாம்களில் இருந்து தப்பித்து வந்த யூதர்கள் ஏற்கனவே பாலஸ்தீனத்தில் குவிந்து கூடத் தொடங்கி இருந்தார்கள். அவர்களுக்கெல்லாம் இந்த அறிவிப்பு இளைப்பாறுதல் தந்தது.

வரலாற்றின் சுவடிகளில் பல வடுக்களை ஏற்படுத்தக் காரணமான இந்த தனிநாடு அமைப்புக்குப் பின்னால் இஸ்லாத்துக்கெதிராகவும் அரபு மக்களுக்கெதிராகவும் அமைந்திருந்த சதிவலைகளின் இழைகளை நாம் இந்த இடத்தில் சுட்டிக் காட்டக் கடமைப் பட்டு இருக்கிறோம்.

கி.மு என்று குறிப்பிடப்படுகிற கிறிஸ்து பிறப்பதற்கு முன்பிருந்தே வரலாற்று ரீதியான பகைமை என்று பார்த்தால் அது யூதர்கள் மற்றும் கிருத்தவர்களுக்கு இடையிலேதான் இருந்து வந்தது. கிருத்துவத்தை யூதர்கள் இழிவு படுத்திய நிகழ்வுகளை வரலாற்றின் வழிநெடுக நாம் காண முடியும். அதேபோல் யூதர்களை கிருத்துவர்கள் கொன்றொழித்த வரலாறுகளையும் நாம் காண முடியும். யூதர்களை தங்களின் நாடுகளில் வைத்திருப்பது ஆபத்து என்று ஐரோப்பிய கிருத்தவ நாடுகள் யூதர்களைப் பொட்டலம் கட்டி வெளியேற்றிய நிகழ்வுகளையும் ஏற்கனவே நாம் குறிப்பிட்டு இருக்கிறோம்.

ஆனால் இஸ்லாத்தைப் பொறுத்தவரை யூதர்களை கண்ணியப்படுத்தியே வந்திருக்கிறது என்பதை நாம் காண முடியும்.

எந்த மனிதனுக்கும் பிறப்பிலேயே மேன்மை அல்லது இழிவு என்பது மனதை பாதிக்கும் விஷயமாகும். ஒரு தனி மனிதனை இழிவாகப் பிறந்தவன் எனபது அவனது தன்மானத்தையும் சுய மரியாதையையும் சுரண்டிப்பார்க்கும் செயலாகும்.

இதோ இந்த ஐரோப்பியர்கள் இன்று கொடி தூக்கும் இந்த யூதர்கள், ஹஜரத் ஈசா நபி ( அலை) அவர்கள் பிறந்த பொழுது அவர்களின் பிறப்பை கேவலப்படுத்தி அவதூறுகளைக் கிளப்பினார்கள். ஆனால் எல்லாம் வல்ல அல்லாஹ் தனது திருமறையில் ஹஜரத் ஈஸா நபி (அலை) அவர்களின் பிறப்பை மேன்மைப்படுத்தி தொட்டில் குழந்தையாக இருந்த ஈசா நபி(அலை) அவர்களையே தனது அருளால் பேசவைத்து தன் மீது யூதர்களால் ஏவப்பட்ட பிறப்பின் இழிவையும் அவதூறையும் தானே துடைத்தெறிந்த நிகழ்வை சூரா மரியத்தில் காண்கிறோம்.

அதே போல ஹஜரத் ஈசா நபி ( ஸல்) அவர்களைக் கைது செய்து தலையில் முள் கிரீடம் சூட்டி சிலுவையை சுமக்கவைத்து சாட்டையால் அடித்துக் காறி உமிழ்ந்த யூதர்களின் கூற்றை மறுத்து, யூதர்கள் கைது செய்ததும் சிலுவையை சுமக்க வைத்ததும் சிலுவையில் அறையப்பட்டதும் யூதர்கள் ஈசா நபி ( ஸல்) அவர்கள் என்று நினைத்துக் கொண்டிருந்த அவர்களைப் போன்ற ஒருவர்தானே தவிர அல்லாஹ் ஈசா நபி ( ஸல்) அவர்களை தன்னளவில் காப்பாற்றி உயர்த்திக் கொண்டான் என்பதுடன் மீண்டும் அவர்கள் உலகுக்கு வருவார்கள் , தனக்கு இழிவு ஏற்படுத்திய சிலுவையை உடைப்பார்கள் , தஜ்ஜாலை அழிப்பார்கள் என்பதும்தான் ஹஜரத் ஈசா நபி ( ஸல்) அவர்களைப் பெருமைப் படுத்தி இறைவன் மற்றும் அவனது அருள் தூதர் பெருமானார் ( ஸல் ) அவர்கள் அளித்திருக்கும் வார்த்தைப்பாடுகள். முஸ்லிம்கள் தங்களின் ஈமானின் ஒருபகுதியாக நம்பும் இத்தகைய செயல்கள் இஸ்லாத்தின் நாடி நரம்புகளில் ஓடிக் கொண்டிருக்கின்றன.

ஆனால், யாரை முஸ்லிம்கள் புனிதப் படுத்துகிறார்களோ அந்த இயேசு கிறிஸ்து என்றும் தேவகுமாரன் என்றும் கிருத்தவர்களால் சொல்லப்படும் ஈசா நபி ( ஸல்) அவர்களை பலவகைகளிலும் இழிவு படுத்தியவர்கள்தான் யூதர்கள்.

கிருத்தவர்களால் கொண்டாடப்படும் இயேசு கிருஸ்துவை பெருமைப்படுத்திய முஸ்லிம்களை அனாதரவாக்கி விட்டு இயேசு கிருஸ்துவை அவர்களின் பிறப்பு முதல் இறப்புவரை கேவலப்படுத்திய யூதர்களுக்கு , அரசியல் ரீதியாக உதவிகள் பல செய்து முஸ்லிம்கள் வாழ்ந்து வந்த இடங்களைப் பிடுங்கி யூதர்களிடம் கொடுக்க ஐரோப்பிய மற்றும் அமெரிக்க கிருத்துவ நாடுகள் முன்னணியில் நின்றன என்றால் அதன் காரணங்கள் யாவையாக இருக்கும் என்று நாம் சிந்திக்க வேண்டும்.

இன்னொரு வரலாற்று நிகழ்வையும் இங்கே சுட்டிக் காட்ட விரும்புகிறோம். பெருமானார் ( ஸல்) அவர்கள் மக்காவில் வாழ்ந்த காலத்தில் அவர்களுக்கு நபித்துவம் வழங்கப்பட்டபின் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட ஒரு சின்னஞ்சிறு முஸ்லிம்களின் கூட்டம் தாங்கள் ஏற்றுக் கொண்ட ஓரிறைக் கொள்கையை எதிர்த்து தங்கள் முன்னால் குத்தீட்டிகளை நீட்டிய குறைஷிகளின் கொடுமைகளில் இருந்து தப்பித்து அபிஷீனிய நாட்டுக்கு அகதிகளாக ஹிஜ்ரத் செய்தார்கள். அவ்வாறு ஹிஜ்ரத் செய்தவர்களை திருப்பிக் கட்டி இழுத்துவர மக்காவிலிருந்து குறைஷிகள் ஒரு தூதுக்குழுவை அனுப்பி வைத்தார்கள். அந்தத் தூதுக் குழுவினர் அபிஷீனிய நாட்டின் அரசர் நஜ்ஜாஷி அவர்களின் அவையில், மலைஎனப் பரிசுப் பொருள்களைக் கொட்டி அகதிகளைத் தங்களுடன் திருப்பி அனுப்பும்படிக் கோரினார்கள். அகதிகளாக வந்த முஸ்லிம்களை தனது அவைக்கு அழைத்த நஜ்ஜாஷி மன்னர், அவர்களை விசாரித்தபோது பெருமானார் ( ஸல்) அவர்களின் தூதுத்துவத்தையும் இறைவன் வஹி மூலம் தனது வார்த்தைகளை வழங்குவதையும் எடுத்துச் சொன்னார்கள். அப்படி வழங்கப்பட்ட திருமறையின் சில வசனங்களை ஓதிக் காட்டும்படி சொன்னதற்கு சூரா மரியத்திலிருந்து ஓதப்பட்ட வசனங்களைக் கேட்டு ஆச்சரியத்தில் ஆழ்ந்த மன்னர் நஜ்ஜாஷி அந்த இறை வசனங்கள் யாவும் உண்மை என்றும் அவை கிருத்தவர்களின் நம்பிக்கையை மெய்ப்படுத்துகின்றன என்றும் கூறி அகதிகளாக வந்த முஸ்லிம்களை திருப்பி அனுப்ப மறுத்து பரிசுப் பொருட்களை பொட்டலம் கட்டி குறைஷிகளில் முகத்தில் தூக்கி வீசினார். பின்னொரு நல்ல நாளில் நஜ்ஜாஷி மன்னர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார் என்பதும் சரித்திரம்.

அதே போல் யூதர்கள் இறைவனைத் தொழுத ஜெருசலம் இருந்த திசை நோக்கியே பெருமானார் ( ஸல் ) அவர்களும் சஹாபாக்களும் இறைவனின் திசை மாற்றல் உத்தரவு வரும்வரை தொழுது கொண்டிருந்தார்கள் என்பதையும் , தவ்ராத் வேதத்தில் கூறப்பட்ட விதி முறைகளின் அடிப்படையிலேயே யூதர்கள் நோன்பு நோற்ற நாட்களிலும் அத்துடன் ஒருநாள் கூடுதலாகவும் நோன்பு நோற்றார்கள் என்றும் யூதர்களின் நம்பிக்கையை கண்ணியப்படுத்தியக் காட்சிகளையும் காண்கிறோம். பெருமானார் ( ஸல் ) அவர்கள் மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்து வந்ததற்குப் பிறகு , யூதர்களுடன் பல அம்சங்கள் கொண்ட சமாதான ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை செய்துகொண்டதையும் காண்கிறோம்.

இதுபோல பல சான்றுகள் மூலம் கிருத்துவத்தை மட்டுமல்ல யூதர்களையும் இஸ்லாம் கண்ணியப்படுத்திய வரலாறெல்லாம் இஸ்ரேலை உருவாக்கிக் கொடுத்த ஐரோப்பிய அமெரிக்க கிருத்தவர்களுக்குத் தெரியாமலா இருந்தது?

அவர்களுக்குத்தெரியும். ஆனால் பொருளாதார ஆதிக்கப் போட்டி நிறைந்த இந்த உலகில் இஸ்லாத்தைப் பரவவிட்டால் தங்களுக்குக் கொட்டிக் கொடுக்கும் வட்டித்தொழில் நசிந்துவிடும்; தங்களது மதுபானத் தொழில் ஒழிக்கப்படும்; தங்களின் சூதாட்டங்களுக்குத் தடை வரும்; தங்களது வணிக ஏகபோகங்களை இஸ்லாம் ஏப்பம் விட்டுவிடும் என்றெல்லாம் எண்ணித்தான், யூதர்களைப் பகடைக் காயாகப் பயன்படுத்தி இஸ்லாம் தழைத்தோங்கி வேர்விட்டு வளர்ந்த அரபு நாடுகளுக்கு மத்தியில் இஸ்ரேல் என்ற நாட்டை ஈன்றெடுத்துக் கொடுத்தார்கள். ஐந்து நேரங்களிலும் அல்லாஹு அக்பர் முழங்கும் அராபிய பூமியில் உலகமே ஒதுக்கித் தள்ளிய குப்பைகளை கொலுமண்டபத்தில் ஏற்றினார்கள்.

அதுமட்டுமா காரணம்? குணத்தால் கொடியவர்களென்று படைத்த இறைவனால் பட்டம் சூட்டப்பட்ட யூதர்களை தங்கள் நாட்டில் வைத்துக் கொள்ள விரும்பாத ஐரோப்பிய நாடுகள் அவர்களை அப்படியே விட்டு விட்டால் தங்கள் நாடுகளில் தங்கிவிடக்கூடும் அதற்கு இடம் தரக் கூடாது என்றே தனிநாடு என்ற ஒற்றை ஆசைகாட்டி யூதர்களைப் புறந்தள்ளவே அந்நாடுகள் ஒன்றிணைந்து இஸ்ரேலை உருவாக்கின என்ற ஒரு கருத்தும் உலகின் அரசியல் அரங்கில் நிலவுகிறது.

இப்படிப்பட்ட உள்நோக்கம் கொண்ட இஸ்லாத்துக்கு எதிரான உலக நாடுகள்தான் பரம்பரைப் பகைவர்களுக்கு மத்தியில் இஸ்ரேல் என்கிற சவலைப் பிள்ளைக்கு சக்திவாய்ந்த சகல ஆயுதங்களையும் கொடுத்து அந்த நாட்டை சகலகலாவல்லவனாக மாற்றிவைத்து படம் காட்டிக் கொண்டு இருக்கிறார்கள். இஸ்ரேல் உருவான பிறகு மனித குலத்துக்கு எதிராக நடக்கும் அத்துமீறல்களை எதிர்த்துப் பேச ஐ. நா . சபைக்கு நா இல்லாமல், வல்லரசுகளுக்கு முன்னால் ஒரு நாயைப் போல நாவைத் தொங்கப் போட்டுக் கொண்டு இருக்கிறது.

எப்படியோ, இஸ்ரேல் உருவாகிவிட்டது; மண்ணின் மைந்தர்கள் ஆன முஸ்லிம்கள் ஒடுக்கப்பட்டார்கள்; அன்றாடம் துன்பங்களை அனுபவித்து வருகிறார்கள்; ஆனால் தங்களின் மண் மட்டும் அவர்களின் கண்ணை விட்டும் கருத்தைவிட்டும் போகவில்லை. தாங்கள் அனுபவிக்கும் அத்தனை துன்பங்களுக்கிடையிலும் தங்களின் பாலஸ்தீன மண்ணை அவர்கள் துறந்து தாங்களாக ஒருபோதும் வெளியேறவில்லை.

இன்று உலகம் கண்டு வரும் எண்ணற்ற அரசியல் பிரச்னைகளுக்கு இஸ்ரேல் என்ற நாடு உருவாக்கப்பட்டதும் – அந்த நாட்டில் பிறந்து வாழ்ந்த அரபு மக்கள் அன்னியர்கள் போல ஆக்கப்பட்டு காஸா போன்ற ஒரு இடத்தில் ஓரங்கட்டப்பட்டதும் அடிப்படைக் காரணங்கள் என்பதை அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும். அகில உலகத்தின் அரசியல் முடிச்சின் முனை , எங்கே சுற்றினாலும் அது பாலஸ்தீனத்தில்தான் கிடைக்கும்; அவிழும்.

முஸ்லிம்களாகிய பாலஸ்தீனியர்களை நாம் வென்று விட்டோம்; வெளியேற்றி விட்டோம்; அகதிகளாக ஆக்கிவிட்டோம்; அன்றாட வாழ்வுக்கு அலைபாய வைத்துவிட்டோம் என்றெல்லாம் இஸ்ரேலும் மேற்கத்திய நாடுகளும் மகிழ்ச்சியில் மல்லாந்து கொண்டு மனப்பால் குடிக்க வேண்டாம்.

இஸ்ரேல் என்ற நாடு உருவாக்கப்பட்டது என்பது அரசியல் மைதானத்தில் விளையாடும் ஒரு விளையாட்டல்ல . இவர்களின் இந்தச் செயல் ஒரு வரலாற்று துரோகம் என்பதும் அதையும் விட மேலாக இவ்வுலகைப் படைத்து பரிபாலித்துவரும் இறைவனோடு இவர்கள் விளையாடும் விபரீத விளையாட்டு என்பதை ஐரோப்பிய அமெரிக்க கிருத்தவ நாடுகள் உணரும் காலம் வந்தே தீரும்.

ஒருவேளை வல்லரசுகள், தங்களின் இந்தச் செயலை ஒரு விளையாட்டு என்றே எடுத்துக் கொண்டாலும் இந்த விளையாட்டின் முதல் பாதியைத்தான் இன்றைய உலகம் கண்டு வருகிறது. முதல் பாதியை அமெரிக்காவும் ஐரோப்பாவும் கிருத்துவ யூதக் கூட்டணி என்கிற அவர்களின் தவறான உறவில் பிறந்த இஸ்ரேலும் வென்றிருக்கலாம். ஆனால், ஆட்டத்தின் அடுத்த பாதியை ஆக்ரமித்து ஆடப்போவது அல்லாஹு சுபஹானத்துல்லாஹ்தான் . அதுவே இறுதி வெற்றி. அதுவரை உலகம் அவசரப் படாமல் இருக்கட்டும். ஒரு காலம் வரும் ; இந்தக் காக்கைகள் கூட்டம் ஒழியும் .

அல்லலுற்று ஆற்றாது அழுத கண்ணீர் செல்வத்தைத் தேய்க்கும் படையல்லவா?

மேற்கு ஐரோப்பாவில் ஏற்பட்ட பொருளாதாரப் பெருமுதலைகள் என்கிற பூர்ஷ்வாக்களின் வளர்ச்சி, அவர்களில் பலர் யூத விந்தணுக்களின் வித்தைகளுக்குப் பிறந்தவர்கள் என்கிற உணர்வு, கிழக்கு ஐரோப்பாவில் நீடித்து வந்த நிலபிரபுத்துவம், ரஷ்யாவில் ஏற்பட்ட மாற்றங்கள், இரு உலகப் போர்களிலும் ஜெர்மனியின் தோல்வி, அதனால் திணிக்கப்பட்ட ஒப்பந்தம் , புதிதாக வல்லரசாக உருவெடுத்த அமெரிக்காவின் எழுச்சி ஆகிய அரசியல் காரணிகளே இஸ்ரேல் உருவாகவும் இன்று அரபு உலகை ஆட்டிப் படைக்கவும் காரணங்களாயின.

ஒரு விஷயத்தை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இரண்டாம் உலகப் போரின் மையப் புள்ளி ஜெர்மனிதான். போரைத் தூண்டியதும் போரை ஆரம்பித்ததும் ஜெர்மனிதான். ஆனால் போரை முடிவுக்குக் கொண்டு வந்த அணுகுண்டுகள் நியாயமாக ஜெர்மனியின் மீதுதானே வீசப்பட்டு இருக்க வேண்டும்? ஆனால் எங்கே வீசப்பட்டன ? ஜப்பானிய நகரங்களின் மீதுதானே வீசப்பட்டன? ஏன்?

ஏனென்றால் ஜெர்மனி ஒரு கிருத்துவ நாடு . ஜெர்மனியை சுற்றி உள்ள இதர ஐரோப்பிய நாடுகளும் கிருத்தவ மதத்தைப் பின்பற்றும் நாடுகள். ஆனால் ஜப்பான் பின்பற்றுவதோ புத்த மதத்தை. ஆகவே Blood is thicker than Water என்ற அடிப்படையில் அழிந்தால் ஜப்பான் அழியட்டுமென்று ஜப்பான் மீது அணுகுண்டுகள் அமெரிக்காவால் வீசப்பட்டன. எதிரிகளாக இருந்தாலும் கிருத்தவர்கள் அமெரிக்காவால் காப்பாற்றப்பட்டார்கள். அமெரிக்கா வீசிய அணுகுண்டுகளின் அனல் காற்று இன்றுவரை ஜப்பானில் வீசிக் கொண்டிருக்கிறது.

ஆனால் நண்பர்களே! நன்கு அறிந்து கொள்ளுங்கள் இந்த அரசியல் காரணங்கள் அனைத்தையும் மீறி அகிலத்தை படைத்த அல்லாஹு உடைய ஆன்மீகக் காரணங்கள் உலகில் இறக்கப்படும்போது , இஸ்ரேல் மீது இரக்கப்பட யாரும் இன்றி இந்த அரசியல் காரணங்கள் அனைத்தும் தலை குப்புறப் புரட்டப்படும். யூதர்களுக்குப் பாடம் புகட்டப்படும். இப்படிப் புரட்டப் போகிறவனும் புகட்டப்போகிறவனும் அவனோ இவனோ அல்ல. அல்லாஹ்! ஆம்! அல்லாஹ்!

இந்த நிலைமைகளுக்கான பல செய்திகளை ஆதாரங்களோடு இறைவனின் திருமறை எடுத்துச் சொல்கிறது. இறைவனின் அருள் தூதரும் நிறையவே மொழிந்து இருப்பதன் பதிவுகள் அறிஞர் பெருமக்களால் ஆய்ந்து தரப்பட்டு இருக்கின்றன.

அவைகள்?

இன்ஷா அல்லாஹ் அடுத்த வாரம்.

இபுராஹீம் அன்சாரி

வரலாறுகள்! வழக்குகள்! வல்லரசுகள்! வடிக்கப்படும் இரத்தம்!

பாலஸ்தீனம்...

11

அதிரைநிருபர் பதிப்பகம் | January 17, 2015 | , , ,

தொடர் பகுதி - இருபத்து மூன்று

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் யூதர்களுக்கு இனிப்புப் பொட்டலங்களை வழங்கி ஆசீர்வதித்து - பிரிட்டனுக்கு முதல் உலகப் போரில் வெற்றியைக் கொடுத்து- பால்போர் பிரகடனம் மூலம் ‘கடைத் தேங்காயை எடுத்து வழிப்போக்கருக்கு வழங்கிய’ கதையாக  பாலஸ்தீனை பங்கு வைத்துக் கொள்ளும் உரிமையையும் வழங்கியது. ஆனால் அவர்களின் கரங்களில் இருந்த அந்த மகிழ்ச்சியின் மலர்க் கொத்து வாடும் முன்பே 

“ஆடிய ஆட்டமென்ன ? கூடிய கூட்டமென்ன? தேடிய செல்வமென்ன? திரண்டதோர் சுற்றமென்ன? கூடு விட்டு ஆவி போனால் கூடவே வருவதென்ன?” 

என்றும் 

“இறந்தவனை சுமந்தவனும் இறந்துட்டான் அதை இருப்பவனும் எண்ணிப் பார்க்க மறந்துட்டான்”

 என்றும்

தலையில் அடித்துக் கொண்டு தத்துவப் பாடல்களை பாடவேண்டிய நிலைக்கு யூதர்கள் தள்ளப்பட்டார்கள். அவர்களை அந்தத் தத்துவப்        பாடல்களின் படுகுழியில் தள்ளியவரின் பெயர் அல்டாப் ஹிட்லர். காரணம் யூதர்களுக்கெதிரான இனப் படுகொலை. இதைப் போல ஒரு இனப்படுகொலையை உலகம் அதற்கு முன்பும் அதன் பின்பும் சந்தித்தது இல்லை. 

"ஹோலோகாஸ்ட்" என்று உலக வரலாறு குறிப்பிடும் இந்த இனப் படுகொலை , இரண்டாம் உலகப் போர் தொடங்கும் முன்பே ஹிட்லராலும் ஹிட்லரின் விரல் அசைவுக்கும் கண்ணிமை அசைவுக்கும் காத்திருந்த அவரது நாஜிப் படையினராலும் பல்வேறு பகுதிகளில் படுபாதகமாக அரங்கேற்றப்பட்டது. கிரேக்க மொழியிலிருந்து உருவாகிய ‘ஹோலோகோஸ்ட்’ என்ற சொல்லின் அடிப்படைப் பொருள் ‘தீயில் பலிகொடுத்தல்’ என்பதாகும். இதற்கு யூதர்கள் வைத்த பெயர் ‘ஷோவா’(Shoah). யூத மொழியான ஹீப்ருவில் இதற்குப் ‘பேரழிவு’ என்று பொருள்.

உலகவரலாறு இதற்கு முன் எத்தனையோ இனப்படுகொலைகளை சந்தித்து இருக்கிறது. ஆனால் நிகழ்வுகளைக் கேட்டாலும் படித்தாலும் குலைநடுங்கும் கொலைகள் யூதர்களுக்கெதிராக ஹிட்லரால் நடத்தப்பட்டதே. 

யூதர்களை குடும்பம் குடும்பமாக, கொத்துக் கொத்தாக கொன்று குவிப்பதற்காகவே ஒரு தனி அரசுத் துறையை இராணுவத்தின் பின்னணியில் அமைத்தார் ஹிட்லர். அண்மைக்கால அரசியலில் விஞ்ஞான ரீதியான ஊழல் என்ற ஒரு சொற்றோடரைக் கண்டு வியக்கிறோமல்லவா? அதே போல்  ஒரு இனத்தையே அழிக்கும் செயலை வித்தியாசமாகவும் நவீனமாகவும் இதுவரை யாருமே கையாளாத முறைகளிலும் செய்தான் ஹிட்லர். காரணம் யூதர்கள் மேல் அவ்வளவு வெறுப்பு! அவ்வளவு குரோதம்! அவ்வளவு பழிவாங்கும் உணர்வு! 

‘ஹோலோகோஸ்ட்’டின்போது யூதர்களை மட்டும்தான் ஹிட்லர் கொன்றான் என்பதல்ல. சில வரைமுறையற்ற வாழ்க்கை வாழ்ந்த நாடோடி இனத்தவர்கள், ஓரின சேர்க்கையாளர்கள் என்று அறியப்பட்ட ஆண்பெண்கள் , யெஹோவாவின் சாட்சிகள், உடல் குறைபாடுடையவர்கள், மனநலம் குன்றியவர்கள், நாஜிக்களை எதிர்த்தவர்கள், கம்யூனிஸ்டுகள், சோஷலிஸ்டுகள், தூய்மைக் குறைவானவர்களாகக் கருதப்பட்ட மற்ற இனத்தவர்கள் என்று பலரும் அழித்தொழிக்கப்பட்டனர். ஆனால் மற்றவர்கள் எல்லாம் கண்டதும் கொல்லப்பட்டார்கள். ஆனால் யூதர்கள்தான் சாகும் முன்பு பலவகைகளிலும் சித்திரவதை செய்யப்பட்டு செத்துவிட்டால் கூட பரவாயில்லை என்ற மனநிலைக்குத் தள்ளப்பட்டுக் கொல்லப்பட்டார்கள். 

யூதர்களைத் தனிமைப்படுத்தி, சித்திரவதைப் படுத்தி அதன்பின் அவர்களை அழிப்பதற்கு வசதியாக பல நகரங்களுக்கு வெளியே நூற்றுக் கணக்கான யூதச்சேரிகள் (கெட்டோ) உருவாக்கப்பட்டன. எந்த அடிப்படை வசதியும் இல்லாத நிலையில், விலங்குகளைப் போல யூதர்கள் அங்கே வசிக்கும்படி தள்ளப்பட்டனர். வார்ஸாவில் இருந்த ஒரு யூதச்சேரியில் மட்டும் அதிகபட்சமாக 4,45,000 யூதர்கள் இருந்தார்கள். யூதச்சேரிகளிலிருந்து தினமும் ஆயிரக் கணக்கான யூதர்கள் வதை முகாம்களுக்கும் கொலை முகாம்களுக்கும் அனுப்பப்பட்டனர். அதிகபட்சம் 100 பேர் இருக்கக்கூடிய ரயில் பெட்டியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை ஏற்றி அனுப்பினார்கள். இதனால், பெரும்பாலானோர் கொலை முகாம்களை அடையும் முன்னரே இரயில் பேட்டியின் நெருக்கடியில் சிக்கி இறந்துபோனார்கள்.

மொத்தம் ஆறு இடங்களில் கொலை முகாம்கள் நிறுவப்பட்டன. யூதர்களை அழித்தொழிப்பதற்காக எத்தனையோ கொலை முறைகள் நவீனமாகக் கண்டுபிடிக்கப்பட்டன. நம்பவே முடியாத அளவுக்கு மனித குலத்தின் ஒரு இனத்தை அழிப்பாதற்கு கருவிகளைக் கண்டுபிடித்தது ஹிட்லரின் இராஜ்ஜியம். அந்தக் கருவிகளின் சோதனைக்கூடங்கள்தான் கொலை முகாம்கள். போலந்து பகுதியில் இருந்த ஆஷ்விட்ஸ் கொலை முகாம்தான் மிகப் பெரியதாம். இங்கே மட்டும் 11 லட்சம் யூதர்கள் படுகொலை செய்யப்பட்டனர் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

வதை முகாம்கள் என்று பெயரிட்டு அழைக்கப்பட்டாலும் அவற்றில் உடலுழைப்பு முகாம்கள், படுகொலை முகாம்கள், போர்க் கைதிகளுக்கான முகாம்கள், இடைத்தங்கல் முகாம்கள் என்று பல வகைகள் இருந்தன. உடலுழைப்பு முகாம்களுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களைக் கொண்டு மிகமிகக் கடினமான பணிகள் செய்விக்கப்பட்டன.

தங்களின் கண் முன்னே வதைக்கப்படும் யூதர்களைப் பார்த்துக் கொண்டிருந்த வதை முகாம்களில் வைக்கபட்டிருந்த யூதர்கள் சாவதற்கு தங்களின் வரிசை எண் எப்போது வருமென்று தவமிருந்தார்கள் என்று சொல்ல வேண்டும். சாவதை ஒரு வரமாக வேண்டிக் கொண்டிருந்த சமுதாயம் உலக சரித்திரத்தில் யூத சமுதாயமாகத்தான் இருக்க இயலும். 

பொழுதுபோக்குபோல யூதர்களை நாஜிக்கள் கொன்றனர். எலிகள், கரப்பான்பூச்சிகள் போன்றவற்றை அறுத்து ஆய்வகங்களில் அறிவியல் சோதனை நடத்துவதைப் போல யூதர்களை, குறிப்பாக யூதக் கர்ப்பிணிகளையும் குழந்தைகளையும் வைத்து ஜெர்மனி மருத்துவர்கள் நடத்திய மருத்துவ ஆய்வுகள்தான் கொடூரத்தின் உச்சம். மயக்க மருந்தே கொடுக்காமல் யூதர்கள் கோழியை அறுப்பது போல் விதவிதமாக அறுத்துப் பரிசோதிக்கப்பட்டனர். ஜெர்மானிய இனத்தின் மக்கள்தொகையை அதிகப்படுத்தும் வழிமுறையைக் கண்டறிய யூத இரட்டைக் குழந்தைகளை வைத்து டாக்டர் ஜோசஃப் மெங்கெலே நடத்திய பரிசோதனைகள்தான் மிகவும் கொடூரம். அது மட்டுமன்றி, யூதர்களுடைய உடல்நிலை, மனநலம் போன்றவற்றின் அடிப்படையில் அவர்களை இனம் பிரித்து உடலுழைப்பு முகாமுக்கும், விஷவாயு அறைக்கும் அனுப்பும் மருத்துவர்கள் குழுவைச் சேர்ந்தவர் அவர். 

நாஜிக்களின் கொலை முகாம்களுக்குக் கொண்டுசெல்லப்படுபவர்களுக்குத் தாங்கள் எங்கே கொண்டுசெல்லப்படுகிறோம் என்றே தெரியாது. ஷவரில் குளிப்பாட்டப்போகிறோம், எல்லோரும் ஆடைகளை அவிழ்த்துப் போடுங்கள் என்று சொல்லிவிட்டு, அவர்களை நாஜிப் படையினர் ஒரு அறைக்கு நிர்வாணமாக அழைத்துச்செல்வார்கள். அது குளியலறையல்ல. நச்சு வாயு அறை. இன்றைக்கும் வரலாற்றுச் சின்னமாக அந்த அறையின் சுவர்கள் ஆஷ்விட்ஸ் என்ற ஜெர்மனியின் ஒரு ஊரில்  சாட்சி பகர்ந்து கொண்டிருக்கின்றன. நினைத்தாலே இதயம் நடுங்குகிறது. தங்கள் மீது ஷவர்க் குழாய்களிருந்து திறந்து விடப்பட்ட கார்பன் மோனோ ஆக்சைடு என்கிற விஷக்காற்றின்  துன்பம் தாங்க இயலாமல் தாங்கள் அடைக்கப்பட்ட அறையின் சுவர்களை ஒட்டிக் கொண்டு, தங்களின் நகங்களால் சுரண்டிய அந்த கீறல்கள் இன்றும் அங்கே கோடுகளாக காட்சியளித்து நமது இரத்தத்தை உறைய வைக்கின்றன. நச்சுவாயு செலுத்தப்பட்டு மூச்சுத் திணறியபோது உயிருக்குப் போராடிய யூதர்களின் பிறாண்டல்களைத்தான் பேரழிவின் சாட்சியமாக அந்தச் சுவர் சுமந்திருக்கிறது. குழந்தைகள், முதியவர்கள், பெண்கள், ஆண்கள், என்று சிறிய, பெரிய, மத்திய, தளர்ந்த விரல்களின் பிராண்டல் ரேகைகள் அந்த சுவற்றில் உள்ளன. இதை ஹிட்லரின் T4 Action என்று குறிப்பிடுகிறார்கள். 

ஹிட்லர் மேற்கொண்ட யூத இன அழித்தொழிப்பை எத்தகைய மொழியில் எழுதினாலும் அந்த நிகழ்வை வர்ணிக்க இயலாது. மீன் தொட்டிகளில் ஓடி விளையாடும் மீன் குஞ்சுகளுக்கு இரைபோட்டு வேடிக்கை பார்ப்பது போல் யூதர்களை கொன்று குவித்த நிகழ்வுகளை விளையாட்டைப் போல் பார்த்து ரசித்த வக்கிரத்தின் வெளிப்பாடு அது. நாய்க்குட்டிகளுக்கு கடற்கரைகளில் கால்பந்துகளை தூக்கிப் போட்டு அவற்றை அது ஓடிப்போய் எடுத்து வருவதை ரசிப்பது போல் உயிர்வதைகளை கைதட்டி ரசித்த கொடூரத்தின் உச்ச நிலை அது.

ஆணா ,பெண்ணா, குழந்தையா, வயோதிகரா , அறிஞரா, வித்தகரா, விஞ்ஞானியா என்ற எவ்விதப் பாகுபாடும் பார்க்காமல் யூதர் என்ற ஒரே ஒரு பிறப்புத் தகுதி இருந்தால் அவர்கள் அழித்தொழிக்கப்பட்டனர். அழிக்கபட்டவர்களின் கதறல் ஓசையும் அழித்தவர்களின் சிரிப்பொலியும் வானில் முட்டி மோதி எதிரொலித்தது.

கொன்று குவிப்பதில்தான் எத்தனை வகை? கைகால்களை வெட்டுவது, மதுரைவீரன் ஸ்டைலில் மாறுகால் மாறுகை வாங்குவது, குடலை உருவிக் கீழே சரியவிடுவது, விழுந்த குடலைப் பிரித்து அளந்து வேடிக்கை பார்ப்பது, விரல்களை வெட்டுவது, விழியைத் தோண்டுவது, நகக்கண்களில் நச்சு ஊசி போடுவது, தலையை முண்டமாக்கி உடல்மட்டும் துடிப்பதை அருகில் அடைபட்டுக் கிடக்கும் அடுத்து வரிசையில் நிற்போருக்கு அதைக் காட்சியாகக் காட்டி மகிழ்வது, விஷவாயு செலுத்தி மூச்சுத்திணற வைப்பது , ரம்பம், கோடாலி, சிறுகத்தி ஆகியவைகளைக் கொண்டு உடலின் உணர்வுமிக்க பாகங்களை அறுப்பது, தோலை உரிப்பது, நிர்வாணப்படுத்தி கொதிக்கும் வெந்நீர்த்தொட்டியில் குப்புறக் குதிக்கச் செய்வது, எரிபொருள் கொண்டு எரித்து விடுவது என்று கொடுமைகளை குரூரமாக ஏவி விட்ட பிறகே யூதர்கள் கொல்லபட்டார்கள் என்று எல்லா வரலாற்று ஆசிரியர்களும் குறிப்பிடுகிறார்கள். 

குழந்தைகளை வானத்தில் தூக்கிப் போட்டு அவர்கள் கீழ் நோக்கி வருவதற்குள் ஏழெட்டு குண்டுகள் அவர்களது உடலைப் பதம் பார்த்து இருக்கும் என்கிற ஒரு செயலே நாஜிக்களின் குரூரத்தின் கோர முகம். இதற்கு மேல் இதற்கு உதாரணம் சொல்ல வேண்டியதே இல்லை. இப்படி கொல்லப்பட்டவர்கள் காணாமல் போனவர்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டது இன்னுமொரு அநியாயம்.  

நாஜிப் படையினர் ஊரை சுற்றிப் பார்க்கும்போது கண்ணில் படும் எவரையும் நிறுத்தி நீ யார் என்று கேட்டு அவன் ஒரு யூதன் என்று கூறிவிட்டால் போதும் அவனுக்கு உடனே வழங்கப்பட்டது துப்பாக்கி குண்டுகளால் துளைக்கப்படும் மரணப்பரிசுதான். என்னை ஏன் சுடப் போகிறீர்கள்? என்று எவராவது கேட்டால் போதும் நீ யூதனாக, ‘ ஏன் பிறந்தாய் மகனே! ஏன்பிறந்தாயோ! ‘ என்று நாஜி இராணுவம் முகாரி ராகம் இசைத்துக் கொண்டே யூதர்களின் மூச்சை நிறுத்தியது.  

உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு யூதர்கள் ஓடினார்கள் ஓடினார்கள் வாழ்க்கையின் ஓரத்துக்கே ஓடினார்கள். . அந்த ஓரத்திலும் அவர்களை வரவேற்றது நாஜிப் படையின் துப்பாக்கி முனைகளே. அதையும் மீறி , அவர்கள் ஓடிய பாதையெங்கும் இருந்த கட்டிடங்களின் மாடிகளில் காத்திருந்த நாஜிப்படை, யூதர்கள் கிட்டே நெருங்கும்போது அவர்களை சுட்டு வீழ்த்தினார்கள். அதிகபட்சமாக போலந்தின் சாலைகள் ரத்தக் கண்மாய்கள் ஆக மாறின . சாலைகளில் வேகத்தடைகள் போல ஆங்காங்கே எடுத்துப் புதைப்பாரின்றி யூத உடல்கள் சிதறிக்கிடந்தன. இந்தப் படுகொலைகளைப் பார்த்து அந்த பிணங்களை நெருங்கிக் கொத்தித் தின்பதற்குக் கூட பயந்துகொண்டு நாய்களும் நரிகளும் வல்லூறுகளும்கூட அந்தப் பகுதிகளுக்குள் நுழைய அஞ்சின என்று எழுதுகிறார்கள் வரலாற்றாசிரியர்கள். 

இவ்வளவு கொடுமைகளும் ஹிட்லர்தான் இனி ஐரோப்பாவின் அரசன் என்கிற மத மதப்பில் அவரது நாஜிப் படைகள் நடத்திய அட்டூழியங்களின் அடையாளங்கள் ஆகும். இரண்டாம் உலகப் போர் தொடங்கும் முன்பே யூதர்களின் மீது கட்டவிழ்த்து விடப்பட இந்தக் காட்டாட்சி தர்பார் இரண்டாம் உலகப் போரின் தொடக்கம் முதல் நிறைவு வரை ஹிட்லர் வென்ற நாடுகள் அனைத்திலும் இருந்த யூதர்களின் மீதும் பாய்ந்து பாய்ந்து அவர்களை படுகொலை செய்தது. 

முதல் உலகப் போரில் ஜெர்மன் பெற்ற தோல்விக்கு பழி தீர்க்கவும் உலகில் தனது சர்வாதிகார ஆட்சியை உருவாக்க வேண்டுமென்ற ஹிட்லரின் பேராசையே இரண்டாம் உலகப் போருக்கு அடிப்படையான காரணம். இந்த நோக்கத்துக்கு உலகெங்கும் இடையூறாக இருந்தவர்கள் யூதர்கள் என்ற கோபத்தில்தான் யூதர்கள் இரக்கமின்றி கொல்லப்பட்டார்கள். இவ்வளவு யூதர்களைக் கொன்ற பிறகும் ஹிட்லர் சொன்னது , “ யூதர்கள் எப்படிப் பட்டவர்கள் என்பதை உலகம் உணர்ந்து கொள்ளவே சில யூதர்களை விட்டு வைத்து இருக்கிறேன் . நான் இவர்களைக் கொன்றது நியாயம்தான் என்பதை எதிர்கால உலகம் ஏற்றுக் கொள்ளும் “ என்று கூறினார். அண்மைக்கால உலக சரித்திரம் ஹிட்லரின் வார்த்தைகளை மெய்ப்பிக்கின்றன. இறைவன் நாடினால், அவற்றைப் பின்னர் பார்க்கலாம்.  

செப்டம்பர் 1, 1939ல் ஜெர்மனியின் நாஜிப் படைகள் போலந்து மீது எடுத்த படையெடுப்புடன்  இரண்டாம் உலகப்போர் துவங்கியது. 

ஒரு அணியில் பிரிட்டனும் அதன் பேரரசில் இடம் பெற்றிருந்த நாடுகளும் பிரான்சு ஆகியவை நேச நாடுகள் என்ற பெயருடனும் . மறு அணியில்ஜெர்மனியின் நாசி மற்றும் பாசிசத்தின் பயிரை வளர்த்த இத்தாலி ஆகியவை சேர்ந்து அச்சு நாடுகள் என்ற பெயருடனும் முட்டி மோதி நின்றன. 

1942 வரை அச்சு நாடுகளுக்குச் சாதகமாக இருந்த போரின் நிலவரம், பின்னர் நேரெதிராக மாறியது.  மே 1945ல் ஜெர்மனியின் சரணடைவுடன் ஐரோப்பாவில் இரண்டாம் உலகப்போர் முடிவடைந்தது. ஹிட்லர் தற்கொலை செய்துகொண்டார். 1943-45 காலகட்டத்தில் பசிபிக் பெருங்கடலின் தீவுக்கூட்டங்களைக் கைப்பற்றி, ஜப்பானியத் தீவுகளை நோக்கி முன்னேறிய அமெரிக்கா, ஆகஸ்ட் 1945ல் ஜப்பானின் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி நகரங்கள்மீது கொடிய அணுகுண்டுகளை வீசியது. மீண்டும் மனிதகுலத்தின்  மறக்கமுடியாத  பேரழிவு. இதன் விளைவாக ஜப்பானும் சரணடைந்து இரண்டாம் உலகப் போர் எல்லா இடங்களிலும் முடிவடைந்தது.

போர் முடிவுக்கு வரும்போது மொத்தம் 60 லட்சம் யூதர்கள் கொல்லப்பட்டிருந்தனர். அதாவது, ஐரோப்பாவில் இருந்த யூதர்கள் மூன்றில் இரண்டு என்ற வீதத்தில் கொல்லப்பட்டிருந்தனர். இதில் குழந்தைகளின் எண்ணிக்கை மட்டும் 11 லட்சம். யூதர்களைத் தவிர, நாஜிக்களால் கொல்லப்பட்ட பிறரின் எண்ணிக்கை 50 லட்சம். போர் முடிவுக்கு வருவதற்குள் ஒட்டுமொத்த உலகையே கொலை முகாமாக்கிவிட்டிருந்தனர் நாஜிக்கள். இவ்வளவு பேரழிவை நாஜிக்கள் நிகழ்த்தியபோது பாராமுகமாக இருந்ததன் குற்றவுணர்விலிருந்து ஜெர்மானிய மக்களால் இன்றுவரை விடுபட முடியவில்லை. 

அதுபோலவே பெரும் துயரம் எதுவென்றால், மனித குலத்தின் மோசமான அழிவை சந்தித்த யூதர்கள், தாங்களும் இன்னொரு இனத்தை அழிக்கும் ஒரு பேரழிவில் ஈடுபட்டு வருவதுதான்.

இப்போரின் விளைவாக உலக அரசியலில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டன. ஐரோப்பிய காலனிய பேரரசுகள் தங்கள் வல்லமையை இழந்தன; அமெரிக்காவும், சோவியத் ஒன்றியமும் பிரிட்டனைப் பின்தள்ளிவிட்டு உலகின் புதிய வல்லரசுகளாயின உலக அமைதிக்காகச் செயல்பட ஐக்கிய நாடுகள் அமைப்பு ( United Nations ) உருவாக்கப்பட்டது.

1947ஆம் ஆண்டு நவம்பர் 29 அன்று இரண்டாம் உலகப்போர் ஈன்றெடுத்த ஐ.நா. பொதுச்சபையில் வல்லரசுகளின் வற்புறுத்தலால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி இரு தற்காலிக, யூத, அரபு அரசுகள் உருவாக்கப்பட்டன. 

1948 ஆம் ஆண்டு மே 14 ஆம் தேதி அன்று இஸ்ரேல் என்ற ஒரு தனிநாடு அமையப்பெற்று தனது தனிநாடு சுதந்திரப் பிரகடனத்தை வெளியிட்டது. பல ஆண்டுகள் போராடி இறுதியில் இரத்தச் சகதிகளுக்கிடையில் இஸ்ரேல் உருவானது. அரபு வம்சாவழியினர் சொந்த பூமியில் தங்களின் கண்களைக் கசக்கிக் கொண்டு நின்றார்கள். அவர்களின் காலடி மண் அவர்கள் கண்டுகொண்டிருக்கும்போதே களவாடப்பட்டது. 

இஸ்ரேல் உருவானாலும் வடிக்கப்படும் இரத்தம் இன்றும் அந்த பூமியில் வடிந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் இப்போது இரத்தம் வடிப்பவர்கள் பாலஸ்தீனர்கள். 

இன்ஷா அல்லாஹ் இனி அந்தப் போர்களையும் போராட்டங்களையும் காணலாம்.

இபுராஹீம் அன்சாரி

வரலாறுகள்! வழக்குகள்! வல்லரசுகள்! வடிக்கப்படும் இரத்தம்!

பாலஸ்தீனம்...

14

அதிரைநிருபர் பதிப்பகம் | December 27, 2014 | , , ,

தொடர் பகுதி - இருபத்தி இரண்டு

பால்போர் பிரகடனம் உசுப்பி விட்ட உற்சாகத்தில் , உலகெங்கிலுமிருந்து ஓடிப்போன யூதர்கள் பாலஸ்தீனத்துக்கு வரத் தொடங்கி ஏற்கனவே யூதர்களின் நிலவள வங்கி மூலம் வாங்கிப் போட்ட நிலங்களில் குடியேற ஆரம்பித்தார்கள். வெர்சயில்ஸ் உடன்படிக்கை என்ற ஒப்பந்தம் மூலம் முதலாம் உலகப் போர் ஒரு முடிவுக்கு வந்தது. இந்தப் போர் பற்றி, இந்தத் தொடரில் நாம் குறிப்பிட வேண்டிய முக்கிய அம்சம் என்னவென்றால் துருக்கிக்கு செலவுக்கணக்கில் எழுத வேண்டியதும் பிரிட்டனுக்கு வரவுக் கணக்கில் எழுதப்பட வேண்டியதுமான பாலஸ்தீனம்தான். பால்போர் பிரகடனத்தை ஸ்டார்டராக வைத்து தங்களது விருந்தை உண்ணத் தொடங்கிய யூதர்களுக்கு பிரிட்டன் பெற்ற வெற்றி, முழு விருந்தையே படைத்தது.

ஜெருசலத்தை அல்லன்பே என்ற தளபதியின் கீழ் தனது ஆளுமைக்குள் கொண்டு வந்த பிரிட்டன், சீர்திருத்தங்கள் என்ற பெயரில் மண்ணின் மைந்தர்களான முஸ்லிம்களுக்கு பல இன்னல்களை இழைக்கத் தொடங்கியது.

உலக சரித்திரத்தில், ஹஜரத் உமர் (ரலி) அவர்களுடைய காலத்தில் தொடங்கி பின்னர் சகிப்புத்தன்மை மற்றும் இரக்ககுணம் கொண்ட அன்பின் சுல்தான் சலாஹுதீன் அய்யூபி (ரஹ்) அவர்களின் காலத்தில் தொடர்ந்து அதன்பின் உஸ்மானிய துருக்கிய சாம்ராஜ்யத்தில் பல்வேறு அரசர்கள் மாறி மாறி வந்தாலும் மனிதாபிமானமும் மத சகிப்புத்தன்மையும் அன்பும் அரவணைப்பும்தான் ஜெருசலத்தில் வாழ்ந்த அனைத்து மக்களுக்கும் அன்போடு வழங்கப்பட்டது. யூதர்களின் நயவஞ்சகங்கள் வெளிப்படுத்தப்படும்போது கூட மன்னிப்பே அவர்களுக்கு மருந்தாக வழங்கப்பட்டது. புனித மண்ணை ஆண்ட முஸ்லிம் மன்னர்களும் இனியவர்களாக இஸ்லாத்தின் கொள்கைகளைக் கடைப்பிடித்து அனைவரையும் அரவணைத்துச் சென்றதே அதற்குக் காரணம்.

இறுதித் தூதரையே ஒரு யூதன் பகிரங்கமாக பொய்யாக்கி தண்ணி ஒரு தூதர் என்று வாணவேடிக்கை நடத்தியபோது கூட அவனுக்கு வேண்டியதை அவனே தேர்ந்தெடுத்துக் கொள்ளும் வாய்ப்பே தீர்ப்பாகத் தரப்பட்டது. அவன் இஸ்லாத்தைத் தேர்ந்தெடுத்துத் தழுவினான்.

நாட்டை விட்டு வெளியேற நினைத்தவர்களுக்கு பாதுகாப்புடன் வெளியேற வசதி செய்து தரப்பட்டது.

இன்னொரு நாட்டில் அல்லல் பட்ட யூதர்களை காப்பாற்றிக் கொண்டுவர கப்பல் கூட அனுப்பி வைக்கப்பட்டது.

பெருமானார் (ஸல்) அவர்களின் கல்லறையை உடைத்து எலும்பைக் கொண்டு வந்து தோரணம் கட்டுவேன் என்று கூறிய கொடியவன் ஒருவனுக்கு அரசவையில் வைத்து அவனது தலையை சீவிய சம்பவம் தவிர முஸ்லிம்கள் ஆண்ட பாலஸ்தீனத்தில் யூதர்கள் மீதோ , கிருத்துவர்கள் மீதோ பெரிய அளவில் அடக்குமுறைகளோ அட்டூழியங்களோ நடத்தப்படவில்லை. அத்துமீறல்கள் நிகழ்ந்தபோதும் கூட படுகொலைகளோ பாரதூரமான செயல்களோ மேற்கொள்ளப்படாமல் அன்பால் திருத்தும் ஆட்சிகளே நடந்தன என்பவைதான் வரலாறு தரும் சான்றுகள்.

ஆனால், பாலஸ்தீனத்தை பிரிட்டன் கைப்பற்றியதும், ‘ இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ என்பதுபோலவும் காய்ந்த மாடு கம்பில் விழுந்ததைப் போலவும் , பிரிட்டனும் யூதர்களும் பாலஸ்தீனத்தையும் முஸ்லிம்களையும் மேய ஆரம்பித்தார்கள்.

இந்த நிலையில் 1919 – ஆம் ஆண்டு, வெர்சயில்ஸ் உடன்படிக்கையின்படி League of Nations என்ற ஒரு சர்வதேச கட்டப்பஞ்சாயத்து அமைப்பு நிறுவப்பட்டது. இந்த அமைப்பு ஒருதலைப் பட்சமாக, பாலஸ்தீனத்தின் ஆட்சி, அதிகாரம் அனைத்தும் பிரிட்டனைச் சார்ந்தது என்று உலகுக்கு அறிவித்தது. அத்துடன் பாலஸ்தீனத்துக்காக ஒரு தூதரை – ஹெர்பர்ட் சாமுவேல் என்ற ஒருவரையும் அனுப்பி வைத்தது. இவர் வேறு யாருமல்ல பால்போர் பிரகடத்தை வடிவமைத்தவரே இவர்தான் என்று குறிப்பிடப்படுகிறது. இப்படி, பாலஸ்தீனத்தை சுற்றி ஒரு சதிவலையை நன்றாகப் பின்னத் தொடங்கின ஏகாதிபத்தியங்கள்.

இவ்வாறு இஸ்ரேல் என்ற தனிநாட்டை அமைக்குமுன்பு பாலஸ் தீனத்தைப் பங்கு போட அவர்கள் தீர்மானித்த நேரத்தில் பாலஸ்தீனத்தில் இருந்த யூதர்கள் வெறும் பனிரெண்டு சதவீதத்தினர்தான். மற்றவர்கள் முஸ்லிம்கள். பெரும்பான்மையாக மட்டுமல்ல பாரம்பரியமாக அந்த மண்ணிலேயே வாழும் முஸ்லிம்களை ஒரு அவிழ்த்துவிடப்பட்ட நெல்லிக்காய் மூட்டை போல் சிதறி ஓடிய சிறுபான்மை இனம் ஆள வழிவகுத்தன அன்றைய வல்லரசுகள். ஆனால் வல்லோன் வகுத்தவழி என்று ஒன்று இருக்கிறது. அதை இந்தத் தொடரின் நிறைவில் நாம் குறிப்பிடுவோம். இன்ஷா அல்லாஹ்.

இப்படி ஒரு பக்கம் யூதர்களுக்கு இனிப்பான ஐஸ் கிரீம் தரப்பட்டுக் கொண்டு இருந்தாலும் உலகில் பல பாகங்களில் யூதர்களின் கண்களில் மிளகாய்ப் பொடி தூவப்படுவது நின்றபாடில்லை.

காரணம், முதலைக் கண்ணீரின் மொத்த வியாபாரிகள்; அடுத்துக் கெடுத்தலின் அதிபர்கள்; துரோகத்தின் துணைவர்கள்; உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவதில் உலக முகவர்கள்; தோல் இருக்க சுளை முழுங்கிகள்; யூதர்கள் என்பதை யார் உணர்ந்தார்களோ இல்லையோ ஜெர்மனியின் எழுச்சியாக அன்று உருவாகி இருந்த அல்டாப் ஹிட்லர் உணர்ந்தார்.

யூத மீன்களைப் பிடித்து சுட்டுத்தின்பதற்கு ஹிட்லர்தான் முதன்முதலில் குளக் குத்தகை எடுத்திருந்தார் என்று எண்ணுவது சரியான கருத்தல்ல. காரணம், யூதர்கள் இவ்விதம் மொத்த சரக்காக கண்டெயினர் கணக்கில் காலம்காலமாகக் கொல்லப்படுவது உலக சரித்திரத்தின் பக்கங்களைப் புரட்டிப் படிப்பவர்களுக்கு முதல் முறையாகத் தோன்றாது.

ஏற்கனவே யூதர்கள் செய்த துரோகங்களுக்காக இறைவன் இவர்களுக்கு விடுத்த எச்சரிக்கைகள் பைபிளிலும் திருமறை குர் ஆனிலும் நிரம்ப இருக்கின்றன. சிலவற்றை முன்னரே குறிப்பிட்டு இருக்கிறோம். வரலாற்றின் நீண்ட நெடிய பக்கங்களில் இறைவனின் எச்சரிக்கை அவ்வப்போது யூதர்களுக்குப் பலநாடுகளும் வழங்கிய மரணப்பரிசுகளின் மூலம் விளங்கும்.

ஆகவே, யூதர்களை ஒட்டுமொத்தமாக ஒழித்துக் கட்டுவது என்பது ஹிட்லர் தொடங்கி வைத்தது அல்ல; அவர் தொடர்ந்ததுதான் வந்தார். ஆனால் செய்வதை தீவிரமாகவும் வித்தியாசமாகவும் செய்தார். ஆனால் அதற்கு முன்பே நவீன காலத்தில் ரஷ்யாவில் யூதர்களைக் கண்ட இடங்களில் வெட்டிக் கொன்று பிணங்களை சாலைகளில் அனாதைகளாகப் போட்ட நிகழ்வுகளை கடந்த அத்தியாயங்களில் படித்தோம்; அதற்கும் முன்பாக சிலுவைப் போர்வீரர்கள் லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் முப்பதாயிரம் யூதர்களை குடும்பத்துடன் கொன்ற செய்திகளையும் நாம் படித்தோம்; அதே கால கட்டத்தில், ஸ்பெயினிலிருந்து வெளியேற்றப்பட்ட யூதர்கள் பல ஆயிரம் பேர்களாக கப்பலில் ஏற்றப்பட்டு நடுக்கடலில் உயிருடன் கொட்டப்பட்டார்கள் என்பதையும் (அத்தியாயம் 13–ல்) படித்தோம். இன்றைக்கு யூதர்களுக்கு ஆலவட்டம் சுற்றி ஆரத்தி எடுக்கும் அனைத்து ஐரோப்பிய நாடுகளும் ஒரு காலத்தில் யூதர்களை ஓட ஓட விரட்டியவர்கள் மட்டுமல்ல விரட்டி விரட்டி கொன்றவர்கள்தான் என்பதுதான் வரலாற்று உண்மை.

இவை மட்டுமா? இவைகளுக்கு முன்பே, இஸ்லாம் வளரத் தொடங்கிய காலத்திலும் இடையூறு இல்லாமல் ஏகத்துவம் என்ற இறைவனின் தத்துவம் உலக மக்களுக்கு எடுத்துரைக்கப்பட வேண்டுமென்றால் துரோகத்திலேயே பிறந்து வளர்ந்து தழைத்த யூதப் புதர்களை ஒழித்துக்கட்ட வேண்டுமென்ற கட்டாயம், இறைவனின் அருள் தூதர் பெருமானார் ( ஸல் ) அவர்கள் மீது கூட கடமையானது.
இஸ்லாமிய வரலாற்றுப் பக்கங்களில் பனூ குறைளாப் போர் என்பது ஒரு முக்கிய மைல் கல்லாகும். ஹிஜ்ரி 5- ஆம் ஆண்டு , அகழ்ப் போரில் சிந்திய இரத்தக் கரைகள் காயும் முன்பு அவசரமாக நடத்தப் பட்டது அந்தப் போர். அகழ்ப் போர் ஏற்படக் காரணமே யூதர்கள் செய்த சதிதான். மதீனத்து யூதர்கள், குறைஷிகளையும் மதீனத்தின் கத்பான் கிளையினரையும் தேடிப்போய், பெருமானார் (ஸல்) அவர்களின் அழைப்புப் பணிக்கு எதிராக ஆயுதங்களும் இன்னபிற உதவிகளும் தருவதாகக் கூறி தூண்டிவிட்டனர். இதன் காரணமாகவே, புதிதாக ஒரு போரை அரங்கேற்றும் தைரியம் குறைஷிகளுக்கு ஏற்பட்டு படை திரட்டி மதினா நோக்கி வந்தனர். யூதர்களின் இந்தக் குற்றத்துக்காக, அவர்களின் தலையில் தட்டிவைப்பதற்காக நடத்தப்பட்டதே பனூ குறைளாப் போர். ஆனால் தலைகள் தட்டி மட்டும் வைக்கப்படவில்லை வெட்டியும் அடுக்கப்பட்டது.

பனூகுரைளாப் போர், வல்ல இறைவனின் தூதருக்கு முன் பொல்லா யூதர்கள் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு மண்டி இட்டதாகவே முடிவுற்றது. அது மட்டுமல்ல கைது செய்யப்பட்ட யூதர்களை மதினாவின் கடைத்தெருவில் ஒரு பெரும் அகழி வெட்டப்பட்டு , அந்த அகழியில் வைத்து ஒவ்வொரு ஆண் யூதர்களின் தலையும் வெட்டப்பட்டது. இவ்விதம் வெட்டப்பட்டவர்கள் ஏறக்குறைய 700 யூதர்கள் என்றும் யூதப் பெண்களும் குழந்தைகளும் விடுவிக்கப்பட்டனர் என்றும் இஸ்லாமியப் பேரறிஞர் ஸபியூர் ரஹ்மான் முபாரக்பூரி ( ரஹ்) அவர்கள் எழுதிய அர்ரஹீக் அல்மக்தூம் என்ற பெருமானார் (ஸல்) அவர்களின் வரலாற்று நூல் குறிப்பிடுகிறது. (பக்கம் 386).

அடுத்து, ஹிஜ்ரி 7 ஆம் ஆண்டு , கைபர் போர் என்பதும் பெருமானார் ( ஸல்) அவர்கள் யூதர்களுடன் நேரடியாக முன்னின்று நடத்திய போர்தான். இந்தப் போரிலும் யூதர்கள் பெற்றது தோல்விதான். தங்களுடைய எட்டு கோட்டைகளையும் அனைத்து செல்வங்களையும் இழந்ததும், தங்களுடைய நிலங்களின் பாதி விளைச்சலை பெருமானார் ( ஸல்) அவர்களுடைய பொது நிதிக்குத் தர சம்மதித்து ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டதும் ஏறக்குறைய நூறு யூதர்கள் இந்தப் போரில் கொல்லப்பட்டதும் இந்தப் போரின் விளைவுகள்.

ஆகவே மூக்குடைபடுவதும் முதுகெலும்பு உடைக்கப்படுவதும் முச்சந்திகளில் வைத்து முனகக் கூட விடாமல் மூன்றாக முறித்துப் போடப்படுவதும் யூதர்களின் வரலாற்றில் புதிதல்ல. தூசியைத் தட்டி விடுவதுபோல் இத்தகைய தண்டனைகளைத் தட்டி விட்டு விட்டு ‘இன்னும் கெட்டுப் போகிறேன் என்ன பந்தயம் கட்டுகிறாய்?’ என்று கேட்பதுதான் யூதர்களின் இயல்பு என்பதை உலகம் அன்று தொட்டு இன்றுவரை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது.

அந்த வகையில் உயிர்ப் பலி கொடுப்பது என்பது யூதர்களுக்கு உடுப்பி ஓட்டலில் மசாலா தோசை சாப்பிடுவது போலத்தான். வரலாற்றின் வழி நெடுக இஸ்ரேல் உருவாகும்வரை பொய்நெல்லைக் குத்திப் பொங்க நினைத்தவன் கை நெல்லும் விட்டானடி ! பள்ளத்தில் வீழ்ந்து எழுந்தவன் பள்ளத்தை தேடி நடந்தானடி! என்பவைதான் நாம் காணும் காட்சிகள்.

உலகத்தையே உலுக்கிய ஹிட்லர் அரங்கேற்றிய யூதர்களுக்கெதிரான படுகொலைகள் இரண்டாம் உலகப் போர் ஆரம்பிக்கும் முன்பே ஆரம்பித்துவிட்டது. இந்தப் படுகொலைகள் பாலஸ்தீனம் என்கிற பூந்தோட்டத்தை இஸ்ரேல் என்கிற வந்தேறிகளுக்கு உலக வல்லரசுகள் தாரை வார்க்கவும் யூதர்களின் மேல் ஒருவித அனுதாபத்தையும் பெற்றுத்தர, வலுவான காரணமாக ஆகிவிட்டது.

ஹிட்லரின் இந்த யூத அழித்தொழிப்பு அஜெண்டா 1933 ஆம் ஆண்டே ஹிட்லரின் நாஜிகளால் தொடங்கப்பட்டது. முதலாம் உலகப் போரில் ஜெர்மனியின் படையில் உயர்ந்த பதவிகளில் பணியாற்றிக் கொண்டே ஜெர்மனிக்கு எதிராக போர் நடத்திய பிரிட்டனுக்காக ‘உள்ளடி உளவு வேலை’ பார்த்து ஒவ்வொரு நடவடிக்கைகளையும் போட்டுக் கொடுத்த அந்த ஒரு காரணமே யூதர்களைத் தேடித்தேடி அழிப்பதற்கு ஹிட்லரின் நாஜிகளுக்குப் போதுமானதாக இருந்தது.

இருந்தாலும் தாங்கள் ஆரியர்கள் என்கிற இனச்செருக்கும் ஜெர்மானியர்களுக்கு யூதர்களின் மீதான வெறுப்புச் செடிக்கு உரம் போட்டது. தங்களுடைய ஆரிய இனம்தான் உலகில் உள்ள இனங்களிலேயே உயர்ந்தது என்று கருதிய நாஜிக்கள், பிற இனங்களை, குறிப்பாக தங்களை உயர்ந்த இனமாகத் தண்டோராப் போட்டு தம்பட்டம் அடித்துக் கொண்டிருந்த யூத இனத்தைக் கடுமையாக வெறுத்தனர். ஜெர்மனே யூதர்களால் அசுத்தப்பட்டிருக்கிறது என்று நாஜிக்கள் நம்பினார்கள். இந்த வெறுப்பின் உச்சம்தான் இன அழிப்பு.

ஆரியர்கள் உலகில் உயர்ந்தவர்கள் என்பது நாம் வாழும் நாட்டில் மட்டுமல்ல உலகத்தின் ஒவ்வொரு மூலையிலும் நிலவி வந்திருக்கிறது என்பதை நாம் சொந்தக் கதையாகவும் சோகக் கதையாகவும் இங்கு குறிப்பிட வேண்டி இருக்கிறது.

ஏப்ரல் 1, 1933-ல்தான் யூதர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் அதிகாரபூர்வமாக ரிப்பன் வெட்டித் தொடங்கப்பட்டன. யூதர்களின் ஜெர்மானியக் குடியுரிமை முற்றிலுமாகப் பறிக்கப்பட்டது. தொடர்ந்து யூதர்கள் மீது நாஜிக்களாலும் ஜெர்மானியப் பொதுமக்களாலும் யூதர்கள் அகப்பட்ட இடங்களிலெல்லாம் அத்துமீறல்கள் நிகழ்த்தப்பட்டன.

தொடர்ந்து , 1938-ல் நவம்பர் மாதத்தில் ஆஸ்திரியாவிலும், நாஜிக்கள் கிளை அலுவலகம் திறந்து யூதர்கள் மீதான ‘இன அழிப்’பை அங்கும் தொடங்கினார்கள். யூதர்களின் வியாபார நிறுவனங்கள், வீடுகள், சொத்துக்கள், வழிபாட்டுத் தலங்கள் எல்லாமே சூறையாடப்பட்டன; தீயிடப்பட்டன. யூதர்கள் கொடூரமாகத் தாக்கப்பட்டனர்.

இத்தகைய வன்முறைகளின் அரிச்சுவடியில் யூத இன அழித்தொழிப்பை (Holocaust ) ஹிட்லரின் நாஜிப்படைகள் வரைமுறை இன்றி ஆரம்பித்தன. அழித்தொழிப்பு மட்டும் ஆரம்பமாகவில்லை 1939 – ஆம் ஆண்டு இரண்டாம் உலகப் போரும் ஆரம்பமானது.

அவைகளை விவரிக்க தனியாக ஒரு அத்தியாயம் வேண்டும் . தருவீர்களா?

இன்ஷா அல்லாஹ்.

இபுராஹிம் அன்சாரி

வரலாறுகள்! வழக்குகள்! வல்லரசுகள்! வடிக்கப்படும் இரத்தம்!

பாலஸ்தீனம்...

28

அதிரைநிருபர் பதிப்பகம் | December 20, 2014 | , , ,

தொடர் : பகுதி  இருபத்தி ஒன்று

முதல் உலகப்போர் என்று வரலாறு சித்தரிக்கும்  போர், வெளிப்படையாகப் பார்க்கப் போனால், ஐரோப்பிய நாடுகளுக்கிடையே நடைபெற்ற போர்தான். விதிவிலக்காக, ஜப்பானும் அமெரிக்காவும் இந்தப் போரில் ஊறுகாய் அளவுக்கே கலந்து கொண்டன. இந்தப் போருக்குப் பிறகு நடந்த இரண்டாம் உலகப் போர்தான் உண்மையிலேயே உலகப் போர். இரண்டாம் உலகப் போர் பற்றி பிறகு பார்க்கலாம். இப்போது , முதல் உலகப் போர்க்கள சந்தையில் இந்தத் தொடரோடு தொடர்புடைய யூதர்களும் துருக்கியர்களும் விரித்து வைத்த கடைகளின் பக்கம்  ஒரு சுற்று சுற்றி வரலாம்.  

முதல் உலகப் போர் சந்தையில் பல நாடுகள் கடை விரித்து வைத்திருக்கின்றன. ஆனால் நமது தலைப்பின் பேசுபொருளை மையப்படுத்தும் சரக்குகளை மட்டுமே நாம் வாங்கி வரலாம்.

முதல் உலகப்போர், 1914 ஆம் ஆண்டு முதல்  1918 வரை நான்கு ஆண்டுகள் நடந்தது.

இந்தப் போர் பிரிட்டனின் தலைமையில் நேசநாடுகள் என்ற அணிப்பெயருடன்  பிரான்ஸ், ரஷ்யா, அமெரிக்கா, பெல்ஜியம் , செர்பியா, ஜப்பான்   ஆகிய நாடுகள் ஓரணியிலும்

அச்சுநாடுகள் அல்லது மைய நாடுகள் என்ற அணிப்பெயருடன் ஜெர்மனியின் தலைமையில் ஆஸ்திரியா, ஹங்கேரி, இத்தாலி துருக்கி, பல்கேரியா ஆகிய நாடுகள் மற்றோர் அணியிலும் களம் கண்டன.

உலக சரித்திரத்தில் , இந்தப் போரில்தான்   புதிய தொழில்  நுட்பங்கள் கொண்டு வந்து கொட்டிய இயந்திரத் துப்பாக்கிகள், கனரக பீரங்கிகள், வான்வழிப் போர் முறை, நீர் மூழ்கிப் போர் முறை போன்ற பல புதிய போர் முறைகள் முதன்முறையாக ஈடுபடுத்தப்பட்டன. போரின் முடிவு பிரிட்டனின் அணிக்கே சாதகமாக முடிந்தது.

இந்தப் போரில் யூதர்களின் பங்களிப்பு என்பது ஒரு வினோதமான பங்களிப்பாக இருக்கும். இரு தரப்பிலும் போரிட்ட அனைத்து நாட்டு போர்வீரர்களின் பட்டியல்களிலும் யூதர்கள் இருந்தார்கள். யூதர்களோடு யூதர்கள் போரிட்டார்கள். அனேகமாக உலக வரலாற்றில் ஒற்றுமைக்குப் பெயர் போன யூதர்களைப் பொறுத்த வரை இது ஒரு வினோதமான வெளிப்பாடு. . ஆனாலும் எந்த அணி  வெல்கிறதோ அந்த அணியின் ஒத்துழைப்புடன் யூதர்களுக்கான நாட்டை உருவாக்கிட இப்படி சொந்த சகோதரர்களுக்குள் வெட்டிக் கொள்ளவும் சுட்டுக் கொள்ளவும் கூட அவர்கள் தயாரானார்கள். எனவே எல்லா அணிகளிலும் யூதர்கள் இருந்தார்கள்.  

போரின் விளைவுகள் என்று பார்த்தால்,   பல ஆண்டுகாலம் கோலோச்சிய ஆஸ்திரிய ஹங்கேரிப் பேரரசு  , ரஷ்யப்பேரரசு ஆகிய பல  பல பேரரசுகள் வீழ்ச்சியடைந்து  விழுந்து நொறுங்கி சிதறி  துண்டு துண்டுகளாயின என்பது இந்தத் தொடருக்கு இரண்டாம்பட்சமாகத் தேவைப்பட்ட செய்தி. ஆனால் உஸ்மானிய துருக்கியப் பேரரசும் நொறுங்கித் துண்டுகளாயின என்பது பாலஸ்தீனத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதுதான்  நாம் கவனிக்க வேண்டிய  முக்கியச் செய்தி.

துருக்கியப் பேரரசு வலுவிழந்தது என்பதுடன் இந்த வலுவிழப்புக்குக் காரணமாக, எப்போதும் பிரிட்டனுடன் சேர்ந்து கொண்டு வெல்லும் அணியில் இருந்த துருக்கி, இம்முறை தோற்கும் அணியில் சேருவதென்று பிரிட்டனுக்கு எதிராக எடுத்த முடிவு, - துருக்கியின் அந்தத்  தவறான காய் நகர்த்தல் - யூதர்கள்  இத்தனை ஆண்டுகள் ஆடிவந்த சதுரங்க ஆட்டத்தில் அவர்கள் வெல்வதற்குத்  துணையானது. பாலஸ்தீனத்தை பொறுத்தவரை துருக்கியின் இந்தத் துயர முடிவும் தோல்வியும் மத்திய கிழக்கு நாடுகளின் அரசியல் நிலைகளையே மாற்றிவிட அஸ்திவாரம்  இட்டது.

இத்தனை வருடங்கள் தன்னுடன் நட்புநாடாக இருந்த  இருந்த துருக்கி , தனது எதிரி நாடுகளுடன் சேர்ந்து கொண்டு தன்னை எதிர்த்ததற்கு பாடம் படித்துக் கொடுக்க வேண்டுமென்பது , பிரிட்டனைப் பொறுத்தவரை ஒரு ஆணவக் காரணமாக இருந்தாலும் அதுவே வரலாறுகள் குறிப்பிடும் ஆவணக் காரணம்.  

அதுமட்டுமல்லாமல் ஐரோப்பாவில் இருந்த அனைத்து நாடுகளும் கிருத்துவ நாடுகள் ஆனால் துருக்கி மட்டும் இஸ்லாமிய நாடு . மேலும் துருக்கியின் ஆளுமையின் கீழ் அராபிய தீபகற்பத்தின் பல நாடுகள் இணைந்திருந்தன.  தன்னுடைய அரசின் எல்லைகளையும் ஆதிக்கத்தையும்  அரபு நாடுகள் மீதும் செலுத்த வேண்டுமென்ற பிரிட்டனின் ஆசை,  துருக்கியை அதன் தலையில் குட்டி வைக்க வேண்டுமென்று நினைத்தது.  

இருந்தபோதும்,  பிரிட்டனின் இந்தக்  கரணத்துக்குக்  இன்னொரு காரணமும் எல்லா வரலாற்றாசிரியர்களாலும் குறிப்பிடப்படுகிறது. அந்தக் காரணம், ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக் கோனே! காசு காரியத்தில் கண் வையடா தாண்டவக் கோனே! என்ற பணக்காரணம்தான். ஆம்! யூதர்களின் பணப்பெட்டிகள் பிரிட்டனுக்காக பலமுறை திறக்கப்பட்டது. போருக்குத் தேவையான தளவாடங்கள், ஆயுதங்கள் மற்றும் உணவுப் பொருட்களை ,  பிரிட்டன் உலகச் சந்தைகளில் வரவழைத்துக் கொண்டு அவற்றின் பில்லை  யூதர்களுக்கு அனுப்பிவிடும் – பணத்தை யூத நிறுவனங்கள் நல்ல பிள்ளையாக செலுத்திவிடும். எனவே பணத்தொல்லை இல்லை. தனக்கொரு நாடு - அதற்கொரு எல்லை வேண்டுமென்ற யூதர்களின் எல்லையற்ற ஆவல் பிரிட்டனின் எல்லையற்ற பணத்தேவைகளுக்குத் தீனி போட்டது.   

போர் நடைபெற்று வரும்போது வெற்றிக் காற்று பிரிட்டனின் பக்கம்தான் அடிக்கிறது  என்பதை யூகித்தறிந்த  யூதர்கள், ஜெர்மனியின் படையில் பணியாற்றிக் கொண்டே,  பிரிட்டனுக்கு வெற்றியை விரைவாக்க வேண்டுமென்று ஜெர்மனியின் போர் நடவடிக்கைகள், யுக்திகள், ஜெர்மானியப் படை போக எத்தனிக்கும் பாதைகள், போர்த்தந்திரங்கள் ஆகியவற்றை ராஜபாளையம் நாயாக மோப்பம் பிடித்து அந்தத் தகவல்களை இரகசியமாக பிரிட்டனுக்கு அனுப்பிக் கொண்டே இருந்தார்கள்.  பிரிட்டனின் வெற்றிக்கு , ஜெர்மனிக்கு எதிராக யூதர்கள் செய்த இந்த            “கில்லாடி -  உள்ளடி” நயவஞ்சகம் பேருதவியாக இருந்தது என்பதை மறுக்க இயலாது.  

காற்றடிக்கும் திசை பக்கம் சாய ஆரம்பித்த  யூதர்களின் பாய்மரப்படகுத் தன்மை உலகுக்கு ஒன்றும் புதிதல்ல. இத்தகைய துரோகம் யூதர்களின் இரத்த அணுக்களில் கலந்துள்ளது. ஆனால் அதே இரத்த அணுக்களில் அவர்களுடன் கூடவே குடி   இருந்தது இனப்பற்று மற்றும் யூதர்களுக்கென்று தனி நாடு - எவ்வாறாயினும்- என்ன விலை  கொடுத்தேனும் என்பதுதான்.

இதில் மானம் , அவமானம், நம்பிக்கை, நம்பிக்கை துரோகம் , கை கொடுத்து உதவுதல், கைகாட்டிவிட்டுப் பிரிதல், காலைப் பிடித்தல், பிடித்த காலையே வாரிவிடுதல், மூக்கை உடைத்தல் , முகஸ்துதி செய்தல், முட்டுக்கால் போடுதல், கண்ணைக் கசக்குதல், காது பிடித்துத் தோப்புக் கரணம் போடுதல், கன்னத்தில் போட்டுக் கொள்ளுதல், இப்படிக் காட்டிக் கொடுத்தல் முதல் அதன்   மோனைகளையும் கடைப்பிடித்தேனும்,  தனிநாடு அமைக்க  தாங்கள் போட்டிருந்த உள்ளாடைகளைக் கூட கழற்றிக் கொடுக்க யூதர்கள் தயாராக இருந்தார்கள். இப்படிப் பட்ட குணம் உள்ளவர்களிடம் போர் தர்மங்களை எப்படி எதிர்பார்க்க முடியும்?

முதல் உலகப்போர் 1914 ஆம் ஆண்டு முதல்  1918 வரை நடைபெற்றது என்று மேலே குறிப்பிட்டோம். 1917- ஆம் ஆண்டு பிரிட்டன் துருக்கியையும் அதன் ஆளுமைக்குட்பட்ட பகுதிகளையும் தாக்கியது. அதன்படி இன்றைய பாலஸ்தீனின் பல பகுதிகளும் ‘ராஜா மகள் - ரோஜாமலர்’ – அனைவரும் அணிந்து  கொள்ள விரும்பும் அலங்காரப் பதக்கம், எனது உடலில் ஒரு துண்டு தசை என்று துருக்கிய சுல்தானால் நேசிக்கப்பட்டாதாக நம்மால் வாசிக்கப்பட்ட ‘ஜெருசலம்’ துருக்கியிடமிருந்து பிரிட்டனால் கதறக் கதறக் கைப்பற்றப்பட்டது.

அத்துடன் Balfour Declaration என்று வரலாறு வர்ணிக்கும் பால்போர் பிரகடனம்  என்பது பத்திரிகைகளில்  வெளிவந்தன. இந்த பால்போர் பிரகடனம்  என்பது  117 ஆங்கில வார்த்தைகளைக் கொண்டதுதான் . ஆனால் அவை  உலக சரித்திரத்தின் போக்கையே மாற்றிவிட்டது.   பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேலிய நாடுகளின் சரித்திரத்தில் இந்தப் பிரகடனம்  ஒரு மைல் கல். இதை பிரகடனம்  என்று வரலாறு  வர்ணித்தாலும் உண்மையில் இது ஒரு கடிதம்தான். ஆனால் ஒரு பிரகடனத்தின் அந்தஸ்தைப் பற்றிப் பிடித்துக் கொண்ட கடிதம்.

இதைப் பற்றிக் குறிப்பிடும் உலக வரலாறு இப்படிச் சொல்கிறது.

“The Balfour Declaration (dated 2 November 1917) was a letter from the United Kingdom's Foreign Secretary Arthur James Balfour to Baron Rothschild, a leader of the British Jewish community, for transmission to the  Zionist Federation of Great Britain and Ireland.”

பிரிட்டனின் வெளியுறவுச் செயலாளர் ஆர்தர் ஜேம்ஸ் பால்போர் என்பவர் பிரிட்டனில் இருந்த யூத சமுதாயத்தின் தலைவரான பாரோன் ரோத்சில்ட்என்பவருக்கு அனுப்பி யூதர்களின் தனிநாடு அமைப்பதற்கான சியோன் அமைப்புக்கு தரச் செய்ததே பால்போர் பிரகடனம்  என்று குறிப்பிடப்படுகிறது.

பால்போர் பிரகடனம்  என்பது நாம் சொல்வதற்கும் எழுதுவதற்கும் இலகுவானதாகத் தோன்றலாம். ஆனால் அந்த அறிக்கையின்  வாசகங்கள் இரண்டு செய்திகளை உலகுக்குச் சொன்னது. இந்தப் பிரகடனம் வெளியான சமயத்தில் உலகின் ஆளும் தலைமகன் பிரிட்டன்தான் ; உலகின் குடும்பத்தலைவன் பிரிட்டன்தான் என்பதை நமது நினைவில் நிறுத்திக் கொள்ளவேண்டும். இன்று வேண்டுமானால் அமெரிக்கா அந்தத் தலைமகன்  பாத்திரத்தை ஏற்று உலகின் அமைதிப் பாத்திரத்தை இரவு நேரத்து எலிகள் போல உருட்டலாம்; புரட்டலாம். ஆனால் முதல் உலகப்போர் காலத்தில்  உலகத்துக்கு எல்லாமே பிரிட்டன்தான்; பிரிட்டன் சொல்வதே வேதவாக்கு என கருதப்பட்டது. அதே வகையில்தான் பால்போர்  பிரகடனமும் பிரிட்டனால் சொல்லப்பட்ட வேதவாக்கு. இதுவே பிரிட்டன் முன் மொழிந்த வேதவாக்கு. இஸ்ரேல் என்ற நாடு பின்னாளில் அமைய இருப்பதற்கு அச்சாரம் போட்டவை இந்த வார்த்தைகள்தான்.

“ His Majesty's government view with favour the establishment in Palestine of a national home for the Jewish people, and will use their best endeavours to facilitate the achievement of this object, it being clearly understood that nothing shall be done which may prejudice the civil and religious rights of existing non-Jewish communities in Palestine, or the rights and political status enjoyed by Jews in any other country.”  

இந்த பால்போர் பிரகடனம் உலகுக்குச் சொன்னவை நீதியை நிற்க வைத்து சுட்டுக் கொன்ற வார்த்தைகள்தான்.  பாலஸ்தீனத்தை பல நூற்றாண்டுகளாக தங்களுடைய தாயகமாகவும் எந்த நிலைமை ஏற்பட்டாலும் அந்த நாட்டைவிட்டு நீங்கி, விலகி, விட்டு, ஓடாதது மட்டுமல்ல அனைவரையும் அரவணைத்து அரசாட்சியும் நடத்திய  முஸ்லிம்களை இரண்டாம்தரக் குடிகளாக ஆக்குவதும் ஏதோ  ஒருகாலத்தில் அங்கு வாழ்ந்தாலும் உலகம் முழுதுக்கும் ஓடி ஒளிந்த யூதர்களை முதல் தரமாக்குவதும்தான் இந்தப் பிரகடனத்தின் நோக்கம்.

இந்தப் பிரகடனம் இரண்டு விஷயங்களை உலகுக்குச் சொன்னது.
ஒன்று பாலஸ்தீனம் , யூதர்களின் தனி நாடாக ஆகும் என்பது . இரண்டு பாலஸ்தீனத்தில் வாழும் யூதரல்லாத மற்ற இனத்தவர்களின் சிவில் மற்றும் மத வழிபாட்டு உரிமைகள் தொடர்ந்து கடைப் பிடிக்கப்படும் என்பதுதான்.

ஆனால், இந்தப் பிரகடனம் சொல்லாமல் சொன்னது.

யூதர்கள் அல்லாத மற்றவர்களுடைய அரசியல் உரிமைகள் பறிக்கப்படும் என்பதுதான். அதாவது யூதர்கள் அல்லாத மற்றவர்கள் ஆள இயலாது; ஆட்சியில் பங்கு பெற இயலாது; தேர்தல்களில் போட்டியிட இயலாது  என்பன போன்ற  சாக்கடையில் தோய்த்தெடுத்து அந்தந்த சமுதாயங்கள் மீது ஏவப்பட்ட  சவுக்கடிகள்தான்.

பிரிட்டனால் ஏவப்பட்ட சவுக்கடிகளுக்குப் பின், பாலஸ்தீனப் பாலைக் குடிக்க, பூனையுடன் எலியும்   கூட்டு சேர்ந்தது. ஆம்!   இன்னொரு வல்லரசான  பிரான்சுடன்  இணைந்து Anglo- French Declaration என்ற இன்னொரு இடியும் இறக்கப்பட்டது. இந்த ஆங்கிலோ- பிரெஞ்ச் பிரகடனம் சொன்னது:-

"the complete and final liberation of the peoples who have for so long been oppressed by the Turks, and the setting up of national governments and administrations deriving their authority from the free exercise of the initiative and choice of the indigenous populations.

ஆகவே, இஸ்ரேல் என்ற ஒரு நாடு எந்த அடிப்படையில் அமைக்கப்படும் என்பதற்கான  வெள்ளோட்டம்தான் இந்தப் பிரகடனங்கள் . இதே பிரகடனங்களின்   அடிப்படையில்தான் இரண்டாம் உலகப் போருக்குப் பின் இஸ்ரேல் என்ற நாடு,  ஏகாதிபத்திய வல்லரசுகளின் இரவு நேரக் கூடலின் காரணமாக பிரசவிக்கப்பட்டு பெயர் சூட்டப்பட்டது.  

இரண்டாம் உலகப் போரையும் அதனால் ஏற்பட்ட விளைவுகளையும் அந்தப் போர் ஈன்றெடுத்த இஸ்ரேலின் அமைப்பையும் இன்ஷா அல்லாஹ் தொடர்ந்து காணலாம்.
தொடரும்....
இபுராஹிம் அன்சாரி


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு