அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
ஆம்புலன்ஸ் அமைதியாக ஒரு இடத்தில் ஒதுங்கி இருக்க நிழலோடு இருக்கும் கூரை போட ஒரு சாரார், ஆனால் மற்றொரு சாரார் ஆம்புலன்ஸ் ஒதுங்கி நிற்க கூடாது அதுவும் ஓரிடத்தில் நிற்கவே கூடாது மற்றொரு சாரார்....
ஒத்து'மைங்'கிறாங்க, ஒற்று'மைங்'கிறாங்க !இரண்டிலுமே 'மை' இருக்கத்தான் செய்கிறது, ஏன் இந்த வேற்று'மை'ன்னு கேட்கவும் செய்கிறார்கள். ஆனால், அதிரை மண்ணின் 'மை'ந்தர்களிடையே செயல்படுத்துபவர்களிடமும் அதனைப் பற்றி எழுதுபவர்களிடமும், பேசுபவர்களிடமும் வாய்'மை' ஏறக்குறைய "மை"னஸ் தான் !
ஒரு சாரார் பள்ளம் தோண்டினால் மற்றொரு சாராரின் உள்ளம் அங்கே அலைபாய்கிறது எப்படி அதன் உள்ளே தள்ளலாம் என்றும், மற்றவர்கள் வழிவிட்டால் அங்கே எப்படியெல்லாம் வழி மறிக்கலாம் என்று இவர்கள் சுழி போடுகிறார்கள்.
எதுக்கு இந்த அ'வசர'தூ(ற்)று'ம் வேலைன்னு கேட்கத் தோனுமே... ! ஏன் இந்த பரபரப்பு என்று ஃபீலிங்க்ஸ் பீரிடுமே !?, வரனுமே. அப்படி வந்தால்தானே அதிரையில் அனைத்தையும் கவனிக்கிறோம்னு தெரிய வரும் !
என்னமோ தெரியலைங்க ஊருக்கு ஒரு ஆம்புலன்ஸ் வாங்கி விட என்னமா கஷ்டப்பட்டாங்க ஒரு சாரார்! சரி, வாங்கியாச்சு, முறையாக பொதுமக்களுக்கும் பயனளித்தும் வருகிறது(!!).
ஆம்புலன்ஸ் அமைதியாக ஒரு இடத்தில் ஒதுங்கி இருக்க நிழலோடு இருக்கும் கூரை போட ஒரு சாரார், ஆனால் மற்றொரு சாரார் ஆம்புலன்ஸ் ஒதுங்கி நிற்க கூடாது அதுவும் ஓரிடத்தில் நிற்கவே கூடாது மற்றொரு சாரார்....
ஏனுங்க இப்புடி !?
இருந்தாலும், அதிரையில் நாமெல்லாம் யோசனை சொல்லி அதைக் கேட்கும் இயக்கமும் இல்லை, கட்சியும் இல்லை ஏன் எந்த அமைப்பும் தயாராக இல்லை! அவைகள் அனைத்தும் தலை'மை'க்கு கட்டு பட்டவர்கள். அதற்காக சும்மாவா இருந்துடுவோம்...!!?
இங்கே பதியப்பட்டிருக்கும் காட்சியின் இடது மேல் விளையாடு (ஸாரிங்க) PLAY என்ற பொத்தனை அழுத்தி அங்கே விரியும் காட்சியினையும் பார்த்து விட்டாவது மல்லாக்க படுத்து யோசிச்சு பாருங்க மக்களே !
அதிரைநிருபர் குழு

