Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in
Showing posts with label சிநேகிதிகள். Show all posts
Showing posts with label சிநேகிதிகள். Show all posts

(we)சித்திரமான சிநேகிதிகள் 21

அதிரைநிருபர் பதிப்பகம் | July 14, 2012 | , , , ,

விழுது விட்டு விருட்சங்களென
எழுபத் தெட்டு பிராயங்களில்
பழுது பட்ட பார்வைகளோடு
தொழுதுவரும் மாமியும் உம்மாவும்

தத்தம் வீட்டு துணைகள்
தரணி விட்டு போனபின்னர்
தனிமைப் பேய் விரட்ட
தவிக்கின்ற தோழிமார்கள்

நீர்ச்சோறு காலையிலே
வடிச்சகஞ்சி மதியமுமாய்
சிறுபிராயக் காலங்களைச்
சிலாகித்துச் சொல்வதுண்டு

பின்னலிட்ட ஜடையும்
மின்னலொத்த நடையுமாய்
கல்விகற்க கைகோர்த்து
பள்ளி சென்ற தோழிகள்

ரெட்டைஜடை வயதினிலே
ஒற்றைஜதைத் தோழிகளாய்ச்
சுற்றித்திரிந்த நினைவுகளை
சொல்லச்சொல்லி கேட்பதுண்டு

மாமியைப் பார்த்தெழுதி
உம்மா தேர்ச்சிபெற்ற
ஐந்தாம் வகுப்புக்கதை
அழகாய்ச் சொல்லிவைப்பர்

சொல்லிச் சிரிக்கையிலே
சொக்கிப்போகும் என் மனசு
நெற்றிச் சுறுக்கங்களில்
நெகிழ்ந்துபோகும் என் உயிரு

உம்மாவின் அண்ணனைத்தான்
மாமி மணந்துகொண்டார்
நாத்தனார் தோழமையில்
நல்வாழ்க்கை மாமி கண்டார்

இருவரையும் பேசவிட்டு
இரசிப்பதில் இன்பமுண்டு
நானும் மச்சான்களும்
வளர்ந்தகதை கேட்பதுண்டு

பேரன் பேத்திகளுக்கு
பெரியோரிடம் ஆர்வமில்லை
பேச்சுத்துணைக் கின்று
பெருசுகள் தவிப்பதுண்டு

உணவுண்ண உயிருண்டு
உணர்வுகளுக்கு ஆறுதலுண்டா
நினைவுகள் நிறைய உண்டு
நிஜத்தில் துணை உண்டா

தள்ளாடும் முதுமைக்கும்
தகிக்கின்ற தனிமைக்கும்
அன்புதானே கைத்தடி
அதைக்கொடுப்போம் அடிக்கடி!

Sabeer AbuShahruk


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு