உயிரும் உயிரும்ஒருங்கே உருகி
வார்த்த
உயர் ஓவியம்!
அன்பை அன்பால் பிணைத்து
அழகாய் பிழிந்து எடுத்த
சுவை ரசம்!
காத்திருப்பும் காதலும்
ஆசையும் கனவும்
ஒன்றாய் கோத்து
தொடுத்த மலர்!
ஏக்கமும் வேண்டுதலும்
ஆர்வமும் உடல் ஆற்றலும்
கைகோத்து கடந்த வாழ்க்கை
தவத்தின் உயர் வரம்!
அவனுக்கென அவளும்
அவளுக்கென அவனும்
அனுசரித்து அனுபவித்த
உணர்வின் ஓட்டம்!
குலம் தழைக்க
கோத்திரம் செழிக்க
துக்கம் துடைக்க
தாத்தா, பாட்டிக்கு
வயோதிகத்தில் நண்பனாக
அமைந்த
வசந்தத்தின் வருகை!
CROWN

