Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in
Showing posts with label வாழ்க்கைப் பயணத்தில் உறவுகள். Show all posts
Showing posts with label வாழ்க்கைப் பயணத்தில் உறவுகள். Show all posts

வாழ்க்கைப் பயணத்தில் உறவுகள்... 13 7

அதிரைநிருபர் பதிப்பகம் | January 15, 2013 | ,

மருமகள் கொடுமை...

கவியன்பன் காக்கா அவர்கள் கூறியது போன்று, ‘மாமியார் கொடுமையினால் மனநிலை பாதிக்கப்பட்ட மருமகளும் உண்டு’. மாமியார்களின் கொடுமைகளுக்குட்பட்டு அடங்கி இருந்த காலம் மலையேறி போய் விட்டது என்று தான் சொல்ல வேண்டும். மகன் இறந்தாலும் பரவாயில்லை மருமகள் விதவையாக வேண்டும் என்று நினைக்கும் .மாமியார்களும் உண்டு.

நவீன யுகத்தில் மருமகளின் ஆதிக்கமே அதிகம் காணப்படுகிறது எனவே மருமகளின் கொடுமைகள் எது போன்ற மாமியாரிடம்  நடக்கிறது என்பதை காண்போம். கணவனை இழந்தவர். ஒரே மகனின் தாய் மற்ற உறவுகளின் ஆதரவில்லா பெண் போன்றவர்கள் மீது தான் மருமகளின் கொடுமை பாய்கிறது. மருமகள் கொடுமை என்று வந்து விட்டால் அறிமுகமில்லாத வீட்டில் பெண் எடுத்தாலும் சரி, நெருங்கிய சொந்தத்தில் பெண் எடுத்தாலும் சரி, கொடுமை என்று வந்தது விட்டால் மாமியார் மிக கொடுமையான சூழலுக்கு தள்ளப்படுகிறாள்.

இதனை இருவேறு சம்பவங்கள் மூலம் விளக்க விரும்புகிறேன் நமதூரில் நண்பகல் 11மணி முதல் பிற்பகல் 1 மணி வரை அங்காடி பொருள் விற்பனை செய்யும் கிராமத்து பெண்ணுக்கு நிகழ்ந்த சம்பவம். நாம் செல்லமாக ஆச்சி என்றழைப்போம் வயதானவர்கள் விலைக்காரி என்றழைப்பார்கள். மரவள்ளி கிழங்கு நிலக்கடலை மற்றும் கிராமங்களில் மட்டும் கிடைக்கும் அரிதான பொருள்கள் எடுத்து வந்து விற்பனை செய்பவர் .குறிப்பிட்ட வீட்டு வாசல் அருகில் தனது வியாபாரத் தளமாக வைத்து விற்பனை செய்யும் அந்த உழைக்கும் பெண்ணிற்கு பின்னால் ஒரு சோக கதை. 

கணவனை இழந்த பெண் .தனது ஒரு மகனுடன் வாழ்கை போராட்டத்தை துவக்கினாள். தனது வாழ்க்கை சூன்யமானாலும் பரவாயில்லை தனது மகன் படித்த பட்டதாரியாகி அவன் வாழ்வில் வளமாகி தன்னையும் காப்பான் தனது வாழ்விற்கு ஆதாரமாகுவான் என்ற நம்பிக்கையில் அதிரைக்கு வந்து வியாபாரம் செய்து வந்தார். நல்ல வருமானம் மகனை எந்த குறையில்லாமல் வளர்த்தார். காலங்கள் கடந்தன மகன் கல்லூரிக்கு சென்றான், ஆச்சிக்கு பெரும் நிம்மதி இன்னும் சில காலம்தான் பிறகு ஒய்வுதான் பெற்ற பிள்ளைகள் இருந்தால் வளர்ப்பதில் இனிமையாக காலத்தை கழிக்க வேண்டியதுதான் என்று தனக்கு தானே சொல்லி கொண்டாள்.

மழை காலங்களில் அதிரைக்கு வரும்போது ஆற்றுக்கு குறுக்கே இடுப்பளவுக்கு தண்ணீர் செல்லும் ஆற்று தண்ணீரை கடந்து வரும் அவலம் இனி இருக்காது என்று ஆனந்தம் கொண்டாள் ஆச்சி. கல்லூரி சென்ற மகன் .படிப்புடன் காதலையும் சேர்த்து கொண்டான் வசதியான பெண் பெண் தரப்பு காதலை ஏற்க கல்லூரி படிப்பு முடிந்த கையோடு மாலையை மாற்றி கொண்டான். இது ஆச்சிக்குதெரியாது, ஊர் வந்த மகனை வாஞ்சையாய் வரவேற்றாள்.

படித்த மேதையாய் தனது இனத்துக்கே பெருமை சேர்த்தவன் என்று பெருமிதம் கொண்டாள். 

“ஐயா!... நம்ம துயரமெல்லாம் நீங்கி போச்சு என்றாள்”. வெல்லாந்தியாய்.

“இனி அங்காடி பெட்டிக்கு வேலையில்லை என்றாள்” மகிழ்ச்சியாய்.

அவள் நம்பிக்கை நொறுங்கும் விதமாய் தனது காதல் மணம் புரிந்ததை மகன் சொன்னதும், இடிந்து போய் வீட்டின் மூளையில் சாய்ந்தால். அவளை அரவணைப்பது போல் ஒரு உணர்வு திரும்பி பார்த்தல் அவள் நம்பிக்கையற்று மூளையில் சாய்ந்த போது மூலையில் இருந்த அங்காடி பெட்டி தான் அரவணைத்தது.

ஆச்சிக்கு அங்காடி பெட்டி அரவணைத்தது போல் இருந்தது என்னவோ புத்துணர்வு பெற்றவளாக மீண்டும் எழுந்தவளாக உணர்வு பெற்றாள். கணவனை இழந்து கை குழந்தையோடு  தவித்தபோது உறவினர் கை கொடுத்து உதவாத போது தென்ன தோப்பு குடியிருப்பு மட்டும் கிடைத்தது. மகன் ஐந்து வயது வரை மகனைப் பாதுகாக்க வேண்டும் என்பதால் வெளி வேலைக்கு செல்லாமல் காலம் கடத்தி வந்தாள். மகன் பள்ளி கூடம் செல்ல ஆரம்பித்ததும் பட்டணம் வந்து அங்காடி பெட்டியில் வியாபாரம் செய்து தனது வாழ்வாதாரத்தினை  பெருக்கியதோடு தன் மகனையும் ஆளாக்கியது எல்லாம் நொடி பொழுதில் நினைவுக்கு வந்து திரும்பியது.

“ஐயா..! நம்ம சாதி சனம் நம்மை கவனிக்கவில்லை, நீ யாரை கல்யாணம் செய்தாலும் பரவாயில்லை எங்கே இருந்தாலும் நல்ல இருப்பா. எனக்கு .பட்டன வாழ்கை சரிபட்டு வராது, நான் எப்போதும் போல் இங்கேயே இருந்து விட்டு போகிறேன்” என்று சொல்லி மகனை சென்னைக்கு வழியனுப்பி வைத்தாள்.

ஆச்சி.. ஆச்சி...! அன்பாய் உரிமையாய் அழைக்கும் சிறு பிள்ளைகளின் குரல் தனக்கு ஆறுதல் அளிக்கும் என்பதை அறிந்த ஆச்சி அங்காடி பெட்டியுடன் அதிரைக்கு கிளம்பினாள்…

ஆச்சிக்கு மனதில் ஏற்பட்ட  ரணம், அதிரைக்கு வந்து அங்காடி வியாபாரம் செய்ததில் மனத்துக்கு இதமாக இருந்தது. வாடிக்கையாக வரும் பிள்ளைகளின் அன்பான அழைப்பான 'ஆச்சி... அச்சி…' என்றழைக்கும் போதெல்லாம் தான் பெற்ற பிள்ளை செய்த காரியம் மனதை விட்டு மறைந்தது என்றே சொல்லலாம். 

நாட்கள், மாதங்களாக மாதம் வருடமாய் கரைந்தது மகன் என்ற பந்தமே மறந்துபோன நிலை, மகன் பற்றி செய்தியை சென்னை சென்று வந்த அவனது தோழன் சொன்ன செய்தி கேட்டு அதிர்ந்து போனாள் ஆச்சி... 
தொடரும்…
அதிரை சித்தீக்

வாழ்க்கைப் பயணத்தில் உறவுகள் - 12 12

அதிரைநிருபர் பதிப்பகம் | December 21, 2012 | ,


மாமியார் மருமகள் உறவு...

நம்மோடு வாழ்ந்து மறைந்த பெரியவர் சித்தீக் ஆலிம் அவர்கள் வாழ்க்கையை பற்றி கூறும்போது ஒரு உதாரணத்தை கூறினார்கள். புளியம் பழம் போன்று நமது வாழ்க்கை இருக்க வேண்டும். புளியங்காயில் தோலும் அதன் ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொண்டு இருக்கும். அதன் முதிர்ச்சிக்கு ஏற்ப தோலின் பருமன் அதிகரிக்கும். நாளடைவில் தோலும் உட்புறம் உள்ள சதையும் தனி தனியே பிரிந்து விடும். பிறகு தோல் பகுதி ஓடாகவும் உட்பகுதி பழமாகவும் மாறிபோகும். புளியம்பழத்தை தனியாகவும் இலகுவாகவும் பிரித்து விடலாம். 

எந்த போராட்டமும் தேவையில்லை அதை போன்று நம் வாழ்வில் இளம் வயதில் வாழ்வில் பிடித்தமாக வாழவேண்டும் காலம் செல்லச் செல்ல வாழ்வின் பிடித்தங்களை குறைத்துக் கொள்ள வேண்டும் உலக நப்பாசைகளை குறைத்துக் கொள்ள வேண்டும். உறவுகளின் உரிமைகளை குறைத்து கொள்ள வேண்டும். அப்படி குறைத்துக் கொண்டால் எந்த பிரச்சனைகளும் வராது என்று அந்த நல்ல மனிதர் கூறிய கருத்து இந்த மாமியார் மருமகள் உறவு பற்றிய ஆக்கத்திற்கு பொருந்தும் என்பதால் இந்த கருத்தை கூறி துவங்குகிறேன்.

மாமியார் கொடுமை.

ஒரு பெண் பல பிள்ளை பெற்றடுத்த தாயாக இருந்தால் அனைத்து பிள்ளைகளிடமும் பாசம் கொடுத்து அன்பை பெறுவாள். அந்த தாய்க்கு பாசத்தின் ஏக்கம், அன்பின் குறைகள் இருக்காது. அதேபோன்று உடன் பிறந்தோர் கூடுதலாக இருக்கும் பெண்ணுக்கும் பாசம், அன்பின் ஏக்கம் இருக்காது. இதை ஏன் குறிப்பிடுகிறேன் என்றால் நான் பார்த்த மாமியார் கொடுமைகளுக்கு முக்கிய காரணம் தான் பெற்ற மகனிடம் முழு ஆதரவும் தன்னை சார்ந்தவர்களை கவனிக்க வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பு மகனின் மனைவியால் (மருமகளால்) தடைபட்டு போகுமோ என்ற எண்ணத்தால் மருமகள் மீது கோபம் கொள்ளத் தோன்றும். 

ஒரே மகனை பெற்ற தாய் மகன் மீது கொண்ட பாசத்தால் கல்யாணம் முடித்து கொடுத்த சில காலங்கள் கழித்தும் கூட மகன் தனது மனைவி மீது கொள்ளும் அன்பு ஈடுபாடுகளை மனைவிக்கு கொடுக்கும் அன்பளிப்பு. இவைகளெல்லாம் தனது கவனத்திற்கு வராமல் நேரடியாக செல்லும்போது அந்த தாய் தன் மகன் தன்னை விட்டு பிரிந்து விடுவானோ என்று கருதத் துவங்குகிறாள்.

சில சமயங்களில் மகனிடம் இந்த மணக் குறைகளை சொல்லி அழும் தாயை சமாதானம் செய்யாமல் மகன் உரிமையாய் தாயிடம் கோபம் கொள்ளும்போது தாயானவள் மகன் மீது வெறுப்பு கொள்ளாமல் மருமகள் மீது கோபம் அவர்களது வாழ்க்கையில் இடையூறு செய்யும் வில்லியாக மாமியார் மாறும் . சில சமயங்களில் மருமகள் என்ற உறவு அறுந்து போக தனது சூழ்ச்சியால் விவாகரத்து பெரும் அளவிற்கு சென்று விடுகிறது. இதற்கு இருவரும் நேசிக்க கற்றுக்கொள்ள வேண்டும் .அவர்களின் நலனில் பங்கு கொள்ளும் ஒருத்தியாக மாற வேண்டும். இரண்டாவதாக கணவன் என்ன வசதியாக இருந்தாலும் விலை மதிப்பு மிக்க பரிசுகள் அல்லது எதிர்பார்ப்புகளை தவிர்க்க வேண்டும் சகோதர உறவுகள் மீது காட்டும் பாசம் மாமியார் தரப்புகளை பாதிக்காத வண்ணமாக பார்த்துக்கொள்ள வேண்டும். இதற்கான காரணங்களை சம்பவங்கள் மூலம் விளக்க விரும்புகிறேன்.

பிரியமான மகனுக்கு உலகாசை சற்றும் குறையாத அம்மா நல்ல குடும்பத்தில் மணமுடித்து கொடுக்கிறாள். தனது மகன் என்ற எண்ணமே மேலோங்கி நிற்க  மணமாகி சில நாட்களிலேயே மகன் வெளிநாடு செல்ல ஏற்பாடாகி அங்கே சென்று விடுகிறான். பாசமிகு மகனிடமிருந்து பணமழை பணமழை பொழிகிறது. நாட்கள் வருடங்களாக கடக்க இரண்டு மூன்று விடுப்புகளில் மகன் ஊர் வந்து திரும்புகிறான். சண்டைகள் சச்சரவுகளுக்கு இடையே மூன்று பிள்ளைகள் பிறந்து விடுகிறது இன்னும் தாய்க்கு மகனாகவே இருக்கிறான். மனைவி இடத்தில் நடக்கும் பிணக்குகளை அன்றாடம் ஒப்புவிக்கிறான் விரிசல் ஏற்படுகிறது. 

மனைவி தரப்பிலும் தனது தாய் வீட்டு பக்கமே ஆதரவு திரட்ட மூன்று பிள்ளை தாய் விவாகரத்து செய்யப்பட்டு நாடு வீதிக்கு வந்து விட்டாள். இன்னும் தாய்க்கு மகனாக இருக்கும் அவன் மறுமண முடித்து கொள்கிறான். பிள்ளைகளின் நிலை பாவகரமானது முதல் மனைவி செய்த குறை கணவன் தரப்பை நேசிக்காதது. தனது தாய் வழியே கடைசி வரை காப்பாற்றும் என்ற நம்பிக்கை தவறான முடிவுக்கு கொண்டு வந்து விட்டது. இந்த நிகழ்வுக்கு காரணம் யார் நீங்களே கூறுங்கள்.

விவாகரத்து நடக்கும் அளவிற்கு இரண்டு பெரும்  காரணங்கள் உண்டு ஒன்று கல்யாணம் முடிந்த சில காலங்களிலேயே கணவன் தனக்கே என்ற வியூகம் அமைத்து செயல்படுவது அதனால் எதிர்தரப்பு எதிர்வியூகம் அமைப்பர். இரண்டாவது காரணம் தனது தரப்பு சொந்தங்களை உயர்வாக பேசி குலப்பெருமை பேசுவது இதன் மூலம் பகைமை கூடுதலாகும். எனவே, இதற்கு எதிர் மறையாக கணவன் தரப்பை நேசித்தல் கணவன் தரும் வெகுமதிகளை மாமியார் நாத்தனார்களுக்கு பகிர்ந்து அளிக்க முற்படுவது மூலம் மாமியார் தரப்பில் நல்ல மதிப்பை பெறலாம்.

அடுத்த அத்தியாயத்தில் மருமகள் கொடுமையை பற்றி கூறுகிறேன்…

அதிரை சித்தீக்

வாழ்கைப் பயணத்தில் உறவுகள் - 10 19

அதிரைநிருபர் பதிப்பகம் | November 25, 2012 | , ,

தந்தை வழி உறவு...

ஐந்து வயதில் அண்ணன் தம்பி பத்து வயதில் பங்காளி அதன் பின் பகையாளி என்பது முதுமொழி இது பல இடங்களில் பரம்பரை சொத்துக்கள் பிரித்து கொள்வதில் ஏற்படும் பகை. இவைகளால் பிரியும் சகோதரர்கள் கூட அண்ணனின் பிள்ளைகளை வழியில் கண்டால் பாசமாக பேச எத்தனிப்பார்கள்.

அண்ணனின் மகன் நல்ல நிலையில் இருப்பதை, புகழ் பெற்ற மருத்துவராகவோ, வழக்குரைஞராகவோ திகழும் போது என் அண்ணனின் மகன் என்று புளங்காகிதம் அடையும் சித்தப்பர்களை காண முடியும். தாய் வழி சொந்தம் போல் நெருங்கிய பாசப் பிணைப்புகள் காணப்படவில்லை என்றாலும், சில சமயங்களில் கஞ்சி ஊற்ற ஆளில்லை என்றாலும் கச்சல் கட்ட ஆளுண்டு என்ற பழமொழிக்கு தகுந்தார் போல் தார்மீக ஆதரவு என்றும் கிடைக்கும்.

அண்ணன் குடும்பத்தில் இடர்பாடுகள் ஏற்படும் போது தம்பிமார்களின் உதவி அபரிதமானது.

*தாய் வழி சொந்தம் தானே வந்து ஒட்டிக்கொள்ளும் சொந்தம்.

*தந்தை வழி சொந்தங்களை நாம் சென்று வளர்த்துக்கொள்ள வேண்டும்.

*தந்தையோடு உடன் பிறந்த சகோதரி, அத்தை (மாமி) இவர்களின் பாசம் தானாக வராது ஆனால் நாம் சென்று பார்க்கும் போது. அவர்கள் காட்டும் பாசம் இனிமையானது, இறகுகளால் வருடும் வசந்தம் அது சொல்லில் அடங்காது மாமி என்று நமதூரில் அழைக்கப்படும் அற்புதமான உறவு.

மாலை நேரங்களில் சென்று மாமி(மார்களை)யை பார்க்கும் சிறு பிள்ளைகளுக்கு கிடைக்கும் உபசரிப்புகளும் அவர்களால் வழங்கப்படும் தின்பண்டங்கள் அல்லது காசு என்று கொடுத்து மகிழும் மாமி என்ற அழகிய உறவு. உடன் பிறந்த சகோதரனின் பிள்ளை என்ற பாசம் சொந்த சகோதரனிடம் பாசம் காட்டுவது போல் உணர்வாக இருக்கும்.

*தாய் வழி உறவு என்றும் கிடைக்கும் உணவு, தந்தை வழி உறவு சிறப்பு பதார்த்தம் போன்றது. எபோதாவது ஒரு முறை சாப்பிடுவது போல் தந்தை வழி உறவையும் எப்போதாவது ஒரு முறை சந்திப்பதே நலம்.

*தந்தை வழி சொந்தத்தின் அருமை, நமக்கு ஏதாவது ஆபத்தான நிலை வரும்போது புரியும்.

*தந்தையை இழக்க நேரிட்டால் தந்தையின் உடன்பிறனந்தவர்கள் அண்ணனின் பிள்ளைகளை கவனித்துக் கொள்ள முன்வரும் நிலை இன்றி அமையாத ஒன்று.

*ஒரு தாய் தனது பிள்ளைகளுக்கு எல்லா வகையான உறவின் ஆதரவும் இருக்க வேண்டும் என்ற என்னத்தை ஊட்ட வேண்டும் பெரிய தன்தை, சிறிய தந்தை, மாமி ஆகியோர் பற்றிய நல்ல எண்ணம் ஏற்படும் வகையில் பிள்ளைகளிடம் சொல்லி வளர்க்க வேண்டும். அதன் அடிப்படையில் தான் பிள்ளைகளும் உறவை நாடி செல்லும் 

*தாயில்லா பிள்ளை, தந்தையை இழந்த பிள்ளை என்று இரண்டில் ஒன்றுக்கு ஏற்படும் பேரிழப்பு தாய் வழியே தாங்கி நிற்கும் என்றாலும் தந்தையை இழந்த பிள்ளைகளுக்கு தந்தை வழி சொந்தங்கள் உதவ முன் வருவார்கள் என்பதை காண முடிகிறது.

*தாய் வழி சொந்தங்களின் பாசம் தானே வரும், தந்தை வழி  சொந்தங்கள் நாம் தேடி சென்று பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதை பதிய விரும்புகிறேன்.

*ஒரு வாசகர் என்னிடம் தொலைபேசி வாயிலாக பேசினார் தாய் வழி சொந்தம் இயற்கையாக அன்பு செலுத்த கூடியவை என்று கூறி இருந்தீர்கள்.ஆனால் இடர்பாடுகள் வந்தால் காக்கை கூட்டத்தில் கல் எறிந்தால் கலைவது போல் கலைந்து விடுவார்கள். தந்தை வழி சொந்தங்கள் தந்தைக்கு இடர் பாடுகள் வந்த போது அவர் சகோதரர்  முன் வந்து அவர் கஷ்டத்தை நீக்க முன் வந்தது மட்டுமல்லாமல் அவர் பிள்ளைகள் வளர்ப்பதற்கு உறுதுணையாய் இருப்பார்கள் என்பதை தாங்கள் பதிய வேண்டும் என கேட்டுகொண்டார். பெரும் இடர்பாடு வந்தால் தந்தை வழி சொந்தம் உதவும் என்பதை உணர முடிகிறது.

*பிள்ளைகளிடம் பகையை மிகை படுத்தி கூறி தந்தை வழி மீது துவேசம் கொள்ள செய்வதும். நல்லதை கூறி பாசம் பெற செய்வதும், தாயிடமே உள்ளது கூடுதல் சொந்தங்கள் இருத்தல் நலம் தானே!!.
உறவுகள் தொடரும்...
அதிரை சித்தீக்

வாழ்கைப் பயணத்தில் உறவுகள் - 9 16

அதிரைநிருபர் பதிப்பகம் | November 19, 2012 | ,


தாய் வழி சொந்தம் (தாய் மாமா மற்றும் சித்தி) அறிவுசார் உலகில் சொர்பொழி வாகட்டும் அல்லது எழுத்து வடிவாகட்டும் மானிடவியலை பற்றி விமர்சிக்கும் போது இது ஆணாதிக்க உலகம் பெண்ணை அடிமை படுத்தும் உலகம் என்று ஆவேசமாக பேசி கரவோசைகளை பெறும் நிகழ்வுகளை அன்றாடம் காண்கிறோம் ஆனால் உறவின் அடிப்படையில் காண்கின்ற போது (பெண்ணின் ஆதிக்கமே ) தாய் வழி சொந்தங்களின் பற்றுதலே அதிகம் காண முடிகிறது.

தாய் மாமா

அதிகமான உரிமை கோரும் உறவு தாய் மாமா என்கிற உறவுதான். தந்தையிடம் கூட மரியாதையாக பேச வேண்டிய நிர்பந்தம் உண்டு. ஆனால் குழந்தைகள் மாமாவிடம் பேசும் போது ஒறுமையில் வா... போ.. என்று செல்லமாக பேசும் உரிமை கொண்ட உறவு தாயின் அரவணைப்பு வீட்டிற்குள் என்றால் ...வீட்டிற்கு வெளியே சென்று வேடிக்கை காட்டி சந்தோசப்படுத்தி அரவனைக்கும் உறவு ...

அந்த கால முதியோர்கள் மாமாவின் உறவை பற்றி கூறும் போது .பழமொழி போல் ஒன்றை கூறுவார்கள்... பிறந்த குழந்தை தாய் மாமன் முகம் தேடும்.. என்பதாக ஆனால் பிறந்த குழந்தைக்கு வெளி உலகு காண முடியாமல் கண் கூசும் என்பதே உண்மை ... 

* ஐந்து வயது வரை மாமாவின் பாசத்தில் லயித்து போகும் குழந்தைகள் பத்து வயது முதல் பதினைந்து வயது வரை. பாசத்தின் வெளிப்பாடான பரிசுகளை மாமாவிடம் குழந்தைகள் எதிர்பார்க்கும் ..இதனை நடைமுறை படுத்தும் மாமா. வயதான காலத்தில் மருமக்களால் போற்றப்படும் மாமாவாக திகழ்வார் .

* மாமாவின் பாசம் எவ்வளவு அதிகம் கானபடுகிறதோ .அந்த அளவிற்கு மாமாவிற்கு மருமக்களின் உதவி கிடைக்கும் என்பதில் ஐயமில்லை .

* சில சமயங்களில் மாமாவின் மகளை மணமுடிக்க எந்த நிபந்தனை யுமின்றி முன் வரும் மருமக்களை பார்த்திருக்கிறேன் ...சில குறைகள் இருந்தாலும் அதனை பொருட்படுத்தாத மருமக்களை இங்கு நினைவு கூற விரும்புகிறேன்.

"வாழ்க்கையெனும் ஆற்றை கடக்க துணையாக வரும் மனைவி தோணியாக இருக்க வேண்டும். சில சமயங்களில் சுமையாக மாறும்போது .. ஆற்றை தானே நீந்தி கடக்க நேரிடும் போது ..சுமையை இறக்கி வைத்து விட்டு செல்ல வேண்டிய சூழல்... அது மாமா மகளாக இருந்தாலும் நடந்தேறும் .

அந்த சமயங்களில் தாய் மாமாவின் உறவு பழுது படாமல் பகையாளியாக மாறாமல் சற்று உறவு தளர்ந்திருந்தாலும் முறிவதில்லை அந்த அளவிற்கு தாய் மாமா உறவு வலிமை வாய்ந்தது

*பிற மத சகோதரர்கள் தமிழகத்தில் உறவு விட்டு போகக் கூடாது என்பதற்காக தாய் மாமாவை மணமுடித்து வாழ்க்கை கடைசி வரை மாமாவே என்று இருப்பதை நாம் பார்கிறோம் .

"ஒரு அதிர்ச்சியான தகவலை பதிவு செய்ய விரும்புகிறேன் திருச்சி மாவட்டத்தில் இஸ்லாம் பற்றி அறியாத கிராமத்து முஸ்லிம்கள் தாய் மாமாவை மணமுடித்து வைக்கும் பழக்கம் இருந்து வந்ததாக ஒரு நண்பர் கூற கேட்டு அதிர்ச்சியுற்றேன் வளைகுடா நாடுகளுக்கு வேலைக்கு வந்த பிறகு இஸ்லாம் பற்றி அறிய முடிந்தது என்று அந்த நண்பர் கூறினார். இஸ்லாம் பற்றிய பல தகவல்கள் தௌஹீது பிரசாரங்களும் கிராம முஸ்லீம்களுக்கும் சென்றடைந்து விட்டது என்பதே சரி .

எத்தனையோ கிராமங்களில் முஸ்லீம்கள் பள்ளிவாசல்களை பஞ்சாயத்து கூடவும் பயன்படுத்துவது காண முடிகிறது .வெள்ளிக்கிழமை மட்டும் ஜும் ஆ தொழுகை வெளியூர் இமாம் நடத்திவிட்டு செல்வது போன்ற நடவடிக்கை களால் இஸலாம் பற்றிய தெளிவு மிக குறைவு என்பதே உண்மை.

நான் சொல்ல வந்த கருத்து தாய் வழி சொந்தம் பற்றி கருத்து தடம் மாறுவதை தவிர்க்க விரும்புகிறேன். தாய் வழி சொந்தங்களை பற்றி சொல்லும் போது சிறிய தாய் முக்கிய இடம் வகிக்கிறார்.

தாயாரும் சித்தியும் பல சமயங்களில் பிள்ளைகளுக்கு பணிவிடை செய்ய பாகுபாடு பார்ப்பதில்லை இதன் காரணமாக பிள்ளைகள் சிறிய தாயிடமும் தனது தேவையை உரிமையாய் கோரும் அதன் காரணமாக பாச பிணைப்புகள் கூடும் என்பதே தின்னம் சிறிய தாய் பற்றிய கருத்துக்கள் அதிகமாக எழுத இன்னும் ஒரு அத்தியாயம் எழுத வேண்டும். பல பாத்திரங்களின் உறவின் அடிப்படையில் எழுத வேண்டி உள்ளதால் தாய் வழி சொந்தம் பற்றி இத்துடன் முடித்து கொள்கிறேன் ..

தாய் இல்லாதவர்கள் சிறிய தாய்க்கு பணிவிடை செய்து நன்மையை பெற்று கொள்ளட்டும் என்ற நபி மொழியை வைத்து நாம் சிறிய தாயின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ளலாம். நமதூரில் சாச்சி மக்கள் ராத்தம்மா மக்கள் இருவருக்கும் வித்தியாசம் காண முடியாத அளவிற்கு ஒற்றுமை காணப்படுவதை இங்கு பதிய விரும்புகிறேன் 
உறவுகள் தொடரும் 
அதிரை சித்தீக்


வாழ்க்கைப் பயணத்தில் உறவுகள் - 5 18

அதிரைநிருபர் பதிப்பகம் | September 26, 2012 | , ,

அண்ணன் தம்பி உறவு…

தாய்-தந்தை உறவு போல ஒரே கண்ணோட்டத்துடன் அண்ணன் தம்பி உறவை ஒப்பிட முடியாது. ஐந்து வயதிலிருந்து பதினைந்து வயது வரை, உரிமைப் போராட்டம்..! எனக்கு வேண்டும்..! என்ற பிடிவாதம் பிடிக்கும் தம்பி. தன் சொல் கேட்க வேண்டும் என்று அண்ணனும் அவ்வப்போது போடும் சிறு-சிறு சண்டைகள் நிகழ்ந்தாலும், வீட்டிற்கு வெளியே வந்து விட்டால் தம்பியின் பாதுகாவலனாக மாறுவதுதான் வினோதம்.

செல்வசெழிப்புடன் வாழும் குடும்பத்தில் பிறந்த சகோதரர்களுக்குள் இளம் வயதில் அவ்வளவாக பிணக்குகள் வருவதில்லை ஏனெனில், இருவரின் தேவைகளும் தனி தனியே நிறைவேற்றப் படுவதால் என்றுமே சமாதானம்தான். ஆனால், அங்கே பாசப் பினைப்புகளில் குறைகள் ததும்பும். வசதிகள் குறைவான குடும்பத்தில் பிறந்து வளரும் அண்ணன் தம்பிகள் மத்தியில் பாசங்கள் என்றுமே கூடுதலாக இருக்கும். 

இவர்களில் மூத்த அண்ணன் வளர்ந்து ஆளாகி உழைத்து பொருளீட்ட ஆரம்பித்து விட்டால் அண்ணன் தான் ஹீரோ. அண்ணணின் சொல் அரசு உத்தரவு போல் உடனே அமுலாக்கும் தம்பிகள் வெளிநாடுகளில் வேலை பார்க்கும் அண்ணன்மார்கள் தம்பிகளின் உரிமைகளின் நாயகன். தனக்கு தேவையானதை பெற துடிக்கும் துடிப்பு தம்பிகளின் ஆர்வத் துடிப்பு அது உரிமைகளின் உயிர் துடிப்பு.

என் அண்ணன் என்று சொல்லி பெருமிதம்படும் தம்பிகளின் சந்தோசத்திற்கு அளவே கிடையாது. தம்பிகளின் அந்த உரிமையை தம்பிகளிடமிருந்து பிரிப்பது என்பது இயலாத காரியம். தம்பிகளின் மனதில் ஆழ பதிந்திருக்கும் அந்த உயிர் மூச்சு போன்ற உரிமையை பிரிக்க அண்ணனுக்கு திருமணம் என்ற பந்தத்தின் மூலம் ஏற்ப்படும் உறவு அண்ணனின் மனைவி அண்ணியால் மட்டுமே முடியும். 

உறவின் வலிமை யாருக்கு அதிகம் யார் உரிமை அதிகம் பங்கு உள்ளவர்  என்று பார்க்கும்போது அண்ணனின் மனைவிக்குத்தான். என்றாலும், உயிரோடு ஒட்டிய உறவான தம்பிகளை பிரிக்க நினைக்கும் அண்ணி கொஞ்சம் கொஞ்சமாக வெண்ணெய்யில் மயிலிறகை போல மிக நளினமாக தன் வயப்படுத்திக்கொள்ளல் வேண்டும். இதன்  கால அளவு குறைந்தது பத்து வருடங்கள் எனலாம். ஆனால், மணந்த மறு நிமிடமே தன வசம் வரவேண்டும் என்பதன் விளைவுதான் குடும்பத்தில் தேவையில்லாத சச்சரவுகள்.

ஒரு தாய் மக்கள், என் அண்ணன் எனக்கு சொந்தம் என்ற உணர்வு பதினைந்து வயது பாலகனிடம் இருக்கும். தம்பியும் பாச உணர்வை அறுத்தெறிய வேண்டும் என்று முனையும் புது உறவான அண்ணனின் மனைவியின் முயற்சி சில சமயங்களில் மிகவும் மோசமாக செயல்பட்டு தம்பியின் உணர்வின் உயிரை பிரிக்க காரணமாக இருப்பார்.  தந்தை காட்டும் பாசத்தின் இரண்டாம் பகுதியாக அண்ணன் காட்டும் பாசம் அமைந்திருக்கும். 

கல்யாணமாகி சில வருடங்களில் திசை திரும்பிய ஏவுகணைபோல் அதி வேகமாக தம்பி மீது கொண்ட பாசம் மறைந்து போகும். இது ஒரு வகையில் அண்ணனுக்கு பாதகமாக கூட அமையும் கல்யாணமாகி மனைவி வகையில் கிடைத்த உறவு பலமாக இருக்கும்பச்சத்தில் தம்பியின் உறவு இல்லை என்று போகும். அண்ணன் மனைவி பாதகியாய் அமைந்து அண்ணனுக்கு துர்சம்பவங்கள் நிகழ நேரிட்டால் தம்பியின் உறவு கைகொடுக்கும் அண்ணன் தம்பி உறவு நீடிப்பது பெற்றோர்களுக்கு கடைசி காலத்தில் மன நிறைவை கொடுக்கும். 

தாய் தந்தையர் தமது தாம்பத்யம் வெற்றி பெற்றதாக எண்ணுவர். தாய் தந்தையரின் தாம்பத்யத்தை புனிதமாக கருதும் ஒவொருவரும் தன் உடன் பிறந்தோரை அன்புடன் பேணுவர். நூற்றாண்டு காலம் கடந்து வெற்றி நடை போடும் நிறுவனகளின் பின்னணி அண்ணன் தம்பி உறவின் வலிமையே பாராம்பர்யமாக பேசப்படும் பல குடும்பங்களின் பின்னணியும் உடன்பிறப்புக்களின் ஒற்றுமையின் பின்னணிதான்.
தொடரும்...
அதிரை சித்தீக்

PLEASE VISIT OUR NEW WEBSITE https://adirainirubar.in/ 

வாழ்க்கைப் பயணத்தில் உறவுகள் - 4 8

அதிரைநிருபர் பதிப்பகம் | September 16, 2012 | , , ,

தந்தை மகள் உறவு....

இயற்கையாகவே, பெண்பிள்ளை தந்தையின் செல்லம்......! வண்ண வண்ண உடை உடுத்தி அழகு பார்ப்பது பெண் குழந்தைக்குத்தான். இது மிக சொற்ப கால உறவுதான்  என்பதால், மகள் மீது அதிகமான அன்பு செலுத்த காரணமாக இருக்கலாம். பத்து வயதிற்கு அப்பால் தந்தை மகள் மீது செலுத்தும் அன்பு மரியாதை கலந்ததாக இருக்கும்...!

“உம்மா கொஞ்சம் தண்ணி கொண்டு வா மா” என்று வாஞ்சையாக வேலை ஏவுவது, போன்ற மாற்றங்களை காணலாம். 

அதற்கு  அப்பால் பிரியம் குறைந்து கவலையாக  தொற்றிக்கொள்ளும். மகள் பெரியவளாகி விட்டால். நல்ல மன வாழ்க்கை அமைத்து கொடுக்க வேண்டும் என்ற கவலை மேலோங்கும். ஆனால், மகளுக்கோ... என்றும் தனது தந்தை எது கேட்டாலும் வாங்கி தருவார் என்ற எண்ணம் மேலோங்கி காணப்படும்.

"எங்க வீட்டுக்கு வந்தா என்ன வாங்கி வருவீங்க.... உங்க வீட்டுக்கு வந்தா என்ன தருவீங்க" என்ற சாமார்த்திய   உணர்வு மகளிடம் மேலோங்கி நிற்கும். வயோதிகத்தில் பெண் பிள்ளைகளின் உதவி தேவை படும் என்ற ஒரே நம்பிக்கை பெற்றோருக்கு, மற்றபடி செலவுதான் பெண் பிள்ளைகள் விஷயத்தில்.
  • வசதியான தந்தை - என்றும் உரிமை கோரும் பெண் பிள்ளை.
  • வசதியற்ற தந்தை - கணவனின் நிலை பொருத்து தன்னிலை மாற்றிக்கொள்ளும் மகள்.
  • தந்தை என்ற நிலைபாடு, வசதியான நிலைபாடு நல்ல தகுதியான நிலை இருந்தால் மட்டுமே நலம்.
  • சொத்து இருந்தால் உயிருள்ளவரை உரிமை கொண்டாடுவார்கள்.
பெண் பிள்ளைகள் தந்தை உறவு என்றென்றும் சீராக இருக்க வேண்டும் என்றால் சீதனங்கள் அளவோடு கொடுத்து,அவ்வப்போது பரிசாக வெகுமதி உள்ள நகை, பிள்ளைகள் பிறந்தால், பெற்ற பிள்ளைகளுக்கு பரிசு.மகள் வீட்டில் இல்லாத  நவீன சாதனைகள் வாங்கி கொடுத்தல். வீட்டு மராமத்து வேலைகளுக்கு ஏற்பாடு செய்தல்போன்றவைகளால். என் தந்தை போல் வருமா என்ற நிலை உருவாகும் !

பெண்பிள்ளை பெற்ற தந்தை நல்ல பொருள் ஈட்டல் பணம் சேர்த்து நல்ல முதலீடு செய்தல் அவசியம்.என்றும் பலன் தரும் தந்தை என்று  தன்னை பெண்ணின் தந்தை நிலை நிறுத்தி கொள்ளல் வேண்டும்.  மகளுக்கு தந்தை என்றும் காய்க்கும்  மரமாக இருக்க வேண்டும். கனியாக மட்டும் இருந்தால், கனியின் சாரை சுவைத்து விட்டு

காய்ந்த விதையை போட்டு விடுவார்கள், விதையை புதைத்தால்  மீண்டும் முளைக்கும் என்ற எண்ணம்பிறருக்கு எண்ணம்  தோன்றும் காய்க்கும்  மரமாக இருப்போம்..

பெண் பிள்ளைகளின் தந்தை பாசம் என்றும் எதிர் பார்க்கும் பாசப் பிறப்பு..

தொடரும்..
அதிரை சித்தீக்

வாழ்க்கைப் பயணத்தில் உறவுகள் - குறுந்தொடர் - 3 13

அதிரைநிருபர் பதிப்பகம் | September 02, 2012 | ,


தந்தை மகன் உறவு

தந்தை மகன் உறவு மிகவும் அபூர்வமானது, பலகீனமானதும் கூட தந்தை மகன் உறவு பலமாக இருக்குமானால் குடும்பம் சிறந்து விளங்கும் .தந்தை மகன் உறவு மேலோங்க மகன் மனதில் தந்தை ஒரு உதாரண புருஷராக, ஹீரோவாக பதிந்திருக்க வேண்டும். வெளிநாடுகளில் வேலை பார்க்கும் நம்மவர்களின் பிள்ளைகள் மனதில் தந்தையை பற்றிய கணிப்பு. அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரம் சுரந்து கொண்டே இருக்கும் அமுதசுரபி என்ற எண்ணம் மட்டுமே இருக்கும். பிள்ளைகள் வளரும் முறை கல்லூரிக்கு செல்லும் பருவத்தில் தந்தைக்கு மகன் வைக்கும் கோரிக்கை பெரிதாகும் பட்சம். அதனை தந்தை நிறைவேற்றாத சூழல் ஏற்பட்டால் மகனின் எண்ணம் சுக்கு நூறாக உடைந்து போய் 18 -20  வருட உழைப்பு தியாகம் எல்லாம் காணாமல் போய் விடும் - இது ஒரு விதம் !

தந்தையை ஹீரோவாகவோ வில்லனாகவோ சித்தரிக்கும் பொறுப்பு தாயிடம் உள்ளது. "உனது தந்தை உழைப்பாளி எப்படியும் சாதித்து காட்டுவார், பாவம் அவரின் போதாத காலம் சகல முயற்சியும் கை கூடவில்லை. உங்களை ஆளாக்கியது, உன் வாப்பாவின் உழைப்புதான் என்ன இருந்தாலும் உன் வாப்பா சிறந்த மனிதர்தான் – மகனே” என கூறும் தாய் மகனின் மனதில் தந்தை பற்றிய உணர்வை உயர்வான இடத்தில் வைப்பதன் மூலம் மகன் தந்தை மீது நல்ல மதிப்பை ஏற்ப்படுத்தும் உறவு மேம்படும்.

அதே தாய் “உன் தந்தைக்கு வாக்கப்பட்டு என்ன சுகத்த கண்டேன் ஒரு பட்டு உண்டா? நகை நட்டு உண்டா? என் புள்ள தலையெடுத்து தான் எனக்கு எல்லாம் செய்து போடுவான்” என்று சொல்லும் போது பிள்ளையின் மனதில் அது முள்ளாய்  தைத்து விடும். மகனுக்கு தந்தை ஒரு கோழையாக, ஒன்றுக்கும் உதவாத ஒரு ஜந்தாக தெரிவார். தந்தை மகன் உறவு, இங்கே கேள்வி குறிதான்.

மற்றொரு காட்சி - சிறு வியாபாரம் .தந்தையின் உழைப்பு குடும்பம் நடத்தும் நயம் மனைவி மக்களின் தேவையறிந்து நடந்து கொள்ளும் விதம் மனைவி குடும்ப தலைவனின் உழைப்பிற்கு ஒத்தாசையாக மகனை அனுப்பி வைப்பது "தம்பி பள்ளிக்கூடம் விட்டு வந்ததும் .வாப்பாவுக்கு டீ(தேநீர்) கொடுத்து விட்டு அப்படியே வாப்பாவை ஓய்வெடுக்க செய். சிறிது நேரம் நீ வியாபாரம் செய்து வா மகனே” என்று சொல்லும் தாய் அதற்கு இசையும் மகன் இந்நிலை அழகான உதாரணம்.

மகனுக்கு இளமையில் பயிற்சி கிடைக்கும் தந்தையின் சுமைக்கு தனயன் தோல் கொடுக்கும் போது தந்தையின் வாஞ்சையான  பார்வை ஆயிரம் துஆக்களுக்கு சமம். களைப்பு நீங்கிய தந்தை மகனிடம் “தம்பி நீயும் பள்ளி கூடம் விட்டு கலைத்து இருப்பாய் விளையாடுவதாக இருந்தால் நீ விளையாடி வா” என்று வாஞ்சையோடு மகனிடம் கூறும் தந்தையின் பதில் மகனின் மனதில் தந்தைக்கு கோட்டை கட்டி சிம்மாசனம் அமைத்து அரசனாக மதிப்பான். நாம் பெரிய ஆளாக போய் வாப்பாவுக்கு ஒய்வு கொடுக்க வேண்டு நாம் இன்னும் பலமாக கால் ஊன்ற வேண்டும் படிப்பிலும் உழைப்பிலும் உயர வேண்டும், என்ற நிலை வர தாய் முக்கிய காரணம் இது ஒரு வகையான ததை மகன் உறவு.

தந்தை சொல் மிக்க மந்திரமில்லை, என்ற தமிழ் பழமொழி 

தந்தையின் துஆ அல்லாஹ்வினால் ஏற்கப்படும் என்ற நபி மொழியினையும் இங்கு பதிய விரும்புகிறேன் தந்தையை மதிக்க தெரிந்தவன் வாழ்வில் முன்னேறுவான். 

*உள்ளத்தால், அரிவால், உடலால் பலகீனமான தந்தை. 
*குடிப்பழக்கம் மார்க்க விரோதமான தந்தை.
*ஊதாரி, உழைக்காத, தந்தை மகன் உறவு பற்றி அலச தேவை இல்லை என்றே நம்புகிறேன். 

விறகு வெட்டி உழைத்து கலைத்து வரும் தந்தையின் கோடாரியை வாங்கி வைத்து ஒரு சொம்பு தண்ணீர் வாஞ்சையாய் கொடுக்கும் மகன்; நெற்றி வேர்வை துடைத்து கனிவான பார்வை ஒன்றை மகன் மீது  வீசும் தந்தையின் அன்பு ஆயிரம் நன்றிகளுக்கு சமம்.

ஏர் பூட்டி உழைத்த தந்தையின் ஏர்கலப்பையை வாங்கி வைத்து சேர் படிந்த பாதத்தினை கழுவிட உதவிடும் மைந்தன் வலுவிழந்த தந்தைக்கு மன வலிமையை சேர்க்கும் செயல் தந்தை மகன் உறவு.

ஆனால் நம்மவர் கண் காணா இடத்தில் பாலை மணலில் செந்நீரை வியர்வையாய் ஆக்கி. வியர்வை வெயிலால் உலர்ந்து உப்பாய் மாறி கரிக்க களைப்பாற நிழலில்லா உழைப்பு உழைத்த பணம் காசோலையாய் ஊர் வந்து சேர வீட்டில் குதூகலம். வதங்கிய தந்தையின் உள்ளத்திற்கு மைந்தனின் கடிதம் உரம் சேர்க்குமா என்றால் உதவாது, அடுத்த வீட்டு அப்சல் லாப் டாப் வைத்துள்ளான் நீங்க ஊர் வரும்போது அவசியம் மறவாது எனக்கு வாங்கி வரவும் என்ற கடிதம் இயலாமையால் நெஞ்சை கீறி விடும். அந்த கடிதம் உறவுக்கு கை கொடுக்குமா?

ஊர் வரும்போது பாலையில் உழைத்து வதங்கிய உடலுக்கு புத்தாடை உடுத்தி சோகத்தில் சுருங்கிய கண்கள் குடும்பத்தை கண்ட மகிழ்ச்சியால் மலர்ந்திட தந்தையின் புத்தாடையும், குளிர்ந்த கண்கள் மட்டுமே மகனுக்கு தெரியும். தந்தையிடம் கேட்பான் “லாப்-டாப் எங்கே?!” உழைத்து வந்த தந்தையிடம் கோடாரியை வங்கி வாய்த்த மகனின் உறவு மேம்படுமா? லாப்-டாப் கேட்கும் மகனிடமிருந்து அன்பு கிடைக்குமா? தந்தை மகன் உறவு மேம்படுமா ? நீங்களே கூறுங்கள். கண் காணா உழைப்பு நீரில் எழுதும் வரலாறு வெளிநாடுகளிலிருந்து வாங்கி வரும் அன்பளிப்பு காலப்போக்கில், அன்பை அழிப்பதாகவே அமையும். பணம் சேருங்கள் பின்பு எப்படி உறவு மேம்படும் என்று பாருங்கள்.

நன்றியுள்ள மகன் உழைத்த தந்தைக்கு ஆற்றுவான் தொண்டு ..
(தொடரும் உறவுகள் )
அதிரை சித்தீக்

வாழ்க்கைப் பயணத்தில் உறவுகள்! - குறுந்தொடர் - 1 24

அதிரைநிருபர் பதிப்பகம் | August 08, 2012 | , ,


அதிரைநிருபர் வலைத்தளம் வாயிலாக உறவாடும் உறவுகள் பற்றிய சுருக்கமான என் கருத்துகளை வைக்க ஆவலுடன் தொடர்கிறேன்..

என்னுள் எழுந்த எண்ன ஓட்டங்களும் கருத்துகளும் ஒரு வரியெனில் அதிரை உறவுகள் நீங்கள் கூறும் / கூறப் போகும் கருத்துகள் ஏராளமிருக்குமென என நம்புகிறேன். 

உறவுகள் பலவிதம், தாய், தந்தை, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, தாயின் உடன்பிறப்புகள் தந்தையின் உடன்பிறப்புகள் அவர்கள் வழிச்சொந்தம் என்று. அனைத்து உறவுகளையும் அலசிப்பார்த்து விடுவோமா.?

இவைகள் நான் பெற்ற அனுபவங்களின் அடிப்படையில் எழுதுகிறேன்.    பின்னூட்டங்களின் தொடர்ச்சியாக நீங்களும் கருத்துக்களை தொடருங்கள்.  நமது உறவுகள் எப்படி இருந்தது, அவைகள் எப்படி இருக்க வேண்டும் என்பதே இதன் நோக்கம். எந்த உறவுகள் நமது அணுகுமுறையால் எவ்வாறெல்லாம் மேம்படும் என்பதையும் விவாதிப்போம். இதில் வாசிப்பவர்களில் உங்களனைவரின் பங்களிப்பே கூடுதலாக இருக்கும் என நான் எதிர்பார்க்கிறேன்.

இறைவன் படைத்த படைப்புகளிலே மேலான படைப்பு மனித இனம்தான். மற்ற உயிரினங்களிடமிருந்து வேறுபட்டு காணப்படும் மனித இனம் பெற்றுள்ள ஆறாம் அறிவான பகுத்தறிவு மிக நுணுக்கமானது. இதன் தேவைகள் உடல் சம்மந்தமானது கிடையாது. உள்ளம் பற்றிய தேவைகள் உடையது. நம் உள்ளத்திற்கு, விருப்பு, வெறுப்பு, அன்பு, நேசம் காட்டுதல், நேசம் பெறுதல், ஆவல், என மனதின் தேவைகள் சூழ்நிலைகேற்ப மாறுபடும். இந்த உணர்வுகள் மனித அரும்புகளின் வளர்ச்சிக்கு காலத்திற்கு ஏற்றார் போல் தேவை படுவதுதான் கால வினோதம். 

உறவுகள் ஒவ்வொன்றாக பார்ப்போம்...

தாய்-மகன் உறவு.... 

குடும்ப தலைவி தனது தாம்பத்திய வாழ்வின் வெற்றியாக கருதும் தாய் என்ற அற்புதமான பதவி அந்த தாய் என்ற பேரினை கொடுத்த பிள்ளை(கள்) மேல் காட்டும் பாசம், பரிவு அன்பின் வெளிப்பாடு அளவிட முடியாதது. முதல் மூன்று வயதில் அவர்களின் அன்பு அளவிட முடியாத அன்பு. அந்த அன்பின் வெளிப்பாட்டை மழலையர்களாக இருக்கும் பிள்ளைகள் அறிந்திட முடியாதது என்பது மனோதத்துவ நிபுணர்களின்  கருத்து. பிள்ளைகள் அந்த தருணத்தில் எல்லா தேவைகளையும் தாயிடமே கேட்கும். தாயின் அரவணைப்பே அந்த குழந்தையின் உறவுப்பாலம்.

மூன்று வயது கடந்த பிள்ளை தனது சுய தேவைகளை கேட்க ஆரம்பிக்கிறது. ஆனால், என் பிள்ளைக்கு இந்த உணவுதான் பிடிக்கும். இந்த ஆடை உடுத்திப் பார்க்கனும், என்று தனது ஆவலையே பூர்த்தி செய்கிறாள். அது இயற்கையான அன்பு, பள்ளி கூடங்களில் சேர்ப்பது கூட அவளது தேர்வாகவே இருக்கும். இப்படியாக தாயின் பாசம் சற்றும் குறையாமல் மகன் வாலிபனாகிய பின்பும் தனது மகனுக்கு வாழ்க்கை துணை தனது தரப்பு தேர்வாகவே இருக்க வேண்டும் என இருப்பதும் அதில் பிடிவாதமாக இருப்பதும் உண்டு. இது தாயின் நிலை.

மகனோ, ஐந்து வயது வரை தாயே உலகம். எதுவானாலும் தாய்தான். ஐந்து வயது தாண்டிய பின் பள்ளிகூட வாழ்க்கை துவங்குகிறது .அங்கு புது உறவுகள் பிறக்கிறது அங்கே நண்பன், ஆசிரியர் போன்ற புது உறவு. அங்கும் விருப்பு, வெறுப்பு போன்ற புது உணர்வுகள் பிறக்கிறது கற்கும் இடம் என்பதால் நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக புதுப்புது கருத்துக்களை அந்த மழலை உள்ளம் நுகர ஆரம்பிக்கிறது. ஐந்து வயது வரை நமது வீடு, நம் சொந்தம், என்ற சொல்லே மேலோங்கி இருக்கும். பள்ளிக்கூடம் சென்ற பின் தன்னை தாயிடமிருந்து தன்னை பிரித்து காட்டும் விதமாக எங்கள் பள்ளி   எங்கள் ஆசிரியர். எனது நண்பன். எனது புத்தகம் என்று தன்னை பிரித்து காட்டுவான் அப்படி கூறும் போது அதனை தாய் பெரிதாக எடுத்து கொள்ள மாட்டாள். மாறாக மகிழ்ச்சியால் உள்ளம் பூரிப்பாள்

நாம், நம், என்ற சொல் என், எனது, என்று மாறியது என்பது உணர்வுகளின் வேறுபாடு என்பதை அத்தருணத்தில் தாய் உணர்வதில்லை முற்றிலும் தனது  பிள்ளை என்ற உணர்வே மேலோங்கி நிற்கும். வளர்ந்து வாலிப பருவம் ஆன பின்பு கூட உறவு விட்டு போக கூடாது. நான் கூறும் இடத்தில் தான் நீ  மணமுடிக்க வேண்டும் என்று கூறும்போது  நடக்கும் போராட்டம் மிக குறைவு என்றாலும் 95% திருமணங்கள் நன்மையாகவே வெற்றிகரமாகவே அமைகின்றன. என்றாலும் 5 சதவிகித திருமணங்கள் தோல்வியையே தழுவுகின்றன. தோல்வி கண்டவர்கள் தாய் மீது கோபம் கொள்ளாமல் தாயிடமே தஞ்சம் கொள்வது தான் வினோதம். அதே நேரத்தில் தாய் சொல்படி மணமுடித்து வாழ்வில் வென்றவர்கள் தாயை மறந்து தனது வழியை பார்த்து கொண்டு செல்வதுதான் வினோதம்..!

(இன்ஷா அல்லாஹ்... தாய் மகள் உறவு பற்றி அடுத்த தொடரில்.... )
அதிரை சித்தீக்


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு