அதிரைநிருபரில் ஹ்யூமருடன் (ஹேமருடன் அல்ல) படைப்புகள் என்று நினைத்தால் அங்கே முதலிடத்தில் இருப்பது சகோதரர் ஜாஹிர் ஹுசைன் அவர்கள்தான். மருத்துவம் படிக்கும் அவர்களின் மூத்த மகன் தன்னோடு தொடர்புடைய ஒன்றோடு ஒன்றிணைந்து, அதனையும் படிக்க வைக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார். பாவம் அந்த மனித எலும்பு கூடோ தனது தலையில் கைவத்துக் கொண்டு புலம்ப ஆரம்பித்து விட்டது.
என்னதான் புலம்பியது என்று எமக்கு சொல்லாமல் புத்தகங்கள் சகிதமாக சீரியஸாக படிக்கும் போது படம் எடுத்து அனுப்பி விட்டார்.
அடிக்கடி ஒருசிலரின் கனவுகளில் வருபவராச்சே இந்தப் படத்தில் இருப்பவர், இன்னும் இவரோடு உரையாடும் பழக்கமுள்ளவர்களும் இருக்கத்தானே செய்கிறார்கள்.
ஆகையால் படத்தில் இருப்பவர் என்ன நினைத்துக் கொண்டு தலையில் கைவைத்தவாரே சொல்லியிருப்பார் !?
தெரிந்தால் கருத்துப் பெட்டியில் கொஞ்சம் போட்டுவிட்டு போங்களேன்... அவரிடம் சொல்ல மாட்டோம்.
என் கனவில் வந்தவரின் ஃபோட்டோதான் என்று உரிமை கொண்டாடினால் அவர்களின் விலாசத்தையும் பதியுங்கள் படத்தில் இருப்பவருக்கு ஈமெயில் அனுப்பி வைத்து விடலாம்.
படம் : AZHAR HUSSEIN - [Final
Year MBBS]
அதிரைநிருபர் பதிப்பகம்