
மற்றுமொரு தேசிய தினத்திற்காக
மணநாள் காணும்
மாந்தர் போல்
அலங்கரித்த அமீரகம்...
உலகமே வியக்கும்
உச்சத்தில்!
காற்றுவெளி கூடி
கை தட்டுவதுபோல்
பட்டொளி வீசி
படபடவென
பறக்கின்றன கொடிகள்
நாற்பத்தி மூன்றாம் வருட
நன்னாளில்
நான்கு வர்ண
நகை அணிந்து
நகர்கின்றன ஊர்திகள்
புன்னகை பூத்து
பூரிக்கின்றனர் சனங்கள்
விழாக்காணும் அமீரகத்தில்
விடுமுறை நாள்
விடாமுயற்சி வெல்லுமெனும்
விடையறியும் நாள்
உலகமே
ஊழலில் திளைக்க
உண்மையான உழைப்பில்
உயர்ந்த அமீரகம்
உலகையே ஒன்றிணைத்து
உவகை கொண்டது
க்ளோபல் வில்லேஜில்
சிகரமென உயரம்
சிறப்பானத் தோற்றம்
படைத்தவன் பேரருளால்
நிமிர்ந்து நிற்கிறது
புர்ஜ் கலீஃபா
கடற் கரை அழகை
கண்டு நின்ற உலகிற்கு
கடலின் உள்ளே அலங்கரிக்கக்
காட்டித் தந்த முன்மாதிரி
ப்பாம் ஜுமைரா
பனிப் பொழிவு நாடுகளின்
பனிச்சருக்கு விளையாட்டை
பின்னுக்குத் தள்ளும்
பாலை மணலில் சருக்கும்
டெஸர்ட் சஃபாரி
இன்னுமுண்டு ஏராளம்
எடுத்துச்சொன்னால்
எதிர்க்க முடியாது யாராலும்
வாழ்க்கையை நடத்த்
வழியற்றோர்க்கு
வேலை வாய்ப்பு
திறமையக் காட்ட
திக்கற்றோர்க்கு
திசைகளுக்கான திறவுகோல்
ஒரே ஒரு
பணிக்கான விசாவில்
ஒட்டு மொத்த குடும்பத்திற்கும்
ஓரிறையின் அருளை
எத்தி வைக்கிறது அமீரகம்
முத்தாய்ப்பாய்
இல்லாதவற்றைக் கொண்டே
இருப்பை நிலைநிறுத்திய
அமீரகம்
சுயநல் அரசியலால்
இருப்பவற்றையெல்லாம்
இழந்து நிற்கும்
இன்றைய நாடுகளுக்கு
ஒரு
சமகாலத்தில் வாழும்
சவுக்கடி படிப்பினை!
ஈஸி பிலாதி எமரேட்ஸ்!!!
சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்


