Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in
Showing posts with label ஹந்தூரி. Show all posts
Showing posts with label ஹந்தூரி. Show all posts

கந்தூரி கமிட்டி தில்லு முல்லு முறியடிப்பு - கூட்ட நடவடிக்கை. 5

அதிரைநிருபர் | April 07, 2016 | , , , , ,


அதிராம்பட்டினம் மேலத்தெரு ஜமாஅத் லட்டர் பேடை உபயோகித்து, அதன் தலைவர் MMS சேக் நஸ்ருதீன் அவர்கள் கந்தூரிக்கு ஆதரவு தெரிவித்து எழுதிய கடிதத்தை இன்று வட்டாட்சியரிடம் கொடுத்து, கந்தூரிக்கு எதிர்ப்பே இல்லை என்பது போன்ற தவறான தோற்றத்தை, கந்தூரிக் கமிட்டியினர் உருவாக்க முயன்றனர். தாருத் தவ்ஹீதின் முந்தைய எதிர்ப்புப் பதிவுகள் கோப்புடன் வட்டாட்சியருக்கு சமர்ப்பிக்கப்பட்டு அம்முயற்சி முறியடிக்கப்பட்டது. 

மேலத்தெருவின் இதே ஜமாஅத் தலைவர், இரண்டாண்டுகளுக்கு முன்னர்  வட்டாட்சியரிடம் கூட்டத்தில் ஆஜராகி, கந்தூரிக்கு தெரு ஜமாஅத் சார்பாகஆதரவு தர வந்ததாகக் கூறி,  அதிரை தாருத் தவ்ஹீதின் பொருளாளர் நிஜாமுத்தீனின் ஆட்சபனையால் அதனைத் திரும்பப் பெற்றார் என்பது இங்கு நினைவு கூரத் தக்கது.

கந்தூரி எதிர்ப்பாளர்களுள் மேலத்தெருவைச் சேர்ந்த முக்கியஸ்த்தர்களான ராஜிக், நிஜாமுத்தீன் ஆகிய இருவரும் தங்களது எதிர்ப்பையும் கண்டனத்தையும் உரியவருக்கு உணர்த்தியுள்ளனர்.
__________________________________________________________________________________

கூட்ட நடவடிக்கைகள்

பட்டுக்கோட்டை வட்டம், அதிராம்பட்டினம் நகரில் உள்ள காட்டுப்பள்ளிவாசல் திருவிழா (தர்கா) 08.04.2016 முதல் 21.04.2016 வரை மேலத்தெரு, கீழத்தெரு பெரிய ஹந்தூரி விழா கமிட்டியினருக்கும் அதிராம்பட்டினம் தாருத் தவ்ஹீத், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதால் திருவிழாவில் சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளதெனத் தெரிவிக்கப்பட்டதன் பேரில், இதன் தொடர்பான அமைதிக்கூட்டம் பட்டுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் முன்னிலையில் 06.04.2016 அன்று மதியம் 12.00 மணியளவில் நடத்தப்பட்டது. இதில் விழாக் கமிட்டியினர் மற்றும் எதிர்த் தரப்பினர் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன:
  1. காட்டுப்பள்ளி தர்காவில் 08..04.2016 அன்று மாலை 4.00 மணிக்கு(ஊர்வலம்) தொடங்கி அதிராம்பட்டினம் முக்கிய தெருக்கள் வழியாகச் சென்று மாலை 7.00 மணிக்கு முடித்துக்கொள்ள வேண்டும்.
  2. காட்டுப்பள்ளி தர்காவில் விழா தொடங்கும்போதும் முடிக்கும்போதும் சப்தம் சிறிதளவே வரக்கூடிய பட்டாசுகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். போகும் இடத்தில் எந்த இடத்திலும் வெடி வெடிக்கக்கூடாது.
  3. மேற்படி ஊர்வலம் நடுத்தெரு, புதுமனைத்தெரு, CMP Line,  பொது மருத்துவமனைத்தெரு, மேலத்தெரு அல்பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் பள்ளிவாசல் (பகுதி) ஆகியவற்றில் ஊர்வலம் செல்லக்கூடாது.
  4. விழாக் குழுவினர் ஹந்தூரி விழாவில் பங்கேற்றுச் செல்ல வேண்டும்.
  5. ஹந்தூரி விழா ஊர்வலத்தில் 1 கொடி, 1 பல்லக்கு, 5 உருப்படி, மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளன. ஐந்து உருப்படியும் ஒவ்வொரு உருப்படிக்கும் 10 மீட்டர் இடைவெளியில் தொடர்ந்து வரவேண்டும்.
  6. பள்ளிவாசல்களுக்கு முன்னும் பின்னும் 100 மீட்டர் இடைவெளியில் வாத்திய இசைக் குழுவினர் இசைக்கக்கூடாது.
  7. ஊர்வலத்தில் முன்னும் பின்னும் சிறியவர், பெரியவர்கள் ஆடி, பாடிச் செல்வது தடை செய்யப்பட்டுள்ளது.
  8. எதிர்த் தரப்பினர் சட்டம்-ஒழுங்கு எங்களால் பாதிக்கப்படாது எனவும்,மேற்படி விழாவுக்கும் எங்களுக்கும் எவ்விதத் தொடர்பும் கிடையாது எனவும் தெரிவித்தனர்.
  9. விழாவில் சட்டம்-ஒழுங்கு பாதிக்கும் வகையில் அசம்பாவிதம் ஏற்படுமாயின் விழாக் குழுவினர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என் முடிவு செய்யப்பட்டது.
  10. தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ளதால் எந்த ஒரு கட்சி சின்னமோ இதர கட்சி வர்ணங்களோ இடம்பெறாமல் தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு உட்பட்டு (விழா) நடத்த அனுமதிக்கப்படுகிறது.
  11. பொதுமக்கள் மற்றும் தேர்வு எழுதும் மாணவர்களின் அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தக்கூடாது.
  12. மேற்காணும் நடவடிக்கைகள் முழுதும் தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி வீடியோ பதிவு செய்யப்படும்.
மேற்கண்ட நிபந்தனைகள் மீறப்பட்டதாகத் தெரிய வந்தால் மேற்படி தேர்தல் நடத்தை விதிகளின்படி வழக்குகள் தொடர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தீர்மானிக்கப்பட்டது.


 இன்றைய அமர்வில் பழைய ஆவணங்கள் பயன்பட்டதுபோல் வருங்கால சந்ததியினருக்காக இந்த ஆவணங்கள் இங்குப் பதியப்படுகின்றன.


- அதிரை தாருத் தவ்ஹீத்


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு