அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
அதிரைநிருபரில் ஜனரஞ்சகமான "ஒரு புத்தகம் பிறக்கிறது" அதுவும் ஹிஜ்ரி வருடத்தின் பத்தாவது மாதத்தில் சுகப்பிரசவமாக இறைவன் நாடினால் (இன்ஷா அல்லாஹ்) !
அதிரைநிருபர் வலைத்தளம் மூன்று தலைமுறைகள் கொண்ட பங்களிப்பாளர்களையும், வாசகர்ளையும் பால் பேதமின்று தன்னகத்தே கொண்டிருப்பதை நன்கறிவீர்கள்.
காசு கொடுத்து தினசரிகள், வாரப்பத்திரிகைகள் வாங்கிப் படிக்கும் பழக்கங்கள் கொண்ட சிலரை தவிர்த்து, நூலகம் தேடிச் சென்று பல்வேறு தினசரி பத்திரிகைகள், வார மாத பத்திரிகைகள் வாசித்து வருவோரும் உண்டு என்று சொல்லுமளவுக்கு அவைகள் குறைந்து கொண்டே வருகிறது.
இறைவனின் அருட்கொடைகளில் ஒன்றுதான் இணையமும், இத்தகைய இணையப் புரட்சியில் தமிழ் எழுத்துருக்களைக் கொடையாக அளித்த நல்லுங்களின் அளப்பரிய சேவையை நினைவு கூர்ந்தவர்களாக நம்மக்களும், இணைய வழியில் அன்றாட தகவல்கள், பதிவுகள், சேவைகள், பிரச்சாரங்கள், விவாதங்கள் என்று கலக்கிக் கொண்டிருக்கின்றனர்.
ஐம்பது வருடங்களுக்கு மேல் புத்தங்களோடு புரண்டு எழுந்து, அதன் அட்டைப்படம் முதல் கடைசிப் பக்கம் வரை கரை கண்ட நமதூர் மூத்த சகோதரர் மரியாதைக்குரிய எஸ்.முஹம்மது ஃபாரூக் (காக்கா) அவர்களின் அனுபவங்கள் எண்ணிடங்காத விஷயங்களைத் தாங்கி கொண்டு தொடராக வெளிவர இருக்கிறது இன்ஷா அல்லாஹ் !
நூலகங்களின் பெருமையையும், புத்தகங்களின் அருமையையும் அடுக்கி கொண்டே செல்லும் ஜனரஞ்சகமான தொடர் ! இன்றைய இளையவர்களின் புருவம் உயர்த்தும் உணர்வுபூர்வமான அனுபவங்களை அதிரைநிருபர் வாசகர்களோடு பகிர்ந்து கொள்ள இருக்கிறார்கள் விரைவில் !
இந்த அலசலில் ஆங்காங்கே இருக்கும் கரும்புள்ளிகளும் தெரியும், கருவில் இருக்கும் குழந்தையும் தெரியும், கயவர்களின் களியாட்டங்களும், காவியங்களின் கலைச் சோலையும் தெரியவரும்.
வரலாற்று ஏடுகளை புரட்டிப் பார்க்கத் துடிக்கும் வாசகர்களுக்கு நல்லதொரு தேடலுக்கும் கிடைத்த அருவியாக இருக்கும் அதுவே அற்புதமான எழுத்தோடையாக அதிரைநிருபரில் தொடராக ஓட இருக்கிறது இன்ஷா அல்லாஹ் !
ரமளானுக்கு பின்னர் "ஒரு புத்தகம் பிறக்கிறது" புத்தம் புது குழந்தை பிறக்கிறது அதன் வளர்ச்சியை ஏறிட்டுப் பார்க்க காத்திருங்கள் !
அதிரைநிருபர் பதிப்பகம்

