Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in
Showing posts with label SKM ஹாஜா முகைதீன். Show all posts
Showing posts with label SKM ஹாஜா முகைதீன். Show all posts

கல்வியும் கற்போர் கடமையும் ! - குறுந்தொடர் - 1 1

அதிரைநிருபர் | July 21, 2016 | , , ,

தேடல்:


"தேடல்" என்பது மனிதனின் சமுதாய வாழ்கையில் அத்தியாவசிய அம்சங்களில் ஒன்று. ஆனால் எவற்றைத் தேடுவது ? எவ்வாறு தேடுவது? என்பதை உணர்ந்து தக்க பொருளைத் தக்க வழியில் தேடுவதே நல்லவர்கள் நாடும் நண்ணெறியாகும்.


இன்றைய மனிதர்கள் எவற்றையெல்லாமோ தேடியலைந்து கொண்டிருக்கிறார்கள் "இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு; அது எங்கிருந்த போது அதை நாடி ஓடு என இசை பாடி இன்பத்தை தேடியலைகிறது ஒரு கூட்டம். "பணமே பிரதானம்; அது இல்லையேல் அவமானம்" என்ற கொள்கை கொண்டு பணத்தை தேடியலைகிறது இன்னொரு கூட்டம் "பதவி வந்திடப் பத்தும் பறந்து வரும்" எனப் புதுமொழி பேசிப் பதவியைத் தேடித் திறிகிறது மற்றொரு கூட்டம்.


அறிவு:


இன்பம், பணம், பதவி போன்றவையெல்லாம் முதலிடம் கொடுத்துத் தேடப்பட வேண்டைய பொருளா ? நிச்சயமாக இல்லை. தேட்டத்தோடு தேடப்பட வேண்டிய பொருள் ஒன்றுண்டு, அதுதான் "அறிவு". அறிவே அகிலத்தின் அணையா ஜோதி" என்கிரார் கிரேக்க நாட்டு தத்துவ ஞானி சாக்ரடீஸ். "அறிவு அற்றம் காக்கும் கருவி" என்கிறார் வண்டமிழ்ப் புலவர் வள்ளவப் பெருந்தகை. "பணம், பதவி, அதிகாரம், செல்வாக்கு,அழகு எதைக் கொண்டும் சத்தியத்தை விளங்கில் கொள்ள முடியாது. அறிவு இருந்தால் மட்டுமே சத்தியத்தை விளங்கிக் கொள்ள முடியும்" என்பது அருமை திருமறைக் குர்ஆன் காட்டும் தெளிவுரை.


அறிவுதான் இன்று உலகை ஆட்சி செய்கிறது, ஆயுதம், பணம், பதவி எல்லாம் கூட அறிவுக்குப் பின்தான் பயன்படுகிறது என்பதை உலகறிந்த உண்மை. இத்தகைய அறிவையே தேடிப் பெறச் சொன்னார்கள் அருமை நபி(ஸல்) அவர்கள். "அறிவு இறை நம்பிக்கையாளர்களின் காணாமல் போன பொருள், அதைத் தேடி அடைய வேண்டிய உரிமை அவருக்குண்டு" என்பது அண்ணலார் அவர்களின் வாக்கு.


கல்வி:


மனிதனுக்குள் மறைந்து கிடக்கும் மாபெரும் சக்திதான் அறிவு. மண்ணுக்குள் மறைந்திருக்கும் தண்ணிரைப் போல் அறிவு மனிதனுக்குள் மறைந்திருக்கிறது. அதை வெளிக் கொணரும் ஒப்பற்ற கருவியாகக் கருதப்படுவது தான் "கல்வி" ஆகும்.


மண்ணைத் தோண்டத் தோண்ட நீர் ஊற்றெடுத்துப் பெருகுவது போல் கற்க கற்க அறிவும் ஊற்றெடுத்துப் பெருகும். எனவே தான் கல்வி கற்பது மனிதனின் அடிப்படைக் கடமை எனக் கருதப்படுகிறது.


கல்வி கற்றவரே சமுகத்தில் உயர்ந்த அந்தஸ்தைப் பெறுகிறார். "கற்றவரும் கல்லாதவரும் சமமாவரா" என்பது இறைவன் தன் திருமறையில் தொடுக்கும் வினா. "கற்பவனாக இரு; அல்லது கற்பிப்பவனாக இரு" என்பது பெருமானார் (ஸல்) அவர்களின் போதனை. "கேடு இல் விழுச் செல்வம் கல்வி" என்பது வள்ளுவர் வாக்கு "கற்றவர்க்குச் சென்ற விடமெல்லாம் சிறப்பு" என்பது அவ்வையின் அமுத மொழி. "செல்வம் பெரிதா ? கல்வி பெரிதா" எனப் பட்டிமன்றங்கள் நடத்தப்படுகின்றன. இதை முடிவு செய்ய பட்டிமன்றங்களே தேவையில்லை கல்விதான் என்பது கண்கூடு. செல்வத்தை நாம் பாதுகாக்க வேண்டும்; கல்வியோ நம்மை பதுகாக்கும். செல்வம் செலவழிக்க செலவழிக்க அதிரகரிக்கும். செல்வம் இன்றிருக்கும் நாளை சென்று விடலாம்; ஆனால் கல்வி உயிருள்ளவரை உடனிருக்கும். எனவே தான் "கல்வி கற்க வேண்டியது ஆண் பெண் எல்லோருடைய கடமை" என இயம்பினார்கள் ஏந்த நபி(ஸல்) அவர்கள்.


எல்லை இல்லை:

'கல்வி கரையில; கற்பவர் நாள் சில' என்ற கூற்றும் 'கற்றது கை மண்ணளவு; கல்லாதது உலகளவு' என்ற கூற்றும் நாம் கற்க கூடிய கல்விக்கு எல்லை இல்லை என்பதை தெளிவுபடுத்துகிறது. காலத்தின் அருமை கருதிக் கல்விக் கூடங்களில் குறிப்பிட்ட கால வரம்பிற்குள் குறிப்பிட்டப் பாடத்திட்டத்தின் படி குறிப்பிட்ட நூல்களை மட்டும் கற்று நமது அறிவை வளர்க்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. குறுகிய வரம்பிற்குட்பட்ட அக்கல்வியைக் கூட பல மாணவர்கள் முனைப்போடு கற்பதில்லை என்பது வேதனைக்குரிய விஷயம். முனைப்போ முயற்சி மேற்கொண்டு கற்றால் மட்டுமே தேவையான அறிவை நாம் தேடிக் கொள்ள இயலும் என்பதை கற்போர் கவனத்தில் கொள்ள வேண்டும். அதற்காக சில நெறிமுறைகளைக் கைக் கொள்ள வேண்டும்.


தன்னம்பிக்கை:

கல்விக்குத் தடையா இருப்பவை நான்கு. 1. மறதி, 2. சோம்பல், 3. அலட்சியம், 4.தூக்கம். கல்விக்குத் துணையாக இருப்பவை நான்கு.1.ஆசையும் ஆர்வமும், 2.முயற்சியும் உழைப்பும், 3.துணிவும் உற்சாகமும், 4.கவலையும் பிரார்த்தனையும். கல்விக்குத் தடையாக இருப்பவற்றைக் கல்விக்குத் துணையாக இருப்பவற்றைக் கொண்டு வீழ்த்தி வெற்றிகாண முயற்சிக்க வேண்டும்.


'சாதிக்க வேண்டும்' என்ற தன்னம்பிக்கையும், 'சாதித்தே தீர்வேன்' என்ற விடா முயற்சியும் கற்போரிடம் கட்டாயம் இருந்தாக வேண்டும். இவற்றோடு சோர்வற்ற உழைப்பும் சேர்ந்து விட்டால் அவர்களின் வெற்றியை தடுத்து நிறுத்தும் சக்தி வேறு எதற்கும் இல்லை.


காலந்தவறாமை:

கல்வியில் சாதிக்க விரும்பும் மாணவர்கள் மிகவும் கவனம் செலுத்த வேண்டிய ஒன்று காலம் தவறாமை. "கடமை கண்போன்றது; காலம் பொன் போன்றது" என்ற மூதுரை முழுமையாகக் கடைபிடிக்க வேண்டும். குடிக்க நீர் கிடைக்காத பாலைவனத்தில் நீண்ட தூரம் பயணிக்கும் ஒருவன் தன்னிடமுள்ள சிறு அளவு நீரைச் சிக்கனமாகச் செலவழிப்பதில் எவ்வளவு கவனமாக இருப்பானோ அந்த அளவு, நேரத்தை செலவிடுவதில் கவனமாக இருக்க வேண்டும். படிப்பைப் பாதிக்கும் வேறு எதிலும் நேரத்தை வீண் விரயம் செய்யக் கூடாது.


தேர்வுக்காக மட்டும் படிப்பது என்ற வழக்கம் நல்லதல்ல, நாள் தோறும் படிக்கின்ற வழக்கத்தைக் கொள்ள வேண்டும். வகுப்பில் அன்று நடந்த பாடத்தை அன்றிரவே மீண்டும் படித்து மனதில் இருத்திக் கொள்ள வேண்டும். இதைத் திட்டமிட்டுச் செய்தால் அதுவே திகட்டாத பழக்கமாகிவிடும்.

தொடரும்...

-SKM ஹாஜா முகைதீன் M.A. Bsc., BT.

 (முன்னால் தலைமையாசிரியர். கா.மு. மேல்நிலை பள்ளி, அதிரை)


மீள் பதிவு


ஆசிரியர் தினம் - காணொளி ! - 1 62

அதிரைநிருபர் பதிப்பகம் | September 07, 2013 | , , ,

கடந்த கல்வியாண்டின் பத்தாம் வகுப்பில் முதல் மாணவன் அப்துல் சுக்கூர் ஆசிரியர் தின நிகழ்வை துவக்கி வைத்ததிலும் முதல் மாணவன் அழகுற இறைமறை வசனங்களை ஓதி இனிதே துவங்கியது அல்ஹம்துலில்லாஹ்!

அன்று ! கணிதம் கடினம் என்ற கல்மணம் கொண்ட மாணவனையும் கரைத்தெடுக்கும் பாங்கும், இருபால் மாணாக்களுக்கும் இனிமை போற்றும் ஆசான், காதிர் முகைதீன் மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் தலைமையாசிரியர் S.K.M.ஹாஜா முகைதீன் அவர்களின் வாழ்த்துரையோடு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான அறிவுரையும் !

இன்று ! இணையத்தில் எட்டுதிசைக்கும் எட்டும் எழுத்தை எல்லோரும் பயனுரும் வகையில் ஆய்வுகளுடன் அதிரை மற்றும் பிற ஊர்களின் வலைத்தளங்களில் தனது எழுத்துக்களால் தட்டி எழுப்பும் சிந்தனையாளர் அதிரைநிருபரின் மூத்த பங்களிப்பாளர், எங்களால் இ.அ.காக்கா என்று அன்போடு அழைக்கப்படும் அ.இபுராஹீம் அன்சாரி அவர்களின் வாழ்த்துரையும் !

காணொளிப் பகுதி - 1


சிறப்பு பேச்சாளார் பட்டிமன்ற புகழ் அண்ணா சிங்காரவேலு அவர்களின் உரை மற்றும் ஆசிரியர்களை கவுரவித்து வழங்கிய பரிசளிப்பு நிகழ்வின் காணொளி விரைவில் தொடரும் இன்ஷா அல்லாஹ் !

அதிரைநிருபர் பதிப்பகம்

முன்னாள் மாணவர்களுக்கான வினாடி-வினா போட்டி ! தொடர்கிறது... 9

அதிரைநிருபர் பதிப்பகம் | February 15, 2013 | , , ,


மரியாதைக்குரிய ஆசான் SKM ஹாஜா முகைதீன் அவர்களின் வினாடி-வினா கேள்வித் தாள்களிருந்து சில துளிகள்...!

டேர்ம்ஸ் அண்ட் கண்டிஷன் (அதே): 
கூகிலானந்தாவிடமோ அல்லது பிங்கு மாஸ்டரிடமோ அல்லது யாஹூ-மாணவரிடமோ தட்டி தட்டி கேட்டுப் பார்க்க கூடாது !

பதில் தெரியவில்லை என்று அங்கே இங்கே சுற்றிக் கொண்டெல்லாம் இருக்கப்டாது, தெரியாத கேள்விகளுக்கு நீங்களே 'PASS'ன்னு சொல்லிக் கொண்டே அடுத்த கேள்விகளுக்குச் செல்லலாம்.

முன்னாள் மாணவர்களுக்கான வினாடி-வினா போட்டி ! தொடர்கிறது...
  1. முதல் உலக தமிழ் மாநாடு எங்கு நடைபெற்றது?
  2. கடைசியாக கோயம்புத்தூரில் செம்மொழி மாநாடு பெயரில் நடந்த உலக தமிழ் மாநாடு எத்தனையாவது மாநாடு?
  3. அறிவியல் கண்டுபிடிப்புக்காக நோபல்பரிசு பெற்ற முதல் இந்தியர் யார்?
  4. கொல்கத்தா விமானத் தளத்தின் பெயர் என்ன?
  5. கடற்படையின் தலைமை அலுவலர் பதவிப் பெயர் என்ன?
  6. தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்றழைப்படும் நகரம் எது?
  7. சிப்பாய்க் கலகம் எனப்படும் முதல் சுந்திரப் போர் எந்த ஆண்டு நடந்தது
  8. சமீபத்தில் வெளியிடப்பட்ட புத்தகங்களின் ஆசிரியர்கள் யார்? - அ) மூன்றாம் உலகப்போர், ஆ) தமிழும் கம்பனும்.
  9. இந்தியாவின் உச்சநீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதி யார்?
  10. சுதந்திர இந்தியாவின் முதலும் கடைசியுமான கவர்னர் ஜெனரல் யார்?
  11. வெள்ளையனே வெளியேறு இயக்கம் நடந்த ஆண்டு எது?
  12. 1943ல் இந்திய தேசியப் படையை (INA) உருவாக்கியவர் யார்?
  13. தமிழ்நாடு சட்டப் பேரவையின் எதிர்க் கட்சி தலைவர் யார்?
  14. சமீபத்தில் அமெரிக்காவைக் கடுமையாகத் தாக்கிய புயல் காற்றின் பெயர் என்ன?
  15. சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி ஆய்வு மையத்தில் தங்கி ஆய்வு செய்த மொத்த நாட்கள் எத்தனை?
அதிரைநிருபர் பதிப்பகம்

முன்னாள் மாணவர்களுக்கான வினாடி-வினா போட்டி ! தொடர்கிறது... 14

அதிரைநிருபர் பதிப்பகம் | February 06, 2013 | , , ,


மரியாதைக்குரிய ஆசான் SKM ஹாஜா முகைதீன் அவர்களின் வினாடி-வினா கேள்வித் தாள்களிருந்து சில துளிகள்...!

டேர்ம்ஸ் அண்ட் கண்டிஷன் (அதே): 
கூகிலானந்தாவிடமோ அல்லது பிங்கு மாஸ்டரிடமோ அல்லது யாஹூ-மாணவரிடமோ தட்டி தட்டி கேட்டுப் பார்க்க கூடாது !

பதில் தெரியவில்லை என்று அங்கே இங்கே சுற்றிக் கொண்டெல்லாம் இருக்கப்டாது, தெரியாத கேள்விகளுக்கு நீங்களே 'PASS'ன்னு சொல்லிக் கொண்டே அடுத்த கேள்விகளுக்குச் செல்லலாம்.

01) சென்னைத் துறைமுகம் அருகே நிலம் புயலில் சிக்கி தரை தட்டி நின்ற சரக்கு எண்ணெய் கப்பலின் பெயர் என்ன?

02) The wall என்று அடைமொழியால் குறிக்கப்படும் ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர் யார்?

03) சமீபத்தில் அமெரிக்காவில் நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற பராக் ஒபாமாவை எதிர்த்துப் போட்டியிட்ட குடியரசு கட்சியின் வேட்பாளர் பெயர் என்ன?

04) தாஜ்மகால் எந்த நதிக்கரையில் அமையப் பெற்றுள்ளது?

05) நீங்கள் ஊட்டிக்கு சென்றால் எந்த மாவட்டத்தில் இருப்பீர்கள்?

06) ஒவ்வோராண்டும் நீண்ட பகற் பொழுதை உடைய நாள் எது?

07) குறைந்த பகற் பொழுதை கொண்ட நாள் எது?

08) சில நாடுகள் தலைநகரங்கள் எவை?
      ஆப்கானிஸ்தான் ?
      நேபாளம் ?
      தென் ஆப்ரிக்கா?

09) சில நாடுகளின் நாணயத்தின் பெயர் என்ன?
       ஜப்பான் ?
       இத்தாலி ?
       பாக்கிஸ்தான் ?

10) இந்தியாவின் மிகக் குறைந்த பரப்பளவுள்ள மாநிலம் எது?

11) அரபிக் கடலின் ராணி என அழைக்கப்படும் நகரம் எது ?

12) ஐரோப்பாவின் விளையாட்டு மைதானம் என குறிக்கப்படும் நாடு எது?

13) மிகப்பெரும் சமுத்திரம் (deepest, largest biggest) எது?

14) சூரியன் நடு இரவில் உதிக்கும் நாடு எது?

15) அதிவீர ராம பாண்டியன் என்ற மன்னன் இயற்றிய நூலின் பெயர் என்ன?

அதிரைநிருபர் பதிப்பகம்

முன்னாள் மாணவர்களுக்கான வினாடி-வினா போட்டி ! தொடர்கிறது... 17

அதிரைநிருபர் பதிப்பகம் | January 06, 2013 | , , ,

பகுதி : 2

மரியாதைக்குரிய ஆசான் SKM ஹாஜா முகைதீன் அவர்களின் வினாடி-வினா கேள்வித் தாள்களிருந்து சில துளிகள்...

டேர்ம்ஸ் அண்ட் கண்டிஷன் (அதே): 
கூகிலானந்தாவிடமோ அல்லது பிங்கு மாஸ்டரிடமோ அல்லது யாஹூ-மாணவரிடமோ தட்டி தட்டி கேட்டுப் பார்க்க கூடாது !

பதில் தெரியவில்லை என்று அங்கே இங்கே சுற்றிக் கொண்டெல்லாம் இருக்கப்டாது, தெரியாத கேள்விகளுக்கு நீங்களே 'PASS'ன்னு சொல்லிக் கொண்டே அடுத்த கேள்விகளுக்குச் செல்லலாம்.

your time start... :)

1. முகலாயப் பேரரசின் கடைசி மன்னர் யார் ?

2. உலகின் முதல் அணுகுண்டு போடப்பட்ட இடம் எது ?

3. கல்லணையைக் கட்டியவர் யார் ?

4. இந்தியாவில் அதிக மழை பொழியும் இடம் எது ?

5. இந்தியாவில் அலுமினியம் அதிகம் கிடைக்கும் மாநிலம் எது ?

6. தமிழ் நாட்டிலுள்ள மொத்த மாவட்டங்கள் எத்தனை ?

7. உலகின் சர்க்கரைக் கிண்ணம் எனப்படும் நாடு எது ?

8. 'பட்ஜெட்' என்பது எம்மொழிச் சொல் ?

9. வேடந்தாங்கள் சரணாலயம் எங்குள்ளது ?

10. மேட்டூர் அணை எந்த மாவட்டத்திலுள்ளது ?

11. உலகின் மிக உயரமான கட்டிடம் எங்குள்ளது ?

12.உல்கின் அதிகப் பரப்பளவைக் கொண்ட நாடு எது !?

13. உலகில் அதிக வாக்காளர்களைக் கொண்ட நாடு எது ?

14. ஒலிம்பிக் 2012 எங்கு நடை பெற்றது ?

15. காவிரி நதிநீர் ஆணையத்தின் தலைவர் யார் ?

16. ஒலிம்பிக் 2012ல் 100மீட்டர், 200மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தனது முந்தைய சாதனையை முறியடிது தங்கம் வென்ற வீரர் யார் ?

17. ஒலிம்பிக் 2012ல் வெண்கலப் பதக்கம் வென்ற இரு இந்திய வீராங்கனைகள் யார் ?
-சாய்னா நெஹ்வால் (பேட்மிட்டன்)
18. சமீபத்தில் தமிழ்நாட்டில் வீசிய புயல் காற்று என்ன பெயரில் அழைக்கப்பட்டது ?

19. கூடங்குளம் அணுமின் நிலையம் எந்த நாட்டின் கூட்டு முயற்சியோடு நிறுவப்பட்டுள்ளது ?

20. சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சராக இருந்தவர் யார் ?

அதிரைநிருபர் பதிப்பகம்

"மனுநீதி மனித குலத்துக்கு நீதியா?" நூல் விமர்சனம் 17

அதிரைநிருபர் பதிப்பகம் | December 22, 2012 | , ,


'மனுநீதி மனித குலத்துக்கு நீதியா?' என்ற வினாவைத் தலைப்பாகக் கொண்ட ஆய்வு நூலைப் படிக்கக் கூடிய அரிய வாய்ப்பைத் தந்துள்ளார்கள் அதிரைநிருபர் பதிப்பகத்தார். அந்நூலில் இடம் பெற்றுள்ள 12 கட்டுரைகளும் நூல் வடிவம் பெறுவதற்கு முன்னரே அதிரைநிருபர் வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதை அறிந்திருந்தேன். அவற்றைக் கண்ணுறும் வாய்ப்பு கிட்டாத என்போன்றோருக்கு இந்நூல் பேருதவியாக அமைந்துள்ளது. நூலாசிரியருக்கும் நூல் பதிப்பகத்தாருக்கும் நன்றிகள் பல..

'மனுநீதி மனித குலத்துக்கு நீதியா?' நூலைப் படித்து முடித்த நான் அந்நூலைப் பற்றிய சில கருத்தோட்டங்களை அதிரைநிருபர் வலைத்தள வாசக சகோதரர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அதற்கு முன் நூலாசிரியர் தம்பி இப்ராஹீம் அன்சாரி பற்றி சில வார்த்தைகள். 40 ஆண்டுகளுக்கு முன் காதிர் முகைதீன் உயர்நிலைப் பள்ளியில் (அப்போது அதுதான் பெயர்) பட்டதாரி ஆசிரியராகப் பணியேற்ற புதிதில் நான் கண்ட நன்மாணாக்கர்கள் சிலருள் அன்சாரியும் (அப்போது அப்படித்தான் அவர் பெயரை அறிந்திருந்தேன்) ஒருவர். அன்றைய அன்சாரி படிப்பு, நடிப்பு, பேச்சு இவற்றில் சிறந்து விளங்கினார். பள்ளி ஆண்டு விழாவுக்காக நான் இயற்றிய 'ஒட்டக் கூத்தார்' இலக்கிய நாடகத்தில் சோழ மன்னன் வேடமேற்று நடித்தது என் நினைவில் நிற்கிறது.

40 ஆண்டுகளுக்குப் பிறகு ஓராண்டுக்கு முன் இப்ராஹீம் அன்சாரி என்ற பெயரில் மீண்டும் எனக்கு அறிமுகமானார். அப்போதுதான் அறிந்தேன் இப்ராஹீம் அன்சாரி என்ற பெயரில் வலைத்தளங்களில் சமூக சிந்தனை மற்றும் பொருளாதாரச் சிந்தனனகள் சார்ந்த சிறந்த கட்டுரைகளைப் பதிவு செய்து வருபவர் நமது முன்னாள் மாணவர் அன்சாரிதான் என்று மகிழ்ந்தேன், வியந்தேன்.

'மனுநீதி மனித குலத்துக்கு நீதியா?' போன்ற ஒரு படைப்பைத் தருவதற்கு அறிவும் திறமையும் இருந்தால் மட்டும் போதாது; துணிவும் மிகத்தேவை. அது இப்ராஹீம் அன்சாரியிடம் நிரம்ப இருக்கிறது எனத் தெரிகிறது. "உண்மைகளை வெளிக் கொண்டு வரும்போது விதண்டாவாதிகளுக்கும் பிற்போக்கு வாதிகளுக்கும் கோபம் வரலாம். உண்மையைச் சொல்ல ஓடி ஒளிய வேண்டியதில்லை" என்று நூலின் முன்னுரையில் குறிப்பிடும் போதே தெரிந்து விடுகிறது அவர் தம் கைவசம் நிறைய ஆதாரங்களை வைத்திருக்கிறார் என்று. தேடியெடுத்து தக்க தகவல்களைத் திரட்டிய பின்னர்தான் இத்தகைய தலைப்பைத் துணிவோடு தொட்டிருக்கிறார், பாராட்டுக்கள்.

தாம் மேற்கொண்ட முயற்சிக்கு வலுசேர்க்கும் வகையில் வால்மீகி, வள்ளுவர், திரூநீலகண்டர், பட்டினத்தார், பாரதியார், மகாத்மா காந்தி, டாக்டர் அம்பேத்கர் போன்றோர் பற்றியெல்லாம் குறிப்பிட்டுக் காட்டியுள்ளார். அதே நேரத்தில் மனுநிதீயால் மறுமலர்ச்சி கண்ட சிலரை நோக்கி 'சண்டாளச் சாமியார்கள்' என்ற தலைப்பின் வாயிலாக சாட்டையைச் சுழற்றியிருக்கிறார். அவர்களில் சிலர் நாம் வாழுகின்ற காலத்திலேயே வாழ்ந்து கொண்டிருக்கும் சந்திராசாமி, ஜெயேர்ந்திர சரஸ்வதி சாமி, நித்யானந்தா சாமி போன்றோர்.

சில வருடங்களுக்கு முன் 'பெண்களின் நிலை - அன்றும் இன்றும்' என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். அதில் அன்றைய பெண்களின் நிலைபற்றி குறிப்பிடும்போது பால்ய விவாகம், உடன்கட்டையேறுதல், தேவதாசி அமைப்பு முறைகள் பற்றிச் சாடியிருந்தேன். இந்த மூன்று பாதகங்களை பற்றி 'மனுநீதியால் மாதர் நிலை' என்ற தலைப்பிலானன் கட்டுரையில் விரிவாகவே விளக்கியுள்ளார் இப்ராஹீம் அன்சாரி.

இவற்றுடன் தேவதாசி முறை என்பது வெட்கக் கேடான அமைப்பாகும் எனக் கூறவரும் நூலாசிரியர் 10-11-1987 TIMES OF INDIA வில் வெளிவந்துள்ள ரிப்போர்ட்டை ஆதாரமாகக் கொண்டு "தேவதாசி அமைப்பு முறை என்பது உயர்சாதியினரும், பிராமண குருக்கள் அல்லது சாமியார்களும் சேர்ந்து செய்த சதியின் விளைவாகும்" எனக் கோடிட்டு காட்டுகிறார். ஈ.வெ.ரா பெரியார் போன்ற சில சமூக சீர்திருத்தவாதிகளின் தொடர் போராட்டம் காராணமாக தேவதாசி முறை தமிழ்நாட்டில் ஒழிக்கப்பட்டது. அவ்வாறு போராடியவர்களில் முக்கியமானவர் டாக்டர் முத்துலக்ஷ்மி ரெட்டி ஆவார். பல சிறப்புகளுக்கும் 'முதல்'களுக்கும் சொந்தக்காரரான டாக்டர் முத்துலக்ஷ்மி ரெட்டி 1929-ம் ஆண்டிலேயே சென்னை சட்ட மன்ற மேலவையில் தேவதாசி ஒழிப்பு மசோதாவைக் கொண்டு வந்தவர் என இப்ராஹீம் அன்சாரி தெரிவித்துள்ள தகவல் பலர் அறியாதது. டாடக்டர் முத்துலக்ஷ்மி ரெட்டி சுயமாக எழுதிய My Experience as a Legislature' என்ற நூலைப்பற்றியும் தகவல் தந்துள்ளார்.

பெண்களுக் கெதிரான மற்ற இரு கொடுமைகளாக பால்ய விவாகம், சதி எனப்படும் உடன்கட்டையேறுதலைச் சொல்லலாம். "பால்ய விவாகம் என்ற பெயரில் சிறு வயதுப் பெண் மொட்டுகளை மலரும் முன்பே மண வாழ்வுக்குப் பலியிடுவதை இந்த நீதி நூல்களும், சாஸ்திர தர்மங்களும் தடுக்கவில்லை; திருத்தவில்லை; கண்டிக்க வில்லை; கடிந்துரைக்கவில்லை, மாறாக இறைவனின் பெயரால் இவை தப்பில்லை என்று தம்பட்டம் அடிக்கின்றன" என்று ஆதங்கப்படுகிறார் ஆசிரியர். "பெண்களுக்கு எதிராக மட்டுமல்ல, உலக நாகரிகத்துக்கும் எதிராக, கணவன் இறந்தால் அவன் உடலை எரிப்பதற்கு மூட்டப்படும் தீயில் உயிருடன் இருக்கும் மனைவியும் விழுந்து சாக வேண்டும் என்ற நியதியை வைத்திருந்தது இந்த சாஸ்திரங்கள்" எனச் சாடுகிறார்.

மனுநீதியின் கைங்கரியத்தால்தானே 'தீண்டாமை' எனும் தீமை அரசு சட்டங்களையும் ஆன்றோர்களின் அறவுரைகளையும் மீறித் தாண்டவமாடிக் கொண்டிருக்கிறது. அண்மைக்கால எடுத்துக் காட்டாக தர்மபுரிச் சம்பவத்தைச் சொல்லலாம்.

தர்மபுரியில் மூன்று கிராமங்களில் தலித் மக்களின் வீடுகள் தாக்கித் தகர்க்கப்பட்டன; வாசல்களில் நின்ற வாகனங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன; அவ்வீடுகளிலுள்ள பணம், விலை மதிப்புள்ள நகைகள், பொருள்கள் கொள்ளையடிக்கப்பட்டன. இச்சம்பவம் தீண்டாமைக் கொடுமையின் ஒரு கோரமான வெளிப்பாடேயாகும். இவற்றையெல்லாம் பார்க்கும்போது வன்கொடுமை தடுப்புச் சட்டம் சரியாக அமல்படுத்தப்படுகிறதா ? என்ற ஐயம் நமக்கு எழுகிறது.

தமிழகத்தில் வன்கொடுமைச் சட்டம் சரியாக அமலாகாதது பற்றி நீதியரசர் மோகன் அவர்களின் தலைப்யிலான குழுவின் விசாரணை அறிக்கை கீழ்கண்டவாறு கூறுகிறது:

"குறைவான எண்ணிக்கையில் வழக்குகள் பதிவாகி இருப்பதைக் கணக்கில் கொண்டு முடிவுக்கு வரவேண்டுமென்றால், தமிழகத்தில் தீண்டாமை கொடுமை இல்லை; தலித் மக்கள் மீது எந்த கொடுமையும் இழைக்கப்படவில்லை என்றுதன் முடிவு செய்ய வேண்டும். ஆனால் இது உண்மையல்ல என்பதை நாம் அனைவரும் அறிவோம். என்வே வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை சரியான முறையில் அமலாக்கிட வேண்டும் என்றே எங்கள் விசாரணைக் குழு கருதுகிறது" இதைத்தானே 'அரச நீதீ அலங்கோலம்' என்ற தலைப்பிலான கட்டுரையில் அன்சாரி சொல்லிக் காட்டுகிறார்.

முதல் 10 கட்டுரைகளின் வழியாக மனுநீதி மனித குலத்துக்கு நீதியல்ல என்பதை நிறுவி விட்டு 'சாக்கடையை விடுத்து சந்தனப் பொய்கைக்கு' என்ற கட்டுரை வாயிலாக அழைப்புப் பணியைச் செய்துத் தன் கடமையை நிறைவேற்றியுள்ளார் நூலாசிரியர். அழைப்புப் பணியைச் செய்திட ஒவ்வொரு முஸ்லீமும் தன்னைத் தகுதியாக்கிக் கொள்ள வேண்டும் என்றும், தீன் வழி நின்று மற்றவர்களையும் தீனின் பக்கம் அழைக்க வேண்டும் என்றும், ஒன்றுபட்ட சமுதாயமாக இஸ்லாமிய சமுதாயம் திகழ வேண்டும் என்ற கருத்துகளையெல்லாம் 'எமது கடமை' என்ற தனது கடைசிக் கட்டுரையில் பதிவு செய்துள்ளது பாராட்டத்தக்கது. என்ன குறிக்கோளோடு கட்டுரைகளைப் பதிவு செய்தாரோ அந்தக் குறிக்கோள் குறையின்றி நிறைவேறிட எல்லாம் வல்ல அல்லாஹ்வை இறைஞ்சுகிறேன்.

S.K.M.ஹாஜா முகைதீன் M.A., B.Sc., B.T. 
[முன்னாள் தலைமை ஆசிரியர், கா.மு.மே.பள்ளி]

கா.மு.மே(ஆ).பள்ளி தலைமை ஆசிரியர் - காணொளி 21

அதிரைநிருபர் பதிப்பகம் | December 04, 2012 | , , , ,


அதிரை மக்களின் கல்விக் கண் திறந்த பாரம்பரிய மிக்க கல்வி நிலையங்களை கொடையாக வழங்கிய பெருந்தகை கல்வித் தந்தை மர்ஹூம்  ஹாஜி எஸ்.எம்.எஸ்.ஷேக் ஜலாலுதீன் அவர்களை நன்றியுடன் நினைவு கூர்ந்தவர்களாக !

நமது காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதிதாக தலையாசிரியர் பொறுப்பை ஏற்றிருக்கும் சகோதரர் A.மஹ்பூப் அலி MSc.,  MEd., Mphil., அவர்களின் நேர்காணல் காணொளியும் அதைத் தொடர்ந்து அதே பள்ளியில் தலையாசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்ற, ஏராளமான மாணவர்களின் மனம் வென்ற மரியாதைக்குரிய ஆசான் S.K.M.ஹாஜா முகைதீன் M.A., BSc., B.T. அவர்களின் நேர்காணல் காணொளியும் இங்கே பதிவதில் பெரும் மகிழ்வடைகிறோம்.



புதிதாக பதவி ஏற்றிருக்கும் தலைமையாசிரியருக்கு முன்னால் தலைமை ஆசிரியரின் ஆலோசனைகள் இந்தப் பதிவின் முத்தாய்ப்பாக அமைந்திருக்கிறது என்றால் அது மிகையில்லை.


அதிரைநிருபர் குழு


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு