வீட்டுக் கோழி முட்டையிட,
விடிந்த பின்னர் தாய்க்கோழி
கூட்டை விட்டு வெளிவந்து
கூடிச் சென்ற(து) இணையோடு.
தம்பி அத்னான் அப்போது
தாவிப் பார்த்தான் முற்றத்தை
எம்பிப் பாய்ந்த வீட்டுமுயல்
ஏங்கிப் பார்த்தது முட்டையினை.
‘ஆகா என்னைப் போல்வெண்மை!
அழகாய் உருட்டி விளையாட
வாகாய்க் கிடைத்த பொருளாகும்
வாராய்!’ என்றது வெண்முயலும்.
வாப்பா ஃபைசல் அன்போடு
வாங்கித் தந்த முயல்ஜோடி
கூப்பா டிட்டுச் சென்றதனைக்
கூர்மை யாக அவன்பார்த்தான்.
பெரியம் மாவை எழுப்பாமல்,
பேச்சும் குரலும் காட்டாமல்,
தெரியும் முயல்கள் விளையாட்டைத்
திளைத்து நின்று பார்த்திட்டான்.
உருட்டிய முட்டை பாதியிலே
உடைந்து போக மறுமுயலும்
‘விருட்’டென் றோடிப் பாய்ந்திடவும்
வீணாய் வழுக்கி வீழ்ந்ததுவே!
தன்னை மறந்து விளையாட்டைத்
தனிமை யாக அத்னானே
சன்னல் திறந்து கண்டவுடன்
சாடி விழுந்து சிரித்தானே!
அதிரை அஹ்மது
விடிந்த பின்னர் தாய்க்கோழி
கூட்டை விட்டு வெளிவந்து
கூடிச் சென்ற(து) இணையோடு.
தம்பி அத்னான் அப்போது
தாவிப் பார்த்தான் முற்றத்தை
எம்பிப் பாய்ந்த வீட்டுமுயல்
ஏங்கிப் பார்த்தது முட்டையினை.
‘ஆகா என்னைப் போல்வெண்மை!
அழகாய் உருட்டி விளையாட
வாகாய்க் கிடைத்த பொருளாகும்
வாராய்!’ என்றது வெண்முயலும்.
வாப்பா ஃபைசல் அன்போடு
வாங்கித் தந்த முயல்ஜோடி
கூப்பா டிட்டுச் சென்றதனைக்
கூர்மை யாக அவன்பார்த்தான்.
பெரியம் மாவை எழுப்பாமல்,
பேச்சும் குரலும் காட்டாமல்,
தெரியும் முயல்கள் விளையாட்டைத்
திளைத்து நின்று பார்த்திட்டான்.
உருட்டிய முட்டை பாதியிலே
உடைந்து போக மறுமுயலும்
‘விருட்’டென் றோடிப் பாய்ந்திடவும்
வீணாய் வழுக்கி வீழ்ந்ததுவே!
தன்னை மறந்து விளையாட்டைத்
தனிமை யாக அத்னானே
சன்னல் திறந்து கண்டவுடன்
சாடி விழுந்து சிரித்தானே!
அதிரை அஹ்மது