ஆறு
மலையருவி மழைமகளைச் சேர்த்துக் கொண்டு
மண்ணுலகில் பசுமையினை விளைப்ப தற்காய்
நிலைமாறி ஆறுகளாய்ப் பாய்ந்து வந்து
நீர்நிலையாய் அணைகளுமாய்த் தேங்கி நின்று
விலைபொருளாய்த் தானியங்கள் கிழங்கு காய்கள்
வெகுமதியாய் அன்புடனே அள்ளித் தந்து
நிலையான மறுமைக்கு மீளு தல்போல்
நீல்கடலைச் சென்றடைவாள் ஆற்று மங்கை.
அதிரை அஹ்மத்


