Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in
Showing posts with label பெண்கள்ம் மார்கெட். Show all posts
Showing posts with label பெண்கள்ம் மார்கெட். Show all posts

வெலக்காத்தெரு (பெண்கள் கடைத்தெரு) - இன்று ஒரு தகவல் 40

அதிரைநிருபர் பதிப்பகம் | July 29, 2012 | , , ,


இப்படி படிக்கிற யாருக்குமே இதன் அர்த்தம் நேரடியாக தெரியுமா என்பது கேள்வியானாலும், ஆனால் அந்த இடம் மட்டும் நன்றாகத் தெரியும். எனக்கும் தெளிவில்லைதான், ஒரு சமயம் “விலைகாரத் தெரு”வாக இருக்குமா அல்லது வெளியாட்கள் அதிகம் வந்து கடைவிரித்து வியாபரம் தெரு ஓரம் செய்வதனால் ”வெளிக்காரர்” மருவி ”வெலக்காத்தெரு”வானதோ ? இதுக்கு போய் ஏன் இப்படியான ராக்கெட் சயின்ஸ் ரேன்ஞ்சுகு ஆராய்சியெல்லாம் என்ற கேட்பது காதில் விழுகிறது. சரி சரி இத்தோடு இந்த ஆய்வை நிறுத்திடுவோம். என்னோட இந்த கருத்துக்கு மேலே நீங்களும் வரக்கூடாது நானும் வரமாட்டேன், இரத்தம் வர்ராப்லயா இருக்கு ?!!!

இங்கே எங்க கடற்கரைத் தெருவில் உள்ள “வெலக்காத்தெரு”வை சொல்லியே ஆகனும் ஏனென்றால், மீன் தோன்றி இறால் வலையில் சிக்காத காலத்திற்கு முன் தோன்றியது (!!!) கடற்கரைத் தெரு பெண்கள் வெலக்காத்தெரு. ஒரு ஊரின் திறவு வாயில் அதன் கடற்கரைப் பகுதியைத்தான் பெரும்பாலும் குறிக்கும். பட்டுக்கோட்டைக்கு எப்படி என்று யாரோ முனுமுனுப்பது ஏதோ கொஞ்சம் ஒவராத்தான் போய்ட்டோமோ என்ற உணர்வை தருகிறது. அதன்படி பல தெருக்களுக்கு தாய் தெருவான கடற்கரைத் தெருவின் பெண்கள் மார்க்கெட்டை அறியாத நடுத்தர வயதினர் குறைவே. அந்த அளவிற்கு வசதி வாய்ப்புகளுக்காவும், புளிய மரத்தை வெறுத்தும், கடற்கரைத் தெருவின் உப்பு வீட்டை அரித்து அப்புறபடுத்தி விடும் என்று பயந்தும் ஊரின் மற்ற பகுதிகளுக்கு புலம்பெயர்ந்து சென்றவர்களும் இந்த லேடீஸ் மார்க்கெட்டை மறக்காமல் ஆட்டோபிடித்து வந்தாவது ஒரு கெளக்கமீனையோ, உயிர் கெண்டை மீனையோ வாங்கி செல்வது இன்றும் கண்கொள்ளா காட்சி!


எனக்கு தெரிந்தவரை தமிழ்நாடு அளவில், அட ! இந்திய அளவில் ஏன் உலக அளவில் கூட பார்த்தோம்ண்டா(ங்க) பெண்களுக்காக இயங்கும் ஒரு மீன் மார்க்கெட் கடற்கரைத் தெரு பெண்கள் வெலக்காதெருதான் (வேற எங்கேயும் இருந்தாலும் இதான் ரோல் மாடலாக இருக்ககூடும் !!! நம்பும்படியாக இருக்கா !). இதை கின்னஸ்காரனுங்ககிட்ட கொஞ்சம் அமெரிக்கவுல இருக்கிற சகோ. கிரவுன் எடுத்து சொன்னா நல்லது அவனுங்க தானே கண்ணுல ஒத்திக்கொள்வதையும் / கண்றாவியையும் போடுறானுங்க.

எனக்கு தெரிந்தவரை வெலக்காத்தெரு மார்க்கெட்டின் நீண்ட கால கதாநாயகி செல்லம்மா ஆச்சிதான். அந்த ஆச்சி குட்டானை (பனை ஓலையில் செய்தது) தலைகீழா கவுத்தி அதில் சோளக்கதிறு, நிலக்கடலை, வெள்ளரிப்பிஞ்சு, பயறு, நடுவிலே மாங்கய் தூண்டு, பக்கத்தில் அவிச்ச சக்கரவள்ளிகிழங்கு, அட போங்க… ஒரு பெரிய சூப்பர் மார்கெட்டின் செல்ஃப்லேயே இவ்வளவு சின்ன இடத்தில் இத்தனை நேர்த்தியாக அடுக்கி வைத்திருக்க முடியாது, அந்த அளவிற்கு அடுக்கி வைத்து இருக்கும். ஏதோ ஒரு பக்கத்து கிராமத்தில் இருந்து பொடி நடையாக வரும் அந்த குமரி(க்)கிழவி, சில்லறையாக குடுத்தால் சிரித்து கொண்டே பொருள் கொடுக்கும் செல்லம்மா. பெரிய பணத்தை கொடுத்தா “டேன்ஞ்ர் மூஞ்சு” வச்சிக்கிட்டு ஏதோ எதிரியை பார்ப்பதுபோல் பார்க்கும், பல வருடங்கள் தன் ஜீவிதத்தை அந்த மார்கெட்டிலேயே ஓட்டிக் கழித்தது அந்த இளம்கிழவி !


அடுத்த எனக்கு தெரிந்த மிகப்பிரபலமான காய்கறி வியாபாரி. போஸ்ட் ஆபீஸ் சல்மா ஹோட்டல் (மர்ஹும் சாகுல்ஹமீது) அவரின் தாயார், மிக கஷ்டப்பட்டு காய்காறி வியாபாரம் செய்து தன் குழந்தைகளை காப்பாற்றினார்கள், அனைத்து காய்கறிகளும் பிரிட்ஜ் இல்லாமலேயே ஃபிரஷ்-ஷாக இருக்கும் அவர்களின் கடையில்.

அப்புறம் கொடுவா மீன் விற்க்கும் வியாபாரிகள், கில்லட் மெசின் கண்டுபிடித்த ஜெர்மன் ஆசாமிகள் நம்ம ஊரின் கொடுவாமீன் பிஸ்க்கை (பீஸ்) பார்த்தா அவர்களின் காப்புரிமைக்கு வேட்டு வைத்து விடுவோமோ என்று தலைதெரிக்க ஓடிவிடுவார்கள். அந்த அளவிற்க்கு முடியைவிட சிறிது அகலமாக பீஸை வெட்டுவதில் கில்லா(ட்)ட்டிகள் நம்ம ஆட்கள். சரிங்க! உங்களிடம் ஒரே ஒரு கேள்வி (எனக்கும் தெரியாமாத்தான் கேட்கிறேன்)  அது ஏன் மீன் வெட்டியதும் அதன் மீனின் இரத்ததை தடவுவதன் மர்ம்ம் என்னங்க.

அப்புறம் மண் புரட்டி இறால் விற்கும் வியாபாரிகள், தரகர் தெரு ஜெய்லானி கடை, டெம்பரவரியாக ஐஸ் மோர் விற்கும் ஸ்கூல் பசங்க இப்படியாக பெண்கள் தலைகள் மட்டுமே தெரிய களைக்கட்டி நிற்கும் கடற்கரைத் தெரு வெலக்காத் தெரு. முன்பெல்லாம் ஆண்கள் அங்கே நுழைந்து விட்டால், அந்த செய்தி புளிய மரத்தடியில் குச்சி ஐஸ் சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் சமுகக்காவலர்களுக்கு எட்டியதும் உள்ளே நுழைந்தவருக்கு சில சமயம் அவருக்கு அபராதம் அல்லது தர்ம அடி கொடுப்பார்கள். அந்த காலமெல்லாம் ஐஸ் போல கரைந்து விட்ட பிரம்மை மனத்திரையில் ஓடுகிறது. பெண்களின் நெகோஷியஷன் திறமைகளை அங்கே காணலாம், ஆனால் இப்போது அப்படி இல்ல பல்லு உள்ளவன் பக்கோடா திண்கிறான் என்பதுபோல் பணம் உள்ளவன்(ர்) பெரியமீன் சாப்பிடுறாங்க, பணம் இல்லாதவன்(ர்) ”பொடிபட்டு” வாங்கி வந்து அவியல் வைச்சு தான் வாழ்வை வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார்கள். இரண்டு பேரின் வயிறும் நிரம்பித்தான் போகுது.

சரிங்க ! ஒரு சின்ன மேட்டரை எவ்வளவு(தான்) சவ்வு போல இழுத்தாலும் இதற்கு மேல வெலக்காத்தெருவப் பத்தி எழுத முடியல. என்னுடைய சீனியர்கள் (கவிக்காக்கா, சாவன்னா காக்கா, ஜாஹிர் காக்கா இடிசி.....) இதனைக் கொஞ்சம் சிரியஸாக எடுத்துகொண்டு பின்னூட்டத்தில் போட்டா அது செல்லம்மாவுக்கு நாம் கொடுக்கும் சில்லரை காசுகளின் சந்தோஷம் முகத்தில் காணலாம் உத்திரவாதம்!

ச்ச்சும்மா டைம்பாஸூக்காக… (எல்லோரும் சீரியஸா எழுதுறாங்களே அதனாலதானுங்க இப்புடி…)

முகமதுயாசிர்
நிழற்படம் உதவி : S.ஹமீத்


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு