திரைப்படங்களில், ஊடகங்களில் மலேசியா என்றாலே இரட்டைகோபுரமும், மூக்கு சப்பையான சில சீனப்பெண்மனிகளும், அல்லது கொஞ்சம் பிசியான கோலாலம்பூர் விமான நிலையமும் மட்டுமே காண்பிக்கப்படுகிறது. அதையும் மீறி நிறைய விசயம் இந்த மலேசியாவிலும் இருக்கிறது.
ஒட்டு மொத்த வருடத்தின் அத்தனை வார இறுதியிலும் ... இந்த இடத்துக்கு போகும் வார இறுதியிலும் எனக்கு பிடித்த இந்த ரிசார்ட். செராத்திங் எனும் இடம். கடற்கரை காற்றில் அமர்ந்து ரசிக்க... கடற்கரை இந்த இடத்திலிருந்து 30 மீட்டர் தொலைவுதான். இரவின் நிலவு வெளிச்சத்தில் கடற்கரை மணலின் சலவைக்கு போட்ட சுத்தம் மனது நிறைந்து இருக்கும்.
மலேசியா மழையால் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்ட நாடு.இதை எழுதும்பொது கூட மழை பெய்கிறது. அதனால் அருவிகளுக்கும் பஞ்சம் இல்லை. இது Cameron Highlands ல் இருக்கிறது. [மலைக்கு போகும் வழியில் இருக்கிறது]. நான் இதில் குளிக்காமல் மலைக்கு போனது மிகவும் குறைவு.
சாலையுடன் சேர்ந்த வயல்களும்...சாலை ஒரம் விற்கப்படும் துரியான் பழமும்.... இதையெல்லாம் ரசிக்காமல் சிலர் ஹோட்டல் ரூமில் படுத்து டி.வி யே கதியென்று கிடக்கும்போது பேசாமல் இவர்கள் வீட்டிலேயே இருந்திருக்களாம் எனத்தோன்றும்.
இரவு மார்க்கெட் என்பது மலேசிய வாழ்க்கையில் ஒன்றிப்போனது. ஒவ்வொரு இடங்களிலும் வாரத்துக்கு ஒருமுறை இந்த மார்க்கெட்.
கொஞ்சமும் பிசியில்லாத ஊரில் அங்குள்ள மக்களுடன் சேர்ந்து டீ குடித்து..கதை பேசி , பள்ளிவாசலுக்கு போய் தொழுகையில் கலந்து பாருங்கள்..உங்கள் வாழ்க்கை எவ்வளவு இனிமையானது என்பது விளங்கும். [ இது தெரியாமல்தான் தினம் ஆண்டவனை குறை சொல்லிக்கொண்டிருக்கிறோம் ..சிலர்/பலர் மட்டும் ]
பினாங்கு..சாலை ஒர டீக்கடை ...நம் முன்னோர்களின் தியாகம் / அழிச்சாட்டியம் சொல்லும் இடம். இதில் "தியாகம்" என்று சொல்லக்காரணம்..வெளிநாட்டுக்கு போய் சம்பாதித்து தனது இளமை எல்லாம் உழைப்புக்கே செலவிட்டவர்கள். "அழிச்சாட்டியம்" என நான் சொல்லக்காரணம்...வெளிநாட்டுக்கு சம்பாதிக்கபோய் குடும்பத்தை சரியாக கவனிக்காதவர்கள்.
நம்புங்கள் ..இது ரயில்வே ஸ்டேசன் தான். பிச்சைக்காரர்களின் ஆதிக்கம் இல்லாத, தண்டவாளங்களில் அசுத்தம் செய்யாத, சாப்பிட்ட மிச்சத்தை நடைபாதையில் எறியாத மக்கள் இருக்கும் ஊரில் இருக்கும் ரயில்வே ஸ்டேசன்.
ZAKIR HUSSAIN









