அதிரைநிருபரில் தொடர்ந்து வெளிவரும் சிறுவர்களுக்கான காணொளி அணிவகுப்பில், அதிரைச் சிறார்களின் தனித் திறமைகளை வெளிக் கொணர்வதில் மகிழ்வடைகிறோம்.
சிறார்களின் திறமைகள் தொலைக்காட்சியிலும், சீரழிக்கும் சினிமாக்களிலும் சிதறடிக்கப்படுவதை கண்கூடாக நாம் பார்த்து வருகிறோம், அவ்வகையில் இல்லாமல் நம்முடைய சிறார்கள் தங்களுக்கென்று இருக்கும் திறமைகளை நல்ல முறையில் பயன்படுத்தி, நல்ல கருத்துக்களையும், ஒழுக்க நெறிகளையும் போதிக்கும் வகையில் வெளிக்காட்டினால் அவர்களின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும்.
ஏற்கனவே அதிரைநிருபரில் தனது இனிமையான குரலால் வாசகர்களின் உள்ளம் தொட்ட மாஸ்டர் A.முஸ்தகீமுடைய மற்றுமொரு பாடல் காணொளி உங்களனைவரின் பார்வைக்காக இதோ !
காணொளி பகிர்வு : லெ.மு.செ.அபுபக்கர்
அதிரைநிருபர் குழு
அதிரைநிருபர் குழு