அல்லாஹ்வின் திருபெயரால்..
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
புனிதமிக்க ரமளான் மாதம் குதூகலத்துடன் தொடங்கிவிட்டது, அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும்.
கடந்த 14.07.2012 அன்று அதிரை சித்தீக் பள்ளியில் மிகச் சிறப்பாக நடந்து வரும் மக்தப் மதர்சாவின் ஆண்டு நிறைவு விழா மற்றும் மாணவர்களின் தனித் திறன் காட்டும் மார்க்க நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
வினாடிவினா, கிராஅத், பயான் போட்டிகள் மிகச் சிறப்பாக நடைபெற்றது. போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது, போட்டிகளில் முதல் மூன்று இடங்களை பெற இயலாத மாணவர்களுக்கு ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட்டது.
முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவர்களில் முதல் மூன்று இடங்கள் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும், கேடையமும் வழங்கப்பட்டது.
முக்கிய விடையமாக தவறாமல் ஐவேளை தொழுகைக்கு வருகை தந்த மாணவன் இம்ரானுக்கு சிறப்பு பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது.
மாணவர்களுக்கு பரிசுகளை அப்துல் காதர் ஆலிம் அவர்கள் வழங்கி ஆண்டுவிழா நிகழ்ச்சியை சிறப்பித்தார்கள்.
பரிசளிப்பு நிகழ்வுக்கு முன்பு ஹைதர் அலி ஆலிம் அவர்கள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான சிறப்பு சொற்பொழிவு ஆற்றினார்கள்.
சிறப்பாக நடந்தேரிய நிகழ்வுகளின் ஒலிப்பேழையாக, மாணவச் செல்வங்களின் அழகிய குரலில் கிராஅத் மற்றும் மார்க்க சொற்பொழிவுகளின் ஒரு பகுதியை கேட்டு மகிழுங்கள் இன்ஷா அல்லாஹ்.


