என் ஊர், என் சங்கம், என் இயக்கம், என் வீடு ஆனால் (கதவு) எண்களில்லை... பட்டா இல்லை !?
கடந்த 13 வருடங்களுக்கு முன்னால் ஆங்காங்கே மின் அஞ்சல் குழுமம் / குழுக்கள் சிதறிக் கிடந்த நட்புகளை, சொந்தங்களை, புது உறவுகளை ஒன்று சேர்த்தது. அதாவது பொதுவான பொழுது போக்கு பூங்காவுக்குள் வருதுபோல் அல்லது கண்காட்சிக்கு வந்து தகவல்கள் பகிர்ந்து கொள்வது போல் இருந்தது. நேற்று விட்டு சென்ற இடத்தில் வேறு யாரெல்லாம் உட்கார்ந்தார்கள் கண்டு கழித்தார்கள் என்று மறுமுறை வந்தால் தெரிந்து கொள்ள முடியும். இங்கேயும் வழிகாட்டியோ அல்லது பொறுப்பாளரோ இருப்பார் அசிங்கம் செய்பவர்களை வெளியில் தள்ளிவிடவும் செய்வார் அல்லது தட்டிக் கேட்கவும் செய்வார்.
பொது இடம் என்பதால் நாவடக்கம் / வார்த்தைகளில் அடக்கம் கையாளப் படுவதுண்டு, அதே நேரத்தில் ஆக்கபூர்வமான செயல்களும் சிறப்பாக நடந்தேறியதும் உண்டு.
ஆனால் இன்றைய சூழலில் அப்படியான மின் அஞ்சல் குழுமம் / குழுக்களின் பங்கு குறைந்து வருகிறது, இதற்கு பலகாரணங்கள் இருந்தாலும் மிக முக்கியமாக இருப்பது தனிக் குடில் blog எனப்படும் வலைப்பூக்கள். இவைகளின் ஆதிக்கத்தினால் ஆங்காங்க வேண்டியவர்கள் தனக்கென தனி வீடு கட்டிக் கொண்டு அங்கே நடத்தும் கொட்டங்கள் ஏராளம், என் வீடுதானே நான் எதனையும் செய்வேன் எப்படி வேனும்னாலும் இருப்பேன், இதுதான் என் வாதமென்று தன்னிச்சையாக செயல் படுபவர்களும் உண்டு.
கிடைத்திருக்கிற இடத்தில் இலவசமாக வீடுகட்டி நல்லது செய்பவர்களும் ஏராளம். அதுமட்டுமா இப்படி கட்டிக் கொண்ட தனிக் குடிலில் சங்கங்கள், கட்சிகள், இயக்கங்கள் வாடகை கொடுக்காமல் தன்னிச்சையாவோ அல்லது பொது நலனோடு செயல் பட்டும் வருகிறார்கள்.
சிதறிக் கிடந்தவர்கள் ஒரு வலைக் கூட்டுக்குல் இருந்து மறைந்து, ஆளாளுக்கு வீடுகட்டிக் கொண்டு, சிலர் கதவைபூட்டிகிட்டு அடிக்கும் கொட்டம், மற்றும் சிலர் கதவை திறந்து போட்டுக் கொண்டு அடிக்கும் கொட்டம், வேறு சிலரோ பினாமியாக (முகமூடியுடன்) இலவசமாக கிடைத்திருக்கிறதே என்று படுத்தும் பாடு அதிகம் அதிகம் அதிகம்.
சரி, இந்த இலவச (வீட்டு மணைப்) பட்டா இல்லாத வீடுகளுக்கு இடம் கொடுத்தவர் திடீரென்று பிடுங்கிக் கொண்டால் என்ன செய்வார்கள் இவர்கள் ?
வேறு வழி இருந்தா யாராச்சும் சொல்லுங்க....
- அபுஇபுறாஹிம்
- அபுஇபுறாஹிம்



