அதிரையில் இன்றைய தலையாய பிரச்சினையாக இருப்பது அடிப்படை சுகாதாரமே, இதனை மனதில் கொண்டுதான் தேர்தல் களத்தில் முன்னின்றதாக அதிரை பேருராட்சித் தலைவர் S.H. அஸ்லம் அவர்கள் அதிரைநிருபர் குழுவுக்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார்.
பதவி ஏற்பு நடந்ததும் முதல் வேலையாக சுகாதரத்திற்கு முன்னுரிமை கொடுத்து செயல்களை துவக்க இருப்பதாகவும், அன்றாடம் எதிர் நோக்கும் சவால்களையும் பிரச்சினைகளையும் மையமாகக் கொண்டு செயல்பட முடிவு செய்திருப்பதாக மேலும் தெரிவித்தார்.
நன்றி மறப்பது நன்றன்னு என்பதற்கினங்க வெற்றிக்காக உழைத்தவர்கள் அவர்களின் சுயலாபத்திற்காக அல்லாமல் ஊர் நலனில் அக்கறை கொண்டு அவர்கள் உழைத்ததன் பலனை நிச்சயம் அதிரை மக்களுக்கு கிடைக்கச் செய்வதில் மும்முரமாக ஈடுபடப் போதவகாவும் தெரிவித்தார்.
தோல்வியைத் தழுவிய சகோதரர்களை காலச் சூழல் அறிந்து அவர்களை சந்திக்க தயாராக இருப்பதாகவும் அவர்களோடு ஒன்றினைந்து செயல்படவும் தயராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
பேரூராட்சித் தலைவர் S.H.அஸ்லம் அவர்களின் வெற்றிக்காக பாடுபட்ட நண்பர்களோடு தொடர்பு கொண்டு பேசுகையில், பதவிகள் இல்லா நாட்களில் துணிவே பாதை என்றமைத்து நற்காரியங்கள் செய்தவருக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்திருக்கிறது தொடர்ந்து ஊருக்காக செயல்பட்டு நிச்சயம் சாதிப்பார் என்று நம்பிக்கை தெரிவித்தனர்.
- அதிரைநிருபர் குழு


