அதிரை மக்களுக்கு தங்களது வருமானத்தில் ஒரு பெரும் பங்கை வீடு கட்டுவதில் செலவழித்து விட்டு அதன் பின்னர் காலம் முழுவதும் சம்பாதித்தேன் அது எங்கே சென்றது என்று தேடுவதிலேயே மீதமிருக்கும் காலத்தை கழிக்க வேண்டிய நிலை என்பது நிதர்சனமான உண்மை !
அதிருக்கட்டும் ஒரு பக்கம், நேற்று ஒரு மையத் இன்று ஒரு மையத் நாளை ஒரு மையத் என்று பழகிய நமக்கு எவ்வளவுதான் பாசமிக்கவர்களாக இருந்தாலும் அவர்களின் இறப்புக்கு பின்னர் அவர்களை ஜனாஸா என்றுதான் அழைக்கிறோம் அப்பேர்பட்டவர்களையே, சிறிது நேரத்தில் அடக்கம் செய்துவிட்டு வந்து நமது மற்ற வேலைகளை செய்யத் தொடங்கி விடுகிறோம்.
கல்லறை கட்ட எங்கிருந்துதான் புனிதமானவர்கள் என்ற பெயரை தேர்ந்தெடுக்கிறார்களோ தெரியவில்லை, இருக்கும் இரண்டு சிமின்ட் கல்லறைகளுக்கும் சுற்றி எழுப்பப்பட்டிருக்கும் கட்டிடம் ஊருக்கே ஒரு சாபக் கேடு என்று காலம் காலமாக நாம் புலம்பி வந்தாலும். சமீபத்தில் வெட்கக் கேடான கேவலமான காரியத்தை நம் கண்முன்னாலே நடத்தியிருக்கிறது ஒரு கூட்டம்.
மக்களின் மடமையை பயன்படுத்தி அவர்களின் மூட நம்பிக்கைக்கு புகைமூட்டி அதில் குளிர்காய எடுத்துக் கொண்ட ஆயுதம்தான் இந்த புதிய கல்லறை, அதுவும் ஏற்கனவே இருக்கும் கல்லறைக் கட்டிடத்திற்கு அருகிலேயே புதியதொரு கல்லறை...!!!
அந்தோ!! என்ன கேடு இந்த கல்லறை வணங்கிகளுக்கு !? எப்படி வந்தது இந்த துணிவு !? ஏன் இன்னும் இதனை விட்டு வைத்திருக்கிறார்கள் நமதூர் சகோதரர்கள்...!?
இதற்கு என்னதான் காரணம் !? தீர்வுதான் என்ன ?
வாருங்கள் விவாதிக்கலாம், தனிமனித சாடல் இன்றி... நேர்மையாகவும், இறையச்சத்துடனும் கருத்துக்களை எடுத்து வையுங்கள் இன்ஷா அல்லாஹ் !
வரம்பு மீறும் கருத்தாடல்கள் நெறியாளரின் பார்வைக்கு வரும்பட்சத்தில் உடணடியாக நீக்கம் செய்யப்படும் !
அதிரைநிருபர் பதிப்பகம்