இன்று 26-11-2012 அதிரை பள்ளிகளுக்கிடையே மாணவிகள் பிரிவுக்கான வினாடி வினா போட்டி மிகச் சிறப்பாக இமாம் ஷாஃபி (ரஹ்) மெட்ரிக் பள்ளியில் நடந்தது.
மாணவிகள் ஆர்வமுடனும் துடிப்புடனும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தார்கள்.
நிகழ்வின் தலைமை மற்றும் அறிமுக உரையை காதிர் முகைதீன் கல்லூரி முன்னால் முதல்வர் பேராசிரியர் அப்துல் காதர் M.A. Mphil. அவர்கள், அவர்களுக்கே உரிய பாணியில் கம்பீரமாகவும் உணர்வுபூர்மாகவும் ஆற்றினார்கள்.
மாணவிகளுக்கான வினாடி வினா போட்டியை திறம்பட நடத்தியவர்கள் பேராசிரியை தஸ்லீமா M.A. Mphil., பேராசிரியை ஆயிஷா மரியம் MSc., Mphil., BEd.
போட்டியில் வெற்றி பெற்ற பள்ளிகள் விபரம்
முதல் பரிசு : ஆக்ஸ்ஃபோர்ட் மெட்ரிக் பள்ளி
பரிசு தொகை: ரூ.5,000/-
வழங்கியவர்கள்: அல்நூர் ஹஜ் சர்வீஸ்
இரண்டாம் பரிசு: இமாம் ஷாஃபி (ரஹ்) மெட்ரிக் பள்ளி
பரிசு தொகை: ரூ 3,000/-
வழங்கியவர்கள்: ஷப்னம் மினி டவர்ஸ்
மூன்றாம் பரிசு: அரசினர் பெண்கள் மேல் நிலைப் பள்ளி
பரிசு தொகை: ரூ 2,000/-
வழங்கியவர்கள்: ஃபேமிலி மார்ட் மற்றும் ஃபேமிலி ரெஸ்டரண்ட்
மேலும் வினாடி வினா நிழ்வை சிறப்பித்தவர்கள் : மூத்த சகோதரர்கள் முஹம்மது ஃபாரூக், S.K.M.ஹாஜா முகைதீன், இபுராஹீம் அன்சாரி, நூர் முஹம்மது மற்றும் இமாம் ஷாஃபி (ரஹ்) மெட்ரிக் பள்ளி தலைமை ஆசிரியர் ஆஃப்தா பேகம், கலந்து கொண்ட பள்ளி ஆசிரியர்கள்.
நிறைவாக நன்றியுரை: M.தாஜுதீன், அதிரைநிருபர் அமீர்.
நிகழ்சிக்கான போக்குவரத்து ஏற்பாடுகளை மிகச் சிறப்பாக செய்து, நிகழ்ச்சி வெற்றிகரமாக நடைபெற பேருதவியாக இருந்த சகோதரர் ஹசன் (அபு இஸ்மாயில்) மற்றும் நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடுகளுக்கு உதவி செய்த சகோதரிகள் Y. சபீரா , M.S. ராபியா ஆகியோருக்கும், இமாம் ஷாஃபி (ரஹ்) நிர்வாகத்திற்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
அற்புதமான இந்த நிகழ்வின் காணொளி இதோ உங்கள் பார்வைக்கு
முதல் பரிசு : ஆக்ஸ்ஃபோர்ட் மெட்ரிக் பள்ளி
இரண்டாம் பரிசு: இமாம் ஷாஃபி (ரஹ்) மெட்ரிக் பள்ளி
மூன்றாம் பரிசு: அரசினர் பெண்கள் மேல் நிலைப் பள்ளி
அடுத்த போட்டி நாளை (27-11-2012) மாணவர்களுக்கிடையே நடைபெற இருக்கிறது இன்ஷா அல்லாஹ்.
அதிரைநிருபர் குழு