அதிரை சகோதரர்களின் புதிய தொழில் முனைவோர் என்ற வரிசையில் அதிரைநிருபரில் தொடர் பதிவுகளாக வெளிவருவதை அறிவீர்கள், இவ்வாறான பதிவுகள் சுயதொழில் முனைவோரை ஊக்கப்படுத்துவதற்கே அன்றி தனிப்பட்ட விளம்பரமாக அல்ல.
இன்றைய இளைய சமுதாயத்தினரை நாம் நிச்சயம் வரவேற்பதிலும் ஊக்கப்படுத்துவதிலும் முன் நிற்க வேண்டும் என்பதை மீண்டும் நினைவூட்டுகிறோம்.
அதிரையில் புதியதோர் உதயம் அதிரை ஃபுட் கார்னர் [ AFC ] !
அதிரையில் முதன்
முறையாக 08-03-2013 தேதி மாலை முதல் அதிரை பேரூராட்சி எதிரில் புதிய உதயமாக அதிரை ஃபுட் கார்னர் [ AFC ] உணவகம் செயல்பட துவங்கி உள்ளது. சகோதரர் ஜமால் முஹம்மது (நட்புடன் ஜமால் என்று வலையுலகில் அறிமுகமான) அவர்களால் துவக்கப்பட்டுள்ளது.
நவீன வசதிகளுடன்
குடும்பத்தோடு அமர்ந்து உணவருந்த ஏற்றதொரு இடமாகவும், ஹலாலான, சுத்தமான முறையில் உணவுகளை தயாரிக்கப்பட்டு, கனிவான உபசரிப்பு, ஆர்டர் செய்த சில நிமிடங்களிலேயே இலவசமாக ஹோம் டெலிவரி செய்யும் வசதிகளை
ஏற்படுதியுள்ளார் அதன் உரிமையாளர் நட்புடன் ஜமால் அவர்கள்.
மேலும் கிரில் சிக்கன், புரோஸ்டட் சிக்கன், ஃப்ரைட் சிக்கன், ஃப்ரைட் ரைஸ், நூடுல்ஸ், புரோட்டா,பர்கர் மற்றும் சான்ட் விச் ஆகியன AFC உணவகத்தில் தயார் செய்யப்படுகிறது.

சுய தொழில் செய்து தாயகத்திலேயே சம்பாதிக்க முனையும் இவர்களைப் போன்ற சகோதரர்களை ஊக்கப்படுத்துவதில் முன்னிருப்போம். இன்ஷா அல்லாஹ் !
அதிரைநிருபர் பதிப்பகம்
தகவல்: அப்துல் மாலிக்

