இலங்கையில் நடைபெற்றது போர் குற்றம் என்ற ஒற்றை வாக்கியத்தை கையில் எடுத்துக் கொண்டு அன்மையில் தமிழ் ஊடகங்கள் முழுவதும் ஆக்கிரமிப்பு செய்திகளாகவே உள்ளது.
உலகில் தமிழை வாழ வைக்கிறோம், தமிழினத்தை வாழ வைக்கிறோம் என்று சீசனுக்கு சீசன் e-தமிழின தலைவர்கள் டெல்லிக்கு கடிதம் என்றும் போராட்டம், சாலை மறியல், இரயில் மறியல் என்று தொடர்ந்து இலங்கை தூதரக தாக்குதல், இலங்கை சுற்றுலா பயணிகள் தாக்குதல், இலங்கையுடன் தொடர்புடைய அலுவலகங்களை தாக்குவது என்று நீடித்து தீக்குளிப்புடன் தீவிரமடைந்து, தீக்குளித்த அந்த அப்பாவியை தியாகியாக்கி, பிறகு அவனுக்கு இறுதி ஊர்வலம் நடத்தி போராட்டம் நிறைவடையும். பின்னர் வருடா வருடம் நினைவு தினம் என்று அன்றாட e-தமிழர்களின் வாழ்வு சுழன்று வருகிறது.
பிரபாகரன் மகனை கொடூரமாக கொலை செய்தது வன்மையாக கண்டிக்கத் தக்கது என்பது மனசாட்சியுள்ள அனைவரின் ஒட்டுமொத்த நிலைபாடாகும். இதில் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், தற்போது போர் குற்றம் தொடர்பாக சேனல்-4 தொலைக்காட்சி வெளியிட்ட காணொளிகளை வைத்து மிகப்பெரிய அரசியல் நாடகத்தை உலகம் முழுக்க அரங்கேற்றும் அமெரிக்கா இந்தியாவையும், e-தமிழர்களையும் முட்டாளாக்குகிறார்கள் என்பதே எதார்த்த உண்மை.
பொதுவாக சாப்பாட்டில் ரசம் சேர்த்து சாப்பிட்டால் தான் ருசி அதிகம் இருக்கும் என்பது ஊற்றிச் சாப்பிடுபவர்கள் சொல்வார்கள், அதுவும் நிறைய சாப்பிடலாம். தமிழ்நாட்டு அரசியல் விருந்திற்கு ஈழத் தமிழர்கள்தான் ரசம்.
ராஜபக்சே என்ற போர்க் குற்றவாளி ஈழ ரத்தம் குடித்தான் என்று சொல்பவர்களால்தான் இந்த e-தமிழர்கள் தங்களின் அரசியல் விருந்தில் ஈழத் தமிழர்களை ரசமாக்கி ருசிக்க ருசிக்க குடிக்கிறார்கள். ஒளி ஊடகங்களிலும், இணையை ஊடகங்களில் ஈழத் தமிழர்களை வைத்து அரசியல் இலாபம் அடையவே அனைத்து அரசியல் கட்சிகளும் போட்டிப் போட்டு உளறல் பேட்டிகள் கொடுத்து, தங்களின் ஈழத் தமிழினத்திற்கான கரிசனத்தை (?) காட்டி வருகிறார்கள். இன்னும் ஒரிரு வாரத்தில் அனைத்தையும் மறந்து விடுவார்கள் இந்த e-தமிழர்கள்.
திமுக, காங்கிரஸ், பாஜக, அதிமுக இன்னும் இதர கட்சிகளின் விளையாட்டு:
திமுக, காங்கிரஸ், பாஜக, அதிமுக, பாமக, போன்ற அரசியல் கட்சிகள் ஈழத் தமிழர்களை அழித்தொழிக்க நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆதரளித்தவர்கள் என்பது ஒட்டு மொத்த உலகத்திற்கு தெரியும். இவர்கள் அனைவரும் சேனல் 4 காணொளிகளை வைத்து அரசியல் இலாபம் அடையலாம் என்று பகல் கனவு காண்கிறார்கள். ஆனால் ஒட்டுமொத்தமாக அவதியுறும் ஈழத் தமிழர்களுக்கு வாழ்வாதாரம் பற்றியோ அவர்களின் முன்னேற்றம் பற்றியோ வழியுறுத்த தவறிவிட்டனர் என்பது வெளிப்படையான உண்மை.
மதிமுக மற்றும் நாம் தமிழர் விளையாட்டு:
இலங்கை இனப்படுகொலைக்காக குரல் கொடுத்துவரும் கட்சிகளில் நாம் தமிழர் கட்சியும், மதிமுகவும் முக்கிய பங்களிக்கிறார்கள். ஆனால் இவ்விரு கட்சிகளும் ஆயுத போராட்டக்காரன் (அப்பாவி தமிழர்களையும், முஸ்லீம்களையும், சிங்களர்களையும், ராஜீவ் காந்தியையும் கொன்று குவித்த) இயக்கத்தின் தலைவனை முன்னிருத்தியே தங்களின் குரல்களை போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். இதுவும் இலங்கை அரசு ஈழத் தமிழர்களை துன்புறுத்துவதற்கு பலமான காரணம்.
இலங்கை மக்களின் வில்லனாகவே பிரபாகரன் கருத்தப்படுகிறார்கள். இலங்கை மற்றும் காங்கிரஸ் கட்சியின் வில்லன் பிரபாகரனை சீமான் மற்றும் வைகோ வைகையறாக்கள் ஹீரோவாக சித்தரித்து ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுப்பது செவிடன் காதில் ஊதிய சங்காகவே சலித்துப் போகிறது.
எங்கள் தலைவன் சாகவில்லை, உயிருடன் இருக்கிறான் என்று முன்பு சொல்லி வந்தனர் e-தமிழின வகையறாக்கள், சேனல்-4 வெளியிட்ட கானொளியில் பிரபாகரன் மகனின் இறப்புடன் சேர்த்து, பிரபாகரனும் கொல்லப்பட்டுள்ள செய்தி சொல்லப்பட்டுள்ளதை இன்னும் கண்டு கொள்ளாமல் அந்தச் செய்தியை மூலை முடுக்கெல்லாம் போட்டுக் காட்டிவரும் இவர்கள் செய்யும் அரசியலின் உச்சகட்ட நகைச்சுவை என்று சொன்னால் மிகையில்லை.
அமெரிக்காவின் விளையாட்டு:
அமெரிக்கா, ஈழத் தமிழர்களுக்காக ஏதோ கரிசனம் காட்டுவது போல் ஊடகங்கள் ஒப்பாரி வைக்கின்றன. ஆப்கானிஸ்தானிலும், ஈராக்கிலும், பாகிஸ்தானிலும் பல்லாயிரக்கணக்கான குழந்தைகளையும், அப்பாவிகளையும் அமெரிக்கா கொன்றுக் குவித்துள்ளதை நாங்கள் அப்பொவே எதிர்த்து விட்டோம் என்று மொத்த பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் இந்த அரசியல் கயவர்களின் செயலை பற்றி என்ன சொல்ல முடியும். மனித உரிமை மீறல்கள் பற்றி பேச அமெரிக்காவுக்கு எந்த முகாந்திரமும் இல்லை.
இந்தியா அரசின் நிலைப்பாடு:
இந்தியா அரசு இலங்கை உள் விவகாரத்தில் தலையிடுவதற்கு தயங்குவதற்கு பல காரணம் இருந்தாலும், முக்கிய காரணம் இந்தியா இலங்கையில் தலையிட்டால், பாகிஸ்தான் மற்றும் சீனா ஆகிய இரண்டு நாடுகளும் தங்களின் வில்லனான இந்தியாவிற்கு எதிரான நிலைப்பாட்டில் இருப்பதால் இலங்கைக்கு உதவ முன்வர ஆயத்தமாக உள்ளனர். மேலும் காஷ்மீர் விசயத்தில் பிற நாடுகள் இந்தியாவில் தலையிடுவதற்கு நாமே காரணமாகிவிடுவோம் என்ற அச்சமும் இந்திய அரசிடம் உள்ளது நியாயம் தானே. மேலும் அமெரிக்கா உளவுத்துறை இந்திய அரசியல் நடவடிக்கைளை நம்ம அரசியல் வாதிகள் அறிந்ததைவிட ஆழமாகவே அவர்கள் அறிந்து வைத்துள்ளார்கள்.
ஈழத் தமிழர் பிரச்சினையை வைத்து ஆசிய கண்டத்தில் அமைதியின்மையை ஏற்படுத்தவே அமெரிக்கா கொண்டுவரும் ஐநாவில் தீர்மானம்.
30 வருடங்களுக்கு மேல் நடந்து வரும் இலங்கை பிரச்சினையால், ஈழத் தமிழர்களின் வாழ்வு அன்றும் இன்றும் மிகப்பெரிய சவாலாகவே உள்ளது. இதற்கு 100% பொறுப்பானவர்கள் தமிழ்நாட்டின் e-தமிழர்களே. விடுதலைப் புலிகளை ஊக்குவித்தவர்கள் யார்? இலங்கையில் சமாதான நடவடிக்கை எடுக்க தடுத்தவர்கள் யார்? உள்ளூர் அரசியலுக்காக ஈழத்தமிழர்களை பகடைக்காயாக வைத்து இலங்கையின் இறையாண்மைக்கு வேட்டு வைத்தவர்கள் யார்? என்பது தமிழ்நாட்டு மக்கள் மறந்தாலும் இலங்கை அரசும், இலங்கை மக்களும் நிச்சயம் மறந்திருக்க மாட்டார்கள்.
ஈழத் தமிழர்களுக்கு E-தமிழர்கள் செய்ய வேண்டியது என்ன?
ஈழத் தமிழர்களுக்கு நன்மை பிறக்க வேண்டுமானால், தமிழ்நாட்டு E-தமிழர்கள் தங்களின் 30 வருட அரசியல் விளையாட்டை நிறுத்திக் கொண்டு சும்மா இருந்தாலே போதும். ஈழத் தமிழர்களின் வாழ்வு சுபிட்ச்சம் பெரும். மீண்டும் E-தமிழர்களின் ஈழ அரசியல் விளையாட்டு தொடருமானால், பாவம் ஈழத் தமிழர்கள்.
அடிக்குறிப்பு: e-தமிழர் = தமிழ் இனவெறித் தீவிரவாதத்திற்கு உடந்தையாக இருக்கும் ஈனப்பட்ட
தமிழ்நாட்டு அரசியல்வாதிகளும் அவர்கள் பின்னால் சுற்றும் தமிழர்களும்.