சம்சாரம் இல்லாமல் இருந்து விடலாம் ஆனால் மின்சாரம் இல்லாமல் ஒரு நாள் கூட இருக்க முடியாது என்பது நிதர்சனம் அதற்கு காரணம் நாம் பயன்படுத்தும் அனைத்து பொருட்களும் மின்சாரத்தை சார்ந்தே உள்ளது ஒரு நாளைக்கு மின்தடை என்றாலே நம்மால் பொறுத்துக் கொள்ள முடிவதில்லை. அப்படிப்பட்ட மின்சாரத்தை தயாரிக்கும் முறைப் பற்றியும் அதனை தொடர்ந்து பெறுவதற்கான வழி வகைகளையும் கொஞ்சம் விலாவாரியா வித்தியாசமாக பார்ப்போம்.
முதலில் அணு மின்சாரம் பற்றி பார்ப்போம்
அணுக்கருவைப் பிளக்கும் போது (அதாவது நியூட்ரான்கள் என்னும் அணுத்துகள்களை மோதி பிளக்க செய்வது) மிக அதிக அளவில் வெப்பம் வெளிப்படும் . அந்த வெப்பத்தைக்கொண்டு கலனுக்குள் உள்ள நீரை கொதிப்படைய செய்து நீரை ஆவியாக்குவார்கள் இங்கே வெளிப்படும் அணுக்கதிர்கள் வெளியே வராத அளவுக்கு அணுக்கலனின் சுவர் மிகவும் தடிப்பாகவும் அணு கதிர் வீச்சை தாங்க கூடிய தன்மையிலும் அமைக்கப்பட்டிருக்கும் .
மேலும் அணுவை பிளக்கும் போது ஏற்படும் கடும் வெப்பத்தினால் கொள்கலனில் உள்ள நீர் கொதித்து நீராவி உருவாகும் நிலக்கரி எஞ்சினில் நீராவி வருவதை விட பலமடங்கு அதிகமான அழுத்தம் மிகுந்த அந்த நீராவி குழாய் மூலம் கொண்டு வரப்பட்டு அந்த அழுத்தத்தின் மூலம் பெரிய அளவில் உள்ள டர்பன் என்று சொல்லப்படும் டைனமோ சுழற்றப்படும் அது சுற்றுவதன் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்.
இதில் உள்ள மிக பெரிய பிரச்னை என்னவென்றால் இதன் கழிவுகளில்(அணு கழிவு ) உள்ள அணுக்கதிர் வீச்சின் தாக்கம் பல நூறு வருடங்களுக்கு மனித இனங்களுக்கு தீராத தெல்லை கொடுத்துக்கொண்டே இருக்கும் இந்த அணு மின் உற்பத்தி மனித குலத்திற்கு எப்போது வேண்டுமானாலும் பேரழிவை கொடுக்கும் என்பதால் இதன் வழியில் பெறப்படும் மின் சாரமும் நிரந்தரம் இல்லை
அனல் மின் நிலையம்
அனல் மின் நிலையங்களில் மின் உற்பத்தி செய்வதற்கு தேவையான நிலக்கரி பெருமளவில் ஆஸ்திரேலியா, இந்தோனேஷியா போன்ற நாடுகளில் இருந்து கப்பல் மூலம் இங்கு எடுத்து வரப்படுகின்றது இவ்வாறு இறக்குமதி செய்யப்படுகின்றன நிலக்கரி எரிக்கப்பட்டு அதன் மூலம் நீரை கொதிக்க வைத்து வரும் நீராவியின் அழுத்தத்தை கொண்டு டைனோமோ (டர்பன்) சுழற்றப்பட்டு மின் உற்பத்தி செய்யப்படுகின்றது இப்படி செய்யும் போது எரிக்கப்படும் நிலக்கரி புகை காற்றில் கலந்து காற்றை மாசுபடுத்திவிடுகின்றன அதனால் அனல் மின் நிலையம் அருகே வசிக்கும் பொது மக்கள் பலவித நோய் களுக்கு ஆளாகின்றனர் மேலும் நிலக்கரி பூமியில் இருந்து நிரந்தரமாக கிடைக்குமா என்பது நிச்சயம் இல்லை ஒரு குறிப்பிட்ட நாட்களுக்குள் தீர்ந்து போக கூடிய வாய்ப்புகள் உள்ளன ஆகையால் நிலக்கரியை நம்பி பெறப்படும் மின்சாரமும் நிரந்தரம் இல்லை
நீர்மின் நிலையம்
நீர் மின் நிலையங்கள் பெரும்பாலும் மலை பிரேதசங்களில் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளனகாரணம் மலையின் மேல் பகுதியில் மழை நீரை தேக்கி வைத்து அந்த அழுத்தத்தில் இருந்து நீரை பைப் லைன் மூலம் மலை அடிவாரம் வரை கொண்டுவந்து அந்த நீரின் அழுத்தத்தின் மூலம் டைனோமோ சுழற்றப்பட்டு மின் உற்ப்பத்தி செய்யப்படுகின்றது இதற்க்கு மழை காலங்கில் கிடைக்கும் நீரை வைத்து மின் உற்பத்தி நடைபெறுகின்றன கோடைகாலங்களில் நீர் வரத்து இருக்காது ஆகையால் மின் உற்பத்தியும் இருக்காது.ஆகையால் நீர் மின்சக்த்தியாலும் நாம் நிரந்தரமாக மின் உற்பத்தியை பெற முடியாது.
காற்றாலை மின் உற்பத்தி
தமிழகத்தின் மின்சாரத் தேவையில் பாதியளவை பூர்த்தி செய்வது காற்றாலைகள் மூலம் கிடைக்கும் மின்சாரம்தான்.ஏறத்தாழ 5,690 மெகாவாட் வரை மின்உற்பத்தி செய்யும் திறன் கொண்ட காற்றாலைகளில் சில சமயம் 5,000 மெகாவாட் வரை மின்சாரம் தான் கிடைக்கும். காற்று அடிப்பது குறைந்து போனால் மின் உற்பத்தி 1,500 மெகாவாட் வரைதான் கிடைக்கும். காற்று அடிக்காத காலங்களில் மின் உற்பத்தி நின்று போய் விடும் ஆகமொத்தத்தில் இதிலும் நிரந்தர மின் உற்பத்தி நடைபெறுவது சாத்தியம் கிடையாது
இப்படி ஒவ்வொன்றுக்கும் கொறை கண்டு பிடிச்சா இதுக்கு தீர்வுதான் என்ன? மின்சாரம் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க என்னதான் வழி இருக்கு. அதுக்கு ஒரு மெகா திட்டம் ஒன்னு இருக்கு அது பற்றி பார்ப்போம்.
மின் உற்பத்தி செய்வதற்கு அடிப்படை தேவை என்னவென்றால் டர்பன் எனும் டைனமோ சுழல வேண்டும் அதை சுழலவிட தேவையான விசையை தொடர்ந்து பெறுவதுதான் இங்கே சவாலான விஷயம் அதை எப்படி பெறுவது என்பதனை விரிவாக கீழே பார்ப்போம்.
இங்கே பூமியில் இருந்து கொண்டு ஒரு டைனமோவை நாம் சுழற்றி விட்டால் நாம் கொடுத்த விசை ஒரு சில நிமிடங்களில் பூமியின் இழுவிசை காரணமாக தீர்ந்து போய் விடும் அது தீர்ந்ததும் சுழற்றி விடப்பட்ட டைனமோ நின்று விடும்

நாம் இப்போ செய்ய வேண்டியது என்ன பூமிக்கு மேலே பூமியின் இழுவிசை தாண்டி ஒரு மி(வி)ன் நிலையம் அமைத்து (ஏற்கனவே விண்ணில் ஒரு சர்வதேச விண்நிலையம் உண்டு) அங்கு டைனமோக்களை அமைத்து அனைத்து டைனமோக்களையும் ஒருமுறை வேகமாக சுழற்றி விட்டுவிட வேண்டும் சுழற்றி விடப்பட்ட டைனமோ அதற்கு எதிர்விசையும் இழுவிசையும் இல்லாதால் அதன் சுழற்சி நின்று விடாமல் தொடர்ந்து கொண்டே இருக்கும். அப்படி சுழன்று கொண்டிருக்கும் டைனமோவில் இருந்து மின் உற்பத்தி ஆகிக்கொண்டே இருக்கும்
அப்படி உற்பத்தி ஆகும் மின்சாரத்தை பூமிக்கு எப்படி கொண்டு வருவது கம்பி போட்டு போஸ்ட்டை எங்கே ஊண்டுவது என்ற கேள்வி வரும் அங்கே உற்பத்தியாகும் மின்சாரத்தை கம்பி மூலம் கடத்தி கொண்டு வருவது சாத்தியப்படாது அதற்கு மாற்று வழியுண்டு அதனை இங்கே தொடர்ந்து பார்ப்போம்.
விண்ணில் உற்பத்தியாகும் மின்சாரத்தை மைக்ரோ வேவ் ஒளிக் கற்றையாகவோ அல்லது லேசர் லைட் ஒளிக்கற்றையாகவோ மாற்றி அதை இங்கே பூமியில் ரிசீவர் மூலமாக பெற்று அந்த மின்சாரத்தை மின்கம்பி மூலம் விநியோகிக்கலாம்.

எல்லாம் சரிங்க விண்ணில் அமைத்த டைனமோக்களையும் மற்ற இயந்திரங்களையும் பராமரிப்பு யார் செய்வது என்று கேட்டால் அதற்கும் ஒரு வழி உண்டு ஊரில் ஆங்காங்கே ஒன்றுக்கும் உதவாமலும், உழைக்காமலும் ஊதாரியாக திரிந்து கொண்டு தேவையற்ற வில்லங்கம் செய்பவர்களை பிடித்து இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு அங்கே அனுப்பி இயந்திரங்களை துடைக்கவும், பராமரிப்பு பணி செய்ய அங்கே அனுப்பி வைத்துவிட வேண்டும்.
Sஹமீது