ஒரு ஊரில்!
ஒரு குல்லா வியாபாரி இருந்தார் அவர் சொந்தமாக குல்லா தயாரித்து ஊர் முழுவதும் விற்பனை செய்வது அவருடைய குடும்பத் தொழில். பரம்பரை பரம்பரையாய் அதே ஊரில் தான் வியாபாரம் செய்வார். ஒரு நாள் வியாபாரம் செய்துவிட்டு பகல் பொழுதில் தான் கொண்டு வந்த உணவை ஒரு மரத்தடியில் குல்லா கூடையை இறக்கி வைத்துவிட்டு உணவை உண்ணலானார். பிறகு சிறிய உறக்கம் கொண்டார்.
எழுந்து பார்த்ததும் கூடையில் இருந்த குல்லாக்களை காணவில்லை அதிர்ச்சியுற்றவராக சுற்றும் முற்றும் பார்த்தார் ஆள் நடமாட்டமே இல்லை. மரத்தின் மேலே குரங்குளின் சப்தம் அதன் தலைகளில் இவர் கூடையில் வைத்திருந்த குல்லாக்கள். கல்லை விட்டு எறிந்து பார்த்தார் அது கொஞ்சம்கூட சட்டை செய்யவில்லை அப்புறம் தன்னுடைய தகப்பனாருக்கு நடந்த சம்பவத்தை ஞாபகப்படுத்திக் கொண்டு தான் அணிந்திருந்த குல்லாவை குரங்கை பார்த்து எறியலானார் குரங்கும் அதுபோல் செய்யவில்லை!!!???
ஏனுங்க !?
இவருக்கு ஒரே ஆச்சரியம் தந்தை சொன்னது போல்தானே செய்தோம் என்னாச்சு இந்த குரங்குகளுக்கு என்று கவலை பட்டவராக குரங்குகளிடமே கேட்கலானார்.
"முன்பு ஒரு காலத்தில் என் தந்தை இதே மரத்தடியில் படுத்து உறங்கும்போது அன்றைய குரங்குகளெல்லாம் குல்லாவை எடுத்து சென்றது அப்பொழுது என் தகப்பனார் தனது குல்லாவை கீழே வீசியபொழுது அந்த குரங்குகளும் வீசி எறிந்ததே நீங்கள் மட்டும் ஏன் அப்படி செய்யவில்லை "என்று கேட்டார்.
"முன்பு ஒரு காலத்தில் என் தந்தை இதே மரத்தடியில் படுத்து உறங்கும்போது அன்றைய குரங்குகளெல்லாம் குல்லாவை எடுத்து சென்றது அப்பொழுது என் தகப்பனார் தனது குல்லாவை கீழே வீசியபொழுது அந்த குரங்குகளும் வீசி எறிந்ததே நீங்கள் மட்டும் ஏன் அப்படி செய்யவில்லை "என்று கேட்டார்.
அதற்கு குரங்குகள் சொன்னது.. "உங்கள் அப்பா சொன்னது போல் எங்கள் அப்பாவும் சொல்லி இருக்கிறார்கள் அவர் வீசுவார்(குல்லாவை) நீ வீசி ஏமாந்து விடாதே".
நண்பர்களே தலைப்பில் சொன்னதுபோல் சூழல்கள் மாறிப்போச்சு 40 வருடங்களுக்கு முன்னால் கதையாசிரியரும் எதார்த்தம் குரங்குகளும் எதார்த்தம் இது தந்திர உலகம் பழைய தந்திரங்கலெல்லாம் இன்றைய சூழலுக்கு ஒத்து வராது " திஸ் ஈஸ் ஜெனரேசன் கேப்"
மீண்டும் சந்திப்போம்.
இது மொபைல் ஃபோன் விளம்பரம் அல்ல ! கற்பனையும் கல்வி புகட்டுமே! :)
மு.செ.மு.சபீர் அஹமது
குறிப்பு : இந்த சம்பவம் ஊரில் நடக்கும் எந்த சூழலுக்கும் ஒத்துப் போகுதென்றால் நாம என்னங்க செய்ய முடியும்… !?