அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,
அல்லாஹ்வின் பேருதவியால் AAF இரண்டாவது அமர்வுக்கான ஒன்று கூடல் நேற்று மாலை வல்லேஹோ மஸ்ஜிதில் மிகச் சிறப்புடன் நடந்தது.
அமர்வின் அவைக் குறிப்புகள்:-
நூற்றுக்கும் மேற்பட்ட சகோதரர்கள் குழந்தைகள் சகிதம் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
அமர்வுக்கு வந்திருந்த அனைவருக்கும் சகோதரர் இக்பால் M.ஸாலிஹ் அவர்கள் சாப்பாடு ஏற்பாடு செய்திருந்தார்கள்.
லுஹர் தொழுகைக்கு பின்னர் அமர்வு ஆரம்பமானது.
நிகழ்வின் முதலாவதாக கிராஃஅத் சகோ.மாஹிர் [த/பெ அப்துல் மாலிக்] ஓதினார்.
வரவேற்புரையை சகோ.நஜீர் (செயலாளர்) அவர்கள் நிகழ்த்தினார்.
நடப்பு நிகழ்வுகளின் இதுவரை AAF செயல்பாடுகள் பற்றிய விபரங்களை சகோ.தமீம் (இணைச் செயலாளர்) அவர்கள் எடுத்துரைத்தார்.
சுருக்கமான உரையை சகோ. சிப்ளி முஹம்மது (துணைத் தலைவர்) அவர்கள் நிகழ்த்தினார்.
அதனைத் தொடர்ந்து கலந்து கொண்ட சகோதரர்களின் ஐயங்களுக்கும் அவர்களின் கேள்விகளுக்கும் விளக்கங்கள் கொடுக்கப்பட்டது. குறிப்பாக முதன் முறையாக வந்து கலந்து கொண்ட சகோதரர்களின் விளக்க வினாக்களுக்கும் பதிலளிக்கப்பட்டது. அதனை சகோ.ஹக்கீம் (தலைவர்) மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்களும் இணைந்து மிகச் சிறப்பாகவும் பொறுமையாகவும் வழங்கினார்கள்.
அஸர் தொழுகைக்குப் பின்னர் தேநீர் இடைவேளையும் அளிக்கப்பட்டது.
புதிய வரவாக முதன் முறையாக வந்த சகோதரர்களை உறுப்பினர்களாக்கும் பணியும் துவங்கியது அவர்களின் உறுப்பினர்களுக்கான சந்தாத் தொகையும் பெறப்பட்டது.
வந்திருந்த அனைத்து சகோதரர்களின் சுய அறிமுகமும் செய்து கொள்ளப்பட்டது.
அடுத்ததாக உறுப்பினர்களுக்கு திறந்த மனதுடன் விவாதிக்க அனுமதி வழங்கப்பட்டது. அதில் அனைவரும் மிகவும் பயனுள்ள தகவல்களை பறிமாறியது மட்டுமின்றி நல்ல ஆலோசனைகளும் வழங்கப்பட்டது. அனைத்து நல்ல ஆலோசனைகளையும் விவாதங்களையும் குறிப்பெடுத்துக் கொள்ளப்பட்டது அதோடு அதற்கான இயன்ற முயற்சிகளும் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
AAFன் நடப்பு நிதி நிலவரத்தை சகோ.இக்பால் M.ஸாலிஹ் (பொருளாளர்) விரிவாக எடுத்துரைத்தார்கள்.
அடுத்து கலந்து கொண்ட சகோதரர்களின் புகைப்பட ஆவணப்படுத்துதல் தொடங்கியது.
அமர்வின் நிறைவு மஃக்ரிப் தொழுகைப் பின்னர் இனிதே நிறைவுற்றது.
AAFன் இரண்டாவது கூட்டு அமர்வின் தீர்மானங்கள்:-
1. இறைவனின் நாட்டப்படி ஒவ்வொரு உறுப்பினரும் குறைந்தது 100$ ஜக்காத்தாக (அதற்குரிய தகுதியிருப்பின்) AAFக்கு வழங்குவது என்று முடிவானது.
2.AAF போதுமான நிதியாதாரம் பெற்றதும், உறுப்பினர்களுக்கென்று வட்டியில்லாக் கடன் வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டது. (இதன் விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்)
3. அமெரிக்க வாழ் அதிரையர்களின் கூட்டமைப்பு - American Adirai Forum, AAF என்று அங்கீகரிக்கப்பட்ட பெயரையே பயன்படுத்துவது என்று பெரும்பாலான சகோதரர்களின் ஆலோசனைப்படியே ஒருமனதாக முடிவானது இன்ஷா அல்லாஹ். இதற்கென்று அதிரையல்லாத நமது சகோதரர்களும் மின்னஞ்சல் வாயிலாக ஆதரவு தெரிவுத்திருந்தனர். அதுமட்டுமல்ல, அமெரிக்க வாழ் அதிரைச் சகோதரர்கள் அனைவரையும் ஒன்றிணைக்கவும் ஒரே குடையின் கீழ் கொண்டு வரவும் இதுவே சரியான வழி என்பதை அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.
AAF நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கென்று புதிதாக அலைபேசி எண் உருவாக்கப்பட்டுள்ளது. சகோதரர்கள் அவசர உதவிகளுக்கும், தகவல்களுக்கு இந்த எண்ணை பயன்படுத்தும்படி வேண்டிக் கொள்ளப்படுகிறார்கள், அழைப்பு வரும் இந்த எண்ணிலிருந்து நிர்வாகிகளின் தொலைபேசிகளுக்கு தொடர்புகள் தானாக ஏற்படுத்திக் கொள்ளும். இதனை பாதுகாத்து வைத்திருக்கவும் அறிவுறுத்தப்படுகிறது.
மேலும், இதுவரை உறுப்பினர்களாக பதிவு செய்யாத சகோதரர்கள் அல்லது நவம்பர் / டிசம்பர் மாத உறுப்பினர் சந்தா வழங்காதவர்கள் உடனடியாக பதிவு செய்யவும், சந்தா வழங்கவும் வேண்டிக் கொள்ளப்படுகிறார்கள்.
வரும் ஜனவரி முதல் வங்கி கணக்கு மற்றும் இணையதளம் செயல்படத் துவங்கும், அதுவரைக்கும் கீழ்கண்ட வங்கி கணக்கில் உரிய தொகையை செலுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம்.
HARISH AMEEN
BANK OF AMERICA
CHECKING ACCT.
04324 77802
Please send an email to Bro.Iqbal (iqbalmsalih@gmail.com) after you deposit the cash (To keep an account).
இனிவரும் நாட்களில் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை AAF அமர்வுகள் நடத்த முடிவானது, அடுத்த அமர்வு வரும் மார்ச் மாதம் 2013ல் நடைபெறும்.
இப்படிக்கு
AAF - American Adirai Forum




