Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in
Showing posts with label ஊடகம். Show all posts
Showing posts with label ஊடகம். Show all posts

இது தான் இஸ்லாம். தமிழக ஊடகங்கள் திருந்தவே திருந்தாவா? 9

அதிரைநிருபர் பதிப்பகம் | May 02, 2015 | , , , , , ,

மீட்பு மற்றும் உயிர்காக்கும் பணியில் பாகிஸ்தான் ராணுவம்....!!  

இந்துக்களைப்  பெரும்பான்மையாகக் கொண்ட நாடான நேபாளில் நிலநடுக்கம் ஏற்பட்டவுடன், முதலுதவியாக, பாகிஸ்தான் ராணுவம் நேபாள் விரைந்து, அங்கு நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட மக்களைப் பாதுகாப்பாக மீட்டெடுத்து, அவர்களுக் காகவே தனி முகாம் அமைத்து, மருத்துவ உதவி, உணவுகளை வழங்கி, மனிதநேயத்தைப் பறைசாற்றினர்.

பாகிஸ்தானைப் பற்றிய ஒரு முகத்தை மட்டுமே பிரதிபலித்த ஊடகங்கள், பாகிஸ்தானின் உண்மை முகமான மனிதநேயத்தை எந்த ஊடகமும் வெளிப்படுத்த வில்லை.  மாறாக இழிவு படுத்தவே விரும்பினர். 

அதேபோல் அரபு நாடுகளுள் ஒன்றான கத்தார் 10 மில்லியன் டாலர் மற்றும் மருந்துப் பொருட்கள், உணவுகளை வழங்கி அவர்களும் மனிதநேயத்தை உலகுக்குப் பறை சாற்றினர். 

அதேபோல் சிங்கப்பூர் முஸ்லிம் நாடாக இல்லாமல் இருந்தாலும், சிங்கப்பூரிலுள்ள 68 பள்ளிவாசல்களிலும் நிவாரண நிதி வசூல் செய்து கொடுத்தனர்.  ஏழை நாடான நேபாள் இந்து நாடாக இருந்தாலும், உலகிலுள்ள அனைத்து முஸ்லிம் நாடுகளும் நேபாளின் துயரத்தில் பங்கெடுத்து, மனிதநேயத்தைப் பறைசாற்றி வருகின்றன.


இந்துக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட நாடான நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டவுடன், பாகிஸ்தான் உள்ளிட்ட உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம் நாடுகள் நேபாளுக்கு பில்லியன் கணக்கான தொகைகளையும் கொடுத்து, மீட்புப் பணியிலும் சிறப்பாக ஈடுபட்டு, அங்கே முகாம் அமைத்து, உணவு, மருத்துவ உதவிகள் வழங்கி, சிறப்பாகச் சேவையாற்றி வருகின்றனர்.

அதைப்பற்றி ஒரு வரிகூட எழுத வக்கற்ற தமிழக ஊடகங்கள், பாகிஸ்தானிலிருந்து சென்ற உணவுப் பொருளில் மாட்டிறைச்சி இருந்ததாகவும், அதனால் நேபாள் இந்துக்கள் மாட்டிறைச்சியை உண்பதற்கு முகம் சுழித்துத் திருப்பி அனுப்பியதாகவும் தினத்தந்தி, தினமலர், தினகரன் உள்ளிட்ட பெரும்பாலான தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டு, முஸ்லிம்கள் மீதான வெறுப்பை உருவாக்குவதற்கு முயன்றுள்ளன. 


தமிழக ஊடகங்கள் சோற்றைத் தின்கிறார்களா? இல்லை, இந்துத்துவா காவிகளின் மலத்தைத் தின்கிறார்களா என்று சந்தேகம் கொள்ளும் அளவிற்கு, தமிழக ஊடகங்கள் இன்று இஸ்லாமிய வெறுப்பை உமிழ்ந்துள்ளன. முஸ்லிம்களின் மனிதநேயத்தை இந்துத்துவா பாடம் படிக்க வேண்டும். உண்மையில், இந்து வேறு; இந்துத்துவா வேறு.  மதவெறியை மாய்த்து, மனிதநேயத்தை வளர்ப்போம்! இந்தியாவிலுள்ள இந்துக்களில் 90 சதவீத மக்கள் எப்படி மாட்டிறைச்சியைச் சாப்பிடுவார்களோ, அதே போன்று நேபாளிலுள்ள 95 சதவீத இந்துக்கள் மாட்டிறைச்சியை விரும்பி உண்பவர்கள். அது மட்டுமில்லாமல், ஒவ்வோர் ஆண்டும் 5 ஆயிரம் மாடுகளை வெட்டித் திருவிழா நடத்துபவர்கள். 

பாகிஸ்தான் உள்ளிட்ட அனைத்து முஸ்லிம் நாடுகளிலிருந்தும் வந்த உணவுப் பொருளை நேபாள் மக்கள் இன்முகத்துடன் பெற்று உணவு உண்டது மட்டுமின்றி, நெஞ்சுணர்வோடு, நன்றியும் கூறியுள்ளனர்.  

இது மட்டுமா?  நமது நாட்டிலுள்ள ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பும் தன் பங்குக்குப் பெரிய அளவிலான துயர் துடைப்புப் பணிகளையும் உதவிகளையும் செய்துள்ளது.  அதற்கான சான்று இதோ:

“நமது இந்தியாவின் பக்கத்து நாடான நேபாளத்தில், வரலாறு காணாத பேரழிவு பூகம்பத்தால் ஏற்பட்டுள்ளது. பொது மக்களின் தயர் துடைப்பில் அரும் பணியாற்றி வரும் ஜமாஅத்தெ இஸ்லாமி ஹிந்த் தனது பங்காகப் போர்வைகள், உணவுப் பொருட்கள், தண்ணீர், டென்ட் அமைத்துக் கொடுத்தல் போன்ற அத்தியாவசியப் பணிகளை ஏற்கெனவே செய்து வருகிறது. இழப்பு மிக அதிகம் என்பதால், மீட்புப் பணிகள் மந்த கதியில் நடந்து வருகின்றன. அரசும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் மழையையும் பொருட்படுத்தாமல், பெரும் சேவை செய்து வருகின்றன. ஜமாஅத்தெ இஸ்லாமி ஹிந்த் பொது மக்களிடமிருந்து நன்கொடைகளை எதிர்பார்க்கிறது. 

“வசதி படைத்தவர்கள், சிரமத்தில் ஆழ்ந்துள்ள நமது அண்டை நாட்டுச் சகோதரர்களின் துயர் துடைக்க, தங்களால் இயன்ற உதவிகளை, கீழே வரும் விலாசத்திற்கு அனுப்பி வைக்கவும். இறைவனுக்கு பயந்து முறையாக அதனை நாங்கள் விநியோகம் செய்வோம் என்று உறுதி கூறுகிறோம்.”

Regards,
Nusrat Ali
Secretary General
Jamaat-e-Islami Hind 
Cheque or Draft should be in favour of:
MARKAZ RELIEF FUND
JAMAAT-E-ISLAMI HIND
A/c No. 1447308475
Central Bank of India
Sukhdev Vihar, New Delhi-110025
Branch Code-02953
IFS Code- CBIN0282953

Cheque or Draft should be sent to the following address:
Secretary General
JAMAAT-E-ISLAMI HIND
D-321, Dawat Nagar, Abul Fazl Enclave,
Jamia Nagar, Okhla, New Delhi-110025
Cont. No. 09818996951 / 08826732590
உண்மை நிலை இவ்வாறு இருக்க, நடக்காத ஒரு நிகழ்வை நடந்ததாகப் பொய்ச் செய்தி வெளியிட்டு, முஸ்லிம்கள் மீதான வெறுப்பை உமிழ்ந்த தமிழக ஊடகங்கள் திருந்த வேண்டும். 
“மார்க்க விஷயத்தில் உங்களுடன் போரிடாதோருக்கும், உங்கள் வீடுகளிலிருந்து உங்களை வெளியேற்றாதோருக்கும் நன்மை செய்வதையும், அவர்களுக்கு நீதி செலுத்துவதையும் அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்யவில்லை. நீதி செலுத்துவோரை அல்லாஹ் விரும்புகிறான்.”  அல்குர்ஆன் 60 : 8

நன்றி:  முகநூல் முஸ்லிம் மீடியா & ‘சுவனப்பிரியன்’ வலைத்தளம்.
(Edited)

பரிந்துரை : அதிரை அஹ்மது

இந்துத்துவ அரிப்புக்கு இராக் சொறி மருந்து... 10

அதிரைநிருபர் பதிப்பகம் | July 08, 2014 | , , , , , , , ,

ல்லாத பேரழிவு ஆயுதங்களின் பெயரைச் சொல்லி இராக்கை ஆக்கிரமித்த அமெரிக்கா, அந்நாட்டைச் சூறையாடிக் கொலைத் தாண்டவம் ஆடித் தனக்கேற்றபடி தலையாட்டும் நூரி-அல்-மாலிக்கி தலைமையில் தனது பொம்மை அரசை நிறுவியது.

பின்னர் சிலகாலம் அதன் எண்ணெய் வளத்தைச் சுரண்டி விட்டு இராக்கிலிருந்து முழுமையாகத் தனது ராணுவத் துருப்புகளை விலக்கிக் கொண்டது. 

இதனிடையே அரபு வசந்தம்' என்ற புரட்சி மூலம் துனீஷியா, எகிப்து மற்றும் லிபியாவை ஆண்டு வந்த சர்வாதிகாரிகள் வீழ்ந்தனர்.

இதன் தொடர்ச்சியாக மத்திய கிழக்கு நாடான ஏமனிலும் அரபு வசந்தத்தின் தாக்கத்தால் புரட்சி வெடித்தது. ஏமன் அதிபராக 23 ஆண்டுகள் ஆட்சி புரிந்த அலி அப்துல்லாஹ் ஸாலெஹ், தேர்தலில் போட்டியிடாமல் பதவியைத் துறந்தார். ஸிரியாவிலும் மக்கள் புரட்சி வெடித்தபோது, ரஷ்யா உதவியுடன் ஸிரியா அதிபர் பஸ்ஸார் அல் அஸத், புரட்சியாளர்களை மட்டுமின்றிப் பொதுமக்களையும் கொன்றொழித்தார். எனினும், ஸிரிய அரசுக்கு எதிரான புரட்சியை அதிபர் பஸ்ஸாரால் அடக்கமுடியவில்லை. சவூதி உள்ளிட்ட ஸிரியாவின் அண்மை நாடுகள், ராணுவத்திற்கு எதிராகப் போராடி வரும் புரட்சிப் படைகளுக்கு உதவியதும் ஸிரியாவில் ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்காவும் மறைமுகமாக ஸிரிய புரட்சிப் படைகளுக்கு உதவியதும் காரணமாகச் சொல்லப்பட்டன.

இவ்வாறு ஸிரிய ராணுவத்திற்கு எதிராகப் போராடி வந்த புரட்சியாளார்கள், இராக்கின் ஷிஆ ஆட்சியாளரால் அங்குள்ள சுன்னத்தி முஸ்லிம்கள் பாதிக்கப்படுவதற்கும் தீர்வுகாணும் நோக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ் என்ற பெயரில் ஒரு போராளிக் குழுவை உருவாக்கி ஸிரியாவில் கைப்பற்றிய சில பகுதிகளையும் ஈராக்கின் சுன்னத்தி முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள பலபகுதிகளையும் இணைத்து ISLAMIC STATE  என்ற தனிநாட்டை அறிவித்தனர். [முன்பு இவர்கள் Islamic State of Iraq and the Levant - ISIL என்றும் அழைக்கப்பட்டனர்]

அபூபக்கர் அல் பக்தாதி என்ற இராக் புரட்சிப் படைத் தளபதியை அதன் ஜனாதிபதியாகப் பிரகடனம் செய்தனர். 

இந்த ஐஸிஸ் போராட்டக் குழுவில், இராக் முன்னாள் அதிபர் சத்தாம் ஹுசைனின் ஆதரவாளர்களும் இணைந்ததால் சுன்னத்தி முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள பகுதிகளில், இராக் ராணுவத்தினர் விரட்டி அடிக்கப்பட்டனர். பிடிபட்ட ராணுவத்தினர் பல்வேறு போர்க் குற்றங்களுக்காகத் தண்டிக்கப்பட்டனர்.

ஸிரியாவிலும் சரி, இராக்கிலும் சரி ஐஸிஸ் படையினருக்கு மக்கள் ஆதரவு பெருகியதற்கு அவர்கள் சுன்னத்தி முஸ்லிம்கள் என்பதோடு, அமெரிக்க ராணுவம் தற்போதைய இராக் ராணுவம் மற்றும் ஸிரிய ராணுவத்தால் பல்வேறு பாதிப்புகளுக்குள்ளானவர்கள் என்பதும் காரணமாகும். மட்டுமின்றி, உலக முஸ்லிம்களின் நெடுநாளைய எதிர்பார்ப்பான கிலாபத் (இஸ்லாமிய குடியாட்சி) இராக் மற்றும் ஸிரியாவில் கைப்பற்றிய புதிய நாட்டிலிருந்து தொடங்கி இருப்பதாக அறிவித்தது முஸ்லிம்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தினாலும் ஒருசாராரிடம் ஐஸிஸ் குறித்த ஐயத்தையும் ஏற்படுத்தியது.

அதே சமயம், ஐஸிஸின் தாக்குதல் வீடியோக்களில் இருக்கும் வன்முறைக் காட்சிகளால் சிலருக்கு அவர்களின் செய்கைகள் ஐயத்தை ஏற்படுத்தியுள்ளன. 

உண்மையான போராளிகள் இவ்வாறு செய்ய மாட்டார்கள் என்பதால் இந்த ஐயத்திலும் நியாயமுண்டு. அவர்களின் போராட்டத்திலிருக்கும் நியாயங்கள், இத்தகைய வன்முறைகள் மூலம் நீர்த்துப் போகின்றன. அவர்கள் பெயரால் அமெரிக்காவோ அல்லது வேறுயாருமோகூட இதைச் செய்து இருக்கலாம். அமெரிக்கா ஐஸீஸை எதிர்க்காமலும், ஈராக்கிற்கு ஆதரவளிக்காமலும் புதிய அரசையே வலியுறுத்துவதால், அப்படி ஓர் அரசு அமையும்பட்சத்தில் ஐஸிஸை அமெரிக்கா தாக்கக்கூடும். 

ஏற்கனவே அமெரிக்காவுக்கு அடங்காத ஈரான் மற்றும் ஈரானின் நேசநாடான ஸிரியா இவற்றுடன் இராக்கும் ஒன்றிணைந்தால் அமெரிக்காவுக்கு மட்டுமின்றி அமெரிக்காவை நம்பியிருக்கும் அரபு நாடுகளுக்கும் தலைவலியாகும் என்பதாலேயே ஐஸிஸை வைத்து அமெரிக்கா பூச்சாண்டி காட்டி வருகிறது. இப்படியாக மத்திய கிழக்கு நிகழ்வுகள் சென்று கொண்டிருக்கும்போது, ஐஸிஸ் படையினர் சவூதி அரேபியா நோக்கி முன்னேறுவதாகச் சொல்லப்பட்டது. இந்தச் சூழலில் சவூதி எல்லையருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இராக் துருப்புகளை நூரி அல் மாலிக்கி வாபஸ் பெற்றதால், ஐஸிஸ் படையினர் சவூதியின் அரார் பகுதியை நோக்கி முன்னேறுவதாகத் தகவல் கிளம்பியது. முன்னெச்சரிக்கையாக சவூதி அரசு தனது எல்லையில் படைகளைக் குவித்தது.

அதுவரை ஐஸிஸ் படைகளுக்கு சவூதி உள்ளிட்ட சில அரபு நாடுகள் உதவுவதாக இராக் பிரதமர் நூரி அல் மாலிக்கி கருத்துத் தெரிவித்திருந்தபோது சவூதி மறுத்து வந்தது. இந்தச் சூழலில் ஐஸிஸ் படையினர் சவூதி மண்ணிலும் கால்பதிக்கத் திட்டமீட்டிருப்பதாகத் தகவல் பரவியதன் மூலம் சவூதிக்கும் ஐஸிஸுக்குமிடையே இருப்பதாகச் சொல்லப்பட்ட தொடர்பு குறித்த வதந்திகள் முடிவுக்கு வந்துள்ளன.

ஐஸிஸ் படையினரின் திடீர் எழுச்சி, முஸ்லிம்களிடம் வரவேற்பைப் பெற்றததற்கு அவர்கள் அமெரிக்க ஆதரவு அரசுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்ததும் காரணம் எனலாம். இராக்கில் அமெரிக்க ஆதரவுப் படைகளால் பாதிக்கப்பட்டவர்கள் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தித் திருப்பியடிக்கும் போது சாமானியர்களுக்கு ஏற்படும் மகிழ்ச்சி கலந்த எதிர்பார்ப்பே ஐஸிஸ் குறித்த முஸ்லிம்களின் வெளிப்படையான ஆதரவுக்குக் காரணம். சினிமாவில்கூட, பாதிக்கப்பட்ட கதாநாயகன் திருப்பித் தாக்குவதை வெகுஜன மக்கள் கைதட்டி ரசிக்கும்போது, உண்மையிலேயே அமெரிக்க அடக்குமுறைகளால் துவண்டிருந்த முஸ்லிம்களுக்கு ஐஸிஸின் பதிலடிகள் ஆறுதலைக் கொடுத்த போதும், அவர்கள் பெயரில் உலா வரும் சில வன்முறை வீடியோக்கள் முகச்சுளிப்பையும் ஏற்படுத்தி வருகின்றன.

அதுவரை வேடிக்கை பார்த்து வந்த முஸ்லிம்களுக்கு எதிரான ஊடகங்கள் இதுதான் சந்தர்ப்பம் என்று களம் இறங்கின. யூடூபிலும் ஃபேஸ்புக்கிலும் வெளியிடப்படும் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை மையமாக வைத்தும், தங்கள் கற்பனைகளின்படியும் ஐஸிஸ் படையினருக்கு எதிராகப் பரபரப்புச் செய்திகளை அவை வெளியிட்டு மகிழ்ந்தன. இணையத்தில் முன்பு எப்போதோ வெளியானதொரு வரைபடத்தையும்கூட விட்டுவைக்காமல் ஐஸிஸ் படையினர் 

இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளை ஐந்தாண்டுகளில் கைப்பற்றப் போவதாதக் அறிவுக்கு ஒவ்வாத செய்திகளைப் பரப்பி வருகின்றனர்.


கண்முன்னே நடந்த குஜராத், அஸ்ஸாம், முஸாப்பர் நகர் இனச் சுத்திகரிப்புகளின்போது கருத்துத் துறவறம் பூண்டிருந்த சில தமிழ் பதிவர்கள் கூட இராக் ராணுவத்திற்கு எதிரான ஐஸிஸின் நடவடிக்கைகளை வைத்து மனிதாபிமான நீலிக்கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் இராக்கில் பணியாயற்றிய இந்தியத் தொழிலாளர்கள் மற்றும் 46 செவிலியர்களும் ஐஸிஸ் படையினரின் கட்டுப்பாட்டில் இருந்ததால், இந்தியாவில் ஐஸிஸ் குறித்த செய்திகளில் முடிந்தவரை முஸ்லிம்களுக்கு எதிரான வன்மத்தையும் பரப்பி வந்தனர். அதுவரை பர்மா, இலங்கை, அஸ்ஸாம், முஸாப்பர்நகர் என அடுத்தடுத்து முஸ்லிம்கள் பாதிப்புக்குள்ளாக்கபட்டு இருந்ததால் துவண்டிருந்த முஸ்லிம்களுக்கு ஐஸிஸின் வரவு சற்று ஆறுதலாக இருந்தது. ஐஸிஸ் மீதான முஸ்லிம்களின் இந்த நல்லெண்ணத்தையும் தீவிரவாத ஆதரவளிக்கிறார்கள் பாருங்கள் என்று திரிப்பதற்கு, செவிலியர் மற்றும் தொழிலாளர்களின் கடத்தல் சம்பவம் ஊடகங்களுக்கு வசதியாகிப் போனது.

கண்முன் நடந்த கொடூரங்களையெல்லாம் புறந்தள்ளிவிட்டு எங்கோ நடக்கும் உள்நாட்டுக் கலவரத்தில் முஸ்லிம்களுக்கு எதிராகச் செய்தி பரப்பி மனசாட்சி இன்றி நீலிக்கண்ணீர் வடித்தும் அதைச் சாக்காக வைத்து இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் சாடியும் தம் கடமையைச் செய்தன சில ஊடகங்கள். 

கண்முன்னே நடந்த குஜராத், அஸ்ஸாம், முஸாப்பர் நகர் இனச் சுத்திகரிப்புகளின்போது கருத்துத் துறவறம் பூண்டிருந்த சில தமிழ் பதிவர்கள் கூட இராக் ராணுவத்திற்கு எதிரான ஐஸிஸின் நடவடிக்கைகளை வைத்து மனிதாபிமான நீலிக்கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கின்றனர்.

அரபு நாடுகளுக்கும் அவற்றின் தலைநகரங்களுக்கும் கூட வித்தியாசம் தெரியாது தமிழக ஊடகங்களுக்கு என்றால் நம்புவீர்களா?. அந்த லட்சணத்தில் தாம் அதன் செய்தியாளர்களும் உள்ளனர். உதாரணமாக சவூதியில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டால் துபாயில் தலைவெட்டு என்று வெட்கமின்றிச் செய்தி வெளியிடுவர். சிலநேரங்களில் துபாய் ஆட்சியாளரை சவூதி மன்னராகக் குறிப்பிட்டவும் செய்வர். இவர்கள்தாம் இராக் செய்திகளைத் தப்பும் தவறுமாக மட்டுமின்றி, அதில் முஸ்லிம்கள் மீதான வெறுப்பை வளர்க்கும் வகையில் செய்தியாக்கி மகிழ்ந்தனர்.

வளைகுடாவில் பெட்ரோலுக்காக அமெரிக்கா நடத்தும் வழக்கமான யுத்தம் என்பதில் பழகிப்போயிருந்த நிலையில், இந்தியச் செவிலியர்கள் இராக் போராட்டக் குழுவினரால் கடத்தப்பட்டதாகச் செய்தி வெளியானதும் அனைத்து இந்திய ஊடகங்களும் பரபரப்படைந்தன. இராக்கில் கடத்தப்பட்ட செவிலியர்களுள் சிலரை ஐஸிஸ் போராளிகள் கொன்றுவிட்டதாகவும், துப்பாக்கி முனையில் பலவந்தப்படுத்தி, போர்க்களத்தில் காயம்பட்ட அவர்களது வீரர்களுக்குச் சிகிச்சையளிக்க வற்புறுத்துவதாகவும், நாடு திரும்புவோம் என்ற நம்பிக்கையை செவிலியர்கள் இழந்து விட்டதாகவும், இந்திய அரசாங்கம் சவப்பெட்டிகளையாவது உடனடியாக அனுப்பி வைக்கட்டும் என்று செவிலியர்கள் புலம்புவதாகவும் பரபரப்புக்காக நொடிக்கொரு செய்தி வெளியிட்டு மகிழ்ந்தனர்.

உண்மையில் நடந்ததென்னவோ செவிலியர்கள் பணியாற்றிய மருத்துவமனை மட்டுமின்றி முழுநகரமும் ஐஸிஸ் படையினரின் கட்டுப்பாட்டில் வந்துவிட்டதால், தோல்வியுற்ற இராக் படையினர் ஆத்திரத்தில் மருத்துவ மனையைத் தாக்கினால், தங்களது கட்டுப்பாட்டிலிருக்கும் மருத்துவ மனையில் இந்திய செவிலியர்களுக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் ஐஸிஸ் படையினர் செவிலியர்களைத் தங்களுடன் பாதுகாப்பாக வைத்திருந்தனர்.

மேலும், கடந்த பிப்ரவரி 2014 முதலே அதாவது உள்நாட்டு யுத்தம் ஏற்படுவதற்கு முன்பிருந்தே இராக் அரசு மருத்துவமனை ஊழியர்களுக்கு ஊதியம் வழங்காமல் இருந்தது. இந்நிலையில் ஊதியம் கேட்டவர்களைக் கொன்றுவிட்டுப் பழியை ஐஸிஸ்மீது போடவும் வாய்ப்பிருந்தது. இதனை உணர்ந்தே இந்தியச் செவிலியர்களைத் தங்களுடன் பாதுகாப்பாக வைத்திருந்தனர். செவிலியர்கள் விரும்பினால் கூடுதல் ஊதியம் தரப்படும் என்றும் தங்கள் பகுதியில் தொடர்ந்து பணியாற்றும்படியும் கோரினர். எனினும், அவர்கள் தாய்நாடு திரும்பவே விருப்பம் தெரிவித்ததால், அம்முயற்சியில் ஈடுபட்டிருந்த இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகளிடம் பாதுகாப்பாகக் கொண்டு சென்று ஒப்படைத்தனர்.

"They didn't do anything, they didn't disturb us and they didn't harm anyone... They talked nicely,"

நாடு திரும்பிய செவிலியர்கள், இராக்கில் தாங்கள் துளிகூட துன்புறுத்தப் படவில்லை என்பதையும், கண்ணியமாகவே நடத்தப்பட்டோம் என்பதையும் சொன்னபோது, அதுவரை விஷம் கக்கிவந்த ஊடகங்கள் இந்தச் செய்திகளில் அவற்றை முன்னிலைப் படுத்தவில்லை. "போராளிகள் நல்லவர்கள்" என டிவி பேட்டிகளில் நர்ஸ்கள் ஒட்டு மொத்தமாகச் சொல்வதைக் கேட்ட பிறகும் தீவிரவாதிகள் என்று அழுத்தி எழுதி வருகின்றனர். இதுதான் நம்நாட்டு ஊடகங்களின் தர்மம்!

இராக்கில் உள்நாட்டுக் கலவரம் நடந்தால் என்ன? அங்குள்ள ஷிஆ - சுன்னத்தி அரசியல் கோட்பாடுகளைப் பின்பற்றுபவர்களுக்குள் அதிகாரப் போட்டி ஏற்பட்டால் என்ன? நம்நாட்டில் ஆயிரம் பிரச்சினைகள் உள்ள போதும் அதையெல்லாம் ஓரம் கட்டிவிட்டு, இராக் நிலவரத்தை முன்னிலைப்படுத்த வேண்டிய அவசியம் என்ன? 46 உயிர்கள் பலியாகிவிடக்கூடாது என்பதுதான் இவர்களின் கவலை என்றால் சென்னையில் இடிந்த கட்டிடத்தில் அறுபதுக்கும் மேற்பட்ட உயிர்கள் பலியானதைவிட இராக் விசயத்தை முன்னிலைப் படுத்தியதன் நோக்கம் என்ன? 61 ஐ விட 46 ஐ முன்னிலைப்படுத்தி இராக் செய்தியைப் பரபரப்பாக்கியுதன் மர்மம் என்ன? இஸ்லாமோஃபோபியா என்ற இஸ்லாம் குறித்த அதீத அச்சம்தானே?

சில தீவிர இந்துத்துவ வெறியூட்டும் அமைப்புகளால் இந்தியாவில் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்டு வரும் அநீதிகளைப் பெரும்பான்மை இந்தியர்கள் குறிப்பாக இந்துக்கள் ஏற்கவில்லை. ஆகவேதான் 2004 முதல் 2014 வரை இந்துத்துவா அரசியல் கட்சிகளுக்கு மரணஅடி கொடுத்து முடக்கி வைத்ததோடு காங்கிரஸை ஆட்சியில் அமர்த்தினர். (காங்கிரஸின் தொடர்ச்சியான ஊழல்களில் வெறுப்புற்றும் தேர்தல்கால ஊடக வணிகச் சூழ்ச்சிகளை அறியாமலும் மாற்றம் வேண்டிய மக்களுக்கு வேறு உருப்படியான தெரிவு இல்லாததாலும் தற்போதைய பாஜக அரசை 31% வாக்காளர்கள் வாக்களித்துத் தேர்ந்தெடுத்துள்ளது இந்தியாவின் இன்றைய தலையெழுத்து)

சிறுபான்மையினருக்கு தொடர்ந்து பாதிப்பு ஏற்படுத்தும் சங்பரிவாரங்களை பாஜகவும், காங்கிரஸும் பாதுகாத்தும், கண்டுகொள்ளாமலும் இருந்து மாறிமாறி அரசியல் லாபம் அடைந்து வருகின்றன.

இவ்வாறாக, முஸ்லிம்களுக்கு எதிரான திட்டமிட்டு செய்யப்படும் அநீதிகளை நியாயப்படுத்துவதற்கு, முஸ்லிம்களில் ஒரு சிலர் செய்யும் தவறுகளைப் பூதாகரப்படுத்தி "பார்த்தீர்களா? இவர்கள் மீதான தாக்குதல்கள் சரிதான்!" என்ற மனநிலையை மக்களுக்கு உருவாக்கவே கண்முன் நடக்கும் கொடுமைகளைப் பெரிது படுத்தாமலும், எங்கோ நடக்கும் நிகழ்வுகளைப் பரபரப்பூட்டியும் செய்தி வெளியிட்டு அரிப்பைத் தீர்த்துக் கொள்கின்றனர். அவ்வகையில்தான், இந்துத்துவ நமைச்சலுக்கு இராக்கிலிருந்து சொறிமருந்து தடவி சுகம் கண்டுள்ளனர் என்பது நிதர்சனமான உண்மை.

N. ஜமாலுதீன்

தொடரும் தண்டவாளக் கொலைகள்...! – தவ்ஃபீக் சுல்தானா… 13

அதிரைநிருபர் பதிப்பகம் | August 18, 2013 | , , , , ,

திருச்சி காஜாமலை காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் அக்பர் பாஷா இவரின் மகள் தவ்ஃபீக் சுல்தானா(13). 8ம் வகுப்பு மாணவி. கடந்த 13ம் தேதி பள்ளிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. மறுநாள் எடமலைப் பட்டி புதூரை அடுத்த ரெட்டை மலை பகுதியில் தண்டவாளத்தில் மர்மமான முறையில் உடல் உறுப்புகள் சிதைந்து உடல் சிதறி பினமாக கண்டெடுக்கப்பட்டார்.  

14.08.2013 அன்று தவ்ஃபிக் சுல்தானா கற்பழித்து கொலை செய்யபட்டுள்ள செய்தியை தமிழக ஊடகங்களில் ஒருதலைப்பட்சமாக காட்டப்படுகிறது என்பது மிகத் தெளிவாகிறது. டெல்லியில் ஓரு மாணவி கற்பழிக்கப்பட்டதற்கு ஒட்டு மொத்த இந்தியாவும் ஒருமித்த குரலில் அநீதிக்கு எதிராக ஒன்று திரண்டு குற்றவளிகளுக்கு தண்டனை வழங்கவும்" குற்றத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை உடனே பிடிக்கவும் போராட்டம் நாடு முழவதும் நடந்தது "குற்றவாளிகளும் உடனே பிடிக்க பட்டனர், இந்தியாவில் வடமாநிலத்தின் ஓரு நகரத்தில் நிகழ்ந்த குற்றச் செயலுக்கு ஒன்று கூடிய நம்ம தமிழ்நாட்டு மக்களும் ஊடங்களும் சொந்த மாநிலத்தில் ஓரு இளம் பெண் கொடூரமான முறையில் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட கொடூரம் நிகழ்ந்திருக்கிறது. இதை எந்த ஒரு செய்தித்தாள்களிலோ தொலைக் காட்சியிலோ வெளிச்சம் போட்டு காட்டாமல் மறைத்தது ஏனோ?

இந்த கொடூரத்திற்கு ஏனோ சமுக அர்வலர்களும் குரல் கொடுக்காமல் இன்னும் மவுனம் சாதிக்கிறார்கள்.

இந்த கொலையைக் கண்டிக்க மறந்த பத்திரிகை மற்றும் தொலைகாட்சிகளின் ஒருதலைபட்சமான போக்கை அனைவரும் கண்டிக்க வேண்டும். டெல்லியில் வசிக்கும் பெண்ணுக்கு ஓரு நியாயம் தமிழ்நாட்டில் வாழும் பெண்ணுக்கு வேறு நியாயம், அதுவும் சிறுபான்மை சமூகத்தைச் சார்ந்த ஓர் முஸ்லீம் பெண் என்ற பாரபட்சம்.

தவ்ஃபிக் சுல்தானா….. இந்த இளம் பிஞ்சும் ஒரு பெண்தானே…. தமிழ் மக்களே இந்தக் கொடூரத்தை கண்டித்தும் கொடிய குற்றவாளிகளை உடனடியாக கண்டுபிடித்து விரைவில் தண்டிக்கப்பட குரல் கொடுக்க வேண்டும்.

இந்த கொலை தொடர்பாக சரியான விசாரனை நடத்த கோரி திருச்சியில் முஸ்லீம்கள் நேற்று முன்தினம் நடைத்திய ஆர்பாட்டத்தின் காணொளி இதோ..


அதிரைநிருபர் பதிப்பகம்

மாணவி தவ்பிக் சுல்தானாவின் கொலையும் நாம் பெற வேண்டிய பாடமும்.

முதலில் அவருடைய தந்தை சவூதி அரேபியாவில் வேலை பார்க்கிறார் தந்தையின் நேரடி கவனிப்பற்ற வளர்ப்பு. ஆயிரம் பேர் இருந்தாலும் தந்தை இருப்பது போல் வராது. இன்னும் நாம் வெளிநாட்டில் வேலையிலேயே கவனம் செலுத்தி நமது பிள்ளைகளை இன்னும் எத்தனை பேரை இழக்க போகிறோம் என தெரியவில்லை அல்லாஹ் தான் பாதுகாக்க வேண்டும்.

இரண்டாவது காரணம் மாணவி தவ்பிக் சுல்தானா தன்னை சிலர் பின்தொடருவதாகவும் கேலி செய்வதாகவும் தன் கூடப்படித்த தோழிகளிடம் சொல்லியிருக்கிறரே தவிர பெற்றோர்களிடம் சொல்லவில்லை. சொல்லியிருந்தால் ஒருவேளை காப்பாற்றப்பட்டிருக்கலாம். பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் உள்ள இடைவெளியை இது காட்டுகிறது. பெற்ற பிள்ளைகளிடம் உற்ற நண்பன் போல் பெற்றோர்கள் நடந்துக் கொள்ள வேண்டும் நம்மிடம் பேசுவதற்கு அவர்களின் குறைகளை சொல்வதற்கு தயங்கக் கூடாது.

வெளிநாட்டில் இருக்கும் சகோதரர்கள் போனில் பேசும்போது குழந்தைகளிடம் குறைகளை கொஞ்சம் நேரம் செலவழித்து பேசி கேட்டுத் தெரிந்துக் கொள்ளுங்கள். பிள்ளைகளிடம் நல்ல நண்பனாக நான் இருந்து விட்டால் பல பிரச்சனைகளை ஆரம்பத்திலே களைந்து விடலாம். இன்ஷா அல்லாஹ்.

செய்தி மன்றத்தின் கனம் எடிட்டார் அவர்களே..! 11

அதிரைநிருபர் | March 05, 2013 | , ,



ஒரு குற்றம் நடந்த அன்றே, வெறும் வெற்று பரபரப்புக்காக ஊடகங்களே தம் யூகத்தால் "முதல் தீர்ப்பை" நான் முந்தி நீ முந்தி என்று செய்தியாக எழுதி விடுகின்றன. முதல் நாள் சொன்ன தீர்ப்பை அடுத்தடுத்த நாள் ஊதி பெரிதாக்குகின்றன. பின்னர் அதன்மீதே மற்ற அனைத்து செய்திகளையும் 'ஆதாரங்களாக' கட்டமைக்கின்றன. இந்நிலையில்... பல தரப்பு வாதங்கள், விசாரணைகள், சாட்சிகள், ஆதாரங்கள் அடிப்படையில் அலசி ஆய்ந்து... ஒரு நீதிபதியால் அந்த ஆரம்ப 'ஊடக தீர்ப்பை'... sorry... 'ஊடக திரிபை' மாற்றி... இப்போது உண்மையை தீர்ப்பாக எழுதி தர்மத்தை நிலைநாட்ட முடிவதில்லை..! இதற்கு அரசும் ஆதரவாக இருக்க முடிவதில்லை. It is really pathetic now a days..!  

கல்லூரி மாணவி அம்ரிதா மோகன் 
இதோ... மற்றுமோர் உதாரணம்..! கேரளாவில்... இருவாரம் முன்னர், பல ஊடகங்களில் ஒரு பரபரப்பு செய்தி வந்தது. அந்த செய்தி இதுதான்.

திருவனந்தபுரத்தில் கல்லூரி மாணவி 'அம்ரிதா மோகன்' என்பவர் தன்  தோழிகளுடனும், குடும்பத்தினருடனும் அருகில் உள்ள ஓட்டலுக்கு சென்றார். ஓட்டலில் குடும்பத்தார் வந்த ஜீப் மற்றும் தோழிகளுடன் வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தார். பார்க்கிங்கில் இருந்த இரு  இளைஞர்கள் நடனம் ஆடி ஆபாச சொற்கள் பேசி ஈவ் டீசிங் செய்தனர். இதனால் ஆவேசமான அம்ரிதா விறுவிறு வென்று இளைஞர்களை நோக்கி பாய்ந்து சென்று அவர்களை தான் கற்றிருந்த கராத்தே மற்றும் களரி வித்தைகள் மூலம் அடித்தார். மாணவியுடன் தந்தையும், குடும்பத்தினரும், தோழிகளும் சேர்ந்து அவர்களை அடித்து விரட்டினார்கள். பின்னர் இளைஞர்கள் பற்றி அம்ரிதா போலீசில் புகார் செய்தார். கராத்தே / களரி தற்காப்பு கலை தக்க சமயத்தில் துணிச்சலை வரவழைத்து உதவி செய்ததாக மாணவி அம்ரிதா பெருமையுடன் ஊடக பேட்டியில் கூறினார். 20 வயதாகும் அம்ரிதா பி.ஏ. படித்து வருகிறார்.

பாலியல் வன்கொடுமைகளில்  ஈடுபடுவோரிடம் இருந்து தன்னை காத்துக்கொள்வதில் கொலையே செய்து இருந்தாலும் நீதி மன்றம் அப்பெண்ணை மன்னிக்கத்தான் செய்யும்..!
சமீபத்தில் டெல்லி மாணவி கொடூர கொலையை கண்டு வந்த மக்களுக்கு இந்த மாணவி நிச்சயமாக சாதித்த பெண்மணியாகத்தான் மனதில் பதிவார் என்பதில் சிறிதும் ஐயமில்லை..! இதனை நன்கு புரிந்து கொண்டண ஊடகங்கள்..! உடன் செய்தி சமைக்க ஆரம்பித்தன, டிஆர்பி எகிறியது..!

ஈவ் டீசிங் பண்ணிய கொடூரர்களை, அரக்கர்களை, மனித மிருங்களை, பாலியல் வன்முறை யாளர்களை, பெண் தொல்லையர்களை (மீடியாவின் விதவிதமான இழிவு பட்டங்கள்தான்) அடித்து விரட்டியதால்... வீராங்கனை, இரும்பு பெண்மணி, அஞ்சா நெஞ்சி, பெண்ணுக்கு இலக்கணம், வீரத்திலகம், பாயும் புலி, சீறும் சிறுத்தை என்றெல்லாம் மீடியா தயவால் விதவிதமான சிறப்பு பட்டம் சேர்ந்து கொண்டது.

இந்த வீராங்கனைக்கு பள்ளி, கல்லூரி, மாதர் சங்கம், ரோட்டரி கிளப் என எங்கும் பல பாராட்டு விழா கூட்டங்கள். மாநில அமைச்சரே வீடு தேடி நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தார். பல ஒளி ஊடகங்களின் ஸ்பெஷல் ஷோ பேட்டிகள், வார இதழ்கள் பேட்டிகள் என்று அவ்வாரம் இவர் புகழின் உச்சத்தில் இருந்தார். கராத்தேயும் களரியும் கூட சைடில் புகழ்பெற்றது.
 .
இப்படித்தான், இவரின் புகழை மீடியா உயர்த்த உயர்த்த... அந்த இளைஞர்கள் நாளுக்கு நாள் கேவலப்பட்டு பெரிய வில்லனாகிப் போனார்கள். 

இதற்கிடையில், அவர்களுக்கு இந்த கராத்தே அடி எல்லாம் போதாது, சட்டப்படியும் தண்டனை தர வேண்டும் என்ற பலரின் ஊடக கோரிக்கை விளைவால், அவர்களை தேடும் பணி தொடங்கியது. ஒருவனை பிடித்துள்ளார்கள். விசாரிக்கிறார்கள். இன்னொருவனை தேடி வருகிறார்கள் என்று பல செய்திகள்.

இதோடு ஒருவழியாக பெரும்பாலான ஊடகங்களில் செய்தி முடிவு பெற போகும் சமயம்... அப்போதுதான், விஷயம் வேறு மாதிரி போனது..! 

தேடிப்பிடிக்கப்பட்ட அந்த இளைஞர் மூலம் வந்த செய்தி யாதெனில், அவர் செமை அடி வாங்கி உள்ளார். மூக்கு எலும்பு உடைந்து உள்ளது. ஆஸ்பத்திரியில் இருந்த அவரை போலீஸ் விசாரித்ததில் அவர், அம்ரிதா மீது அவருடைய புகாரை அளித்தார். இப்போது, இவர் தரப்பு போலீஸ் செய்தியை பார்ப்போம்.

திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு ஓட்டலுக்கு இவரும் இவருடைய நண்பரும் சென்றார்கள். இவர்கள் இருவரும் அரசின் IT@School project இல் தற்காலிக வாகன ஓட்டுனர்கள். அப்போது அரசு வாகனத்தை அங்கு பார்க்கிங் செய்வதில் இவர்களுக்கும் அவருடைய பெற்றோருக்கும் சிறுவாக்குவாதம் ஏற்பட்டது.

இதனால் ஆத்திரம் அடைந்த அமிர்தா, தம் தந்தை சார்பாக அந்த இருவரையும்  தான் கற்ற கராத்தே களரி வித்தை கொண்டு 
மற்றவர்களுடன் சேர்ந்து கொண்டு கடுமையாக தாக்கியுள்ளார். இதில் அவரது மூக்கு உடைபட்டு ரத்தம் கொட்டியுள்ளது. மற்றவருக்கு வேறு வகை காயம். காயமடைந்த இருவரும் மருத்துவ மனையில்  அனுமதிக்கப்பட்டனர். 

இந்த பிரச்சனை விவகாரமாக உருவெடுக்கும் முன்னரே அமிர்தா உடனடியாக காவல்நிலையம் சென்று தன்னை இரண்டு பேர் பாலியல் தொந்தரவு செய்ததாகவும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த போது அவர்கள் தன்னையும் தன்னுடைய பெற்றோரை ஆபாசமாக திட்டியதாகவும் அடிக்க வந்தோரை தற்காப்பிற்காக இருவரையும் தாக்கியதாகவும் புகார் செய்து அவர்களை முந்திக்கொண்டார்..!

வழக்கம்போலவே ஊடகங்களும் உண்மை நிலை அறியாமல், அம்ரிதாவின்  ஒரு பக்க வாதத்தை மட்டுமே வைத்து, அதை மட்டுமே உண்மை என நம்பி சகட்டுமேனிக்கு அந்த பெண்ணை அளவில்லாமல் ஆதரித்து அவரை கதாநாயகியாக சித்தரித்தும் அந்த இளைஞர்களை அவர் தரப்பு வாதத்தை கேட்காமல், காமகொடூர வில்லன்களாகவும் சித்தரித்து செய்திகள் சமைத்து வெளியிட்டன. விளைவு இந்த இரு இளைஞர்களும் ஓட்டுனராக வேலை செய்து வந்த அரசுப்பணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர்.

இந்த சம்பவத்தை விசாரிக்ககோரி அமிர்தாவிற்கு எதிராக இளைஞர்கள் காவல்நிலையத்தில் மேல்முறையீடு செய்ய இதனை விசாரிக்க தனிக்குழு அமைக்கப்பட்டது. அந்தக்குழு அளித்த அறிக்கையில் தவறு முழுக்கமுழுக்க அமிர்தா தரப்பில் உள்ளதாகவும் அவர் தகுந்த காரணம் ஏதும் இல்லாமல் தன்னுடைய கராத்தே களரி பயிற்சியை அந்த இளைஞர்கள் மீது பிரயோகித்த தாகவும் தெரிவித்துள்ளனர்.

அந்த இரு சாதாரண இளைஞர்கள், தோழிகளுடன் 
குடும்பத்துடன் உள்ள ஒரு பெண்ணை பாலியல் சீண்டல்கள் செய்திருக்க வாய்ப்பு இருக்குமா என்ற ஐயம் இப்போது நமக்கு எழுகிறது அல்லவா..? 

இதனை நன்கு விசாரித்த நீதிபதி, அமிர்தா, அவரின் தந்தை மோகன், அவரின் நண்பர் வில்லியம், மற்றும் அம்ரிதாவின் இரு தோழிகள்  ஆகிய ஐவர் மீதும், அரசுப்பணியாளர்கள் மீது கொலைவெறி தாக்குதல் தொடுத்தல், அரசுப்பணிக்கு இடையூறு விளைவித்தல் போன்றவற்றில் வழக்குப்பதிவு செய்ய காவல்துறைக்கு அதிரடியாக உத்தரவிட்டார். 


எனவே, தமது தன்மானத்தை காக்கும் பொருட்டாக, இந்த விஷயத்தையும் ஊடகங்கள் ஜோடனை செய்து நீதிபதியை 'பெண்ணாடிமைத்தனத்தை ஆதரிப்பவர்', 'ஆணாதிக்கவாதி', 'பெண்ணுரிமைக்கு எதிரான தீர்ப்பு' என்று விமர்சனம் செய்ய ஆரம்பித்து விவாதம் நடத்தியது. மீண்டும் அதிக டிஆர்பி எகிறல்..!  பெண்ணிய அமைப்புகள் எதிர்க்கின்றன..!

அரசும் ஏற்கனவே இந்த பெண்ணுக்கு கடும் ஆதரவு தெரிவித்து இருந்ததால்... விளைவு..? அந்த நீதிபதியும் தற்போது இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்..! ஊடகத்தால் சமைக்கப்பட்ட மக்கள் மன ஓட்டத்துக்கு மாற்றாக ஏதும் செய்ய முடியாத நிலையில்தான் அரசும்..! மக்கள் ஓட்டு முக்கியமாயிற்றே..! 

மிக மிக சில ஊடகங்கள் மட்டும் விதிவிலக்காக உண்மை நிலையை ஆராய்ந்து வெளியிட்டு வருகின்றன என்பதை நாம் அறிவோம். ஆனால், பெருவாரியான முன்னணி ஊடகங்களின் இந்த விஷமச்செயலால்... அரசு வேலையும் போய், பாவம் ஒருபக்கம் பழி ஒரு பக்கம் என்று... காமகொடூரன் என்ற அவப்பெயரும் வாங்கி, அந்த இளைஞர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்..! இவர்களுக்காக இவர்களின் தரப்பு நீதியை நிலைநாட்ட முயற்சித்த காவல்துறையினரும் நீதிபதியும் கூட அரசால் பந்தாடப்படுகின்றனர் என்றால்...  

இதற்கெல்லாம் மூல காரணம் யார்..?

ஆகவே, நம் நாட்டில் எந்த ஒரு குற்றத்துக்கும், செய்தி என்ற பெயரில் முதல் தீர்ப்பை எழுதுவது ஊடகங்களே என்ற துர் நிலைக்கு நாம் வந்து விட்டோம்..! மக்கள் மனதில் நன்கு பதிந்து விட்ட இந்த செய்தியை... மன்னிக்கவும், 'நீதியை' மாற்ற ஒரிஜினல் நீதி மன்றமே எவ்வளவு கஷ்டப்படுகிறது... பாருங்கள் சகோஸ்..!

அப்சல் குருவுக்கு எதிரான 'கூட்டு மன சாட்சி' உருவாக்கப்பட்டது, நடுநிலை அற்ற ஒரு பக்க சார்பு ஊடகங்களால் தான்..! அதற்கு ஜீ தொலைக்காட்சி ஆவணப்படம் எடுத்து வாஜ்பாய் அத்வானி சப்போர்ட்டுடன் தலைமை தாங்கியது. அதனால்தான், அந்த நீதிபதியே கூட சட்டப்படி அல்லாது அந்த ஆவணப்படத்தின் பாதிப்பில் விளைந்த "இந்திய கூட்டு மனசாட்சியை திருப்திப்படுத்தும்" அடிப்படையில் தீர்ப்பு வழங்குவதாக கூறியிருக்கலாம்..! ஒருவேளை மாற்றி மட்டும் தீர்ப்பு சொல்லி இருந்தால்... 'பாக்கிஸ்தானின் கைக்கூலி', 'பிரிவினைவாதத்தை ஆதரிக்கும் துரோகி', 'தேசப்பற்று அற்றவர்' என்றெல்லாம் இந்த நாக்கில் நரம்பில்லாத ஒரு சார்பு ஊடகங்கள் அவரை நிச்சயமாக சொல்லி இருக்கும்..!

ஒவ்வொரு குண்டு வெடிப்புக்கு பின்னரும் இப்படித்தான் ஒரு பக்க சார்பு செய்திகள், ஊடகங்களால் சமைக்கப்படுகின்றன. எப்படி நியூஸ் சொன்னால் போனியாகுமோ, எதை சொன்னால் தமது டிஆர்பி எகிருமோ அப்படித்தான் அதைத்தான் நியூஸ் சொல்கின்றன..! எது உண்மை எது பொய் என்பது பற்றி பெருவாரியான ஊடகங்களுக்கு கவலையே இல்லை..!

இறுதியில் அவர்கள் சொன்ன செய்திகளுக்கு முற்றிலும் மாற்றமாக அவர்களால் சித்தரிக்கப்பட்ட வில்லன்கள் எல்லாம் 'நிரபாராதிகள்' என்று ஒரு சில நேர்மையான சிறந்த நீதிபதிகளால் விடுவிக்கப்படும் போது, அதை அதேபோல தலைப்புச்செய்திகளில் சொல்ல வெட்கப்படுகின்றன. அல்லது நீதிபதியை அவதூறு செய்கின்றன..!

2000 துவக்கத்தில், முகத்தை மறைத்து கண்களை மட்டும் காட்டும் ஒரு கருப்பு புருக்கா போட்ட பெண் புகைப்படத்தை காட்டி... தமிழ்நாட்டில் "மனித வெடிகுண்டு ஆயிஷா, இவர்தான்..!" என்று தலைப்புச்செய்திகளில் ஊடகங்கள் அலறின. மொத்த நாடும் அது போன்ற ஆடை உடுத்திய முஸ்லிம் பெண்களை பயங்கரவாதிகளாக பார்த்தன. முஸ்லிம் பெண்களின் முகத்திரையை கழற்றிப்பார்த்துவிட்டு, கையில் உள்ள ஆயிஷாவின் முகத்திரை அணிந்த போட்டோவை வைத்துக்கொண்டு "சரி, போ... முகத்திரை இல்லாத நீ ஆயிஷா இல்லை" என்ற வயிறு எரியும் வேதனை காமடி கூத்துக்கள் ஒவ்வொரு போலீஸ் செக் போஸ்டிலும், டிராஃபிக்  சிக்னலிலும் அரங்கேறின..! ஆனால், 'அது போலி நியூஸ்', 'மனித வெடிகுண்டு உண்மை அல்ல' என்று போலிஸே சொன்ன போது, அந்த உண்மையை ஊடகங்கள் சொல்ல வெட்கப்பட்டு அப்டியே அமுக்கின..!

இதோ... இந்த ஹைதராபாத் குண்டு வெடிப்பில் கூட... 

முதன் முறையாக 'ஸ்லீப்பர் செல்கள்' வந்து விட்டனர். சினிமாவை சினிமாவாக பார்க்காத ஊடகங்கள்  'துப்பாக்கி' படத்தின் கதையை ஹைதராபாத் குண்டு வெடிப்பு செய்திகளில் ரீல் ஓட்டிக்காண்பிக்க ஆரம்பித்து விட்டனர். 

அந்த 'ஊடக துப்பாக்கியின்' முதல் ரீலே....... பிக் ஃப்ளாப்...!

பாகிஸ்தானில் பயிற்சி பெற்று இங்கே ஹைதராபாத் வந்து மக்களோடு மக்களாக வாழ்ந்து குண்டு வைத்த ஓர் 'இந்தியன் முஜாஹிதீன் ஸ்லீப்பர் செல்' என்று ஒருவரின் புகைப்படத்தை முஸ்லிம் என்று சொல்லி போட்டார்கள். பல ஊடகங்களில் இந்த ஃபோட்டோ வர...

அய்யகோ... அந்தோ பரிதாபம்..!

அந்த நபர் பாகிஸ்தானின் ஓர் அரசியல் கட்சியின் தலைவர். சிந்து மாகாண சட்டமன்ற உறுப்பினர்..! ஆனால், இவர் சில மாதங்களுக்கு முன்னரே ஒரு பாகிஸ்தானிய தலிபான் அமைப்பால் கராச்சியில்  சுட்டுக்கொல்லப்பட்டு, பப்ளிக்காக அடக்கம் செய்யப்பட்டு விட்டவர்..!!! (பாக். செய்தி தள சுட்டி)

"போனமாசம் எங்க நாட்டில் செத்து அடக்கப்பட்டவன், எப்படிடா உங்க நாட்டில் வந்து குண்டு வைப்பான்..? மயான குழியிலிருந்து எழுந்து வந்தா..?"  

-----என்று அந்த கட்சியினர் கொந்தளிப்பு அடைய, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இந்தியாவை மன்னிப்பு கேட்க சொல்ல, உடனே தவறு உணர்ந்து நாம் மன்னிப்பு கேட்டு..... எதற்கு நமக்கு இந்த அவமானம் ஊடகங்களே..? 

ஜனநாயகத்தின் ஒரு தூணாக  உம்மில் பெரும்பாலோர் இல்லை..! மீதி தூண்களையும் வெட்டும் கோடரியாகத்தான் உம்மில் பெரும்பாலோர் இருக்கிறீர்கள்..! செய்திகளை நடுநிலையாக தாருங்கள். ஒரு பக்க சார்பாக சமைக்காதீர்கள். குற்றங்களில் தீர்ப்பு எழுதும் அதிகப்பிரசங்கி வேலை உங்களுக்கு இனி வேண்டாம்..! தயவு செய்து திருந்துங்கள் ஊடகங்களே..!

எப்பொருள் யார்வாய் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு. 
---திருவள்ளுவர்

செய்தியை சொல்லும் ஊடகம் அப்படி மெய்ப்போருள் காணாவிட்டால்...?

(உண்மையை ஆராயாமல்) ஒருவர் தாம் கேள்விப்பட்டதை எல்லாம் (பிறருக்கு) அறிவிப்பதே அவர் பொய்யர் என்பதற்குப் போதுமான சான்றாகும் என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)  
(ஹதீஸ்நூல்: முஸ்லிம் 6)

முஹம்மது ஆஷிக்

நன்றி:http://pinnoottavaathi.blogspot.com/2013/02/blog-post_28.html

டெல்லி மாணவி கற்பழிப்பு - யாருக்கு தண்டனை !? 35

அதிரைநிருபர் | December 30, 2012 | , , , , ,

டெல்லி மாணவி கற்பழிப்பு சம்பவத்தால் சிகிச்சை பலனின்றி உயிர் பலியான பெண் அமானத் பற்றிய செய்தியே தேசிய மற்றும் உலகம் தழுவிய செய்தி ஊடகங்களில் இதுவே கடந்த இரண்டு நாட்களாக தலைப்பு செய்தி!

அந்த கற்பழிப்பு கொடூரத்தை செய்தவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்று கோஷங்கள் கடந்த இரண்டு வாரமாக இந்திய ஊடங்களின் ஒளி, ஒலிகளில் மின்னிக் கொண்டிருகிறது என்பதை அனைவரும் அறிந்ததே!.

TRIBUTES TO INDIA’S DAUGHTER, INDIA DAUGHTER REST IN PEACE, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண் பலி. ஜனாதிபதி, பிரதமர், தமிழக முதல்வர், தி.மு.க. தலைவர் என்று வரிசைப் பிரகாரம் இரங்கல். டெல்லி மாணவி கற்பழிப்பு தொடர்பான செய்திகளை இணையத்தில் வாசிக்க நேரிட்டதில் பெரும்பான்மையான ஊடக தளங்களின் பேனர்களாக மேல், கீழ், இடது, வலது, புறங்கள் பெண்களின் ஆபாச படங்கள் நிறைந்ததாகவே உள்ளது. தொட்டிலை ஆட்டிவிட்டு பிள்ளையை கிள்ளி விளையாடும் இது போன்ற ஊடகங்களுக்கு என்ன தண்டனை?

பொதுமக்கள் பார்ப்பதற்கென(?) எடுக்கப்படும் சினிமாக்களில் கற்பழிப்பு, விபச்சாரம், ஆபாச காட்சிகளுடன் வயது வித்தியாசமின்றி காம இச்சையை தூண்டும் காட்சிகளை எடுக்கும் சினிமாகாரர்களுக்கு என்ன தண்டனை?

பெரும்பாலான கற்பழிப்பு குற்றங்களுக்கு காரணமாக இருப்பது மது என்பது ஒட்டுமொத்த மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை. குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால் வருடத்திற்கு தமிழகத்தில் மட்டும் 27,000 கோடி ரூபாய் டாஸ்மார்க்கிலிருந்து வருமானம் வருகிறதாம்(!!!). தமிழ்நாட்டில் குடிகாரனின் சராசரி வயது 13. ஏராளமான பாலியல் வன்முறைக்கு காரணம் இந்த மதுவே. கேடுகெட்ட இந்த மதுவை வைத்து கடைவிரித்து வருமானம் பார்க்கும் ஆட்சியாளர்களுக்கு என்ன தண்டனை?

பொது இடங்களிலும் அரைகுறை ஆடைகளை அணிந்து ஆண்களின் காமப் பார்வையில் சிக்கி கற்பழிக்கப்பட்டட பின்னர், நான் எந்த ஆண் நண்பனோடும் சுற்றுவேன், நான் எவ்வகை ஆடை (ஆபாச அரைகுறை உடையானாலும்) அணிய வேண்டும் என்பதை தீர்மானிப்பது என்னுடைய உரிமை என்று போலி பேராட்டங்கள் நடத்தி பெண் சமூகத்தை கேவலப்படுத்தி வழிகெடுத்துவரும் போலிப் பெண்ணுரிமை காவலாளிகளுக்கு என்ன தண்டனை?

இப்படி கேள்விகளை அடுக்கிக்கொண்டே போனால், இந்தியாவில் பெண் சுதந்திரம், பெண்ணுரிமை பற்றி பேசும் போலிகளான எவனுக்கும் / எவளுக்கு அறுகதையில்லை. இஸ்லாத்தை முறையாக கடைப்பிடித்துவரும் முஸ்லீம்களை தவிர.

டெல்லி பாலியல் வன்முறை தொடர்பாக “பெண்களுக்கு இரவு நேரத்தில் ஊர் சுற்றுவதால் இது போன்ற அசம்பாவிதம் நடைபெறுகிறது” என்று 3 பெண் பிள்ளைகளை பெற்றவர் என்ற முறையில் நியாயமான கருத்தை தெரிவித்த ஆந்திராவை சேர்ந்த ஒரு அமைச்சருக்கு எதிராகவும், கற்பழிப்புக்கு எதிராக போலிப் பேராட்டம் நடத்தி வருபவர்களைக் கடுமையாக சாடிய இந்திய குடியரசுத் தலைவர் பிரனாப் முகர்ஜியின் மகன் அபிஜித் முகர்ஜியையும் காமவெறியைத் தூண்டும் ஊடகங்கள் பொங்கி எழுந்து கண்டனங்களால் தங்களின் போலிப் பெண்ணுரிமை ஆதரவை காட்டினார்கள்.

இஸ்லாத்தை அறியாத அல்லது விமர்சிக்கும் பிறமத சகோதர சகோதரிகளே..! இது போன்ற கற்பழிப்பு வன்முறைகளும், சீர்கேடுகளும் தொடராமல் இருக்க, பெண்களுக்கு மரியாதையை, கண்ணியத்தை கொடுங்கள். அவர்களை அரை நிர்வாணத்துடன் மேடையிலும், திரையிலும், தொலைகாட்சிகளிலும் ஆட விட்டு உங்களின் காம பசியை தீர்த்துக்கொள்ள உதவும் காட்சிப் பொருளாக அவர்களை பயன்படுத்தாதீர்கள். செய்த குற்றத்திற்கு ஏற்ற உடனடி தண்டனையும், அது நிகழ்வதற்கு காரணமாக அமைந்த காரணிகளை கண்டறிந்து கலைந்து எறிவதுதான் மக்களுக்கும் பொறுப்பில் இருக்கும் அரசுக்கும் உள்ள தலையாய கடமை. கடும் சட்டங்களால் மட்டுமே பாலியல் குற்றங்களை குறைக்க முடியாது, இஸ்லாம் நிலைநாட்டிய இஸ்லாமிய திட்டங்களால் பாலியல் குற்றங்களை அடியோடு குறைக்கலாம் இன்ஷா அல்லாஹ்.

ஆண்களுக்கும் பெண்களுக்கும் டைக் கட்டுப்பாடு - (திருக்குர்ஆன் 24:31, 33 :59).

பாலியல் வக்கிரத்தைத் தூண்டக்கூடிய செயல்களின் பக்கம் நெருங்கத் தடை - (ஹதீஸ் மற்றும் திருக்குர்ஆன் 17:32).
ஆணுக்கும் பெண்ணுக்கும் கற்பொழுக்கம், சுய பார்வைக் கட்டுப்பாடு  - (திருக்குர்ஆன் 24:30,31).
பத்து வயதுக்கு மேல் ஆண் குழந்தைகளையும் பெண் குழந்தைகளையும் பிரித்துப் படுக்க வைத்தல் - (ஹதீஸ்).
இரு பாலர்க்கும் கட்டாயக் கல்வி - (ஹதீஸ்).
பெண்கள் உரிய ஆண் துணையின்றி நீண்ட பயணங்கள் மேற்கொள்ளத் தடை - (ஹதீஸ்).
அந்நிய ஆண்களும் பெண்களும் இருபாலரும் இணைந்து சரளமாகப் பழகுவதற்குத் தடை -  (திருக்குர்ஆன் 24:27, 33: 55).
அந்நிய ஆண்களோடு பெண்கள் குழைந்து பேசத் தடை- (திருக்குர்ஆன் 33:32).
வயது வந்த அந்நிய ஆணும் பெண்ணும் தனித்திருக்கத் தடை - (ஹதீஸ்)
வயது வந்த ஆண்களுக்கும் பெண்களுக்கும் உரிய காலத்தில் விரைவாகத் திருமணம் -(திருக்குர்ஆன் 24:32 மற்றும் ஹதீஸ்)
மணப்பெண்ணின் சம்மதமின்றி மணமுடிக்கத் தடை (திருக்குர்ஆன் 17:31)
வரதட்சணைக்குத் தடை, பெண்ணுக்கு மணக்கொடை (மஹர்) கொடுக்க கட்டளை (திருக்குர்ஆன் 4:4, 17:31)
குடும்பத் தலைமையும் பொருளாதார சுமையும் ஆண் மீது கடமை,.  குடும்ப நிர்வாகம் பெண் மீது கடமை, பொருளாதாரச் சுமை மீது அல்ல. (திருக்குர்ஆன் 4:34 மற்றும் ஹதீஸ்)
கற்பொழுக்கமுள்ள பெண்கள் மீது அவதூறு கூறினால் கசையடி (திருக்குர்ஆன் 24:4  )
இந்த வரம்புகள் அனைத்து மனிதனால் உருவாக்கபட்டதல்ல, இது  அகிலத்தின் அதிபதி இறைவனால் வகுக்கப்பட்டது.

பாலியல் குற்றங்களுக்கு கடுமையான சட்டங்களை அமுல்படுத்தியிருக்கும் நாடுகளில் கற்பழிப்பு பேன்ற குற்றங்கள் மிகக் குறைவு என்பது உலகம் அறிந்ததே.
பாதிக்கப்பட்டவனின் நிலையிலிருந்து பார்த்தால்தான் தெரியும் அந்த குற்றத்திற்கு எவ்வகை தண்டனையைக் கொடுக்க வேண்டும் என்று. இஸ்லாமிய குற்றவியல் தண்டனைச் சட்டம் மட்டுமே இதுபோன்ற பாலியல் குற்றங்கள் குறைய மிகச் சரியான தீர்வு.

சிந்தீப்பார்களா வீதியிறங்கியிருக்கும் பெண்ணுரிமை பேரியக்கவாதிகளும், அறிவுஜீவிகள் என்று சொல்லித் திரியும் கேடுகெட்ட பிற்போக்கு சிந்தனையுடைய பெண்ணுரிமைக் காவலாளிகள் (?) அவர்களுக்கு துணைபோகும் அரசியல் வாதிகளும்!?

அதிரைநிருபர் பதிப்பகம்

ஊடக போதை - 6 தொடர்கிறது... 8

அதிரைநிருபர் பதிப்பகம் | February 11, 2012 | , , , , , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்….
version - 6

கடந்த ஊடக போதை தொடர் பதிவில், நவீன ஊடகங்கள் நம் அறிவு வளர்ச்சிக்கு தடையாக இருப்பதை விமர்சனம் செய்திருந்தோம், மேலும் மார்க்க கல்வியாளர்களின் எண்ணிக்கை குறந்துக்கொண்டே வருகிறது இதற்கு காரணம் நவீன ஊடகங்களின் தாக்கம் என்பதை கோடிட்டும் காட்டினோம். அதன் தாக்கம் எவ்வாறு என்பதையும் வசகர்களின் கருத்துகள் பறைசாற்றியது. அல்ஹம்துலில்லாஹ்..!

இந்த பதிவில் நம் சமுதாயத்தில் கணக்கிலடங்கா இயக்கங்கள் நம்மைச் சூழ்ந்துக்கொண்டு, ஆளாளுக்கு ஒரு ஊடகம் என்று வைத்துக்கொண்டு சமுதாய சேவை செய்திகள் தருகிறோம் என்று ஒரு சாராரும் மற்றொரு சாரார் அவதூறுகளை அசிங்கங்களை மாறி மாறி சேற்றை வாரியிரைத்து முகத்தில் பூசிக்குக் கொள்கிறார்கள். இதற்கு அளவே இல்லை. இவைகளுக்கு காட்டாக எதனையும் இங்கே சொல்லித் தெரியவேண்டியதில்லை. அன்றாட இணையதளங்களில், மின்னஞ்சல் குழுமங்களிலும், தனி மின்னஞ்சல்களிலும் நேரத்தை வீண் விரயம் செய்து குழப்பங்களை அவர்களுக்கே உரிய பாணியில் பரப்பி வருகிறார்கள். 

ஒருவர் மார்க்க விடையத்தில் அறிந்தோ அறியாமலோ ஒரு தவறான தகவல் தருகிறார் என்றால் அவரின் கருத்துக்கு நளினமான முறையில் அவரின் தவறை திருத்தும் விதமாக மிகச் சரியான ஆதாரத்தகவலுடன் எடுத்துரைக்க முயற்சிக்க வேண்டும். இதைவிடுத்து அவரின் கருத்தை விமர்சிப்பதை புறந்தள்ளிவிட்டு அவரின் தனிப்பட்ட வாழ்க்கையையும் அவரின் அந்தரங்க செய்திகளை பொதுவில் கட்டுரைகளாக விவாதிப்பதன் மூலம் அந்த மனிதனை அவமானப்படுத்த மட்டுமே முடியுமே தவிர அந்த மனிதரைத் திருத்த முடியுமா?  மேலும் அடுத்தவனுடைய மானத்தில் விளையாடுவதால் பாவத்தை மட்டுமே சம்பாதிக்க முடியும். 

இது போன்ற இயக்கத்தவர்களின் ஊடக போதைக்கு அடிமையானவர்களுக்கு சிகிச்சை தரும் விதமாக பின் வரும் குர்ஆன் வசனங்களையும், ஹதீஸ்களையும் உங்கள் பார்வைக்கும் தருகிறோம். தயை கூர்ந்து நிதானமாக படியுங்கள். அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்ல தெளிவுடன் கூடிய சிந்தனையை தந்து நல்லருள் புரிவானாக.

அல்குர்ஆன் : 49:10. "நிச்சயமாக முஃமின்கள் (யாவரும்) சகோதரர்களே; ஆகவே, உங்கள் இரு சகோதரர்களுக்கிடையில் நீங்கள் சமாதானம் உண்டாக்குங்கள்; இன்னும் உங்கள் மீது கிருபை செய்யப்படும் பொருட்டு, நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள்."

அல்குர்ஆன் :3:103. “இன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்; நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்; அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்த நிஃமத்களை (அருள் கொடைகளை) நினைத்துப் பாருங்கள்; நீங்கள் பகைவர்களாய் இருந்தீர்கள் - உங்கள் இதயங்களை அன்பினால் பிணைத்து; அவனது அருளால் நீங்கள் சகோதரர்களாய் ஆகிவிட்டீர்கள்; இன்னும், நீங்கள் (நரக) நெருப்புக் குழியின் கரை மீதிருந்தீர்கள்; அதனின்றும் அவன் உங்களைக் காப்பாற்றினான் - நீங்கள் நேர் வழி பெறும் பொருட்டு அல்லாஹ் இவ்வாறு தன் ஆயத்களை - வசனங்களை உங்களுக்கு தெளிவாக்குகிறான்”.

உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பாதது வரை (முழுமையான) ஈமான் கொண்டவராக மாட்டார் என அல்லாஹ்வின் தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அனஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல் : புஹாரி (11). 

மக்களை அமைதியுடன் செவி தாழ்த்தி கேட்கும்படி செய்வீராக! எனக்கூறிவிட்டு (மக்கள் அமைதியுற்ற பின்னர்) எனக்குப் பிறகு நீங்கள் ஒருவர்; கழுத்தை ஒருவர் வெட்டிக்கொள்ளும் காபிர்களாக மாறிவிட வேண்டாம் என அல்லாஹ்வின் தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இறுதி ஹஜ்ஜின் உரையில் கூறினார்கள். அறிவிப்பவர் : ஜரீர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புஹாரி (121). 

ஒரு கட்டிடத்தின் பகுதி இன்னொரு பகுதியை எப்படி வலுப்படுத்திகொண்டிருக்கிறதோ அது போலவே ஒரு முஃமின் இன்னொரு முஃமின் விஷயத்தில் நடந்து கொள்ள வெண்டும். என அல்லாஹ்வின் தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்கள் விரல்களை கோர்த்துக் காட்டினார்கள். அறிவிப்பவர் : அபூ மூஸா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புஹாரி (481). 

ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் சகோதரனாவான். அவனுக்கு அவன் அநீதியிழைக்கவுமாட்டான், அவனை (பிறரது அநீதிக்கு ஆளாகும் படி) கை விட்டு வடவும் மாட்டான். 

எவர் தன் சகோதரனின் தேவையை நிறைவு செய்வதில் ஈடுபடுகிறாரோ அவரது தேவையை நிறைவு செய்வதில் அல்லாஹ் ஈடுபடுகிறான். 

எவர் ஒரு முஸ்லிமின் துன்பத்தை நீக்குகிறாரோ அவரை விட்டு அல்லாஹ்வும் மறுமை நாளின் துன்பங்களில் ஒரு துன்பத்தை நீக்குகிறான். 

எவர் ஒரு முஸ்லிமின் குறைகளை மறைக்கின்றாரோ அவரது குறைகளை மறுமை நாளில் அல்லாஹ்வும் மறைக்கின்றான் 

என அல்லாஹ்வின் தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புஹாரி (2442). 

உன் சகோதரன் அக்கிரமக்காரனாக இருக்கும் நிலையிலும் அக்கிரமத்திற்கு உள்ளானவனாக இருக்கும் நிலையிலும் அவனுக்கு உதவி செய் என அல்லாஹ்வின் தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அதற்கு மக்கள் அல்லாஹ்வின் தூதரே! அக்கிரமத்திற்கு உள்ளானவருக்கு நாங்கள் உதவி செய்வோம் ஆனால் அக்கிரமக்காரனுக்கு எப்படி உதவி செய்வோம்? என்று கேட்டனர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவனை அக்கிரமம் செய்யவிடாமல் தடுத்து விடு(ங்கள்) இதுவே நீ(ங்கள்) அவனுக்கு செய்யும் உதவி என்று கூறினார்கள். அறிவிப்பவர் : அனஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புஹாரி (2444). 

ஒருவருக்கொருவர் கருணை புரிவதிலும், அன்பு செலுத்துவதிலும், இரக்கம் காட்டுவதிலும், (உண்மையான) இறை நம்பிக்கையாளர்களை ஓர் உடலைப் போன்று நீ காண்பாய். உடலின் ஓர் உறுப்பு சுகவீனமடைந்தால் அதனுடன் மற்ற உறுப்புகளும் (சேர்ந்து கொண்டு) உறங்காமல் விழித்தக்கொண்டிருக்கின்றன, அத்துடன் உடல் முழுவதும் காய்ச்சல் கண்டு விடுகிறது என அல்லாஹ்வின் தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : நுஃமான் பின் பஸீர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புஹாரி (4011).

ஒருவருக்கொருவர் கோபம் கொள்ளாதீர்கள், பிணங்கிக் கொள்ளாதீர்கள், (மாறாக) அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு பாராட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள். எந்த ஒரு முஸ்லிமும் தம் சகோதரனுடன் முன்று நாட்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று என அல்லாஹ்வின் தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புஹாரி (4045). 

பரபரப்பூட்டும் அவதூறு, கிசுகிசுக்களை வலைத்தளங்களிலும், மின்னஞ்சல்களிலும் பரப்புவது ஒரு நவீன (அதீத)நாகரீகமாகிவிட்டது. குறிப்பாக முஸ்லீம் மார்க்க பிரச்சாரர்களை குறிவைத்தே இது போன்று நடைப்பெறுகிறது. வேதனையிலும் வேதனை என்னவென்றால் மார்க்க அறிஞர்(?)களே சக மார்க்க அறிஞர்களைப் பற்றி தனிமனித தாக்குதல்களுடன் கூடிய அவதூறுகள் பரப்புவது. எதிரிக்கு எதிரி நண்பன் என்பதை உண்மைபடுத்தும் விதமாக காழ்ப்புணர்விலும் சொந்த பகையாலும் எழுதப்படும் இது போன்ற அவதூறுகளை ஊக்கப்படுத்தி மீள்பதிவு செய்யும் கேடுகெட்டவர்களை நினைத்தால் வேதனைப்படாமல் நடுநிலையை விரும்பும் ஒரு உண்மை முஸ்லீமால் இருக்க முடியாது.

ஒருவரின் மானம் எப்படிப் பட்டது?

இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.  நபி(ஸல்) அவர்கள் மினாவில் இருந்தபோது, 'இது எந்த நாள் என்பதை நீங்கள் அறிவீர்களா?' எனக் கேட்டார்கள். அதற்கு மக்கள் 'அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிவர்!" என்றனர். உடனே அவர்கள் 'இது புனிதமிக்க தினமாகும்! இது எந்த நகரம் என்பதை நீங்கள் அறிவீர்களா?' என்று கேட்க மக்கள் 'அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிவர்!" என்றனர். உடனே அவர்கள் '(இது) புனித மிக்க நகரமாகும்! இது எந்த மாதம் என்பதை அறிவீர்களா?' என்றதும் மக்கள், 'அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிவர்!" என்றனர். பிறகு நபி(ஸல்) அவர்கள் '(இது) புனிதமிக்க மாதமாகும்!' எனக் கூறிவிட்டு, 'உங்களுடைய இந்த (புனித) நகரத்தில் உங்களுடைய இந்த (புனித) மாதத்தில் உங்களுடைய இந்த நாள் எவ்வளவு புனிதமானதோ அது போன்றே, அல்லாஹ் உங்கள் உயிர்களையும் உடைமைகளையும் உங்கள் மானம் மரியாதைகளையும் புனிதமாக்கியுள்ளான்!" எனக் கூறினார்கள்.  மற்றோர் அறிவிப்பில் 'நபி(ஸல்) அவர்கள், தாம் ஹஜ் செய்தபோது நஹ்ருடைய நாளில் ஜம்ராக்களுக்கிடையே நின்று கொண்டு, 'இது மாபெரும் ஹஜ்ஜின் தினமாகும்!' எனக் கூறினார்கள். மேலும், 'இறைவா! நீயே சாட்சி!" என்றும் கூறி மக்களிடம் இறுதி விடை பெற்றார்கள். எனவே, மக்களும் 'இது நபி(ஸல்) அவர்கள் (நம்மிடம்) விடை பெற்று (உலகைவிட்டு)ச் செல்கிற ஹஜ்ஜாகும்!" எனப் பேசிக் கொண்டார்கள்." (புகாரி: 1742. )

ஒரு முஸ்லீமுடைய மானம் மரியாதையை எந்த வகையில் புனிதமானது என்று நபிகளார் உவமையுடம் மிக அழகாக கூறியுள்ளார்கள்.

மேலும் மேல் சொன்ன குர்ஆன் வசனங்கள் மற்றும் ஹதீஸ்களின் அடிப்படையில் ஒரு முஸ்லீம் சகோதரன் அடுத்த முஸ்லீம் சகோதரனுடன் எப்படி நடந்துக்கொள்ள வேண்டும் என்பதை நாம் எல்லோரும் உணரவேண்டும். இந்த நவீன இயக்க ஊடக போதையிலிருந்து அல்லாஹ் நம் எல்லோரையும் காப்பாற்றி. உண்மை முஸ்லீமாக வாழ்ந்து உணமை முஸ்லீமாக மரணிக்க செய்வானாக.

அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் நன்னெறி தொடரும்... இன்ஷா அல்லாஹ் !

- அதிரைநிருபர் குழு

ஊடக போதை - 5 தொடர்கிறது... 17

அதிரைநிருபர் பதிப்பகம் | January 17, 2012 | , , , , , ,


அல்லாஹ்வின் திருப்பெயரால்…

கடந்த ஊடக போதை பதிவுகளில் போலி புனைபெயர்கள், தமிழக ஊடகங்களின் அன்மைச் செயல்பாடுகள், அறிவைக் கெடுக்கும் ஊடகங்கள் என்று விரிவாக அலசினோம், மேலும் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் எச்சரிக்கையும் செய்து ஊடக போதையிலிருந்து தெளிவுபெற ஒரு சிறிய முயற்சியே செய்தோம். இந்தத் தொடர் நம் வாசக நேசங்களிடம் நல்ல ஆதரவைப் பெற்று உணர்வுபூர்வமான மாற்றத்தை ஏற்படுத்தி வருவதை நம்மால் நன்றாகவே அறிய முடிகிறது. அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.

இருப்பினும் இந்தத் தொடரில் பதிவுகளும் அதற்கான பின்னூட்டங்களும், பின்னூட்டங்களுக்கு பின்னால் ஒட்டமும் என்ற கருத்தினை மையப்படுத்தி சிறிதேனும் தெளிவுபெறலாம் என்று கருதுகிறோம் இன்ஷா அல்லாஹ்.

பொதுவாக அதிரை பெயர் கொண்ட வலைத்தளங்களின் பதிவுகளை அதிரைவாசிகள் மட்டுமே வாசிப்பதில்லை, அதிரை அல்லாத பிற ஊர் சகோதர சகோதரிகள் நிறைய பேர் வாசிக்கிறார்கள் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

பதிவாளர்களில் சிலர் அவர்களின் நேரத்தை ஒதுக்கி சிந்தனையில் உதிக்கும் நல்ல கருத்துகளை பொதுவில் நம்மிடையேப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் சுயமாக எழுதி பதிவேற்றமும் செய்கிறார்கள். இன்னும் வேறு சிலரோ மற்ற வலைத்தளங்களில் பதிவுக்குள் வரும் பதிவுகளின் தரம் கண்டு அத்தளத்தின் அனுமதியுடன் அல்லது அத்தளத்தின் பதிவு சுட்டியை இணைத்து நன்றியுடன் பதிவேற்றம் செய்கிறார்கள். ஆனால் முன் சொன்ன இருசாராரை தவிர்த்து எங்கோ உள்ளதை வெட்டி & ஒட்டி (copy & paste), எங்கு அந்த தகவலை எடுத்தாண்டார்களோ அதற்கான முகாந்திரமோ அல்லது சுட்டியைச் சுட்டிக்காட்ட மனமில்லாமல் தான் எழுதிய பதிவுபோல் வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்கிறார்கள். இவைகள் அனைத்திலும் பின்னூட்டம் அதிகம் வரும் பதிவுகள்தான் சிறந்த பதிவு என்று வரைமுறை வைப்பது ஏற்புடையதல்ல. பின்னூட்டங்கள் குறைவாக பதியப்படும் பதிவுகள் அனைத்தும் சிறந்த பதிவுகள் அல்ல என்றும் நிர்ணயித்து விடவும் முடியாது. பின்னூட்டங்களின் எண்ணிக்கை அல்லது அதன் ஆராவாரம் இவைகளை வைத்து மட்டும் வைத்து பதிவின் தரத்தை தீர்மானிப்பது அறிவுடைமையாகாது.

அதிரை பெயர்(கள்) கொண்ட ஏராளமான வலைப்பூக்கள் இணையக் கடலில் மிதக்கிறது, தவழ்கிறது, வீரிட்டு பாய்கிறது என்று வகைப்படுத்தப்பட்டும் வருகிறது, இதில் ஓரிரு வருடமாக வலைத்தளங்களை நிர்வகிப்பவர்கள்கூட இணைய உலகில் அனுபவசாலிகள் என்று வெளிக்காட்டிட தங்களின் எழுத்துத் திறமையை மட்டுமல்ல வலைத்தளங்கள் இயக்கும் திறனையும் வெளிக்காட்ட கிடைக்கும் சொற்ப நேரத்தினையும் செலவழித்து வருகிறார்கள். அதிரை சார்ந்த வலைத்தளத்திற்கு வருகை தருபவர்களில் அதிக எண்ணிக்கையாக வெளிநாட்டில் வாழும் அதிரைச் சகோதரர்கள் என்பதை அனைத்து வலைதள நிர்வாகிகளாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட உண்மை. 

இவைகளில் குறிப்பிட்டு சொல்லத்தக்க சில வலைதளங்களில் மட்டுமே வாசகர்களின் வருகையும் அவர்களின் பின்னூட்டங்களும் அதிகம் பதியப்படுகிறது, மற்ற பெரும்பாலான வலைத்தளங்களில் பின்னூட்டங்கள் பதியப்பட்டாலும் அவைகளைவிட மிகச் சொற்பமே. இதற்கு ஏராளமான காரணங்கள் இருக்கலாம். ஒவ்வொரு பதிவுகளுக்கும் கணிசசமான பின்னூட்டங்கள் பதியப்படும் தளங்கள் எவைகள் என்பதை அதிரை இணைய வாசர்கள் நன்றாகவே அறிவார்கள். 

பின்னூட்டங்கள் அதிகம் இடம் பெரும் அவ்வகைத் தளங்களில் ஒன்றாக மிளிரும் அதிரைநிருபர் தளமும் தப்பவில்லை அவ்வகையான விமர்சனங்களுக்கு. பரவலாக செவிவழியாகவும், மின்னஞ்சல் வழியாகவும், அதிரைநிருபர் கருத்துப் பெட்டியிலும் மற்றும் பிற சகோதர அதிரை தளங்களிலும் நேரடியாகவோ மறைமுகமாகவோ விழுங்கவும் முடியாமல் வெளியில் துப்பவும் முடியாமல் அவதூறு பரப்பிவிடப்பட்டு வருகிறது. பொதுவான விமர்சனங்கள் இதோ... இவைகள் அனைவருக்கும் பொருந்தும்...
  • பின்னூட்டங்களில் முகஸ்துதியே அதிகம்.
  • தனிமனிதர்களை வானுயர பாராட்டுகிறார்கள்.
  • பதிவுக்கு சம்பந்தமில்லாத பின்னூட்டமிட்டு பின்னூட்ட எண்ணிக்கையை கூட்டுகிறார்கள்.
  • அதிரையில் நிகழும் முக்கிய நிகழ்வுகள் அல்லது மரண அறிவிப்புக்களைப் பதிவாகப் போடுவதில்லை.
  • பதிவைப் படிக்காமல், பதிவாளர் நமக்கு தெரிந்தவர், பின்னூட்டமிடாவிட்டால் தவறாக எண்ணிவிடுவாரோ என்று சும்மா கடமைக்காக பின்னூட்டமிடுகிறார்கள்.

இன்றைய காலகட்டத்தில் பொதுவாக ஊடக போதைக்குள் சிக்கியிருப்பவர்களும் அதில் சிக்காமல் சிண்டுமுடிந்து விடுபவர்களும் அதிகம் உபயோகப்படுத்தும் ஒரு வார்த்தை "முகஸ்துதி", அது என்ன முகஸ்துதி?

முகஸ்துதி – flatter – முகத்துதி, முகப் புகழ்ச்சி, தகாப் பாராட்டு, முன்னிலைப் புகழ்ச்சி, மிகைப் பாராட்டு, போலிப் புகழ்ச்சி.

இஸ்லாமிய பார்வையில் முகஸ்துதி என்றால் என்ன?

நான் நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் சென்றேன். அப்போது அவர்கள் ‘விளம்பரத்திற்காக நற்செயல் புரிகிறவர் (உடைய நோக்கம்) பற்றி அல்லாஹ் (மறுமை நாளில்) விளம்பரப்படுத்துவான். முகஸ்துதிக்காக நற்செயல் புரிகிறவரை அல்லாஹ் (மறுமைநாளில்) அம்பலப்படுத்துவான்” என்று கூறியதைக் கேட்டேன்.
(புஹாரி : 6499 ஜூன்துப் ரலி)

அல்லாஹ் கூறுகின்றான்:
‘தமது தொழுகையில் கவனமற்று தொழுவோருக்கு கேடுதான். அவர்கள் பிறருக்கு காட்டுவதற்காகத் தொழுகின்றனர். அற்பமானதையும் (கொடுக்க) மறுக்கின்றனர்’ (107-4-7)

அல்லாஹ்வுக்காக என்றில்லாமல் பிறர் தம்மைப் புகழ வேண்டும் என்பதற்காக ஒருவர் தன் இபாத்துக்களை செய்தால் அது ‘முகஸ்துதி’ என்றழைக்கப்படுகின்ற மறைமுக ஷிர்க் என்பதை நாம் உணர்ந்துக் கொண்டு அதிலிருந்து மிகுந்த எச்சரிக்கையுடன் தவிர்ந்து இருக்கவேண்டும்.

முகஸ்துதி ஏற்படுவதற்கான அடிப்படைக் காரணம் இறைநம்பிக்கையில் ஏற்படும் பலவீனம் ஆகும். அல்லாஹ்வின் மீது ஒருவனுக்கு உறுதியான நம்பிக்கை இல்லாவிட்டால் அல்லாஹ்வின் திருப்தியை பெறுவதை விட மக்களின் அபிமானத்தைப் பெறுவதே அவனுக்கு பெரிதாகத் தோன்றும். இறைநம்பிக்கையில் ஏற்படும் இந்த பலவீனத்தின் விளைவாக மறுமையில் கிடைக்கும் வெகுமதிகளை அவன் புறக்கணிக்கிறான். இதே நேரத்தில் இந்த உலகில் கிடைக்கும் புகழுக்காக அவனது எண்ணம் அலை பாய்கின்றது. இத்தகைய எண்ணமே முகஸ்துதியில் அவனை வீழ்த்துகிறது. இப்போது முகஸ்துதி என்றால் என்னவென்பது எல்லோருக்கும் புரிந்திருக்கும். இறைவனை மறந்து மனிதர்கள் பார்க்கிறார்கள் என்பதற்காக செய்யப்படும் செயல்களே முகஸ்துதி என்பது தெளிவாகிறது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘செயல்கள் யாவும் எண்ணங்களைப் பொறுத்தே அமைகின்றன. ஒவ்வொரு மனிதருக்கும் அவர் எண்ணியதே கிடைக்கும்’ அறிவிப்பவர்: உமர் (ரலி), ஆதாரம்: புகாரி

ஒருவர் ஒரு நல்ல கருத்தை நல்லெண்ணதில் மக்கள் மத்தியில் வைக்கும்போது அது எல்லோருக்கும் பயன்தரும் விதமாக உள்ளது. இதற்காக மக்கள் அவரின் செயலைப் பாராட்டுகிறார்கள். அந்த கருத்துச் சொன்ன மனிதரின் உள்ளத்தில் உள்ளதை அல்லாஹ் மட்டுமே அறிவான், நல்ல கருத்தை எத்திவைத்த மனிதர் அல்லாஹ்விடமே நன்மையை நாடி செய்திருந்தால் அவருக்கு நிச்சயம் நற்கூலி கிடைக்கும், அவர் மனிதர்களிடம் மட்டுமே புகழையும் பாராட்டையும் பெறுவதற்காக அந்நற்செயலை செய்திருந்தால் நிச்சயம் அல்லாஹ்வின் தண்டனை, மேல் சொல்லப்பட்ட ஹதீஸ்களின் அடிப்படையில் தண்டனை நிச்சயம் கிடைக்கும். அல்லாஹ் நன்கறிவான்.

நபி (ஸல்) சொன்னார்கள் 'எவர் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்திற்காக தேடப்படும் கல்வியை உலகப் பொருட்களை அடைந்து கொள்வதற்காக கற்றுக்கொள்கிறாரோ அவர் மறுமை நாளில் சொர்க்கத்தின் நறுமணத்தைக் கூட நுகர மாட்டார். (நூல்: அபூதாவூத் 3664)

நபி ஸல் அவர்கள் கூறினார்கள்: எவர் கற்றோருடன் மோதுவதற்காகவும், அறிவீனர்களுடன் வாதம் புரிவதற்காகவும், மக்களை தன் பக்கம் கவர்ந்து இழுப்பதற்காகவும் எவர் கல்வி கற்கின்றாரோ அவரை அல்லாஹ் நரகத்தில் நுழைவிப்பான்'' (நூல்: திர்மிதி 2654)

இன்றைய நிலை: வெறுமனே முஸ்லீம்கள் என்று சொல்லி இன்று நம் சமுதாயத்தில் புரிதலால் ஏற்பட்ட சிறிய கருத்து வேறுபாடுகளால் ஒரு காலத்தில் நண்பர்களாக இருந்தவர்கள் இன்று நண்பர்களாக இல்லை, ஒரே தாய் தந்தையருக்கு பிறந்த சகோதரர்கள் (இயக்க) கொள்கை வேறுபாடுகளுக்கு சிக்கி குடும்ப உறவுகள் சின்னா பின்னமாகிவிட்டது, கேடுகெட்ட நவீன சைத்தான்களான சினிமா, சின்னத்திரை, இணைய சைத்தான்களான facebook, twiter, orkut, blog இவைகளின் தாக்கத்தால் கலாச்சார சீரழிவின்மூலம் நேரவிரையத்தினாலும் இஸ்லாமிய நெறிகள் மறக்கடிக்கப்பட்டுவருகிறது, இதுமட்டுமா தேவையற்ற அவதூறுகளை தனிமனித தாக்குதலுடன் மார்க்க அறிஞர்களை பற்றி வீணானதை எழுதியே தங்கள் நேரத்தையும் அடுத்தவர்களின் நேரத்தை வீணடிக்கும் வீணர்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறார்கள். ஆளுக்கு ஒரு வலைத்தளங்களை போலிபெயர்களில் வேடிக்கை காட்டி திட்ட வேண்டியவர்களை திட்டி, தான் கேவலப்படுத்த நினைப்பவர்களை கேவலப்படுத்தியும் வருகிறார்கள்.

இவைகளுக்கு மத்தியில் வலைத்தளத்தின் மூலம் சகோதரத்துவத்தை ஏற்படுத்தும் ஒரே நோக்கத்தில் உலகெங்கும் பிரிந்து வாழும் எம்மண்ணின் மைந்தர்களை கணிசமான முறையில் ஒன்றிணைத்து நல்ல கருத்துக்களைப் பகிர்ந்து ஒருவருக்கு ஒருவர் பாராட்டி, ஊக்கமூட்டி, நேசம் காட்டி, மார்க்க விடயங்களில் எல்லோரின் கவனத்தையும் ஒன்றே கலக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதை முகஸ்துதி என்று பிதற்றலாக சொல்லித் திரியும் / எழுதி வருபவர்கள் காழ்ப்புணர்வுகளைக் கலைந்து அவ்வாறு ஈடுபடுவதை கைவிட வேண்டும். நல்ல கருத்துக்களை பகிர்ந்தளித்துவரும் ஒருவரை மற்றவர் ஊக்கம் தந்து பாராட்டுவதை முகஸ்துதி என்று சொன்னால் எவ்வகையில் நியாயம்? சில சந்தர்ப்பகளில் பதிவுக்கு அப்பாற்பட்ட கருத்துக்கள் பின்னூட்டத்தினூடே பதியப்பட்டிருக்கலாம் அது கருத்தைச் சொல்ப வருபவரின் கருத்தாகத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும், அதற்காக வானுயர பாராட்டுகிறார்கள் என்று உறுமுவது எவ்வகையில் நியாயம்?

புஹாரி 6064. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' 
(ஆதாரமில்லாமல் பிறரை) சந்தேகப்படுவது குறித்து உங்களை எச்சரிக்கிறேன். ஏனெனில், சந்தேகம் கொள்வது மிகப் பெரிய பொய்யாகும். (பிறரின் குறையைத்) துருவித் துருவி ஆராயாதீர்கள். ஒருவருக்கொருவர் பொறாமை கொள்ளாதீர்கள். பிணங்கிக் கொள்ளாதீர்கள். கோபம் கொள்ளாதீர்கள். (மாறாக,) அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு பாராட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 

புஹாரி 6065. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' 
ஒருவருக்கொருவர் கோபம் கொள்ளாதீர்கள். பொறாமை கொள்ளாதீர்கள். பிணங்கிக் கொள்ளாதீர்கள். (மாறாக,) அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு பாராட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள். எந்தவொரு முஸ்லிமும் தம் சகோதரருடன் மூன்று நாள்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று. என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். 

இக்காலச் சூழலில் ஒருவரோ அல்லது ஒருசாராரோ தன் கருத்துக்கு மற்றுக் கருத்துடையவரை/களை தரக்குறைவாக விமர்சிப்பதற்காகவே அநேக இணையதளங்களை பயன்படுத்தி வருகிறார்கள் இதில் அதிரை வலைத்தளங்கள் மட்டும் விதிவிளக்கல்ல என்பதற்கு கடந்தகால நிகழ்வுகளும் அன்மைகால சலசலப்புக்களுமே சாட்சி. 

அதிரைநிருபர் தளத்தில் வெளிவரும் பதிவுகள் மற்றும் பின்னூட்டங்கள் எந்த தனிநபரின் மனதையோ அல்லது எந்த ஒரு அமைப்பையோ புறந்தள்ளியோ அல்லது அவதூறாக தாக்கியோ வெளிவந்துள்ளது என்று நிருப்பிக்கத்தான் முடியுமா? ஆக! முகஸ்துதி, வானுயர பாராட்டு என்று சஞ்சலப்படும் சகோதரர்கள் உணர்ந்து கொள்ளட்டும் இன்ஷா அல்லாஹ்.

அதிரைநிருபர் போலி புனைபெயர்களை ஊக்கப்படுத்துவதில்லை, போலி புனைபெயர்கள் வலையுலகில் சகஜம் என்று சொல்லுவதை கண்டித்தும் அதனை புறக்கணித்தும் வருகிறது. மேலும் நிழல்களாக வந்து பின்னூட்டமிடுவதால் எந்த ஒரு நன்மையுமில்லை என்பதில் உறுதியாக உள்ளோம்.

மரண அறிவிப்பு செய்திகள் அதிரைநிருபரில் தனி பதிவாக ஏன் பதிவதில்லை, மரண அறிவிப்பு தகவல்கள் கிடைக்க பெற்றால் வலப்பக்கத்தில் ஓர் அறிவிப்பாக வெளியிடும் வழமையை செய்து வருகிறோம். மரண அறிவிப்புகளுக்காக தனி பதிவுகள் இல்லை, ஏன்? என்பதனை தனி பதிவாக விளக்கமளிக்கலாம் இன்ஷா அல்லாஹ்.

விரும்பிய தளத்தில் மட்டும்தான் கருத்துக்களை கட்டாயமாக பதிய வேண்டும் என்று எந்த கட்டளையோ அல்லது life time agreement என்று எந்த வலைதளத்திலுமில்லை. கருத்திடுபவர்களின் விருப்பு வெறுப்புக்கு உடண்பட்டு அவரவர்களுக்கு கிடைக்கும் அரிய நேரத்தை பொருத்தே அவர்களுக்கு பிடித்த பதிவுகளில் அல்லது தளங்களில் கருத்திடுவார்கள். யாரையும் இப்படித்தான் கருத்திட வேண்டும் என்றோ ஏன் கருத்திடவில்லை என்றோ கட்டாயப்படுத்த முடியாது. பதியப்படும் கருத்து தனிமனித தாக்குதல், தரகுறைவான வார்த்தைகள், மார்க்கத்திற்க்கு புறம்பான கருத்துக்களாக இருக்கும்பட்சத்தில் அவைகளை உடணடியாக அகற்ற வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு வலைத்ததள நிர்வாகிகளுக்கும் உண்டு.

பதிவுகளுக்கு சம்பந்தமில்லாத பின்னூட்டங்களைக் கண்கானிப்பதும் கட்டுப்படுத்துவதும் மிக கடினமே. அமையப் பெற்றிருக்கும் நேரத்தில் மட்டுமே நாம் இவ்வகை வலைதளங்களை கண்காணிக்க முடியும். மேலும் தவறான பின்னூட்டங்களை பதிவுக்குள் இடம பெறாமல் அதனை கண்காணித்து நீக்குவதே நன்னெறி நோக்காக இருக்க வேண்டும் என்பதை தெளிவுபடுத்துகிறோம். யாரையும் புண்படுத்தாத வகையில் தனிநபர் ஒருவர் தனது கருத்தைப் பதிய விரும்பிய இடம் அந்த பதிவுதான் என்று நினைத்து பதிவுக்கு சம்பந்தமில்லாத கருத்துக்களைப் பதிந்திருந்தால் அதனை அதன் தாக்கம் கருதி கண்டுக்கொள்ளாமல் இருப்பதே சிறந்தது அதுவே அறிவுடமை.

தடம் பதித்த நாள்முதல் அதிரைநிருபர் வலைத்தளத்தளத்தின் நோக்கம் அதிக ஹிட்டுக்கள், அதிக வாசகர் வட்டம் என்பதல்ல, செய்வதை எளிமையாகச் செய்தாலும் சிறப்பாக, முறையாக, சரியாக, மார்க்க வரம்புக்கு உட்பட்டு கட்டுப்பாட்டுகளுடன் இருக்க வேண்டும் என்பதே தலையாய நோக்கம். அதிரைநிருபரில் வெளியாகும் பதிவுகள் முன்னுதாரனமாக இருந்து பலர் பயனடைவதைவிட ஒருவர் அதிரைநிருபரை தவறான முன்னூதாரனமாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்பதில் மிக கவனமாக உள்ளோம். அதற்கு இங்கே பதியப்படும் ஒவ்வொரு பதிவுகளும், பின்னூட்டங்களுமே சாட்சி.

இஸ்லாம், கல்வி, மருத்துவம் இவைகள் எங்களால் முடிந்த விழிப்புணர்வு பதிவுகளை நம்முடைய அதிரை எழுத்தாளர்களின் உதவியுடன் பகிர்ந்தளிக்கிறோம். எல்லா புகழும் இறைவனுக்கே.

அதிரைநிருபர் வலைத்தளத்திற்கு வருகை தந்து பயனடைந்து, எங்களுக்கு ஊக்கமும் உற்சாகமும் அளித்துவரும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் மிக்க நன்றி, ஜஸாக்கல்லாஹ்...

அல்லாஹ்வின் பொறுத்தத்தை நாடியே, மக்கள் பயன் அடையவேண்டும் என்ற நோக்கில் ஒவ்வொரு கட்டுரையாளரும், பின்னூட்டமிடும் வாசக நேசங்களும் செயல்பட வேண்டும் என்பதை மீண்டும் ஞாபக்கடுத்துகிறோம். இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்.

நாகரீகமான கருத்துரையாடலின் மூலம் நட்பு வட்டாரத்தை விரிவடையச் செய்து சகோதரத்துவத்தை வலுப்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்திவரும் (சில)வலைத்தளங்களின் பதிவுகளையும் பின்னூட்டங்களையும் கொச்சை படுத்தும்விதமாக முகஸ்துதி, வானுயர பாராட்டு என்ற பிதற்றல் பிரச்சாரமும் ஓர் ஊடக போதையே.

அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் நன்னடத்தை தொடரும்… 

இன்ஷா அல்லாஹ் !

- அதிரைநிருபர் குழு


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு