பாட்டி சொன்னது.... !
சின்ன வயதில் பாட்டி சொன்ன கதை என்று பள்ளிக்கூட காலங்களில் கேட்டு சிலாகித்தோம் அதில் ஏதோ தந்திரம் இருப்பதை எண்ணி துணுக்குற்றோம், சிரித்தும், மகிழ்ந்தோம்!
அன்றைய கால பாட்டியின் அதே கதையை தனது கொல்லுப் பேரனுக்கு அதாவது இன்றய குழந்தைகளுக்கு சொல்லக் கேட்க அதனை நாமும் கேட்ப்போமே…
‘ஒரு ஊரில் ஒரு நரி இருந்துச்சாம்…’
‘அங்கேயிருந்த ஒரு மரத்தின் கிளையில் தொங்கிய திராட்சைப் பழத்தை பார்த்துச்சாம்…’
‘சற்றே உயரமாக இருந்த கிளையில் திராட்சைப் பழங்கள் தொங்கியதாம்!’
‘நரியும் எட்டி எட்டி குதித்ததாம்’
‘அந்த நரிக்கு கண்ணில் பட்ட திராட்சை பழங்கள் எட்டவில்லையாம்’
‘உடனே நரி சொன்னதாம்..’
“சீச்சீ… இந்த பழம் புளிக்கும்” என்றதாம்.
‘இதில் இருந்து என்ன தெரிகிறது?’ என்று பாட்டி கேட்க….
பேரன் சொன்னான்… “பாட்டி நீ பொய் சொல்வதுபோல் எனக்குத் தெரியுதே!!”
பாட்டிக்கோ ஒரே அதிர்ச்சி….
“என்னடா சொல்கிறாய் பேரண்டி!!!!! உன் அப்பனுக்கும் இதே கதையத்தான் சொல்வேன் அவனெல்லாம் சந்தோசமாக சிரிப்பானே… நீ என்னடான்னா நான் பொய் சொல்றேன்னு சொல்கிறாயே!!” என்று செல்லமாய் கோபித்துக் கொண்டாளாம் !
பேரன் சொன்னானாம் “நரி புலால் உண்ணும் பிரானியாச்சே அது முயல், சிறு, சிறு உயிரினங்களை வேட்டையாடும்… அல்லது சிங்கம் போன்ற மிருகங்கள் வேட்டையாடிய செத்த மிருகங்களைத்தான் உண்ணும் என்றுதானே நான் டிஸ்கவரி சேனலில் பார்த்திருக்கிறேன்… நீ என்னடான்னா திராட்சை பழத்தை தின்ன முயர்ச்சித்ததாய் சொல்கிறாயே கதையச் சொன்னாலும் லாஜிக்கோடு சொல்லனும் பாட்டி!!!??? என்ன புரியுதா?”
பாட்டியோ தனக்குள்ளேயே நினைத்துக்கொண்டாள் பேரன் வளர்ந்துட்டான் “சீச்சீ இந்த கதை இனி சரிவராது”
மு.செ.மு.சஃபீர் அஹமது


