
நமதூர் காதிர் முகைதீன் மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் தங்கள் மதிற்பிற்குரிய ஆசான்களை பற்றி எழுதியதை போல நமதூர் இமாம் ஷாபி பள்ளியின் முன்னாள் மாணவன் என்ற முறையில் எங்கள் மனதில் நீங்கா நினைவுகளோடு மிக உயர்ந்த இடத்தை பெற்றிருக்கும் மதிப்பிற்குரிய ஆசான்களை இங்கு நினைவு கூற ஆவலோடு விழைகிறேன். எல்லா ஆசான்களும் மரியாதைக்கு உரியவர்களே !
ஜனாபா மெஹர்பான் உஸ்தாத்
முழுமையான மார்க்க அறிவும் ,அதை எத்தி வைக்க அவர்கள் கடைபிடிக்கும் கண்டிப்பு, மாணவர்களையும் தாண்டி மாணவனின் பெற்றோர் வரை எதிரொலிக்கும். அற்புதமான இந்த உஸ்தாதின் மாணவனாக இருந்ததில் என்னை போன்ற மாணவர்களுக்கு பெருமை. தற்போது மன்னார்குடியில் பெண்கள் மதரசா நடத்தி வருவதாக கேள்விப்பட்டேன். எங்கள் உஸ்தாதின் (ஆசிரியை) மார்க்கத்தின் மீதான அலாதியான பற்று 25 வருடங்களை கடந்து இன்றும் என் கண்கள் முன்னால் நிழலாடுகின்றன !
ஜனாபா ஜைபுன்னிஷா மேடம்
எங்கள் பள்ளியின் பிரின்சிபாலின் சிறப்பு அவர்களின் கலகலப்பும் அதே விகிதத்தில் கலந்த கண்டிப்பும். நான் ஓரளவுக்கு நன்றாக படிக்கும் மாணவன் இருந்தும் botany பாடத்தில் கொஞ்சம் குறைவாக இரண்டு தேர்வுகளில் மார்க் எடுத்திருந்தேன். மேடம் என் உம்மாவை அழைத்து உங்கள் மகன் வீட்டிலிருக்கும்போது violet கலர் (botany பாடப் புத்தகத்தின் நிறம்) புத்தகம் படிக்கிறானா என்று தினமும் கவனிக்க சொன்னதுமட்டுமில்லாமல் எனக்கென்று அவர்கள் வீட்டில் தனியாக fees வாங்காமல் டியூஷன் எடுத்தது என் வாழ்நாள் முழுதும் மறக்காது. மேடத்தின் தன்னலமற்ற உழைப்பு இன்றும் என் நினைவில் நிற்கின்றன !
ஜனாபா ஆப்தாப் பேகம் மேடம் (Mrs. பரகத் சார்)
இவர்களை நாங்கள் சமாதான புறா என்றுதான் அழைப்போம். நம் பார்வை எப்படி இருக்க வேண்டும் என்று மிக அழகாக சொன்னது இன்றும் என் மனதில். இவர்களை சிறந்த சிற்பி என்று கூட சொல்லலாம் ஏனென்றால் நம்முடைய கேரக்டர்,அணுகுமுறை எப்படி இருக்க வேண்டுமென்று அன்றே personality development பற்றி 7 ஆம் வகுப்பிலே கற்று தந்தவர்கள் .creativity யை ஆர்வபடுத்துவதில் இவர்கள் ஒரு classic டீச்சர்.
ஒரு முறை ஆங்கில பாடத் தேர்வின் திருத்திய பரீட்சைத் தாள்களை எங்கள் வகுப்பில் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது என் விடை தாளில் நான் பதிலை தவறாக ஆனால் சொந்த ஆங்கில நடையில் மனப்பாடம் செய்யாமல் எழுதியதை பாராட்டியதை நினைத்தாலே இன்னிக்கும். எங்களுக்கு ஆங்கிலம் நன்றாக எழுத பேச வர வேண்டும் என்று அவர்களுடைய வீட்டில் அவர்களுடைய கணவர் நம்மூர் போற்றும் பேராசிரியர் பரகத் சாரை வைத்து எங்களுக்கு படம் எடுத்ததை தன்னலமற்ற சேவையின் உச்சம்.
இதில் இடம் பெறாத ஆசான்களும் என் நெஞ்சில் மரியதை கூரியவர்களே ! மேலும் மேலே உள்ள என் மரியதைக்கு உரிய ஆசான்கள் ஹஜ்ஜு கடமைமுடிதிருந்தால் ஹாஜிமா என்று பெயருக்கு முன்னாள் போட்டுக்கொள்ளவும்.
இமாம் ஷாஃபி முன்னாள் / இந்நாள் மாணவர்களே உங்கள் அனுபவங்களை பின்னூட்டமாக தொடருங்கள்......
நமக்கு பாடம் சொல்லி தந்த நம் ஆசான்கள் அனைவரும் நலமுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை என்றும் பிரார்தித்தவனாக !.
என்றும் நன்றியுடன்,
- அப்துல் ரஹ்மான்
- harmys -

