நேற்று(ம்) செய்திச் சேனல்களில் தொடர்ந்து அந்தச் செய்தியை மீண்டும் மீண்டும் வீடியோ கிளிப்புடன் காட்சிப்படுத்தி வாசிக்கப்பட்டது - அதுதான் "அதிரையைச் சேர்ந்த சகோதரரின் கைது" செய்தி. அந்தச் செய்தியின் காட்சிக்குள்ளே, செய்தி சேகரித்து அளிப்பவர் ஒருவரின் வக்கிரமான மிகைப்படுத்தப்பட்ட செய்தியை ஏதோ புதிய பரபரப்பை ஏற்படுத்துவதுபோல் பிரம்மையை உருவாக்கிக் கொண்டு கற்பனை கட்டுக் கதைகளை நேரில் கண்டவர் போல் கைகளை ஆட்டிக் கொண்டு பரபரப்புடன் பீதியை கிளப்ப எத்தனித்திருப்பதை வன்மையாக கண்டிக்கப்பட வேண்டிய செயலாகும்.
அவதூறுக்கு பேர்போன மீடியாவின் பிம்பமாக மாறிவரும் இன்றைய தொலைக்காட்சி செய்திச் சேனல்கள் இம் மாதிரியான ஒருதலைபட்ச வக்கிரப் போக்கு தொடர்வது நம் சமுதாய நலனுக்கு நல்லதல்ல.
ஒருவரின் கைது நடவடிக்கையை பரபரப்புக்காக எதையும் செய்யலாம் என்ற வன்மம் கொண்ட இந்த கேடுகெட்ட தொலைக்காட்சி, இணைய, மற்றும் அச்சு மீடியாக்கள் அனைத்தையும் புறக்கனிக்கப்பட வேண்டும். அவர்கள் செய்திடும் இவ்வகையான தரம் தாழ்ந்த தவறினை உணர்த்தி அதே ஊடகம் வழியாக மனிதநேயம் போற்றுவோம், இந்திய ஒருமைப்பாட்டை மதிப்போம்.
மற்றுமொரு தொடர் நேரலை தொலைக் காட்சியியில் நேற்று அதிரையைச் சார்ந்த சகோதரர் அவர்களின் பேட்டியைக் கேட்டவர்களுக்கு வேதனையே மிஞ்சும், அவரின் உருக்கமான வேண்டுகோள் "நிஜத்தை எழுதுங்கள்" என்பதே !
கேடுகெட்ட ஊடக தீவிரவாதிகள் அத்தோடு நிற்கவில்லை தங்களின் பங்கிற்கு கற்பனைக் கதைகளை அள்ளி விடுவதில் எவ்வகையிலும் சலைத்தவர்களல்ல என்று எல்லா சூழலிலும் செய்துகாட்டி வருகின்றார்கள் இந்த ஊடக பயங்கரவாதிகள்.
மேலும் பார்க்க :
அதிரைநிருபர் குழு


