Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in
Showing posts with label சுத்தமின்மை. Show all posts
Showing posts with label சுத்தமின்மை. Show all posts

அதிரையில் குப்பை(களின்) ஊர்வலம்... ! 11

அதிரைநிருபர் பதிப்பகம் | August 27, 2012 | , , , , ,

அதிரையில் குப்பைகளின் ஊர்வலம் ! - 27-ஆகஸ்ட்-2012

அதிகாலை ஃபஜர் தொழுகைக்கு பிறகு நம் பார்வையில் பட்ட  குப்பைகள் சும்மா இருக்கவிடாமல் அவற்றின் ஊர்வலம் காண வைத்ததை உங்கள் பார்வைக்கு தருகிறோம். இங்கு பதியப்பட்டுள்ள புகைப்படங்கள் நம்மவர்களின் சுகாதாரம் மற்றும் உடல் ஆரோக்கியத்தில் அக்கறையின்மையையே காட்டுகிறது என்பது புலப்படும்.

எதற்கெடுத்தாலும், தேர்தலுக்கு பின்னர் அமைந்த புதிய பேரூராட்சி நிர்வாகத்தை மட்டுமே குறை சொல்லி கொண்டிருப்பது மூடத்தனம். மக்களின் பொறுப்பற்ற அலட்சியப் போக்கே இவ்வாறு ஊரில் குப்பைகள் சிதறி கிடப்பதற்கு முக்கிய காரணம்.

வெளியில் தெரு முச்சந்தியில் குப்பைகளை கொட்டத் துணியும் இவர்கள் தங்களின் வீட்டு வாசல் படிகள் அருகில் இப்படி கொட்டி வைத்து காத்திருப்பார்களா பேரூராட்சி மன்ற துப்புறவு ஊழியர்களின் வருகைக்கு? நிச்சயமாக அப்படி இருக்கமாட்டார்கள் காராணம் தன் வீடு பாதிப்புக்குள்ளாகும்போது ஏற்படும் வலி அடுத்தவர்கள் வீட்டுச் சுவர் அல்லது அருகில் கொட்டும்போது ஏன் ஏற்படுவதில்லை.

மக்களின் இவ்வகை போக்கு மாற வேண்டும் ! சுத்தம் வேண்டும், சுகாதாரம் வேண்டும்! அதோடு அடுத்தவர்கள் அக்கம் பக்கத்தாரின் நலனிலும் அக்கறை வேண்டும்.


நடுத்தெரு மற்றும் தக்வா பள்ளி அருகில்.


செக்கடிக்குளம் அருகில்


கடைத்தெரு முதல் பழைய போஸ்டபீஸ் ரோடு வரை.






போரூராட்சி எதிரில் உள்ள இடம்...



புதுதெரு பகுதி...


ஆஸ்பத்திரி ரோடு.. ரிஜிஸ்டர் ஆபீஸ் அருகில்


சி எம் பி லைன் பகுதியில் சாய்ந்து கிடக்கும் குப்பை தொட்டிகள்.




சி எம் பி லைனில் உள்ள குப்பை தொட்டிக்கு EB போஸ்டர் உதவி செய்கிறது.




புதுமனைதெரு


அப்பாடா இந்த குப்பை தொட்டியில் முறையாக குப்பைகள் கொட்டப்பட்டிருக்கிறது.



பிளாஸ்டிக் தண்ணீர் பாக்கெட் குப்பை...


இதுவரை பார்த்த குப்பைகளின் ஊர்வலப்படங்கள் சொல்லும் எச்சரிக்கையும் , நிவர்த்திக்கான நிலவரமும்.
  • மக்களின் பொறுப்பற்ற செயல், குப்பைகளை குப்பை தொட்டிகளில் கொட்டுவதில்லை.ஏனோ வெளியில் கொட்டுபவர்களை யாரும் கண்டு கொள்வதில்லை.
  • குப்பை தொட்டிகளை ஆடு மாடுகள் எளிதில் சாய்த்து விடுகிறது, இதற்கு தெரு சங்கங்கள், சமூக அக்கறையுள்ளவர்கள், பேரூராட்சி நிர்வாகத்துடன் இணைந்து சரியான தீர்வு எட்ட வேண்டும்.
  • பேரூராட்சி நிர்வாகம் தடை செய்தும், பிளாஸ்டிக் பைகளின் ஆதிக்கம் அதிகம் உள்ளது. இதற்கு பொது மக்களின் பொறுப்பின்மையே காரணம் என்று சொன்னால் மிகையில்லை.
  • பேரூராட்சி நிர்வாகம் குப்பை மற்றும் பிளாஸ்டிக் பைகள் விடயத்தில் விதிகளை மீறும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் மீது தயவு தாட்சனையின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஊர் நலன் மற்றும் மக்களின் சுகாதாரத்தில் அக்கறை என்று வார்த்தையிலும் எழுத்திலும் இல்லாமல் செயலில் எல்லோரும் செய்துதான்  பார்க்கலாமே...

குறிப்பு: இந்த புகைப்படங்கள் எடுத்த பிறகு அதிரை பேரூராட்சி நிர்வாக துப்புரவு பணியாளர்களால் அநேக இடங்களில் உள்ள குப்பைகள் அள்ளப்பட்டுள்ளது,பொதுமக்களின் அலட்சியத்தையும் கோடிட்டு காட்டத்தான் அப்படியே பதியப்பட்டுள்ளது.

அதிரைநிருபர் குழு


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு