சவூதி வாழ் வெளிநாட்டினர் நம்மூருலே கைது வாரண்ட் மாதிரி வீடு புகுந்தோ, ரோட்டில் வைத்தோ புடிச்சி தத்தமது நாடுகளுக்கு அனுப்பிடுறாங்க என்று செய்திகள் படித்தும் கேள்விப்பட்டுக் கொண்டும் இருக்கிறோம்.
சவூதியர்கள் (குடிமக்கள்) தத்தமது தேவைகளுக்காகவும் வருமானத்துக்காகவும் சம்பாதிப்பதற்கு எளிய வழியாக ஒரு சிறு கம்பெனிபோல் உருவாக்கி, அதற்கு சரியான முறையில் டிரேட் லைசென்ஸ் பெற்று அந்த கம்பெனி நடைமுறைக்கு கொண்டு வரவேண்டும் என்றால் குறைந்தது 10 வெளிநாட்டினர் தேவைப்படுகிறார்கள் என்று மனு தாக்கல் செய்து குறைந்தது 10 விசா பெற்றுவிடுகிறார்கள். அரசாங்கத்தை பொறுத்தவரையில் அந்த கம்பெனி நடைமுறையில் இருந்து கொண்டிருக்கிறது, ஆனால் உண்மையாகவே அது மூடப்பட்டுள்ளது. இப்படியாக வாங்கப்பட்ட விசாக்கள் வெளிநாட்டினரிடம் 6,000 ரியால் முதல் 10,000 ரியால் (80,000 ரூபாய் முதல் 140,000 ரூபாய் வரை) வரையில் விற்றுவிட்டு தன் சிறிய முதளீடில் உருவாக்கப்பட்ட அந்த கம்பெனியை இழுத்து மூடிவிடுகிறார்கள்.
இது மாதிரி வாங்கப்பட்ட/விற்கப்பட்ட விசாக்கள்தான் ஃபீரீ விசா, சொந்த விசா என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறது. இந்த விசாவில் வந்தவர்கள் அந்த விசாவை விற்ற முதலாளியின் கன்ட்ரோலில் இருக்கவேண்டும். அவருக்கு மாதம் குறிப்பிட்ட அளவு ரியால் கப்பம் கட்டவேண்டும். அதுமட்டுமில்லாமல் விசா காலாவதியான (Expire) பின் அதை புதுப்பிக்க இரண்டு வருடத்திற்கு ஒரு தடவை அந்த ஸ்பான்சரின் கையொப்பம் அவசியம், அப்பொழுதும் ஒரு குறிபிட்ட பணம் கப்பமாக (மாதா மாதம் செலுத்தியது போக) செலுத்தி அந்த விசாக்களை அடுத்த இரண்டு வருடத்திற்கு புதுப்பித்துக் கொள்ளலாம்.
இப்படியாக பெறப்பட்ட விசாக்களை, இது நமக்கு அந்த நாட்டிற்கு ஒரு Entry யாக நினைத்துக்கொண்டு தான் வேலை செய்யும் கம்பெனிகளின் விதிமுறைகளுக்குட்பட்டு அந்த கம்பெனிகளின் ஸ்பான்சரில் மாறிக்கொண்டால் இன்றைய பிரச்சினைகளிலிருந்து நிம்மதிபெறலாம். நம் ஆட்கள் அப்படி மாறுவதில்லை, காரணம்
- பிடித்த கம்பெனிகளில் தேவையானப்போது மாறிக்கொள்ளலாம்.
- தற்போது வேலை செய்யும் கம்பெனிகளின் சட்ட திட்ட விதிமுறைக்குட்பட்டும் அவர்களின் கட்டுப்பாட்டில் இல்லாததால் அன்றைய தினமே வேலையிலிருந்து வெளியேறி வேறு வேலை தேடிச்செல்லலாம். அந்த கம்பெனி கட்டுப்பாட்டில் இருந்தால் கேன்சல் செய்து நாட்டுக்கு மட்டுமே திருப்பி அனுப்பபடுவர்
- ஊருக்கு போனால் 6 மாத காலம் வரை தங்கலாம், 6 மாதம் கடந்துவிட்டால் விதிமுறைப்படி அந்த விசா காலாவதியாகிவிடும். தான் வேலை செய்யும் கம்பெனி ஸ்பான்சரில் இருந்தால் அவர்கள் தரும் நாட்களுக்குள் விடுமுறையிலிருந்து திரும்ப வேண்டும்.
- வெளிநாட்டினர் வேலை செய்பவர் முக்கியமாக அந்தந்த கம்பெனி தந்த விசாவில் மட்டுமே இருக்கவேண்டும்.
- தான் வேலை செய்யும் கம்பெனிக்கும், விசா ஸ்பான்சருக்கும் சம்பந்தமில்லாமல் இருந்தால் உடனே நாட்டுக்கு திருப்பி அனுப்ப படுவார்கள்
சரி, இப்படியான கடுமையான சட்டத்தால் இதுவரை சம்பாதித்து வந்த சவூதியர்களின் கதி?, இப்படி காலம் காலமாக உழைக்காமல் உண்டு வாழ்ந்த உடம்பல்லவா, உடனே போர்க்கொடி தூக்கி விட்டார்கள். எமது வருமானத்தை சவூதி அரசு கொச்சைப் படுத்துகிறார்கள், தடை போட்டு விட்டார்கள், அய்யகோ இனி எமது வாழ்வு கேள்விக்குரியாகி விட்டது.
உடனே இந்த கோரிக்கைகள் அரசால் பரிசீலிக்கப்பட்டு தன் நாட்டு மக்களுக்கு உழைக்க கற்றுக்கொடுக்க வேண்டும், உழைப்பின் வலியை உணரவைக்கவேண்டும் என்ற நல்லெண்ணத்தை? கையிலெடுத்தது. ஆக மொத்தம் 12.2% சவூதியர் வேலையில்லாமல் வெட்டியாக இவ்வாரெல்லாம் அடுத்த நாட்டினரின் வியர்வை காசில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று கணக்கிட்டு அதன்படி குறைந்தது 7 பேர் வேலை செய்யும் கம்பெனிகளின் ஒரு சவூதியருக்கு வேலைக்கொடுக்க வேண்டும் என்ற அதிரடி அடாவடி திட்டத்தை கொண்டுவந்தது. எல்லோருக்கும் தெரிந்த மிக தெளிவான ஒரு விசயம் சவூதியர்கள் வேலை என்றால் என்ன விலை? என்று கேட்பார்கள். மேலும் சிறு தொழில் கம்பெனிகளின் ஒட்டுமொத்த வருவாயின் பாதியை அந்த ஒருத்தருக்கு சம்பளமாக கொடுக்க வேண்டும்...
இதனால் சிறு வணிகர்கள் முதல் சிறு நடுத்தர வணிகள் வரை பாதிக்கப்படுவர். இப்போதைக்கு 3 மாத காலம் அவகாசம் நீட்டித்துள்ளது அரசு. இந்த 90 நாட்களின் இத்திட்டம் முற்றிலும் மறக்கடிக்கப்பட்டு பழைய நிலையே திரும்பி வரலாம், யார் அறிவர் நம் உயிர் யார் கையிலிருக்கிறதோ அவனையன்றி?
குறிப்பு: இத்தகவல்கள் முழுதும் கேள்விப்பட்டதும், செய்திகளில் கண்டதும், படித்தும் மட்டுமே பகிரந்தளிக்கப்பட்டுள்ளது, மேலும் தகவல் தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் தெரியப்படுத்தலாம்.
அப்துல் மாலிக்
துபாய்

