கடலில் அலைகள் மிதக்கின்றன !
சிப்பிகளும் கனவுகளோடு !
மாபெரும் கனவுகளோடு
எட்டும் என நம்பிக்கையோடு மிதக்கின்றன !
*** **** ***
கடல் உள்ளிருந்து சூரியனை
நேசிக்கும் சிப்பிகளுக்கு
எப்படியாயினும் சூரியனை
கருவாய் கொள்ள
கோடி ஆசைகள் !
**** **** ******
எப்படி நடக்கும் எனத்தெரியாது !
எந்த வியுகமுமில்லை !
எப்படி சூரியனை கருவாய் கொள்ளவது ?!
நம்பிக்கை மட்டுமே ஒற்றைப்பிடி !
****** ******* ***********
முதல் இலக்கு கடல்கறைக்கு !
நகர்தல் தொடங்கின !
அலைகள் மேல் மிதந்தன !
அலை அடித்து ! !
கறைக்கு வாசம் !
முதல் வெற்றி !
**** ***** ********
இருப்பதோ ஒரு சூரியன் !
அதை கருவாய் கொள்ள
ஆயிரம்மாயிரம் சிப்பிகள் !
ஆனாலும் கோடி நம்பிக்கைகள் !
***** ***** *******
சந்தேக ஓலமிட்ட சில
சிப்பிகள் மீண்டும்
நகர்ந்தன கடல் நோக்கி !
திடமாய் நின்றவைகள் மட்டும்
கனவுகளை மீண்டும் மீண்டும்
புதுபித்து மீட்டிக்கொண்டிருந்தன !
***** ****** *******
எல்லாக் காலப்பருவமும்
கடந்துப் போயின !
மழைக்காலப் பருவத்தை தவிர!
மாற்றங்கள் நிகழவில்லை !
கனவுகளும் தடுமாறத் தொடங்கின !
***** ****** ********
அந்தப்பொழுது ஒரு மாலை !
சூரியன் மறையும் பொழுது !
சிப்பிகள் கிழக்கிலும் !
சூரியன் மேற்கிலும் !
சூரியனைக் கருவாய் கொள்ளும்
கனவு முழுவதுமாய் கரைய
தொடங்கிய கணத்தில்
கிழக்கிற்கும் மேற்கிற்கும்
நடுவில் மழை !!!!!!!!!!
***** ****** ********
மழைத் துளிகளில்
ஒற்றை சூரியன்
ஆயிரமாயிரம் சூரியனானது !
ஒவ்வொரு மழைத்துளியும்
சூரியன் பிம்பம்மானது !
ஆனந்த கொண்டாட்டம்
சிப்பிகளுக்கு !!
ஆவல் தீர ஆயிரமாயிரம்
சிப்பிகள் சூரியனை
கருவாய் கொண்டது !!!!!!!!
&&&&&& &&&& &&&&
அந்தோ பரிதாபம் !
இந்த உலகின் கனவுகளும்
இயற்கையின் நிஜமும்
வேறு வேறு என
நெற்றிலடித்து
பூமியும் ,சூரியனும்
தங்களின் அடுத்தச்
சுற்றை ஆரம்பிக்கத் தொடங்கியது !!!!
----------------
ஹர்மிஸ்