அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
தாய் மொழியாலும் செழிப்பானப் படைப்புகளைத் தினந்தோறும் வெளியிட்டு வருவதிலும் அதிரைநிருபர் தளம், படைப்புகளின் படைப்பாளிகளின் சிரத்தைக்கும் அவர்களின் அயராத தொடர் எழுத்துகளுக்கும் அதிமதிகம் மதிப்பளித்து வருகிறது. படைப்பாளிகளின் படைப்புகளை முன்னிலைப் படுத்துவதை முதற் குறிக்கோளாகவே வைத்திருக்கிறது.
அதிரைநிருபர் தளத்தில் வெளிவரும் படைப்புகள் அனைத்தும் அதனதன் தன்மையில் தரம் மிக்கவை என்பதை பதிவுக்குப் பின்னர் அதனை பகிர்ந்து கொள்ளும் வாசகர்களின் மின்னஞ்சல், மின்னாடல் குழுமம், மீள்பதிவு என்று பரந்து விரிந்து இருப்பதே சாட்சியாக நம் அனைவருக்கும் தெரியும். அதில் பெரும்பாலான சகோதரர்கள் படைப்பாளியைக் கவுரவிக்கும் விதத்திலும், அது வெளியான தளத்தின் பெயரையும் நன்றியுடன் குறிப்பிடத் தவறுவதில்லை, தயங்குவதில்லை - அல்ஹம்துலில்லாஹ்!
இதற்கிடையிலே மிகவும் சிரத்தை எடுத்து நேரம் ஒதுக்கி ஆய்வுகள் செய்து வெளியாகும் பதிவுகளை மீள்பதிவு / மின்னாடல் குழுமத்தில் பரிமாற்றம் / மின்னஞ்சல் பகிர்வு என்று ஆர்வமாக செய்யும் சகோதரர்கள் அந்த மூலப் படைப்பின் ஆசிரியரை அல்லது அது வெளியான தளத்தைப் பதிந்திட தவறி விடுகின்றனர். இவை பெரும்பாலும் எமது பார்வைக்கு வாசகர்களின் சுட்டலுக்கு பின்னர் வந்தாலும், அவ்வாறு பகிரும் சகோதரர்கள் கட்டுரையாளரின் உணர்வுகளுக்கு அவசியம் மதிப்பளிக்க வேண்டும் என்பதே எங்களின் வேண்டுகோள்.
முன் அனுமதியுடனோ / அனுமதியின்றியோ பதிந்தாலும் அவசியம் அது எங்கிருந்து எடுக்கப்பட்டது அல்லது யாரால் எழுதப்பட்டது என்று பொறுப்புணர்வுடன் செயல்படுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
படைப்பாளிகளின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்போம், அவர்களின் சேவைகளைப் போற்றுவோம், சமுதாயம் செழிக்கக் கருத்தாடலில் வளம் காண்போம் இன்ஷா அல்லாஹ் !
நெறியாளர்
www.adirainirubar.in


