நம்ம ஊருலே நிலத்தடி நீர் வத்தி போச்சுன்னு சொல்றாங்க உண்மைதான். அதுக்காக இப்போ ஒரு ஆலோசனைக் கூட்டமும் போட்டிருக்காங்க. ஆனாலும் நம்ம ஊரு பேச்சு மொழி மட்டும் எந்தக் காலத்திலும் வத்தி போகாது தோண்டத் தோண்ட வந்து கொண்டே இருக்கும். சர்வ சாதரணமாக நாம பேசிக் கொண்டு இருக்கும் போதே நம்மையும் அறியாமல் ஒருசில வார்த்தைகள் கரைபுரண்டு அலையடிக்கும். அப்படியாக வந்து விழும் மண்வாசனை மணக்க இங்கே வாக்கியமாய் உங்களின் பார்வைக்கும் பகிர்வுக்கும்.
ஊருலே பேஞ்ச மழைலே பள்ளிகொடம் போன புள்ளையலுவோ "தொப்பு தொப்பா" நோனஞ்சி போச்சி !
மோட்டார் சைக்கிளில் இருந்து கிழே உளுந்ததுலே காலு "பெசண்டு போச்சு"
ஊருக்குள்ளே நடக்குற விபத்தை நெனச்சா "ஈரக் கொல நடுங்குது"
ஊருக்குள்ளே இப்பெவெல்லாம் "மட்டப்பா ஊடு"ஒன்னுமே இல்லே
"நேத்தையாணம்"அப்பமும் எப்போதும் நாக்கை விட்டு அகலாத ருசி !
"நீச்ச கஞ்சி" இதை புதுசா ஐஸ் பிரியாணின்னு சொல்றாங்க !
"வடிச்சங் கஞ்சி"இதன் ருசி இப்ப உள்ள புள்ளையளுக்கு தெரியாம போச்சு !
இவனோட நடப்பு எப்போவும் 'புதுனமா "தான் இருக்கும்..!
எப்போதும் இந்த ஆளு "மேமினுக்கா "தான் இருப்பாக !
ஊரு தண்ணீலே சாக்கடையும் கலந்து வர்றதாலே அதுலே குளிச்சா தல ஒரே "பிசுக்கா" இருக்கு !
"ஈறு வலி" இதல்லாம் இப்போ "காண கெடைக்கல”
அழுக்கு "கசமா" இருக்கு
மீனை கழுவி ஊத்துனதுலே "வெடுக்கு நாத்தம்" தாங்க முடியலே
வாப்பாவுக்கு "ஒகப்பான புள்ள"
தூக்கத்துலே "சொலக்கு சொலக்குன்னு"முழிப்பு வருது
இவன் சரியான "வக கெட்டவன்"
ராத்திரி புடி பட்ட கள்ளனே "சாங்கமாங்களா" போட்டு "சாத்திபுட்டனுவோ" [காணொளி இணைப்பு இல்லை]
பேய் தொடரைப் படிச்சதுலே பயந்து "தட்டு கெட்டு" போய்ட்டான் !
அங்கிட்டு "நவந்து" உட்காரு !
இங்கிட்டும் அங்குட்டுமா "லாத்தாம" ஒரு எடத்துலு உட்காரு !
இவருதான் ஊட்டுக்கு "மூத்த முனியன்"
இவனுக்கு என்னத்தை கொடுத்தாலும் ஒரே "கொறதான்"
மழை பெய்ச்சிட்டா கொசு 'சல்லே"தாங்க ஏலால…!
“அவந்தரைக்கு” உதவாம போறீயம்மா ?
“பொஸுப்பு” இல்லமா புள்ளைக்கு !
“ஆக்கினை” புடிச்சவனாவுல இருக்கான்…
“படக்கலம்” புடிச்சு அலையுதுங்கமா…
டெல்லிக்கு ராசாவாகப் போன பேராண்டி… அம்மாவை தேடிகிட்டு திரும்பி வந்த்துடான்… !
வெற்றி என்று ஒன்று இல்லாவிட்டால் தோல்வி என்ற ஒன்று நம் வாழ்வில் இல்லாமலே போய்விடும் என்பது அடியேனின் வாக்கு !
Sஹமீது


