அதிரைநிருபர் அவ்வப்போது அசைபோடும் அழகியலோடு அதன் தனித் தன்மையான மூன்றாம் கண்களோடு பேசும் கலைக்கும் மேடை அமைத்துக் கொடுத்து அவைகள் ஒவ்வொன்றுக்கும் கிரீடமே (கிரவ்ன்) வைத்துப் பார்ப்பதில் உவகை கொள்கிறது...!
அந்த வரிசையில் விழியால் மொழி மாற்றம் செய்து தனக்கு பிடித்த இடங்களை இடமாற்றம் செய்யாமல் இதயத்தில் இருப்பிடம் கொடுக்க வைக்கும் அற்புதமான கைவண்ணத்திற்கு சொந்தக் காரரான அதிரைநிருபரின் 'மூண்றாம் கண்' Sஹமீத் அவர்களின் கிளிக்ஸ் இனி தொடர்கிறது..
அனல் பறக்கும் கோடைச் சூடு அரபுநாடுகளை விட்டு அகல மறுக்கும் இந்த சூழலில் குளிருக்கு முன்னரே குளிர் காய ஏற்ற தீப்பிழம்பு எப்படி எழுந்து நிற்க வேண்டுமென்று சொல்லிக் காட்டுகிறது.
மொட்டுக்கள் குத்தி வைத்திருக்கும் அழகு காது குடையச் சொல்லும் ரீங்காரம்.
மலைகளின் இடுக்கில் தவழும் தண்ணீர், அந்த வானாமோ அதனை தனது அழகை சரிபார்த்துக்கொள்ள விரிக்கப்பட கண்ணாடியாக்கிக் கொண்டது ! சாரலும் சத்தமில்லாமல் சம்மதம் தெரிவிக்கிறது.
குளிருக்கு ஆவி புடிக்க போர்த்திய வெள்ளிப் போர்வையை கழட்டி வீசிவிட்டு ஆசுவாசப் படுத்திக் கொள்கிறது....
ஆகாயம், மலை, இலைகளில்லாத குச்சிகள், மரம், புல் இதெல்லம் கவிஞர்களுக்குத்தான் கருவறையைத் காட்டும்.
அழகிய குடில், ஆயிரம் ஏசி போட்டு அடுக்கு மாடியில் படுத்து உறங்கினாலும் அங்கே வராத தூக்கமும் சுகமும் இங்கே மண்டியிட்டு மயக்கியெடுக்கும்...
'புகை' படங்கள் : Sஹமீது