Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in
Showing posts with label பட்டினி. Show all posts
Showing posts with label பட்டினி. Show all posts

"அம்மா" ஆஸ்பத்திரியில்… வீடே பட்டினி! 41

அதிரைநிருபர் பதிப்பகம் | October 06, 2011 | , , , ,

அரிசியும் பருப்பும்
அடுக்குப் பானையிலே;
உப்பும் புளியும்
தக்கரிலே இருக்கு

மாவடுவும் மசாலாவும்
தகர டப்பாக்குள்ளே
சீனியும் சிறுகடுகும்
சிவப்புநிற குடுவையிலே

கண்ணாடி போத்தலிலே
கல்கண்டு இருக்கு
காகிதப் பொட்டலத்தில்
கருமிளகு மடித்திருக்கு

மஞ்சளும் மல்லித்தூளும்
அஞ்சறைப் பெட்டிக்குள்ளே
நெஞ்சையள்ளும் நிறத்தில்
பிஞ்சுக் கத்தரி இங்குண்டு

அத்தனைப் பொருட்களும்
அடுக்களையில் இருக்க
அம்மா நீ இல்லை
ஆக்கி அதைக் கொடுக்க

காயிருக்கு கறி இருக்கு
கழுவித் தர ஆளிருக்கு
கறிசோறு கிளறித்தர
தாயில்லை வீட்டுக்குள்ளே

ஊருக்குள் நோய் வந்து
உலகையே அழித்தாலும்
சொற்ப நேரம் பிந்தாமல்
சோறு தந்தாய் நீ யம்மா

தாய்மை மணக்கும் உன்
தயவு நோய் தீர்க்கும்
தைலம் மணக்குதின்று
தாய் உந்தன் தேகத்திலே

ஒற்றைத் தலைவலிக்கே
மடி தந்த மகராசி
மருத்துவமனை படுக்கை
மடியாகிப் போனதம்மா

சேர்த்துவைத்த செல்வமெல்லாம்
செலவழிக்கச் சம்மதமே
முடக்கிய நோய் நீங்கி
மீண்டு நீ வருவதற்கே

பட்டம் படித்ததில்லை
பட்டயமும் பெற்றதில்லை
பாசம் பயிற்றுவிக்கும்
பல்கலைக் கழகம் நீ

வீடே பசித்திருக்கு
வீட்டுப் பூனைப் படுத்திருக்கு
வேகமாக நீ வந்து
விருந்தொன்று வைப்பாய் அம்மா!

- சபீர்
Sabeer abuShahruk


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு