அழகு
ஓர் அழைப்பிதழ்
முத்திரையிடு முகவரியிடு
அன்றேல் அதுவே
பொது அறிவெப்பென
கவனம் ஈர்க்கும்
யாவரும் காண்பர்
கண்டவர் கிறங்குவர்
அழகு
உள்நாட்டுக் கடிதமெனில்
அஞ்சலட்டை
அதன் நிர்வாண வடிவம்
அழகு
பதிவுத் தபால்கள்
நாடியவனையேத்
தேடிச்
சேர்ப்பிக்கப்பட வேண்டும்
அழகு
தந்திச் செய்தி
உரியவனுக்கேப் புரிய வேண்டும்
பிறருக்கென்றும் பூடகமே
அழகு
மின்னஞ்சல் வர்ணனைகளில்
வசியப் படுத்துபவை
புகைப்படம் அவசியமில்லை
அழகு
குறுஞ்செய்தி யல்ல
படித்ததும் அழித்துவிட
அரிதானாலும்
அழுத்தமாய்
நெஞ்சிற் பதியும் குறிஞ்சி
அழகு
படைத்தவன் அருளியப்
பொக்கிஷம்
பத்திரப்படுத்தாவிடில்
உக்கிர விஷம்
அழகு
ஒரு வர்ணஜாலம்
மறைத்து வைக்காவிடில்
பச்சையாகப் பேசப்பட்டோ
மஞ்சலாக எழுதப்பட்டோ
நீலமாகப் பார்க்கப்பட்டோ
சிவப்பாக ஒளிரப்பட்டோ
வாழ்க்கை
கருப்பாக இருட்டிவிடும்
வெளுப்பான விடிவு
ஒருபோதும் வாய்க்காது
அழகு
பாதுகாக்கப்பட்டால் மட்டுமே
திருமண வாழ்த்துகள்
தாங்கிய தட்டி,
பிழைத்தால்
கண்ணீர் அஞ்சலியாய்ச்
சுவரொட்டி!
sabeer.abushahruk
ஓர் அழைப்பிதழ்
முத்திரையிடு முகவரியிடு
அன்றேல் அதுவே
பொது அறிவெப்பென
கவனம் ஈர்க்கும்
யாவரும் காண்பர்
கண்டவர் கிறங்குவர்
அழகு
உள்நாட்டுக் கடிதமெனில்
அஞ்சலட்டை
அதன் நிர்வாண வடிவம்
அழகு
பதிவுத் தபால்கள்
நாடியவனையேத்
தேடிச்
சேர்ப்பிக்கப்பட வேண்டும்
அழகு
தந்திச் செய்தி
உரியவனுக்கேப் புரிய வேண்டும்
பிறருக்கென்றும் பூடகமே
அழகு
மின்னஞ்சல் வர்ணனைகளில்
வசியப் படுத்துபவை
புகைப்படம் அவசியமில்லை
அழகு
குறுஞ்செய்தி யல்ல
படித்ததும் அழித்துவிட
அரிதானாலும்
அழுத்தமாய்
நெஞ்சிற் பதியும் குறிஞ்சி
அழகு
படைத்தவன் அருளியப்
பொக்கிஷம்
பத்திரப்படுத்தாவிடில்
உக்கிர விஷம்
அழகு
ஒரு வர்ணஜாலம்
மறைத்து வைக்காவிடில்
பச்சையாகப் பேசப்பட்டோ
மஞ்சலாக எழுதப்பட்டோ
நீலமாகப் பார்க்கப்பட்டோ
சிவப்பாக ஒளிரப்பட்டோ
வாழ்க்கை
கருப்பாக இருட்டிவிடும்
வெளுப்பான விடிவு
ஒருபோதும் வாய்க்காது
அழகு
பாதுகாக்கப்பட்டால் மட்டுமே
திருமண வாழ்த்துகள்
தாங்கிய தட்டி,
பிழைத்தால்
கண்ணீர் அஞ்சலியாய்ச்
சுவரொட்டி!
sabeer.abushahruk


