எமது நினைவுகளை அசை போட்டுப் பார்த்ததில் பாம்பேயில் (மும்பையில் அல்ல) பிரதான வீதிகளில் வெள்ளிக் கிழமை பகல் 11 மணிக்கே பள்ளிக்கருகே தட்டி வைத்து தடுத்து போலீசார் வாகனங்களை மாற்றுப் பாதையில் செல்லும்படி கோர ,மக்கள்(மற்ற மதத்தினர் கூட) அச்சா... ஆஜ் ஜும்மா ஹேனா... என புன்முறுவலுடன் வளைந்து சென்றனர். ஹைதராபாத் - செகந்தராபாத் - நாக்பூர் - சோலாப்பூர்களில் அரசு அதிகாரிகள் - ஊழியர்கள் - பொதுமக்கள் அனைவரும் "ஈவேள ஷுக்ரவாரன்காதான்ட்டி, சாஹிப்லு தன்னம் பெட்டுக் கொண்டாரு" என உவந்து ஒத்துழைத்தனர். இதெல்லாம் கி.மு./ கி.பி. வில் அல்ல! சற்றே இருபது வருடங்களுக்கு முன்னர். நம் பாரதத் தேசத்தில் நடந்தவை. இப்போது எல்லாம் நேர் மாற்றம். எங்கே போனது அந்த சகிப்பு த்தன்மை?எப்படி ஒளிந்தது ஒத்துழைக்கும் உன்னத உணர்வு? எங்கே தாவியது அந்த விசாலம்? எவர் தூவியது இந்த விஷ(ம)ம்?
இந்த பதிவு உங்கள் பார்வைக்கு கிடைக்கும்போது ஜும்மாத் தொழுகைக்கு தயாராகிக் கொண்டிருக்கலாம், அல்லது தொழுதுத் திரும்பியிருக்கலாம். பள்ளி நிரம்பி சிலர் வெயிலில் - சிலர் மழை ஈரத்தில் - சிலர் ப்ளாட்பாரத்தில் தொழுதிருக்கலாம். இந்தப் படங்களைப் பாருங்கள். ரஷியப் பிரதேசமான கஜகிஸ்தான் பகுதியில் கொட்டும் கொடும் பனியினூடே சென்ற வார ஜும்மாத் தொழுகைக்கு விசுவாசம் கொண்ட அத்தனை மக்களும் பள்ளி நிரம்பி - இடம் கிடைக்காமல் வெளியிலும் பல் முளைக்காத குழந்தைகளும் - பல் விழுந்த முதியவர்கள் சகிதம் தக்வாவுடன் தொழும் ஓர் அற்புதக் காட்சி ! இறைவனே உன் ஈமானே மாட்சி !!!
இறைக் கட்டளைக்கு கட்டுப்பட்டு இன்ஸான் இபாதத்தில் திளைக்கும் போது மலக்குகளை விளித்து இறைவன் பெருமையுடன் சுட்டிக்காட்டுகிறானாம். ஒருவேளை இந்தத் தருணத்தையும் மலாயிக்குகளிடத்தில் இறைவன் உவந்திருப்பானோ?! ALLAAHU A'LAM.
யா அல்லாஹ் எங்கள் ஈமானை மேலும் பலப் படுத்துவாயாக!யாக்கல்லாஹ்!
வாழ்க வளமுடன்.
-MSM ராஃபியா






