அதிரை வாழ் பெரியவர்கள், வெளிநாட்டு வாழ் அதிரை வாசிகள் மற்றும் நண்பர்கள் கவனத்திற்கு,
"தமிழக ரயில்வே திட்டங்களை நிறைவேற்ற புதிய கூட்டணி அமையுமா?" என்ற தலைப்பிட்ட இன்றைய பதினேழாம் தேதியிட்ட தினமலரில் வெளியான செய்தி என் கவனத்தைக் கவர்ந்தது.
ஒப்புதலுக்கும், நிதி ஒதுக்கீட்டிற்கும் காத்திருக்கும் தமிழக ரயில்வே திட்டங்களில் திருவாரூர் - பட்டுக்கோட்டை - காரைக்குடி மீட்டர் கேஜ் ரயில் பாதையை அகல ரயில் பாதையாக மாற்றும் திட்டம் முதல் திட்டமாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அடுத்த மாதம் ரயில்வே பட்ஜெட் தாக்கலாகவிருப்பதால் ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜியும் அதிகாரிகளும் அதற்கான ஆலோசனையில் ஈடுபட்டிருப்பதாகவும், எதிர்வரும் தமிழகம், புதுச்சேரி, கேரளா மற்றும் மேற்கு வங்க சட்ட சபை தேர்தல்களை கருத்தில் கொண்டு நிதி ஒதுக்கீடு செய்யப்படலாம் என்ற கருத்து மத்திய மாநில அரசு வட்டாரங்களில் நிலவுவதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் மற்ற மாநில அரசியல் வாதிகளை முன்னுதாரணம் காட்டி நம்முடைய அரசியல் வாதிகளும் கட்சி பாகுபாடின்றி ஒற்றுமையுடன் செயல்பட்டால் அதிக அளவில் நிதி ஒதுக்கீடும், பெரும்பான்மையான திட்டங்களுக்கு ஒப்புதலும் பெற்றுவிடலாம் என குறிக்கப்பட்டுள்ளது.
முடிந்தோர் முயற்சிப்பார்களா?
-- அபு பஜ்லு (செ.ஒ.மு.ஹுசைன்) , ஜித்தா.
புகைப்படம்: சகோதரர் ஜாஹிர் ஹுசைன்
குறிப்பு: பின்னூட்டமாக சகோதரர் M H ஜஹபர் சாதிக் அவர்கள் சொன்ன யோசனை மிக சரியானதாக இருந்ததால் நாம் அந்த பின்னூட்டத்தையும் இந்த ஆக்கத்துடன் பதிவு செய்து இந்த ஆக்கத்தின் தலைப்பையும் மாற்றிவிட்டோம். சகோதரர் அபுபஜ்லு அவர்கள் இதற்கு சம்மதம் தெரிவிப்பார்கள் என்று நம்புகிறோம். இதை படிப்பவர்கள் அனைவரும் சகோதரர் ஜஹபர் சாதிக் அவர்கள் குறிப்பிட்டுள்ள MLAவின் மின்னஞ்சல் முகவரிக்கும் மற்ற அரசு மின்னஞ்சல் முகவரிக்கும் எல்லோரும் கோரிக்கை மடல் அனுப்ப வேண்டுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நல்ல கோரிக்கை மடலை நம் மூத்த சகோதரர்கள் யாராவது மாதிரியாக எழுதி பின்னூட்டமிட்டால் நாம் அனைவரும் தெளிவாக நம் கோரிக்கையை அனுப்ப ஏதுவாக இருக்கும்.
M.H. ஜஹபர் சாதிக் சொன்னது… இன்ஸா அல்லாஹ் வரும்.இணயத்தின் மூலம் நம்மால்(தொலைவில் உள்ளவர்கள்) முடிந்தது MLA வுக்கு மெயில் அனுப்பலாமே! MLA eMail address. mlapattukkottai@tn.gov.in
-- அதிரைநிருபர் குழு.